தேடிவந்த ராசா

1995 திரைப்படம்

தேடிவந்த ராசா (Thedi Vandha Raasa) என்பது 1995 ஆம் ஆண்டய இந்திய தமிழ் திரைப்படமாகும். பூபதி ராஜா இயக்கிய இப்படத்தை நளினி ராமராஜன் தயாரித்ததார். இப்படத்தில் ராமராஜன், குஷ்பூ,கவுண்டமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்த படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியை ஈட்டியதாக அறிவிக்கப்பட்டது.[1][2][3]

தேடிவந்த ராசா
இயக்கம்பூபதி ராஜா
தயாரிப்புநளினி ராமராஜன்
கதைபூபதி ராஜா
இசைஇளையராஜா
நடிப்புராமராஜன்
குஷ்பூ
கவுண்டமணி
வெளியீடு7 சூலை 1995
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தேவி (குஷ்பூ) தனது மனைவி என்றும் தங்களுக்குப் பிறந்தது என்று ஒரு குழந்தையுடன் ஆனந்த் (ராமராஜன்) சென்னைக்கு வருகிறார். தேவிக்கு குடைசலைத் தருகிறார். பின்னர் தேவிக்கு உண்மை தெரிய வருகிறது. கல்லூரியில் பயின்ற ஆனந்தின் சகோதரியின் மரணத்திற்கு தேவி தான் காரணம் என்று கருதும் ஆனந்த், தனது இன்னொரு சகோதரியின் குழந்தையை எடுத்துவந்து தங்கள் குழந்தை என்று கூறி தேவிக்கு பாடம் கற்பிப்பதற்காக வந்தார். அதன்பிறகு என்ன நடந்தது என்பதே கதை

நடிகர்கள்

தொகு

படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். பாடல் வரிகளை கவிஞர் புலமைப்பித்தன் மற்றும் கவிஞர் காமகோடியன் ஆகியோர் எழுதினர்.[4]

  • "சின்னஞ் சிறு. . . " மலேசியா வாசுதேவன், உமா ராமணன்
  • "எதையும் தங்கும். . . " மலேசியா வாசுதேவன்
  • "நியாயம் கிடைக்காமல். . . " மனோ
  • "ராசவே தேடி. . . " இளையராஜா, எஸ். என். சுரேந்தர் மற்றும் குழுவினர்
  • "வம்பு பண்ணா. . . " மலேசியா வாசுதேவன்

குறிப்புகள்

தொகு
  1. "Thedi Vandha Raasa". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-04.
  2. "Thedi Vandha Raasa". gomolo.com. Archived from the original on 2014-08-10. பார்க்கப்பட்ட நாள் 2014-08-04.
  3. "Tamil Movie News--1995 Review(Cont.)". groups.google.com. 1996-01-09. பார்க்கப்பட்ட நாள் 2016-10-07.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-12-05. பார்க்கப்பட்ட நாள் 2021-01-28.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேடிவந்த_ராசா&oldid=3688818" இலிருந்து மீள்விக்கப்பட்டது