சோழபுரம்
சோழபுரம் (ஆங்கிலம்:Cholapuram) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
— பேரூராட்சி — | |||||||
ஆள்கூறு | 11°N 79°E / 11°N 79°E | ||||||
மாவட்டம் | தஞ்சாவூர் | ||||||
வட்டம் | கும்பகோணம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | பா. பிரியங்கா பங்கஜம், இ. ஆ. ப [3] | ||||||
பேரூராட்சிதலைவர் | கோ.வேல்முருகன் | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
6,803 (2011[update]) • 962/km2 (2,492/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
7.07 சதுர கிலோமீட்டர்கள் (2.73 sq mi) • 123 மீட்டர்கள் (404 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/sholapuram |
அமைவிடம்
தொகுதஞ்சாவூரிலிருந்து 53 கி.மீ. தொலைவில் உள்ள சோழபுரம் பேரூராட்சிக்கு அருகில் திருவிடைமருதூர் 15 கி.மீ.; திருப்பனந்தாள் 7 கி.மீ.; தேவனஞ்சேரி 7 கி.மீ.; கும்பகோணம் 13 கி.மீ. ஆகியவை உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு7.07 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 33 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,632 வீடுகளும், 6,803 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6][7]
விவசாயம்
தொகுகிராம மக்கள் வருவாய் விவசாயம் சார்ந்து இருக்கிறது. விவசாயத்திற்கு "மண்ணியாறு" மற்றும் மோட்டார் (பம்புசெட்) போன்றவை நீர்ப்பாசனம் வழங்குகின்றன. சோழபுரத்தில் நெல், கோதுமை, பயிறு வகைகள், எள், நிலக்கடலை, சவுக்கு மரம், பழங்கள், மிளகாய், வாழை மரம் மற்றும் கரும்பு பயிரிடப்படுகின்றன.
கல்வி
தொகுஅரசு உயர்நிலைப் பள்ளி, மார்னிங்ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியவை கல்வியை வழங்குகின்றன.
கோவில்
தொகுகைலாசநாதர் கோவில், சரபேஸ்வரர் கோவில், விநாயகர், அம்மன், முனீஸ்வரன், அய்யனார் கோவில்கள் மிகவும் பிரபலமானவை.
போக்குவரத்து
தொகுகும்பகோணம் ரயில் நிலையம் சோழபுரம் மிக அருகில் உள்ள ரயில் நிலையமாகும். கிராம மற்றும் நகர பகுதி போக்குவரத்துக்கான முக்கிய பேருந்து முனையம் கும்பகோணத்தில் உள்ளது. தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் நவீன விமான நிலையங்கள் உள்ளன.
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ சோழபுரம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/sholapuram/population
- ↑ Cholapuram Population Census 2011
- ↑ Cholapuram Town Panchayat