பட்டுக்கூடு நடவடிக்கை

பட்டுக்கூடு நடவடிக்கை (Operation Cocoon) தென்னிந்தியாவின் சத்தியமங்கலம் காட்டில் மறைந்திருந்த வீரப்பனையும் அவனது கூட்டாளிகளையும் பிடிப்பதற்காக, தமிழ்நாடு அரசின் காவல்துறை அதிகாரி கி. விஜயகுமார் தலைமை ஏற்ற அதிரடிப் படைகளால் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையாகும்.

பட்டுக்கூடு நடவடிக்கை
நீலகிரி உயிர்கோளங்களின் காப்புக்காடுகளில், சத்தியமங்கலம் காட்டுயிர்கள் காப்பகத்தின் வரைபடம்
நீலகிரி உயிர்கோளங்களின் காப்புக்காடுகளில், சத்தியமங்கலம் காட்டுயிர்கள் காப்பகத்தின் வரைபடம்

தமிழ்நாடு கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் காவல்துறைகள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக, உளவாளிகளுடன் கூடிய நூற்றுக் கணக்கான ஆயுதக்குழுக்களுடன் வீரப்பன் எதிர்த்து நின்றார்.

வீரப்பனும், அவனது கூட்டாளிகளும் கொன்ற 184 பேர்களில் பாதிப் பேர், வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆவர். மேலும் வீரப்பனும், அவனது கூட்டாளிகளும் சேர்ந்து, இருநூறு காட்டு யானைகளை வேட்டையாடி , 16 கோடி மதிப்புள்ள யானைத் தந்தங்களையும், 143 கோடி ரூபாய் மதிப்புள்ள 10,000 டன் சந்தன மரங்களை வெட்டிக் கடத்தி விற்றனர் என்ற குற்றச்சாட்டுகள் பேரில் பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தது. [1]

1991ல் வீரப்பனையும், அவனது கூட்டாளிகளையும் பிடிக்க, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களின் காவல்துறைகள் இணைந்து கூட்டு சிறப்பு அதிரடிப்படையை அமைத்தது. இந்திய வரலாற்றில் ஒரு தனி மனிதனை பிடிக்க, காவல்துறை ஒரு பில்லியன் ரூபாய்க்கும் மேலாக செலவழித்தது இதுவே முதல் முறை எனக் கருதப்படுகிறது. [2]

தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களிடையே உள்ள சத்தியமங்கலம் காட்டில் மறைந்து வாழும் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க, தமிழ்நாடு காவல்துறையின், இந்தியக் காவல் பணி அதிகாரி, கி. விஜயகுமார் தலைமையில் பட்டுக்கூடு நடவடிக்கைக்காக சிறப்பு அதிரடிப் படையை அமைத்தது.[3]

8 அக்டோபர் 2004ல் பட்டுக்கூடு நடவடிக்கையில் வீரப்பனும், அவனது கூட்டாளிகளான சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுடா மற்றும் சேதுமணி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நடவடிக்கையில் நான்கு காவல்துறையினர் காயமடைந்தனர்.[4]

பின்னணி

தொகு
 
வீரப்பனின் புகைப்படம்

வீரப்பன்,[5] (18 சனவரி 1952 - 18 அக்டோபர் 2004), காட்டில் உள்ள சந்தன மரங்களை வெட்டி கள்ளச்சந்தையில் விற்றதால் சந்தன வீரப்பன் என்றும் அழைப்பர். வீரப்பன் தனது கூட்டாளிகளுடன் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலக் காடுகளில் 6,000 சதுர கிலோ மீட்டர் பரப்பில், பல பத்தாண்டுகளாக சந்தன மரங்களை வெட்டுதல் மற்றும் யானைகளை வேட்டியாடி அதன் தந்தங்களை வெட்டியெடுத்து கள்ளச்சந்தையில் விற்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

நூறு பேர் கொண்ட உளவாளிகள் மற்றும் ஆயுதக் குழுவின் தலைவராக செயல்பட்ட சந்தன வீரப்பனையும் அவனது கூட்டாளிகளையும் பிடிக்க கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மாநில காவல்துறையினரும் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் பல நடவடிக்கைகளை எடுத்தனர். ஏறத்தாழ 184 பேர்களை கொன்ற வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் கொன்றனர். கொல்லப்பட்டவர்களில் பாதிப் பேர் வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆவார்.

நக்கீரன் இதழாசிரியர் இரா. கோபால், வீரப்பனை சந்தித்தப் பின் வெளியிட்ட காணொளியில், வீரப்பன் தான் 120 பேரைக் கொன்றதாகக் கூறியுள்ளார்.

துவக்க காலத்தில், வீரப்பன் தனது பணத்தேவைக்காக மட்டும் காட்டை கொள்ளையடிப்பதில் ஈடுபட்டார். பின்னர் பல மாநில சிறைகளில் உள்ள தனது கூட்டாளிகளை விடுவிக்க வேண்டி, வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை உயிரிடன் சிறைப்படுத்தி பணயக் கைதிகளாகப் பயன்படுத்தினார்.[6]

வீரப்பனின் சட்டபூர்வமற்ற வனப்பொருள் வணிக நடவடிக்கைகளை தடுத்த சிதம்பரம் என்ற வனத்துறை அதிகாரியை, வீரப்பன் கொன்ற போது தான், முதன் முதலாக வீரப்பனை குறித்த தகவல்கள் வெளியுலகிற்கு தெரியவந்தது. 1991ல் வீரப்பன், கர்நாடகா வனத்துறை உயர் அதிகாரி பி. சீனிவாசனை பிடித்து, காளி கோயில் முன் நிறுத்தி தலையை வெட்டினான்.

பின்னர் தன் சட்டபூர்வமற்ற தொழிலுக்கு இடையூறு விளைவிப்பதாக நினைத்து, பத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரையும், பழங்குடி மக்களையும் கொன்றார்.

1997ல் கர்நாடகா வனத்துறை அதிகாரிகளை கடத்தி வைத்துக் கொண்டார். நக்கீரன் இதழாசிரியர் இரா. கோபால், வீரப்பனை சந்தித்துப் பேரம் பேசி வனத்துறை அதிகாரிகளை விடுவித்தார். அதே ஆண்டில் 21 சுற்றுலாப் பயணிகளை கடத்தி வைத்துக் கொண்டு பிறகு விடுவித்தார்.[7]

2000 ஆண்டில் வீரப்பன், கன்னடத் திரைப்பட நடிகர் இராஜ்குமாரை கடத்திய போதுதான், தேசிய அளவில் ஊடகங்களில் வீரப்பனை குறித்தான செய்திகள் வெளிவந்தன. [8][9]வீரப்பனால் கடத்தபட்ட கர்நாடகா முன்னாள் அமைச்சர் நாகப்பா காட்டில் இறந்து கிடந்தார். இந்த இறப்புக்கு தான் காரணமல்ல என வீரப்பன் மறுத்தார்.[7]ஏறத்தாழ 200 யானைகளை வேட்டையாடி, தந்தங்களை வெட்டி எடுத்து விற்றதாக வீரப்பன் மீது குற்றம் சுமத்தப்பட்டது. வீரப்பனை உயிருடன் அல்லது பிணமாக கொண்டு வருபவர்களுக்கு 50 மில்லியன் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால் 2004ல் காவல்துறையின் பட்டுக்கூடு நடவடிக்கையின் மூலம் வீரப்பனும், அவனது கூட்டாளிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.[10]

நடவடிக்கைகள்

தொகு

வீரப்பனையும், அவனது கூட்டாளிகளையும் பிடிக்க தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அரசுகளின் காவல்துறைகள் இணைந்து, 1991ல் கூட்டு சிறப்பு அதிரடிப் படையை அமைத்தனர். மேலும் வீரப்பனை உயிருடன் காட்டிக் கொடுப்பவர்களுக்கு 1 பில்லியன் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டது.[7]

இந்த நடவடிக்கையின் மூலம் சிறப்பு அதிரடிப்படையின் சில காவலர்கள், பழங்குடி மக்களின் உதவியுடன், காட்டில் வீரப்பனின் மறைவிடங்களை நோட்டமிட்டனர். வீரப்பனையும், அவனது கூட்டாளிகளையும் சூரிய ஒளி புகா அடர்ந்த காட்டிலிருந்து, மலையடிவார சமவெளிப் பகுதிக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது.[11] காவல்துறையின் அறிக்கையின் படி, விரப்பனை சுட்டு வீழ்த்துவதற்கு பத்து மாதங்களுக்கு முன்னர் பட்டுக்கூடு நடவடிக்கைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தை மூன்று வாரங்களில் நிறைவேற்றி, 45 நிமிடங்களில் பட்டுக்கூடு நடவடிக்கைத் திட்டம் முடிக்கப்பட்டது.

வீரப்பன் சுற்றித் திரியும் கிராமங்கள் எனக்கருதப்பட்டவற்றில், சிறப்பு அதிரடிப்படை வீரர்கள், பொருட்களை விற்பவர்களாகவும், கட்டுமான ஊழியர்களாகவும், உள்ளூர் பணியாளர்களாகவும் ஊடுருவினர்கள்.[12]

ஆண்டுகள் செல்லச் செல்ல, வயதின் காரணமாகவும், காவல்துறையினரால் கொல்லப்பட்டதின் காரணமாகவும், வீரப்பனின் கூட்டாளிகளின் எண்ணிக்கை நான்காக குறைந்தது.

வீரப்பன் தனது கண் சிகிச்சைக்காக, காட்டிலிருந்து கடலூர் செல்ல திட்டமிட்டிருந்தார்.[7]

ஏற்கனவே வீரப்பனின் கூட்டாளிகளிடம் ஊடுவுருவியிருந்த ஒரு அதிரடிப் படைவீரரின் முயற்சியால், காட்டின் அருகே உள்ள தருமபுரி மாவட்டத்தின் பாப்பரபட்டி கிராமத்தில் ஒரு தனியார் மருத்துவ மனையின் ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.

35 அதிரடி படையினர் பாப்பாரபட்டி கிராமத்தில் ஆயுதஙகளுடன் மறைந்து நின்றிருந்தனர். ஆம்புலன்ஸ் வரும் சாலையிலும், பாதையோர புதர்களிலும் பல அதிரடிப்படையினர் ஆயுதங்களுடன் மறைந்து இருந்தனர்.

ஆம்புலன்ஸ் வாகனத்தின் ஓட்டுனரும் அதிரடிப் படை வீரர் ஆவார். அடர்ந்த காட்டிலிருந்து பாப்பாரபட்டி கிராமத்திற்கு வந்த வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏறி அமர்ந்து, சிறிது தூரம் சென்றவுடன், ஆம்புலன்ஸ் வாகனத்தின் ஓட்டுனரான அதிரடிப்படை வீரர் கீழே இறங்கி ஒடி மறைந்து விட, சுற்றியிருந்த அதிரடிப் படையினர் ஆம்புலன்ஸ் வாகனத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர். வீரப்பனும், அவனது கூட்டாளிகளும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இறந்து கிடந்தனர். வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிடமிருந்து 12 கைத்துப்பாக்கிகளும், இரண்டு ஏகே-47 துப்பாக்கிகளும், இரண்டு கையெறி குண்டுகளும், 3.5 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டது. [13]

வீரப்பனின் நெற்றி, மார்பு மற்றும் தொடைகளில் குண்டு பாய்ந்த புகைப்படங்கள் காவல்துறை வெளியிட்டது. வீரப்பனின் உடல் தர்மபுரி மாவட்ட மருத்துவ மனையில் வைக்கப்பட்டு, பின்னர் வீரப்பன் மனைவி முத்து லெட்சுமி மற்றும் அவரது உடன்பிறப்புகளுக்கும் தெரியாமல், மறைவான பகுதிக்கு கொண்டு வீரப்பன் உடல் எரிக்கப்பட்டது. [6] பின்னர் இச்செயல் பெரும் சர்ச்சையானது. .[14]

கருத்து வேற்றுமைகள்

தொகு
Operation Cocoon

"We have searched and hunted for Veerappan for the last 20 years. But his end was all over in 20 minutes. We wish we could catch him alive and bring him to justice. But we are happy that our efforts have finally succeeded"

~ Vijaya Kumar, Head of Special Task Force,India's most wanted, Veerappan shot dead, 20 October 2004[7]

வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட பட்டுக்கூடு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு மாறுபட்ட செய்திகள் எழுந்தன. காவல்துறையின் என்கவுண்டரில் கொல்லப்பட்ட வீரப்பனின் மீசை குறித்து எழுப்பட்ட கேள்விகள், பிணக்கூறு அறிக்கைக்குப் பின்னர் ஓய்ந்தது.

வீரப்பனை உயிருடன் பிடிப்பதற்கு பதிலாக, அரசியல் காரணங்களால் உயிருடன் கொல்லப்ப்பட்டார் என சில ஊடகங்கள் கேள்வி எழுப்பியது. வீரப்பனை உயிருடன் பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தினால், வெளியுலகம் அறிந்திராத பல உண்மைகள் வெளியாகியிருக்கும் என்றும் வாதிட்டனர்.

வீரப்பனின் தாக்குதலுக்கு, அதிரடிப் படையினர் எதிர் தாக்குதல்கள் மேற்கொண்டதால் தான் வீரப்பன் கொல்லப்பட்டார் என காவல்துறை கூறுகிறது.

வீரப்பனை கொல்வதற்கு முன்னர், வீரப்பன் தனது தரப்பை எடுத்துக் கூற காவல்துறை போதிய வாய்ப்பு வழங்கவில்லை என மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்புக் குரல் தெரிவித்தனர். [11]

பின் விளைவுகள்

தொகு

2010ல் கர்நாடகா அரசு, வீரப்பன் சுற்றித் திரிந்த கோபிநத்தம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் 11 புதிய காட்டு முகாம்களை நிறுவியது. மேலும் அப்பகுதிகளில் மலையேற்றப் பயிற்சி நிறுவனங்களைத் தொடங்கியுள்ளது.[15]

வீரப்பனை கொன்ற சிறப்பு அதிரடிப் படைத்தலைவர் விஜயகுமாருக்கு இந்தியக் குடியரசுத் தலைவரால் வீர விருது வழங்கப்பட்டது.[16]

நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்காக 2016ல் விஜயகுமார், மத்திய சேமக் காவல் படையின் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.[17]

பிரபல கலாச்சாரத்தில்

தொகு
  • வீரப்பனை பொறி வைத்து பிடித்த நிகழ்வுகளை தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு அதிரடி படையின் முன்னாள் தலைவர் கி. விஜயகுமார் சனவரி, 2017ல் ‘வீரப்பன்: சேஷிங் தி பிரிகண்ட்’ எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்.[18]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. K.G., Kannabiran (2004). The Wages of Impunity: Power, Justice, and Human Rights. Orient Blackswan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788125026389.
  2. K.G., Kannabiran (2004). The Wages of Impunity: Power, Justice, and Human Rights. Orient Blackswan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788125026389.
  3. Krupakar, Krupakar; Senani, Senani (2011). Birds, Beasts and Bandits: 14 Days with Veerappan. Penguin UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788184754803.
  4. Krupakar, Krupakar; Senani, Senani (2011). Birds, Beasts and Bandits: 14 Days with Veerappan. Penguin UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788184754803.
  5. "Bandit's footprints". The Economic Times. TNN. 19 October 2004. http://articles.economictimes.indiatimes.com/2004-10-19/news/27390518_1_muthulakshmi-karnataka-cops-karnataka-government. பார்த்த நாள்: 11 December 2012. 
  6. 6.0 6.1 "Koose Muniswamy Veerappan: The Bandit King". Belfast Telegraph. 20 October 2004 இம் மூலத்தில் இருந்து 11 ஜூன் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140611082318/http://www.highbeam.com/doc/1P2-10713000.html. பார்த்த நாள்: 1 January 2014. 
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 "India's most wanted, Veerappan shot dead". India Abroad. 20 October 2004 இம் மூலத்தில் இருந்து 11 ஜூன் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140611082322/http://www.highbeam.com/doc/1P1-104816891.html. பார்த்த நாள்: 1 January 2014. (subscription required)
  8. Krupakar 2011 , p. 7
  9. K.G. 2004, p. 322
  10. "Police kill India's 'Robin Hood' - Oct 18, 2004". CNN.com. 19 October 2004. http://www.cnn.com/2004/WORLD/asiapcf/10/18/india.bandit/index.html. பார்த்த நாள்: 19 September 2010. 
  11. 11.0 11.1 V., Vaikunth (26 October 2004). "Operation Cocoon". The Hindu இம் மூலத்தில் இருந்து 4 நவம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081104211945/http://www.hindu.com/op/2004/10/26/stories/2004102600091700.htm. பார்த்த நாள்: 1 January 2014. 
  12. K.G., Kannabiran (2004). The Wages of Impunity: Power, Justice, and Human Rights. Orient Blackswan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788125026389.
  13. V.S., Palaniappan; S., Prasad (20 October 2004). "Veerappan walked into a well-laid trap". The Hindu (Dharmapuri) இம் மூலத்தில் இருந்து 27 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131227143126/http://www.hindu.com/2004/10/20/stories/2004102007580100.htm. பார்த்த நாள்: 1 January 2014. 
  14. R., Ilangovan (19 October 2004). "Row over cremation". The Hindu (Mettur) இம் மூலத்தில் இருந்து 27 ஜூலை 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130727035636/http://www.hindu.com/2004/10/20/stories/2004102016780100.htm. பார்த்த நாள்: 1 January 2014. 
  15. "The ballad of Veerappan will now be available for a mere song". Mail Today. 5 September 2010 இம் மூலத்தில் இருந்து 11 ஜூன் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140611082323/http://www.highbeam.com/doc/1G1-236509809.html. பார்த்த நாள்: 1 January 2014. (subscription required)
  16. "Veerappan hunter takes over as CRPF boss". Mail Today. 7 October 2010 இம் மூலத்தில் இருந்து 11 ஜூன் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140611082325/http://www.highbeam.com/doc/1G1-238899453.html. பார்த்த நாள்: 1 January 2014. (subscription required)
  17. "Former cop who led ‘Operation Cocoon’ writing book on Veerappan". PTI. The Indian Express. 6 June 2016. http://indianexpress.com/article/india/india-news-india/former-cop-who-led-operation-cocoon-writing-book-on-veerappan-2838152/. பார்த்த நாள்: 14 October 2016. 
  18. "முன்னாள் போலீஸ் அதிகாரி எழுதிய வீரப்பன் வேட்டை புத்தகம் வெளியீடு". Archived from the original on 2020-11-27. பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டுக்கூடு_நடவடிக்கை&oldid=3700414" இலிருந்து மீள்விக்கப்பட்டது