சோனு கக்கர்

சோனு கக்கர்(Sonu Kakkar) என்பவர் இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஆவார்[1][2][3]. இவர் தமிழ், இந்தி, நேபாளி மொழி, கன்னடம் போன்ற பலமொழிகளில் பாடியுள்ளார். தெறி, வரலாறு ஆகிய திரைப்படங்களில் பாடியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். இவர் எம் தொலைக்காட்சியின் விருது உள்ளிட்ட பிற விருதுகளைப் பெற்றுள்ளார்.

சோனு கக்கர்
பிறப்பு20 அக்டோபர் 1986 (1986-10-20) (அகவை 37)
ரிசிகேசு, உத்திரகாண்ட், இந்தியா
வாழ்க்கைத்
துணை
நீரஜ் சர்மா (2006–தற்போது வரை)
உறவினர்கள்நேகா கக்கர் (சகோதரி)
டோனி கக்கர்r (சகோதரர்)
விருதுகள்சிறந்த அறிமுக பெண் பின்னணிப் பாடகருக்கான விருதினைப் பெற்றுள்ளார். மேலும் எம் டிவி வழங்கிய வீடியோ மியூசிக் விருதினைப் பெற்றுள்ளார். ஜி ஐ எம் ஏ விருது பெற்றுள்ளார்.
இசை வாழ்க்கை
தொழில்(கள்)பின்னணிப் பாடகர்

ஆரம்பகால வாழ்க்கை தொகு

சோனு கக்கர் அக்டோபர் 20, 1986 ஆம் ஆண்டில் ரிசிகேசுவில்,உத்தராகண்டம், இந்தியா பிறந்தார். இவர் தனது ஐந்தாவது வயதில் இருந்து பாடி வருகிறார். இவர் குழந்தையாக இருந்த போதே இவரின் பெற்றோர் புது தில்லியில் உள்ள உத்தம் நகருக்கு குடிபெயர்ந்தனர். பின் இவர் மும்பை சென்றார். தொலைக்காட்சி பாடல் போட்டியின் போது இவருடைய பாடும் திறனைக் கண்ட பாலிவுட் இசையமைப்பாளரான சந்தீப் சௌதா இவருக்கு பாபுஜி சரா தேரே சலோ எனும் பாடலைப் பாடுவதற்கான வாய்ப்பை கொடுத்தார்.[4] இவரின் திரை வாழ்க்கையில் இது முக்கியமான பாடலாக இது அமைந்தது. இவருக்கு நேகா கக்கர் எனும் மூத்த சகோதரி உள்ளார். இவரும் பின்னணிப் பாடகராக உள்ளார். இவர் நீரஜ் சர்மா என்பவரை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

இசைத்தட்டு வரலாறு தொகு

படமனை தொகுப்பு தொகு

2012 ஆம் ஆண்டில் எம் டிவியில் கோக் நிறுவனம் பல கலைஞர்களை வைத்து நேரலையில் படமனையில் வைத்து இசை உருவாக்கம் செய்யும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியினை நடத்தியது.அதில் இவரும் கலந்துகொண்டார். கோக் நிறுவனம் இந்துஸ்தானி இசை, கருநாடக இசை, நாட்டார் பாடல் போன்றவற்றிலிருந்து ஹிப் ஹாப், ராக் இசை, பரப்பிசை போன்ற வடிவங்களுக்கு இசையை உருவாக்கம் செய்தனர்.[5] இது இந்தியாவில் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சிகளில் மிகவும் வெற்றிகரமான இசை நிகழ்ச்சியாகும்.

2013 ஆம் ஆண்டில் ஐசி பானி எனும் இசைத்தொகுப்பில் பங்காற்றினார்.

தமிழ் பாடல்கள் தொகு

2016 தொகு

2016 ஆம் ஆண்டில் தமிழில் வெளியான தெறி திரைப்படத்தில் இடம் பெற்ற ராங்கு ராங்கு எனும் பாடலைப் பாடினார். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்த இந்தப் பாடலை டி. ராஜேந்தர் மற்றும் ஜி. வி. பிரகாஷ் குமார் ஆகியோருடன் இணைந்து பாடினார். திரைப்படத்தின் இறுதியில் இந்தப்பாடல் இடம்பெற்றது. விஜய் (நடிகர்), ஏமி சாக்சன் ஆகியோர் இந்தப் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர்.

2013 தொகு

2013 ஆம் ஆண்டில் மீண்டும் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையில் நான் ராஜாவாகப் போகிறேன் எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற மல்கோவா எனும் பாடலைப் பாடினார். இந்தத் திரைப்படத்தில் நகுல் ,சந்தனி ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தனர். அண்ணாமலை இந்தப் படலை எழுதினார்

2006 தொகு

2006 ஆம் ஆண்டில் வெளிவந்த்ய வரலாறு திரைப்படத்தில் இடம்பெற்ற தினம் தினம் தீபாவளி எனும் பாடலைப் பாடினார். கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய இந்தத் திரைப்படத்தில் அஜித் குமார், அசின் (நடிகை) ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர். ஏ. ஆர். ரகுமான் இந்தப் பாடலுக்கு இசையமைத்தார். வைரமுத்து இந்தப் பாடலை எழுதினார்.

விருதுகள் தொகு

சிறந்த அறிமுக பெண் பின்னணிப் பாடகருக்கான விருதினைப் பெற்றுள்ளார். மேலும் எம் டிவி வழங்கிய வீடியோ மியூசிக் விருதினைப் பெற்றுள்ளார். ஜி ஐ எம் ஏ விருது பெற்றுள்ளார்.

சான்றுகள் தொகு

  1. "About Sonu Kakkar". Sonu Kakkar. பார்க்கப்பட்ட நாள் 26 October 2015.
  2. "Sonu Kakkar Biography". In.com. Archived from the original on 25 March 2013. பார்க்கப்பட்ட நாள் 26 October 2015.
  3. "Sonu Kakkar Biography". JustBollywood.In. Archived from the original on 4 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 26 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Ahmedabad grooves to Sonu Kakkar's songs". Times Of India. 26 Mar 2014. பார்க்கப்பட்ட நாள் 26 October 2015.
  5. Moye, Jay (2013-11-01). "Coke Studio Bridges Barriers in Pakistan, India the Middle East and Africa". The Coca-Cola Company. Archived from the original on 2018-07-28. பார்க்கப்பட்ட நாள் 2015-12-23.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனு_கக்கர்&oldid=3556350" இலிருந்து மீள்விக்கப்பட்டது