டெனிஸ் கொம்டன்
டெனிஸ் கொம்டன் (Denis Compton, பிறப்பு: மே 23 1918, இறப்பு: ஏப்ரல் 23 1997) இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 78 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 515 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1937 -1957 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | டெனிஸ் கொம்டன் | |||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 10 அங் (1.78 m) | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 297) | ஆகத்து 14 1937 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | மார்ச்சு 5 1957 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஏப்ரல் 23 1997 |
ஒரு வலது கை மட்டையாளர் மற்றும் இடது கை வழமையில்லாச் சுழல் பந்து வீச்சாளரான, காம்ப்டன் இங்கிலாந்தின் மிகவும் குறிப்பிடத்தக்க மட்டையாளர்களில் ஒருவராக புகழப்படுகிறார்.[1] முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் நூறு முரை, நூறுகளுக்கு மேல் அடித்த இருபத்தைந்து வீரர்களில் இவரும் ஒருவர்.[2] 2009 ஆம் ஆண்டில், ஐ.சி.சி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் காம்ப்டன் மரணத்திற்குப் பின் சேர்க்கப்பட்டார்.[3] டெனிஸ் காம்ப்டன் ஓவல் மற்றும் இலார்ட்சு துடுப்பட்ட மைதானத்தின் ஒரு பகுதி இவரது நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.[4][5]
சொந்த வாழ்க்கை
தொகுகாம்ப்டனின் மூத்த சகோதரர் லெஸ்லியும் மிடில்செக்ஸ் துடுப்பாட்ட அணிக்காகவும் ஆர்சனல் கால்பந்துக் கழகத்திற்காக கால்பந்தும் விளையாடினார்.[6]
1946-47 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இங்கிலாந்து அணி வலிமையான ஆஸ்திரேலிய அணியால் தோற்கடிக்கப்பட்டாலும், அடிலெய்ட் துடுப்பாட அரங்கத்தின் ஒவ்வொரு ஆட்டப் பகுதியிலும் நூறு ஓட்டங்களை எடுத்தார்.
தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரில் இவர் ஐந்து நூறு ஓட்டங்களை எடுத்தார்.அதில் ஒரு நூறு ஓட்டத்தினை மிடில்செக்ஸ் துடுப்பாட்ட அணிக்காகவும் மற்ற நான்கு நூறு ஓட்டங்களை இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்காகவும் எடுத்தார்.அந்தத் தொடரில் 88 எனும் சராசரியில் 1,056 ஓட்டங்கள் எடுத்தார். அந்த ஆண்டில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் அவர் மொத்தமாக 3,816 ஓட்டங்கள் எடுத்தார், இது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒரு ஆண்டில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டம் இதுவாகும்.அந்த ஆண்டி மட்டும் இவர் 18 நூறு ஓட்டங்களை எடுத்தார்.கடைசியாக ஒரு நூறு ஓட்டத்தினை செப்டம்பர் 15, 1947 இல் அடித்தார். ஒரே பருவத்தில் பதினெட்டு நூறுகள் எடுத்ததன் மூலம் இவர் மற்றொரு உலக சாதனை படைத்தார்.[7] பத்திரிகையாளர் பிராங்க் கீட்டிங்கின் கூற்றுப்படி, காம்டனுக்கு தனிப்பட்ட முறையில் பிடித்த போட்டியாக இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் கெண்ட் துடுப்பாட்ட அணிக்கு எதிராக மிடில்செக்ஸ் துடுப்பாட்ட அணிக்காக விளையடியது ஆகும்.[8] இந்தப் போட்டியில் மிடில்செக்ஸ் துடுப்பாட்ட அணி வெற்றிபெற 397 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு 100 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது.[9] அந்தப் போட்டியில் காம்ப்டன் 168 ஓட்டங்களுடன் முன்னிலை வகித்தார், ஆனால் மிடில்செக்ஸ் 75 ஓட்டங்களில் தோல்வி அடைந்தது.[10]
சொந்த வாழ்க்கை
தொகுகாம்ப்டன் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார்; அவரது முதல் மனைவி டோரிஸ் ரிச், ஒரு நடனக் கலைஞர் ஆவார். அவர்களுக்கு ஒரு பிரையன் எனும் ஒரு மகன் உள்ளார். அவரது இரண்டாவது மனைவி வலேரி பிளாட் ஆவார். இந்தத் தம்பதியினருக்கு பேட்ரிக் மற்றும் ரிச்சர்ட் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் நடால் துடுப்பாட்ட அணிக்காக துடுப்பாட்டம் விளையாடினர்.காம்ப்டன் தனது மூன்றாவது மனைவி கிறிஸ்டின் பிராங்க்ளின் டோபியாஸை 1975 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு சார்லோட் மற்றும் விக்டோரியா என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். அவரது பேரன் நிக், ரிச்சர்டின் மகன், இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் 2012–13 இந்திய சுற்றுப்பயணத்தின் போது அகமதாபாத்தில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[11]
சான்றுகள்
தொகு- ↑ "Player Profile: Denis Compton". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 December 2012.
- ↑ List of batsmen who have scored 100 centuries in first-class cricket
- ↑ Wadhwa, Arjun (18 July 2009). "Benaud, Gooch, Compton, Larwood and Woolley inducted into Cricket Hall of Fame". The Sport Campus. Archived from the original on 12 September 2012.
- ↑ "Cricket at London Shenley Club". Shenley Cricket Centre.co.uk. Archived from the original on 2018-11-18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-05.
- ↑ "A STAND TO NAME STANDS AFTER". Lords.org. 9 August 2012. Archived from the original on 26 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 5 ஜனவரி 2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help)CS1 maint: unfit URL (link) - ↑ "Leslie Compton". Arsenal F.C. Archived from the original on 19 October 2016.
- ↑ "Denis Compton's feat in 1947". ESPNcricinfo. http://www.espncricinfo.com/magazine/content/story/149535.html. பார்த்த நாள்: 15 September 2016.
- ↑ Keating, Frank (1998). "Denis Compton – talisman of hope, 1998... Delightful man". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 March 2013.
- ↑ Easterbrook, Basil (1997). "Compton's record season". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 March 2013.
- ↑ "Middlesex v Kent at Lord's, 13–15 August 1947". பார்க்கப்பட்ட நாள் 10 March 2013.
- ↑ "Nick Compton". ESPNcricinfo.