பண்டா அச்சே

இந்தோனேசியாவில் அச்சே சிறப்புப் பகுதி மாகாணத்தின் தலைநகரம்

பண்டா அச்சே மாநகரம் (ஆங்கிலம்: City of Banda Aceh இந்தோனேசியம்: Kota Banda Aceh) என்பது இந்தோனேசியா, சுமாத்திரா, அச்சே பெரும் மாநிலத்தின் (Province of Aceh) தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரமாகும்.

பண்டா அச்சே மாநகரம்
City of Banda Aceh
Kota Banda Aceh
சிறப்பு தலைநகர்

கொடி

சின்னம்
அடைபெயர்(கள்): கோத்தா செராம்பி மெக்கா
குறிக்கோளுரை:
Saboeh Pakat Tabangun Banda
பண்டா அச்சே is located in இந்தோனேசியா
பண்டா அச்சே
சுமாத்திரா தீவில் அச்சே மாநகரம்
ஆள்கூறுகள்: 5°33′0″N 95°19′3″E / 5.55000°N 95.31750°E / 5.55000; 95.31750
நாடு இந்தோனேசியா
பகுதிசுமாத்திரா
மாநிலம் பண்டா அச்சே
உருவாக்கம்ஏப்ரல் 22, 1205; 819 ஆண்டுகள் முன்னர் (1205-04-22)
அரசு
 • மேயர்அமினுல்லா உஸ்மான்
பரப்பளவு
 • சிறப்பு தலைநகர்61.36 km2 (23.69 sq mi)
 • மாநகரம்
2,935.36 km2 (1,133.35 sq mi)
ஏற்றம்
0–10 m (0–32.9 ft)
மக்கள்தொகை
 (2023 மதிப்பீடு)[1]
 • சிறப்பு தலைநகர்2,61,969
 • அடர்த்தி4,300/km2 (11,000/sq mi)
 • பெருநகர்
5,13,698
 • பெருநகர் அடர்த்தி180/km2 (450/sq mi)
மக்கள்தொகையியல்
 • குழுக்கள்அச்சே மக்கள்; ஜாவானியர்கள்; பத்தாக் மக்கள்; இந்தோனேசிய சீனர்கள்; அரபு இந்தோனேசியர்கள்; இந்தோனேசிய இந்தியர்கள்
 • சமயம்இசுலாம் 97.09%; பௌத்தம் 1.13%; கிறிஸ்தவம் 0.89%; சீர்திருத்தத் திருச்சபை 0.70%; கத்தோலிக்க திருச்சபை 0.19%; இந்து சமயம் 0.02%; வேறு 0.85% [2]
 • மொழிகள்இந்தோனேசிய மொழி
அச்சே மொழி
நேர வலயம்இந்தோனேசிய நேரம் +7
அஞ்சல்
23000
தொலைபேசி(+62) 651
பதிவெண்கள்BL
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2023)Increase 0.887 (Very High)
இணையதளம்bandaacehkota.go.id

பண்டா ஆச்சே இந்தோனேசியாவின் வடமேற்கு முனையில் அச்சே ஆற்றின் முகப்பில் அமைந்துள்ளது. இந்த மாநகரம் 61.36 சதுர கிலோமீட்டர் (23.69 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது; மற்றும் 2023-இல் அதன் மக்கள் தொகை 261,969.[3][1]

பொது

தொகு

பண்டா அச்சே, அச்சே பெசார் மாநிலத்திற்குள் முற்றிலுமாக அடங்கியுள்ளது.. ஏனெனில் பண்டா ஆச்சே அதன் தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கில் அச்சே பெசார் மாநிலத்தால் சூழப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வடக்கே மலாக்கா நீரிணையுடன் எல்லையாக உள்ளது.

இந்த நகரம் முதலில் பண்டார் அச்சே தாருசலாம் கண்டாங் (Bandar Aceh Darussalam Kandang) என நிறுவப்பட்டது.[4] 15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அச்சே சுல்தானகத்தின் தலைநகராகவும் மையமாகவும் செயல்பட்டது. பின்னர் அதன் பெயர் பண்டார் அச்சே தாருசலாம் என மாற்றப்பட்டது; பின்னர் அது பண்டா அச்சே என்று பிரபலமாக அறியப்படுகிறது.

இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம்

தொகு

போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஜப்பானியர்கள் மற்றும் இந்தோனேசிய அரசாங்கம் என உள்நாட்டு வெளிநாட்டு அதிகாரங்களுக்கு இடையே நீண்ட காலமாக நீடித்த மோதல்களின் மையமாக பண்டா அச்சே இருந்தது.

2004-இல் இந்தியப் பெருங்கடல் நிலநடுக்க ஆழிப்பேரலைக்குப் பிறகு இந்த நகரம் பன்னாட்டு முக்கியத்துவம் பெற்றது. அந்த ஆழிப்பேரலை சுமாத்திராவின் மேற்கு கடற்கரையைத் தாக்கியது.

பன்னாட்டு உதவிகள்

தொகு

பூகம்பத்தின் மையப்பகுதிக்கு மிக அருகில் பண்டா அச்சே இருந்தது.[5] ஆழிப்பேரலையால் பெரும் சேதம் ஏற்பட்டது. அதன் விளைவாக அச்சே நகரத்தில் 60,000 பேர் இறந்தனர்; மேலும் பலர் காயமடைந்தனர்.[6][7]

ஆழிப்பேரலைக்குப் பிறகு பல உள்நாட்டு மற்றும் பன்னாட்டு உதவிகள் பண்டா அச்சே நகரத்திற்கு கிடைத்தன. இதன் விளைவாக, அண்மைய பத்தாண்டுகளில் இந்த நகரம் ஒரு பெரிய நவீனமயமாக்கல் மற்றும் புனரமைப்பைக் கண்டது.[8]

சமயம்

தொகு
 
பண்டா அச்சே: 2004 இந்தியப் பெருங்கடல் ஆழிப்பேரலையின் பாதிப்பு

பண்டா அச்சே மக்களில் பெரும்பான்மையினர் சமயம் இசுலாம் ஆகும். தவிர பௌத்தர்கள், கிறித்தவர்கள் மற்றும் சிறுபான்மை இந்துக்களும் உள்ளனர்.

பண்டா அச்சேயில் நான்கு தேவாலயங்கள்; 93 பள்ளிவாசல்கள் மற்றும் 112 முசோலாக்கள் (Mushollas) (இசுலாமிய பிரார்த்தனைக்கான இடங்கள்); ஒரு புத்தர் கோயில்; ஓர் இந்து ஆலயம் உள்ளன.[9]

பாலி இந்து சமயம்

தொகு

இங்குள்ள இந்து சமூகம், பாலினிய இந்துக்கள் மற்றும் இந்தியாவில் இருந்து வந்த தமிழர் இந்துக்கள் என இரு தரப்பினரையும் கொண்டுள்ளது.

இந்தோனேசியாவில் சமயக் காவல்துறை என்று ஒரு வகை காவல்துறை உள்ளது; இந்தத் துறை இசுலாமிய சட்டத் திட்டங்களை அமல்படுத்துகிறது; சமய காவல்துறையினர் மிகவும் கண்டிப்பானவர்கள் என்றும் அறியப்படுகிறது.[10]

நிர்வாக மாவட்டங்கள்

தொகு

பண்டா ஆச்சே மாநகரம் ஒன்பது மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது (இந்தோனேசிய மொழி|இந்தோனேசியம்: Kecamatan). 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு;[11] மற்றும் 2020-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்[3] அவற்றின் பகுதிகள்; மற்றும் மக்கள்தொகையுடன், 2023-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உள்ள அதிகாரப்பூர்வ மதிப்பீட்டுடன் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளது.[1]

அட்டவணையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நகர்ப்புறக் கிராமங்களின் (Gampong) எண்கள்; மற்றும் அவற்றின் அஞ்சல் குறியீடுகளும் உள்ளன.

குறியீடு
பிரதேசம்
மாவட்டத்தின்
பெயர்
(kecamatan)
பரப்பளவு
கிமீ2
மக்கள்
தொகை
2010
கணக்கெடுப்பு
மக்கள்
தொகை
2020
கணக்கெடுப்பு
மக்கள்
தொகை
2023
மதிப்பீடு
கிராமங்கள் அஞ்சல்
குறியீடு
11.71.03 மிராக்சா
(Meuraksa)
7.26 16,484 26,861 25,920 16 23232 - 23234
111.71.08 ஜெயா பாரு
(Jaya Baru)
3.78 22,031 25,939 27,240 9 23230 - 23236
11.71.07 பண்டா ராயா
(Banda Raya)
4.79 20,891 25,228 26,650 10 23238 - 23239
11.71.01 பைத்தூர் ரகுமான்
(Baiturrahman)
4.54 30,377 32,513 34,110 10 23241 - 23245
11.71.05 லியோங் பாத்தா
(Lueng Bata)
5.34 23,592 24,336 25,800 9 23244 - 23249
11.71.02 கூத்தா ஆலாம்
(Kuta Alam)
10.05 42,217 42,505 44,840 11 23126 - 23127
11.71.06 கூத்தா ராஜா
(Kuta Raja)
5.21 10,433 15,291 14,940 6 23128 - 23142
11.71.04 சியா கோலா
(Syiah Kuala)
14.24 34,850 32,969 34,540 10 23111 - 23116
11.71.09 உலி காரேங்
(Ulee Kareng)
6.15 22,571 27,257 27,930 9 23117 - 23119
மொத்தம் 61.36 223,446 252,899 261,969 90

சகோதரி நகரங்கள்

தொகு

காட்சியகம்

தொகு
  • பண்டா அச்சே: 2004 இந்தியப் பெருங்கடல் ஆழிப்பேரலையின் காட்சிப் படங்கள்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Badan Pusat Statistik, Jakarta, 28 February 2024, Kota Banda Aceh Dalam Angka 2024 (Katalog-BPS 1102001.1171)
  2. Data Sensus Penduduk 2010 – Badan Pusat Statistik Republik Indonesia <http://sp2010.bps.go.id/index.php/site/tabel?tid=321&wid=8100000000 பரணிடப்பட்டது 27 ஏப்பிரல் 2020 at the வந்தவழி இயந்திரம்>
  3. 3.0 3.1 Badan Pusat Statistik, Jakarta, 2021.
  4. Harun, Ramli; M.A. Gani, Tjut Rahma (1985). Adat Aceh. Jakarta: Departemen Pendidikan dan Kebudayaan. p. 24.
  5. John Pike, 'Banda Aceh' பரணிடப்பட்டது 13 ஏப்பிரல் 2012 at the வந்தவழி இயந்திரம், accessed 23 January 2011.
  6. Jayasuriya, Sisira and Peter McCawley in collaboration with Bhanupong Nidhiprabha, Budy P. Resosudarmo and Dushni Weerakoon, The Asian Tsunami: Aid and Reconstruction After a Disaster பரணிடப்பட்டது 16 மார்ச்சு 2012 at the வந்தவழி இயந்திரம், Cheltenham UK and Northampton MA US: Edward Elgar and Asian Development Bank Institute, 2010.
  7. Jayasuriya and McCawley, ibid.
  8. Lamb, Katie (27 January 2014). "Banda Aceh: where community spirit has gone but peace has lasted". The Guardian இம் மூலத்தில் இருந்து 6 February 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150206082122/http://www.theguardian.com/cities/2014/jan/27/banda-aceh-community-spirit-peace-indonesia-tsunami. 
  9. "Banda Aceh to act quickly to prevent religious conflicts". The Jakarta Post. 19 December 2012. Archived from the original on 31 December 2012. பார்க்கப்பட்ட நாள் 8 July 2013.
  10. "Indonesia Islamic law". Archived from the original on 18 July 2021. பார்க்கப்பட்ட நாள் 18 July 2021.
  11. Biro Pusat Statistik, Jakarta, 2011.
  12. "Banda Aceh – Samarkand". Kbri-tashkent.go.id. Archived from the original on 29 March 2012. பார்க்கப்பட்ட நாள் 9 December 2013.
  13. "Martapura – Banda Aceh".
  14. "Banda Aceh – Higashimatsushima".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டா_அச்சே&oldid=4179602" இலிருந்து மீள்விக்கப்பட்டது