சா. சி. சிவசங்கர்

தமிழ் எழுத்தாளர்

சா. சி. சிவசங்கர் (S. S. Sivasankar) ஒரு தமிழ்நாட்டு அரசியலர் மற்றும் எழுத்தாளர் ஆவார். திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினரான இவர், ஆண்டிமடம் (2006-11)[1], குன்னம் (2011-16; 2021-)[2] ஆகிய தொகுதிகளுக்கான தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். சிவசங்கர் தற்போதைய தமிழக அமைச்சரவையில் தமிழ்நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றிவருகிறார். இவர் மக்களுடன் என் அனுபவங்கள் (2015), சோழன் ராஜா ப்ராப்தி (2019), "தோழர்" சோழன் (2019) ஆகியன நூல்களை எழுதியுள்ளார்.

மாண்புமிகு
சா.சி. சிவசங்கர்
தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
29 மார்ச் 2022
முன்னையவர்இராஜ கண்ணப்பன்
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
பதவியில்
7 மே 2021 – 29 மார்ச் 2022
முன்னையவர்சீ. வளர்மதி
பின்னவர்இராஜ கண்ணப்பன்
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 மே 2021
முன்னையவர்ஆர். டி. ராமச்சந்திரன்
தொகுதிகுன்னம்
பதவியில்
23 மே 2011 – 24 மே 2016
முன்னையவர்தொகுதி உருவாக்கம்
பின்னவர்ஆர். டி. ராமச்சந்திரன்
தொகுதிகுன்னம்
பதவியில்
17 மே 2006 – 22 மே 2011
முன்னையவர்செ. குரு
பின்னவர்இல்லை
(ஜெயங்கொண்டம், குன்னம் ஆகியவற்றுடன் தொகுதி இணையப்பெற்றது)
தொகுதிஆண்டிமடம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 மார்ச்சு 1969 (1969-03-24) (அகவை 55)
தேவனூர்,
பிரிக்கப்படாத திருச்சிராப்பள்ளி மாவட்டம்
(தற்போது அரியலூர் மாவட்டம்),
தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
(1993- தற்போது வரை)
துணைவர்காயத்ரிதேவி
உறவுகள்எஸ்.எஸ். சிவக்குமார்
பிள்ளைகள்சிவசரண்
சிவசூர்யா
பெற்றோர்சிவராஜேஸ்வரி (தாய்)
சா. சிவசுப்பிரமணியன் (தந்தை)
முன்னாள் கல்லூரிஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்
வேலைஅரசியலர்
எழுத்தாளர்
இணையத்தளம்http://sssivasankar.blogspot.com/
http://ss-sivasankar.blogspot.com/

இளமை

தொகு

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள தேவனூரில் 24 மார்ச் 1969 அன்று பிறந்தார் சிவசங்கர். இவரது தந்தை சா. சிவசுப்பிரமணியன் தாயார் பெயர் சிவராஜேசுவரி ஆவார். ஆண்டிமடம் அரசுப் பள்ளியில், பள்ளிக் கல்வியினைப் பயின்றபின் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் இளநிலைப் பொறியியல் பயின்றார் சிவசங்கர். 1991ஆம் ஆண்டு பட்டம் பெற்றபின் 1993 வரை பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றினார்.[3]

அரசியல்

தொகு

தொடக்கமும் கட்சிப் பணிகளும்

தொகு

1978ஆம் ஆண்டு திசம்பரில் திருச்சிராப்பள்ளியில் திமுக நடத்திய இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்டார் சிவசங்கர்.[3][4] 1993-ல் முழு நேர அரசியலில் நுழைந்தார். 1999ஆம் ஆண்டு ஆண்டிமடம் ஒன்றிய திமுக செயலாளராகத் தேர்வானார். 2001-ல் தனியாகப் பிரிக்கப்பட்ட அரியலூர் மாவட்டத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதன்பிறகு கட்சி அளவில் பெரம்பலூர் மாவட்டத்துடன் அரியலூர் இணைக்கப்பட்டதால், ஆண்டிமடம் ஒன்றியச் செயலாளராக தொடர்ந்தார்.[3] தற்போது மீண்டும் அரியலூர் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

உள்ளாட்சி உறுப்பினராக (1996-2006)

தொகு

பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக 1996 முதல் 2001 வரையிலும், பின் அரியலூர் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராக 2001 முதல் 2006 வரையிலும் பணியாற்றினார்.[5]

சட்டமன்ற உறுப்பினராக

தொகு

2006 சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிமடத்தில் போட்டியிட்டு வென்றார். 2011 சட்டமன்றத் தேர்தலில் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் அரியலூர் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வேறுபாட்டில் வெற்றியை இழந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் குன்னம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

அமைச்சராக (2021-)

தொகு

2021 தேர்தலில் திமுக கூட்டணி வென்றதைத் தொடர்ந்து மு. க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மே 2021 முதல் மார்ச் 2022 வரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை (பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர்) அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் அமைச்சரவை மார்ச் 2022-ல் மாற்றியமைக்கப்பட்டபோது போக்குவரத்து துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

சிவசங்கர் சந்தித்த சட்டமன்றத் தேர்தல்கள்
ஆண்டு தொகுதி முடிவு வாக்குகள் (விழுக்காடு) இரண்டாமிடம் பெற்றவர் இரண்டாமிடம் பெற்ற கட்சி வாக்குகள் (விழுக்காடு) வேறுபாடு

(விழுக்காடு)

2006 ஆண்டிமடம் வெற்றி 51,395
(45.32)
கே. பன்னீர்செல்வம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 45,567

(40.18)

5,828

(5.14)

2011 குன்னம் வெற்றி 81,723
(46.88)
துரை காமராஜ் தேசிய முற்போக்கு திராவிட கழகம் 58,766

(33.71)

22,957

(13.17)

2016 அரியலூர் தோல்வி 85,902
(40.97)
தாமரை சு. இராசேந்திரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 88,523

(41.94)

2,621

(1.25)

2021 குன்னம் வெற்றி 1,03,922
(47.26)
ஆர். டி. ராமச்சந்திரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 97,593

(44.38)

6,329

(2.87)

பிற பதவிகள்

தொகு

கல்லூரிக் காலத்திலேயே புகைப்படம் எடுப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்த சிவசங்கர், புகைப்படவியலாளர் சங்க செயலாளராக இருந்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட தடகள சங்க உறுப்பினராகவும், தமிழ்நாடு சிலம்பம் சம்மேளனத் தலைவராகவும் இருந்துள்ளார் .

படைப்புகள்

தொகு
ஆண்டு தலைப்பு வகை பதிப்பகம்
2015 மக்களுடன் என் அனுபவங்கள்:

குன்னம் தொகுதி எம்.எல்.ஏவின் உணர்வும் பகிர்வும்

நாட்குறிப்பு கிழக்குப் பதிப்பகம்
சிவசங்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட முகநூல் பதிவுகளின் தொகுப்பு.
2019 சோழன் ராஜா ப்ராப்தி கட்டுரைத் தொகுப்பு அந்திமழை பதிப்பகம்
அந்திமழை இதழின் விருந்தினர் பக்கத்தில் இடம்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு.
2019 "தோழர்" சோழன் வரலாற்றுப் புதினம் அமேசான் கிண்டில்
நக்சல் இயக்கம் மற்றும் தனித் தமிழ்நாடு கோரி ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகளை (எ-கா: பொன்பரப்பி தமிழரசனின் தமிழ்நாடு விடுதலைப்படை) பின்னணியாகக் கொண்ட புதினம்.

அமேசான் கிண்டில் நேரடி வெளியீடு தளம் 2019-இல் பென் டூ பப்ளிஷ் (Pen to Publish) என்ற தலைப்பில் நடத்திய போட்டியில் இப் புதினம் இறுதிச்சுற்றுக்குச் சென்றது.[6][7]

தனி வாழ்க்கை

தொகு

சிவசங்கரின் வசிப்பிடம் அரியலூர் ராஜாஜி நகர் ஆகும். இவர் இணையரான மருத்துவர் காயத்ரிதேவி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்தவர்.[8] இவ்விணையருக்கு சிவசரண், சிவசூர்யா என்ற மகன்கள் உள்ளனர்.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  3. 3.0 3.1 3.2 "சோழன் To பல்லவன்- சா.சி.சிவசங்கர் அமைச்சரான கதை! | News7 Tamil" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-04-01. பார்க்கப்பட்ட நாள் 2022-04-18.
  4. ஆர். முத்துக்குமார் (2013). மொழிப்போர். கிழக்குப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788184939613.
  5. "முதல்வர், அமைச்சர்கள் பயோ டேட்டா". www.dinakaran.com. Archived from the original on 2021-05-07. பார்க்கப்பட்ட நாள் 2022-04-13.
  6. சிவசங்கர், S. S. Sivasankar எஸ் எஸ். "Thozhar Chozhan தோழர் சோழன்" (in Tamil). பார்க்கப்பட்ட நாள் 2020-04-14.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. தோழர் சோழன்|நூல் அலசல்|Tamil Novel Review|Kindle books|S. S. Sivasankar|Thozhar Chozhan, பார்க்கப்பட்ட நாள் 2022-04-27
  8. "மீன் விருந்து முதல் ஐபிஎல் பாஸ் வரை: தமிழக சட்டப்பேரவையில் கவனம் ஈர்த்த 'சம்பவங்கள்'". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-04-12.
  9. புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு தினத்தந்தி 2021. மே. 7

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சா._சி._சிவசங்கர்&oldid=3943563" இலிருந்து மீள்விக்கப்பட்டது