திரு. வி. க. விருது

தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் விருது

திரு. வி. க. விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு தமிழறிஞர் திரு. வி. க. நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு விருதாகும். தமிழ்நாடு அரசின் அரசாணை நிலைஎண்: 1657 நாள்: 03-09-1979 மூலம்1979 ஆண்டிலிருந்து இவ்விருது வழங்கப்படுகிறது. 1979 ஆம் ஆண்டிலிருந்து 1995 ஆம் ஆண்டு வரை ரூபாய் பத்தாயிரம் பணமுடிப்பு மற்றும் தகுதியுரை வழங்கப்பட்டன. 1996 ஆம் ஆண்டு முதல் 1998 வரை ரூபாய் இருபதாயிரம் பணமுடிப்பும், தகுதியுரையும் வழங்கப்பட்டன. 1998 ஆம் ஆண்டிலிருந்து ரூபாய் ஒரு இலட்சம் பணமுடிப்பும் எட்டு கிராம் அலவிலான தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.[1]

விருது பெற்றவர்கள் பட்டியல்

தொகு
வரிசை எண் விருது பெற்றவர் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு
1 ஜெகசிற்பியன் 1979
2 நாரண. துரைக்கண்ணன் 1980
3 அ. கி. பரந்தாமனார் 1981
4 திருக்குறளார் வீ. முனுசாமி 1982
5 பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் 1983
6 கோவி. மணிசேகரன் 1984
7 டாக்டர் க. த. திருநாவுக்கரசு 1985
8 கவிஞர் கா. மு. செரீப் 1986
9 டாக்டர் நா. சுப்பு ரெட்டியார் 1987
10 மணவை முஸ்தபா 1988
11 டாக்டர் தமிழண்ணல் 1989
12 புலவர் கா. கோவிந்தன்,
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்
1990
13 இராஜம் கிருஷ்ணன் 1991
14 அ. மு. பரமசிவானந்தம் 1992
15 முனைவர் தி. முத்துக் கண்ணப்பர் 1993
16 புலவர் இரா. இளங்குமரன் 1994
17 பேராசிரியர் கா. பொ. இரத்தினம் 1995
18 பேராசிரியர் மா. நன்னன் 1996
19 மா. சு. சம்பந்தன் 1997
20 புலவர் மருதவாணன் 1998
21 கவிஞர் மன்னர் மன்னன்
(புதுச்சேரி)
1999
22 பேராசிரியர் கா. சிவத்தம்பி
(இலங்கை)
2000
23 முனைவர் ப. இராமன் 2001
24 பேராசிரியர் தி. வே. கோபாலய்யர் 2002
25 முனைவர் ம.ரா.போ. குருசாமி 2003
26 முனைவர் ச. அகத்தியலிங்கம் 2004
27 ----- 2005
28 க. திருநாவுக்கரசு
(எழுத்தாளர்)
2006
29 முனைவர் த. பெரியாண்டவன் 2007
30 முனைவர் ச. பா. அருளானந்தம் 2008
31 வெ. அண்ணாமலை என்ற இமயம் 2009
32 பேராசிரியர் அ. அய்யாச்சாமி 2010
33 முனைவர் நா. ஜெயப்பிரகாசு 2011
34 பிரேமா நந்தகுமார் 2012
35 திரு.செ. அசோகமித்திரன் 2013
36 முனைவர் கரு.நாகராசன் 2014
37 கி. வைத்தியநாதன் 2015
38 முனைவர் மறைமலை இலக்குவனார் 2016
39 வை. பாலகுமாரன் 2017
40 முனைவர் கு.கணேசன் 2018
41 முனைவர் சே. சுந்தரராசன் 2019
42 வி.என்.சாமி 2020

குறிப்பு

  • 2005 ஆம் ஆண்டில் விருது வழங்கப்படவில்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2044/மாசி 22, ந. க. எண். ஆமொ2/1139/2013, நாள்: 06-03-2013 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் பட்டியல்.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=திரு._வி._க._விருது&oldid=3611056" இலிருந்து மீள்விக்கப்பட்டது