நம்பூதிரி (ஓவியர்)

இந்திய ஓவியர்

கருவட்டு மனை வாசுதேவன் நம்பூதிரி (Karuvattu Mana Vasudevan Namboothiri) (13 செப்டம்பர் 1925-7 ஜூலை 2023) ஓவியர் நம்பூதிரி அல்லது வெறுமனே நம்பூதிரி என்று அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய ஓவியரும் மற்றும் சிற்பியும் ஆவார். இவர் தனது வரி கலை மற்றும் செம்பு நிவாரணப் பணிகளுக்கு பெயர் பெற்றவர். தகழி சிவசங்கர பிள்ளை, கேசவதேவ், எம். டி. வாசுதேவன் நாயர், உரூப், எஸ். கே. பொற்றேக்காட்டு, எடச்சேரி கோவிந்தன் நாயர் மற்றும் வி. கே. என் போன்ற பல மலையாள எழுத்தாளர்களை ஓவியமாக வரைந்த இவர், இந்தியாவின் மிகச் சிறந்த இலக்கிய ஓவியர்களில் ஒருவராகவும் இருந்தார். கேரள லலிதகலா அகாதமியின் தலைவராகவும் இருந்தார். 2003 ஆம் ஆண்டில் அகாதமி இவருக்கு ராஜா ரவி வர்மா விருதை வழங்கியது.[1] மேலும், சிறந்த கலை இயக்குனருக்கான கேரள மாநில திரைப்பட விருதையும் பெற்றவர்.

நம்பூதிரி
2011இல் நம்பூதிரி
பிறப்புகருவட்டு மனை வாசுதேவன் நம்பூதிரி
(1925-09-13)13 செப்டம்பர் 1925
பொன்னானி, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு7 சூலை 2023(2023-07-07) (அகவை 97)
கோட்டக்கல், மலப்புறம் ,கேரளம், இந்தியா
மற்ற பெயர்கள்ஓவியர் நம்பூதிரி
அறியப்படுவதுஓவியம், சிற்பம்
வாழ்க்கைத்
துணை
மிருணாளினி
பிள்ளைகள்2
விருதுகள்
  • 1974 சிறந்த கலை இயக்குநருக்கான கேரள மாநில திரைப்பட விருது
  • 2003 ரவி வர்மா Award
  • 2004 பால சாகித்ய விருது
Patron(s)

இளமை

தொகு
 
நம்பூதிரிக்கு ஆரம்பகால உத்வேகமாக இருந்த சுகபுரம் கோவிலில் உள்ள சிற்பங்கள்

நம்பூதிரி தென்னிந்திய மாநிலமான கேரளாவின் மலப்புறம் மாவட்டத்திலுள்ள பொன்னானி அருகேயுள்ள கருவட்டு மனையில் பரமேசுவரன் நம்பூதிரி மற்றும் ஸ்ரீதேவி அந்தர்ஜனம் ஆகியோருக்கு மூத்த மகனாக பிறந்தார்.[2][3] தனது குழந்தை பருவத்தில், தனது வீட்டிற்கு அருகிலுள்ள சுகபுரம் கோவிலில் உள்ள சிற்பங்களால் ஈர்க்கப்பட்டார். “இவற்றைப் பார்த்த பிறகு சிற்பங்களை வரைந்து வடிவமைக்க வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்பட்டது” என்று நம்பூதிரி ஒரு நேர்காணலில் கூறினார். கலைக் கல்வியைத் தொடர, வரிக்கசேரி மனையைச் சேர்ந்த கிருஷ்ணன் நம்பூதிரி என்பவரின் நிதியுதவியுடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார்.[4] அங்கு, சென்னை அரசு நுண்கலை கல்லூரியில் சேர்ந்தார். மேலும், இவருக்கு நிறுவனத்தின் நிறுவனரும் மற்றும் முதல்வருமான டி. பி. ராய் சௌத்தரி மற்றும் எஸ். தனபால் ஆகியோரின் கீழ் படிக்க வாய்ப்பு கிடைத்தது.[5][6] இந்தக் காலகட்டத்தில்தான் நம்பூதிரி இளம் கலைஞரின் மீது செல்வாக்கு செலுத்தும் கே. சி. எஸ். பணிக்கரைத் தொடர்பு கொண்டார்.[7][8]

தொழில் வாழ்க்கை

தொகு

நம்பூதிரி 1954 ஆம் ஆண்டில் அரசு நுண்கலை கல்லூரியிலிருந்து நுண்கலை மற்றும் பயன்பாட்டுக் கலைகளில் இரண்டு சான்றிதழ் பட்டங்களைப் பெற்றார். மேலும் கே. சி. எஸ். பணிக்கரின் சோழமண்டலம் கலைஞர்கள் கிராமத்தில் தங்கி ஒரு வருடத்தில் ஆறு ஆண்டு படிப்பை முடித்தார், 1960 ஆம் ஆண்டில் மாத்ருபூமி செய்தித்தாளில் பணியாளர் கலைஞராக சேர கேரளா திரும்பினார்.[4][8][9] 1982 வரை மாத்ருபூமியில் பணியாற்ரிய இவர், மலையாளத்தில் உள்ள பெரும்பாலான முக்கிய எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகளுக்கு ஓவியம் வரைந்தார்.[6][10] மாத்ருபூமியில், ‘நானியம்மையும் லோகாவும்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். இது ஒரு பிரபலமான கார்ட்டூன் தொடராக மாறியது. 1982 ஆம் ஆண்டில், கலாகெளமுதி என்ற செய்தி இதழில் சேர்ந்தார். பின்னர், தி நியூ இந்தியன் எக்சுபிரசின் சமகாலிகா மலையாள வாரிகா என்ற வாராந்திர செய்தி இதழில் சேர்ந்தார்.[9][11]

சொந்த வாழ்க்கை

தொகு

நம்பூதிரி, மிருணாளினி என்பவரை மணந்தார். இந்தத் தம்பதியினருக்கு பரமேசுவரன் மற்றும் வாசுதேவன் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.[12] மலப்புறம் மாவட்டத்திலுள்ள நடுவட்டத்தில் இவரது குடும்பம் வசித்து வந்தது.[13]

இறப்பு

தொகு

நம்பூதிரி தனது 97வது வயதில் ஜூலை 7,2023 அன்று இறந்தார்.[14]

நம்பூதிரி இரண்டு முறை கேரள லலித் கலா அகாதமியின் தலைவராகப் பணியாற்றியவர், இவருடைய பதவிக்காலத்தில்தான் அகாதமி திருச்சூரில் ஒரு சொந்தமான கட்டிடம் கட்டப்பட்டு மாற்றப்பட்டது.[6]

கௌரவங்கள்

தொகு

திரைப்பட இயக்குநரும் கார்ட்டூனிஸ்டு கலைஞருமான அரவிந்தன் நம்பூதிரி-யின் நண்பராக இருந்தார். அரவிந்தன் தனது முதல் படமான உத்தராயணம்-ஐ உருவாக்கியபோது, நம்பூதிரியை படத்தின் கலை இயக்குனராக பணியாற்ற அழைத்தார்.[note 1] இந்த படம் 1974 ஆம் ஆண்டில் நம்பூதிரிக்கு சிறந்த கலை இயக்குனருக்கான விருது உட்பட ஐந்து கேரள மாநில திரைப்பட விருதுகளைப் பெற்றுத் தந்தது.[16] கேரள லலிதகலா அகாடமி 2003 ஆம் ஆண்டில் நம்பூதிரிக்கு ரவி வர்மா விருதை வழங்கியது. மேலும் 2001 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருதைப் பெற்ற மூன்றாவது நபராக இவர் ஆனார். கேரள மாநில குழந்தைகள் இலக்கிய நிறுவனம் 2004 ஆம் ஆண்டில் குட்டிகலூடே ராமாயணத்தில் (குழந்தைகளுக்கான இராமாயணம்) இவரது பணிக்காக சிறந்த ஓவியத்துக்கான பால சாகித்ய விருதை வழங்கியது.[17]

புகைப்படங்கள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. அரவிந்தனின் காஞ்சன சீதா,[15] மற்றும் 1991 ஆம் ஆண்டு பத்மராஜனின் திரைப்படமான ஞான் கந்தர்வன் ஆகிய இரண்டு படங்களிலும் இவர் ஈடுபட்டிருந்தார். இதில் கந்தர்வனின் உடையை நம்பூதிரி வடிவமைத்தார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Raja Ravi Varma Puraskaram | Kerala Lalithakala Akademi". lalithkala.org. பார்க்கப்பட்ட நாள் 23 September 2019.
  2. "Namboothiri (artist) – Veethi profile". veethi.com. 13 March 2019. பார்க்கப்பட்ட நாள் 13 March 2019.
  3. asianetnews (17 October 2015). "Artist Namboothiri: PaadaMudra 17 Oct 2015". யூடியூப். Archived from the original on 18 December 2021. பார்க்கப்பட்ட நாள் 13 March 2019.
  4. 4.0 4.1 4.2 Manorama Online (9 September 2015). "Exclusive interview on his 90th Birthday". YouTube. பார்க்கப்பட்ட நாள் 13 March 2019.
  5. "Living lines – Kerala's artist Namboothiri at 91". Times of India Blog (in அமெரிக்க ஆங்கிலம்). 12 September 2016. பார்க்கப்பட்ட நாள் 13 March 2019.
  6. 6.0 6.1 6.2 "Artist Namboothiri – the maestro painter of Kerala". Kerala Tourism (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 March 2019.
  7. "Leading lights, Kerala Tourism". 26 July 2011. Archived from the original on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 13 March 2019.
  8. 8.0 8.1 "Enduring sketches frozen in the canvas of time". OnManorama. பார்க்கப்பட்ட நாள் 13 March 2019.
  9. 9.0 9.1 "Vasudevan Namboodiri". Cholamandal Artists' Village. 13 March 2019. பார்க்கப்பட்ட நாள் 13 March 2019.
  10. "Magic of Namboothiri sketches". www.mathrubhumi.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 March 2019.
  11. asianetnews (17 October 2015). "Artist Namboothiri: PaadaMudra 17 Oct 2015". யூடியூப். Archived from the original on 18 December 2021. பார்க்கப்பட்ட நாள் 13 March 2019.
  12. asianetnews (17 October 2015). "Artist Namboothiri: PaadaMudra 17 Oct 2015". யூடியூப். Archived from the original on 18 December 2021. பார்க்கப்பட்ட நாள் 13 March 2019.asianetnews (17 October 2015). "Artist Namboothiri: PaadaMudra 17 Oct 2015". YouTube. Archived from the original on 18 December 2021. Retrieved 13 March 2019.
  13. "Artist Namboothiri, Residence, Personlities, Sculptor, Line Sketches". IndiaVideo. 13 March 2019. பார்க்கப்பட்ட நாள் 13 March 2019.
  14. "Artist Namboothiri, doyen of line sketches, passes away". On Manorama. 7 July 2023. https://www.onmanorama.com/news/kerala/2023/07/06/artist-namboothiri-dies.html. 
  15. asianetnews (1 November 2015). "Artist Namboothiri in Yathra". YouTube. Archived from the original on 18 December 2021. பார்க்கப்பட்ட நாள் 13 March 2019.
  16. "official website of INFORMATION AND PUBLIC RELATION DEPARTMENT OF KERALA". 3 March 2016. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 13 March 2019.
  17. "വിവിധ വര്‍ഷങ്ങളിലെ പുരസ്കാര ജേതാക്കള്‍". Kerala State Institute for Children's Literature. 13 March 2019. பார்க்கப்பட்ட நாள் 13 March 2019.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
K. M. Vasudevan Namboothiri
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்பூதிரி_(ஓவியர்)&oldid=4169450" இலிருந்து மீள்விக்கப்பட்டது