சாம் கரன்

(சாம் கர்ரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சாமுவேல் மேத்தியூ கரன் (Samuel Matthew Curran, பிறப்பு: 3 சூன் 1998) என்பவர் ஆங்கிலத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பன்னாட்டுப் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காகவும் உள்ளூர் போட்டிகளில் சர்ரே அணிக்காகவும் விளையாடி வருகிறார். கர்ரன் ஒரு இடது கை மட்டையாளரும் மற்றும் இடது கை மித வேகப் பந்து வீச்சாளரும் ஆவார். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐ.சி.சி) 2018ஆம் ஆண்டில் ஆண்கள் துடுப்பாட்டத்தின் ஐந்து சிறந்த அடையாளங்களில் ஒருவராக கர்ரனை பெயரிட்டது, [1] விஸ்டன் துடுப்பாட்டாளர்களின் நாட்காட்டியின் 2019 பதிப்பானது இவரை ஆண்டின் ஐந்து துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக தேர்வு செய்தது. இவர் இந்திய முதன்மைக் குழுப் (ஐபிஎல்) போட்டியில் 20 வயதில் மும்முறை எடுத்த இளைய பந்து வீச்சாளர் ஆவார்.[2] 2020 தொடருக்கான ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

சாம் கரன்
Sam Curran
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சாமுவேல் மேத்தியூ கரன்
பிறப்பு3 சூன் 1998 (1998-06-03) (அகவை 26)
நார்தாம்ப்டன், இங்கிலாந்து
உயரம்5 அடி 9 அங் (1.75 m)
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைஇடக்கை நடுத்தர-விரைவு
பங்குபன்முக வீரர்
உறவினர்கள்கெவின் கர்ரன் (தந்தை)
தாம் கர்ரன் (சகோ)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 686)1 சூன் 2018 எ. பாக்கித்தான்
கடைசித் தேர்வு22 சனவரி 2021 எ. இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 250)24 சூன் 2018 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப28 மார்ச் 2021 எ. இந்தியா
இ20ப அறிமுகம் (தொப்பி 87)1 நவம்பர் 2019 எ. நியூசிலாந்து
கடைசி இ20ப26 சூன் 2021 எ. இலங்கை
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2015–இன்றுசரே (squad no. 58)
2017ஆக்லாந்து ஏசசு
2019பஞ்சாப் கிங்ஸ்
2020–இன்றுசென்னை சூப்பர் கிங்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப மு.த ப.அ
ஆட்டங்கள் 21 8 71 57
ஓட்டங்கள் 741 132 2,658 712
மட்டையாட்ட சராசரி 25.55 26.40 27.68 22.25
100கள்/50கள் 0/3 0/1 0/18 0/2
அதியுயர் ஓட்டம் 78 95* 96 95*
வீசிய பந்துகள் 2,647 300 10,286 2,520
வீழ்த்தல்கள் 44 7 197 73
பந்துவீச்சு சராசரி 32.52 43.85 29.25 32.13
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 7 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 1 0
சிறந்த பந்துவீச்சு 4/58 3/35 7/58 4/32
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 1/– 18/– 21/–
மூலம்: ESPNcricinfo, 26 சூன் 2021

மேற்கோள்கள்

தொகு
  1. "2018 lookback – the breakout stars (men)". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 1 January 2019.
  2. "From Sam Curran's record hat-trick to Delhi's insane collapse - Here are all stats from KXIP vs DC match | Cricket News". www.timesnownews.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 April 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_கரன்&oldid=3180895" இலிருந்து மீள்விக்கப்பட்டது