நான்காம் அலெக்சாண்டர்

இளவரசர்

நான்காம் அலெக்சாண்டர் (Alexander IV) (கிரேக்கம்: Ἀλέξανδρος Δ΄; 323–309 கி மு) என்பவர் பேரரசர் அலெக்சாண்டர்பாக்திரியா நாட்டு இளவரசி ரோக்சானாவிற்கும் மகனாகப் பிறந்த இவரை ஏஜியஸ் என்றும் அழைப்பர்.[1]

நான்காம் அலெக்சாண்டர்
மாசிடோனியாவின் மன்னர்
ஆட்சிகி மு 323/322–309
முன்னிருந்தவர் மாசிடோனியாவின் மூன்றாம் பிலிப்பு
பின்வந்தவர்சசாண்டர்
பாரசீகப் பேரரசர்
அரசுப்பிரதிநிதிகி மு 323/322–309
முன்னிருந்தவர்மாசிடோனியாவின் மூன்றாம் பிலிப்பு
பின்வந்தவர்முதலாம் செலூக்கசு நிக்காத்தர்
எகிப்தின் பார்வோன்
ஆட்சிக்காலம்கி மு 323/322–309
முன்னிருந்தவர்மாசிடோனியாவின் மூன்றாம் பிலிப்பு
பின்வந்தவர்தாலமி முதலாம் சோத்தர்
அரச குலம்ஆர்கியத் வம்சம்
தந்தைபேரரசர் அலெக்சாந்தர்
தாய்பாக்திரியாவின் ரோக்சானா
பிறப்புஆகத்து, கிமு 323
பாபிலோன்
இறப்புகி மு 309 (வயது 13 அல்லது 14)
மாசிடோனியா
சமயம்பண்டைய கிரேக்க சமயம்
அலெக்சாண்டரின் பேரரசும், அவர் போரிட்ட வழித்தடங்களும்

பிறப்பு தொகு

பேரரசர் அலெக்சாண்டருக்கும், பாரசீகத்தின் பாக்திரியா பகுதியின் சோக்தியானாவின் இளவரசி ரோக்சனாவிற்கும் பாபிலோனில் ஆகஸ்டு, கி மு 323இல் பிறந்தவர் நான்காம் அலெக்சாண்டர். [2][3][4] இவர் மக்கெடோனின் இரண்டாம் பிலிப்பின் பேரன் ஆவார். நான்காம் அலெக்சாண்டர், தன் தாயின் கருவில் பாலினம்அறியாத நிலையில், தந்தையான பேரரசர் அலெக்சாண்டர் இறக்கவே, அலெக்சாண்டரின் வாரிசு குறித்து கிரேக்கப் படைத்தலைவர்கள்; கிரேக்க ஆளுநர்கள் மற்றும் அரச குடும்பத்தவர்களுக்கிடையே கருத்து வேறுபாட்டால் உட்பிளவுகள் உண்டாகியது.

பின்னர் அலெக்சாண்டரின் மனைவி ரோக்சனாவிற்கு ஆகஸ்டு, கி மு 323இல் நான்காம் அலெக்சாண்டர் பிறந்ததால், அக்குழந்தையின் அரசப் பிரதிநிதியாக பெர்டிக்காஸ் என்பவர் கிரேக்கப் பேரரசை ஆள்வது தீர்மானிக்கப்பட்டது.

கிரேக்கப் பேரரசின் பகுதியான எகிப்தில் ஏற்பட்ட கடுமையான இராணுவ கிளர்ச்சிகளுக்குப் பிறகு, மே அல்லது சூன், கி மு 320இல் பெர்டிக்காஸ் கிரேக்க பேரரசின் உயர் அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டார்.[5]பின்னர் ஆண்டிபாட்டர் , இளவரசன் நான்காம் அலெக்சாண்டரின் அரசப் பிரதிநிதியாக கிரேக்கப் பேரரசை வழிநடத்தினான்.

உள்நாட்டுப் போர் தொகு

கிரேக்கப் படைத்தலைவர் சசாண்டர், தாலமி சோத்தர் மற்றும் ஆண்டிகோணஸ் போன்ற பிற கிரேக்கப் படைத்தலைவர்களுடன் கூட்டணி சேர்ந்து நான்காம் அலெக்சாண்டரின் பேரரசு மீது போர் தொடுத்தனர்.

போரின் முடிவில் கி மு 318இல் சசாண்டர் மாசிடோனியாவை கைப்பற்றி ஆண்டார். பேரரசர் அலெக்சாண்டரின் மனைவி ரோக்சனாவும், மகன் நான்காம் அலெக்சாண்டரும் எபிரஸ் நாட்டின் பகுதிக்கு தப்பி ஓடினர். அலெக்சாண்டரின் தாயான ஒலிம்பஸ், தன் உறவினர்களான எபிரஸ் நாட்டுப் படைகளுடன் போர் தொடுத்து, மீண்டும் மாசிடோனியாவைக் கைப்பற்றினர்.

சசாண்டர் மீண்டும் கி மு 316இல் மாசிடோனியாவைக் கைப்பற்றினார். நான்காம் அலெக்சாண்டரும், அவரது தாயும் போர்க் கைதிகளானர்கள்.

கிரேக்கப் படைத்தலைவர்களான சசாண்டர், ஆண்டிகோணஸ், லிசிமச்சூஸ் மற்றும் தாலமி சோத்தர் ஆகியவர்களிடையே நடந்த மூன்றாம் வாரிசுரிமைப் போர் கி மு 311இல் முடிவுக்கு வந்தது. இப்போரின் முடிவில் சசாண்டர் மாசிடோனியாவின் மன்னரானார்.

இறப்பு தொகு

 
நான்காம் அலெக்சாண்டரின் நினைவிடம், வெர்ஜீனியா

பேரரசர் அலெக்சாண்டரின் மகன் நான்காம் அலெக்சாண்டர் தமது 14வது வயதில், சசாண்டர் எனும் கிரேக்கப் படைத்தலைவரால் கி மு 309இல் இரகசியமாகப் நஞ்சிடப்பட்டு கொல்லப்பட்டார்.

கிரேக்கப் பேரரசின் வாரிசுரிமைப் போர்கள் தொகு

 
தியாடோச்சி எனும் வாரிசுரிமைப் போருக்குப் பின்னர் செலூக்கியப் பேரரசு, தாலமைக் பேரரசு, சசாண்டர், ஆண்டிகோணஸ், லிசிமச்சூஸ் என ஐந்தாக பிளவு பட்ட அலெக்சாண்டரின் கிரேக்கப் பேரரசின் பகுதிகள்

கி மு 311இல் நடந்த முதல் வாரிசுரிமைப் போரின் முடிவில் அலெக்சாண்டரின் நண்பரும், படைத்தலைவருமான செலூக்கஸ் நிக்காத்தர் கிரேக்கப் பேரரசின் மேற்காசியா பகுதிகளுக்கு கி மு 305இல் மன்னராக முடிசூட்டுக்கொண்டார். பண்டைய எகிப்து பகுதிகளுக்கு தாலமி சோத்தர் எனும் கிரேக்கப் படைத்தலைவர் பார்வோனாக கி மு 305இல் முடிசூட்டிக் கொண்டு ஆண்டார்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. The error was caused by a modern misreading, ΑΙΓΟΥ for ΑΛΛΟΥ, of the text of Ptolemy's Canon of Kings. See e.g. "s.v. Alexander the Great". Encyclopaedia Britannica. 1. 1911. பக். 549. https://books.google.com/books?id=Fs09AQAAMAAJ&pg=PA549#v=onepage&q&f=false.  Chugg, Andrew Michael (2007). The Quest for the Tomb of Alexander the Great. Lulu. பக். 42. https://books.google.com/books?id=JZeNepdR5dMC&lpg=PP1&pg=PA42#v=onepage&q&f=false.  At Google Books.
  2. Ahmed, S. Z. (2004), Chaghatai: the Fabulous Cities and People of the Silk Road, West Conshokoken: Infinity Publishing, p. 61.
  3. Strachan, Edward and Roy Bolton (2008), Russia and Europe in the Nineteenth Century, London: Sphinx Fine Art, p. 87, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-907200-02-1.
  4. Livius.org. "Roxane." Articles on Ancient History. Page last modified 17 August 2015. Retrieved on 29 August 2016.
  5. Anson, Edward M (Summer 1986). "Diodorus and the Date of Triparadeisus". The American Journal of Philology (The Johns Hopkins University Press) 107 (2): 208–217. doi:10.2307/294603. https://archive.org/details/sim_american-journal-of-philology_summer-1986_107_2/page/208. 

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

நான்காம் அலெக்சாண்டர்
ஆர்கியத் வம்சம்
பிறப்பு: கி மு 323 கி மு இறப்பு: கி மு 311
அரச பட்டங்கள்
முன்னர்
மாசிடோனியாவின் மூன்றாம் பிலிப்பு
மாசிடோனியாவின் மன்னர்
323–311 கி மு
பின்னர்
சசாண்டர்
ஆசியாவின் கோமகன்
323–311 கி மு
பின்னர்
செலூக்கஸ் நிக்காத்தர்
எகிப்தின் பார்வோன்
323–311 கி மு
பின்னர்
தாலமி சோத்தர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காம்_அலெக்சாண்டர்&oldid=3833197" இலிருந்து மீள்விக்கப்பட்டது