தெலுங்கு மாநிலங்கள்

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவின் கூட்டுச் சொல்

தெலுங்கு மாநிலங்கள் (Telugu states) என்பவை தென்கிழக்கு இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்காணா ஆகிய இரு இந்திய மாநிலங்கள் ஆகும். தெலுங்கு இன மக்கள் வாழும் இந்த மாநிலங்களின் வடக்கே மகாராட்டிரம், மேற்கில் கருநாடகம், வடகிழக்கில் ஒடிசா, சத்தீசுகர், தெற்கில் தமிழ்நாடு, கிழக்கில் வங்காள விரிகுடா, புதுச்சேரியின் யானம் மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன. இதன் முந்தைய மாநிலமான ஐக்கிய ஆந்திரப் பிரதேசம் 2014 இல் பிரிக்கப்பட்டதிலிருந்து தெலுங்கு மாநிலங்கள் என்ற குறிப்புச் சொல் பயன்பாட்டுக்கு வந்தது. 2011 மக்கள் கணக்கெடுக்கின் படி தெலங்காணாவின் மக்கள்தொகை 35,193,978 மற்றும், ஆந்திரப் பிரதேசத்தின் மக்கள் தொகை 49,506,799 ஆகியவற்றை இணைத்தால், தெலுங்கு மாநிலங்களின் மக்கள் தொகை 84,700,777 ஆகும்.

தெலுங்கு மாநிலங்கள்
தெலுங்கு இராஷ்டிரங்கள்
இனவியல் பிராந்தியங்கள்
தெலுங்கானா, ஆந்திரா, யானம்
தெலுங்கானா, ஆந்திரா, யானம்
நாடு இந்தியா
மாநிலங்கள்
பெரிய மாநகரம்ஐதராபாத்து
முதன்மை மாநகரங்கள் (இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011)[1]
பரப்பளவு
 • மொத்தம்275,052 km2 (1,06,198 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்8,45,80,777
 • அடர்த்தி310/km2 (800/sq mi)
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அதிகாரப்பூர்வ மொழிகள்

வரலாறு

தொகு

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்காணா ஆகிய தெலுங்கு மாநிலங்களின் பெயர்கள், 1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்திற்கும் முன்பே, தெலுங்கு இன மக்கள் வாழும் பகுதிகளுக்கான பிரபலமான வரலாற்றுப் பெயராக இருந்தன. இதன் காரணமாக அந்த எல்லைகள் நவீன தெலுங்கு மாநிலங்களின் வரையறுக்கப்பட்ட எல்லைகளாக உள்ளன. இந்திய விடுதலைச் சட்டத்திற்கு முன்பு, தற்போதைய தெலுங்கு மாநிலங்கள் நிசாமின் பிரித்தானிய ஆட்சியில் ஐதராபாத் இராச்சியத்தின் ஒரு பகுதியாகவும், பிரித்தானிய ஆட்சிக்கு உட்பட்ட மதராஸ் இராசதானியின் ஒரு பகுதியாகவும் இருந்தன.

சமையல்

தொகு

தெலுங்கு மாநிலங்களின் உணவு வகைகள் பொதுவாக அதன் கார்பான மற்றும் காரமான சுவைக்காக அறியப்படுகின்றன. மக்கள் பல்வேறு பகுதிகளின் பரவியுள்ளதன் காரணமாக சமையல் மிகவும் வேறுபட்டதாக உள்ளது.

ஊடகம்

தொகு

பல செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகள் இரண்டு தெலுங்கு மாநிலங்களின் நேயர்களை திருப்தி படுத்துகின்றன.

திரைப்படம்

தொகு

தெலுங்கு இந்த இரண்டு மாநிலங்கள் முழுவதும் பேசப்படுகிறது. [2] 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, உருது இரண்டு மாநிலங்களிலும் அதிகாரப்பூர்வ அந்தஸ்தைப் பெற்றுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட இந்திய மாநிலங்களில் முதன்மையான அதிகாரப்பூர்வ மொழி அந்தஸ்தைக் கொண்ட இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் தெலுங்கும் உள்ளது. [3] ஒன்றிய அரசாங்கத்தால் இந்தியாவின் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆறு மொழிகளில் இதுவும் ஒன்றாகும். [4]

குறிப்புகள்

தொகு
  1. "Indian cities by population" (PDF).
  2. "Making Telugu compulsory: Mother tongues, the last stronghold against Hindi imposition".
  3. "Schools, Colleges called for a shutdown in Telugu states". Archived from the original on 2017-10-11. பார்க்கப்பட்ட நாள் 2023-01-30.
  4. "Declaration of Telugu and Kannada as classical languages". Press Information Bureau. Ministry of Tourism and Culture, Government of India. Archived from the original on 16 December 2008. பார்க்கப்பட்ட நாள் 31 October 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலுங்கு_மாநிலங்கள்&oldid=3653360" இலிருந்து மீள்விக்கப்பட்டது