த. எ. பாட்டீல்
தயாந்தியோ எசுவந்தராவ் பாட்டீல் (Dnyandeo Yashwantrao Patil)(பிறப்பு: அக்டோபர் 22, 1935) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 29 மே 2012 முதல் 26 நவம்பர் 2014 வரை கிழக்கு இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஆளுநராக இருந்தார். இவர் ஓர் கல்வியாளர் மற்றும் மகாராட்டிரா மாநில இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவராக இருந்தவர் ஆவார். இவர் மேற்கு வங்க ஆளுநராக (கூடுதல் பொறுப்பு) நியமிக்கப்பட்டார்.[2]
த. எ. பாட்டீல் | |
---|---|
மேற்கு வங்காள ஆளுநர் (கூடுதல் பொறுப்பு) | |
பதவியில் 3 சூலை 2014 – 17 சூலை 2014 | |
முன்னையவர் | எம். கே. நாராயணன் |
பின்னவர் | கேசரிநாத் திரிபாதி |
பீகார் ஆளுநர் | |
பதவியில் 22 மார்ச் 2013[1] – 26 நவம்பர் 2014 | |
முன்னையவர் | தேவானந்த் கோன்வார் |
பின்னவர் | கேசரிநாத் திரிபாதி |
திரிபுரா ஆளுநர் | |
பதவியில் 27 நவம்பர் 2009 – 21 மார்ச் 2013 | |
முன்னையவர் | கம்லா பெனிவால் |
பின்னவர் | தேவானந்த் கோன்வார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தயாந்தியோ எசுவந்தராவ் பாட்டீல் 22 அக்டோபர் 1935 அம்பாப், கோல்ஹாப்பூர், பம்பாய் மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (தற்பொழுது மகராட்டிரம், இந்தியா) |
அரசியல் கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி |
துணைவர்(கள்) | சாந்தாதேவி, புசுபலதா |
பிள்ளைகள் | 5 (விஜய் த . பாட்டீல், மருத்துவர் அஜென்கியா பாட்டீல், சட்டெஜ் பாட்டீல், நந்திதா பால்செக்தர், மருத்துவர் சஞ்சய் த. எ. பாட்டீல்) |
முன்னாள் கல்லூரி | அல்போன்சா பள்ளி, கோல்ஹாப்பூர் |
விருதுகள் | பத்மசிறீ |
இணையத்தளம் | Official Website |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுமகாராட்டிரா மாநிலம், கோல்ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள அம்பாப் கிராமத்தில் அக்டோபர் 22, 1935ல் பிறந்தார்.[3]
கல்வி நிறுவனங்கள்
தொகுபல கல்வி நிறுவனங்கள் த. எ. பாட்டீலால் நிறுவப்பட்டன, அவற்றில் ஒரு சில:
- டாக்டர். த. எ. பாட்டீல் வித்யாபீத், புனே
- பத்மசிறீ ரீ த. எ. பாட்டீல் வித்யாபீத், நவி மும்பை
- டாக்டர் த. எ. பாட்டீல் மருத்துவக் கல்லூரி நவி மும்பை
- த. எ..பாட்டீல் கல்விச் சங்கம், கோலாப்பூர்
- டாக்டர் த. எ. பாட்டீல் விளையாட்டு அகாதமி
- புனே, டாக்டர் த. எ. பாட்டீல் அறிவு நகரம்
- டாக்டர். த. எ. பாட்டீல் பன்னாட்டுப் பள்ளி, மும்பை
- டாக்டர் த. எ. பாட்டீல் சர்வதேச பள்ளி, காங்க்ரா (இமாச்சலப் பிரதேசம்)
விருது
தொகுஇவரது சமூகப் பணிக்காக இந்திய அரசு 1991-ல் பத்மசிறீ விருதினை வழங்கியது.[4]
அரசியல்
தொகுபாட்டீல் 1957-ல் கோலாப்பூர் நகர்மன்ற காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நகராட்சித் தலைவராக 1962 வரை பதவியிலிருந்தார். 1967 முதல் 1978 வரை மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். 1967 மற்றும் 1972 ஆகிய இரண்டு தேர்தல்களிலும், இவர் பன்காலா சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[5][6] இவர் 21 நவம்பர் 2009 அன்று திரிபுரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[7] பின்னர் 9 மார்ச் 2012 அன்று பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ PTI (22 March 2013). "D.Y Patil sworn in as Governor of Bihar" (in en). The Hindu Business Line. http://www.thehindubusinessline.com/news/national/dy-patil-sworn-in-as-governor-of-bihar/article4538321.ece.
- ↑ PTI (3 July 2014). "Dr D Y Patil appointed West Bengal's acting Governor". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/dr-d-y-patil-appointed-west-bengals-acting-governor/articleshow/37718348.cms.
- ↑ "Biography of Padmashree Dr. D.Y. Patil". Padmashree Dr. D.Y. Patil University website. Archived from the original on 13 December 2009. பார்க்கப்பட்ட நாள் 25 November 2009.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ "Statistical Report on General Election 1967 to the Legilsative Assembly of Maharashtra" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம் website. p. 10. பார்க்கப்பட்ட நாள் 27 November 2009.
- ↑ "Key Highights of General Election 1972 to the Legilsative Assembly of Maharashtra" (PDF). Election Commission of India website. p. 10. பார்க்கப்பட்ட நாள் 25 November 2009.
- ↑ "President Appoints Governors". The President of India website. 21 November 2010. பார்க்கப்பட்ட நாள் 25 November 2009.