நாயன்மார் பட்டியல்

63வர்

நாயன்மார் என்போர் பெரிய புராணத்தில் குறிப்படப்படுகின்ற 63 சிவனடியார்கள் ஆவார். இவர்களின் வரலாற்றினை பெரிய புராணத்தில் சேக்கிழார் தொகுத்துள்ளார். இவர்களை அறுபத்து மூவர் என்றும் அழைப்பர்.

எண் பெயர் குலம் நாடு பூசை நாள் நின்ற நெறி
1 அதிபத்தர் பரதவர் சோழ நாடு ஆவணி ஆயில்யம்
2 அப்பூதியடிகள் அந்தணர் சோழ நாடு தை சதயம்
3 அமர்நீதி நாயனார் வணிகர் சோழ நாடு ஆனி பூரம்
4 அரிவட்டாயர் வேளாளர் சோழ நாடு தை திருவாதிரை
5 ஆனாய நாயனார் இடையர் மழநாடு கார்த்திகை ஹஸ்தம்
6 இசைஞானியார் ஆதி சைவர் நடு நாடு சித்திரை சித்திரை
7 இடங்கழி நாயனார் வேளிர்[1] கோனாடு ஐப்பசி கார்த்திகை
8 இயற்பகை நாயனார் வணிகர் சோழ நாடு மார்கழி உத்திரம்
9 இளையான்குடிமாறார் வேளாளர் சோழ நாடு ஆவணி மகம்
10 உருத்திர பசுபதி நாயனார் அந்தணர் சோழ நாடு புரட்டாசி அசுவினி
11 எறிபத்த நாயனார் மரபறியார் சோழ நாடு மாசி ஹஸ்தம்
12 ஏயர்கோன் கலிகாமர் வேளாளர் சோழ நாடு ஆனி ரேவதி
13 ஏனாதி நாதர் சான்றார் சோழ நாடு புரட்டாசி உத்திராடம்
14 ஐயடிகள் காடவர்கோன் குறுநில மன்னர் தொண்டை நாடு ஐப்பசி மூலம்
15 கணநாதர் அந்தணர் சோழ நாடு பங்குனி திருவாதிரை
16 கணம்புல்லர் செங்குந்தர் [2][3] சோழ நாடு கார்த்திகை கார்த்திகை
17 கண்ணப்பர் வேடர் தொண்டை நாடு தை மிருகசீருஷம்
18 கலிய நாயனார் செக்கார் தொண்டை நாடு ஆடி கேட்டை
19 கழறிற்றறிவார் அரசன் மலை நாடு ஆடி சுவாதி
20 கழற்சிங்கர் குறுநில மன்னர் தொண்டை நாடு வைகாசி பரணி
21 காரி நாயனார் மரபறியார் சோழ நாடு மாசி பூராடம்
22 காரைக்கால் அம்மையார் வணிகர் சோழ நாடு பங்குனி சுவாதி
23 குங்கிலியகலையனார் அந்தணர் சோழ நாடு ஆவணி மூலம்
24 குலச்சிறையார் மரபறியார் பாண்டிய நாடு ஆவணி அனுஷம்
25 கூற்றுவர் களப்பாளர் பாண்டிய நாடு ஆடி திருவாதிரை
26 கலிக்கம்ப நாயனார் வணிகர் நடு நாடு தை ரேவதி
27 கோச்செங்கட் சோழன் அரசன் சோழ நாடு மாசி சதயம்
28 கோட்புலி நாயனார் வேளாளர் சோழ நாடு ஆடி கேட்டை
29 சடைய நாயனார் ஆதி சைவர் நடு நாடு மார்கழி திருவாதிரை
30 சண்டேசுவர நாயனார் அந்தணர் சோழ நாடு தை உத்திரம்
31 சக்தி நாயனார் வேளாளர் சோழ நாடு ஐப்பசி பூரம்
32 சாக்கியர் வேளாளர் சோழ நாடு மார்கழி பூராடம்
33 சிறப்புலி நாயனார் அந்தணர் சோழ நாடு கார்த்திகை பூராடம்
34 சிறுதொண்டர் மாமாத்திரர் சோழ நாடு சித்திரை பரணி
35 சுந்தரமூர்த்தி நாயனார் ஆதி சைவர் நடு நாடு ஆடிச் சுவாதி
36 செருத்துணை நாயனார் வேளாளர் சோழ நாடு ஆவணி பூசம்
37 சோமசிமாறர் அந்தணர் சோழ நாடு வைகாசி ஆயிலியம்
38 தண்டியடிகள்

செங்குந்தர் [4][5]

சோழ நாடு பங்குனி சதயம்
39 திருக்குறிப்புத் தொண்டர் ஏகாலியர் தொண்டை நாடு சித்திரை சுவாதி
40 திருஞானசம்பந்தமூர்த்தி அந்தணர் சோழ நாடு வைகாசி மூலம்
41 திருநாவுக்கரசர் வேளாளர் நடு நாடு சித்திரை சதயம்
42 திருநாளை போவார் புலையர் சோழ நாடு புரட்டாசி ரோகிணி
43 திருநீலகண்டர் குயவர் சோழ நாடு தை விசாகம்
44 திருநீலகண்ட யாழ்ப்பாணர் பாணர் நடு நாடு வைகாசி மூலம்
45 திருநீலநக்க நாயனார் அந்தணர் சோழ நாடு வைகாசி மூலம்
46 திருமூலர் இடையர் வடநாடு ஐப்பசி அசுவினி
47 நமிநந்தியடிகள் அந்தணர் சோழ நாடு வைகாசி பூசம்
48 நரசிங்க முனையர் முனையர் நடுநாடு புரட்டாசி சதயம்
49 நின்றசீர் நெடுமாறன் அரசர் பாண்டிய நாடு ஐப்பசி பரணி
50 நேச நாயனார் சாலியர் குடகு பங்குனி ரோகிணி
51 புகழ்சோழன் மரபறியார்-அரசன் சோழ நாடு ஆடி கார்த்திகை
52 புகழ்த்துணை நாயனார் ஆதி சைவர் சோழ நாடு ஆவணி ஆயிலியம்
53 பூசலார் அந்தணர் தொண்டை நாடு ஐப்பசி அனுஷம்
54 பெருமிழலைக் குறும்பர் குறும்பர் சோழ நாடு ஆடி சித்திரை
55 மங்கையர்க்கரசியார் மரபறியார்-அரசர் பாண்டிய நாடு சித்திரை ரோகிணி
56 மானக்கஞ்சாற நாயனார் வேளாளர் சோழ நாடு மார்கழி சுவாதி
57 முருக நாயனார் அந்தணர் சோழ நாடு வைகாசி மூலம்
58 முனையடுவார் நாயனார் வேளாளர் சோழ நாடு பங்குனி பூசம்
59 மூர்க்க நாயனார் வேளாளர் சோழ நாடு கார்த்திகை மூலம்
60 மூர்த்தி நாயனார் வணிகர் பாண்டிய நாடு ஆடி கார்த்திகை
61 மெய்ப்பொருள் நாயனார் குறுநில மன்னர் நடுநாடு கார்த்திகை உத்திரம்
62 வாயிலார் நாயனார் வேளாளர் தொண்டை நாடு மார்கழி ரேவதி
63 விறன்மிண்ட நாயனார் வேளாளர் மலை நாடு சித்திரை திருவாதிரை

உசாத்துணை நூல்கள்

தொகு
  • துரை இராஜாராம், திருமூலர் வாழ்வும் வாக்கும், நர்மதா பதிப்பகம்
  • துர்க்காதாஸ் எஸ்.கே.ஸ்வாமி, "அறுபத்து மூவர் கதைகள்", பிரேமா பிரசுரம்
  1. சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய திருத்தொண்டத் தொகை-கடல் சூழ்ந்த சருக்கம்-இடங்கழி நாயனார் புராணம் பாடல் எண்:3
  2. புகழேந்திப் புலவர் இயற்றிய திருக்கை வழக்கம்- கலிவெண்பா- கண்ணி எண்:85
  3. காஞ்சி வீர பத்திர தேசிகர் இயற்றிய செங்குந்த சிலாக்கியர் மாலை- பாடல் எண்:26
  4. புகழேந்திப் புலவர் இயற்றிய திருக்கை வழக்கம்- கலிவெண்பா- கண்ணி எண்:86
  5. காஞ்சி வீர பத்திர தேசிகர் இயற்றிய செங்குந்த சிலாக்கியர் மாலை- பாடல் எண்:27
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாயன்மார்_பட்டியல்&oldid=3778859" இலிருந்து மீள்விக்கப்பட்டது