தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவு

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு
(சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவு அல்லது தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவு (Thenmaradchi Divisional Secretariat) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மராட்சிப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 60 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அல்லாரை, கொடிகாமம், சாவகச்சேரி, வரணி, தாவளை, இயற்றாலை, குடமியன், நாவற்காடு, இடைக்குறிச்சி, மந்துவில், எழுதுமட்டுவாள், கச்சாய், கைதடி, நுணாவில், சந்திரபுரம், கல்வயல், கரம்பகம், கரம்பைக்குறிச்சி, கெற்பெலி, கோவிலாக்கண்டி, மீசாலை, மட்டுவில், நுணாவில், மறவன்புலவு, மிருசுவில், நாவற்குழி, பாலாவி, இராமாவில், சங்கத்தானை, சரசாலை, தனங்கிளப்பு, உசன், வெள்ளாம்போக்கட்டி, விடத்தல்பளை ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. மேற்கு, தெற்கு எல்லைகளில் நீரேரிகளும், கிழக்கில் கிளிநொச்சி மாவட்டமும், நீரேரியும், வடக்கில் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவும், கிழக்கில் கோப்பாய், கரவெட்டி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்ளன.

தென்மராட்சி
பிரதேச செயலாளர் பிரிவு
நாடு இலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாண மாவட்டம்
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை தர நேரம்)

இப்பிரிவு 221 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

இன ரீதியான சனத்தொகை

தொகு

2012ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இப்பிரதேச செயலாளர் பிரிவு இலங்கைத் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ளது.

இனப்பரம்பல்
இனம் சதவீதம்
இலங்கைத் தமிழர்
99.19%
சிங்களவர்
0.3819%
ஏனையோர்
0.42%

மத ரீதியான சனத்தொகை

தொகு

2012ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இப்பிரதேச செயலாளர் பிரிவில் இந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ளதோடு கிறித்தவர்களும் சிறியளவில் உள்ளனர்.

சமயங்கள்
சமயம் சதவீதம்
இந்துக்கள்
92.66%
கத்தோலிக்கர்
3.82%
ஏனைய கிறித்தவர்
3.01%
ஏனையோர்
0.51%

குறிப்புகள்

தொகு
  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு