பன்னா, மத்திய பிரதேசம்

பன்னா ( Panna ) என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேத்திலுள்ள பன்னா மாவட்டத்திலுள்ள ஒரு நகரமும், நகராட்சியுமாகும். இது வைர சுரங்கங்களுக்கு பிரபலமானது. இது பன்னா மாவட்ட நிர்வாக மையமாகவும் உள்ளது. பத்மாவதிபுரி தாமின் என்ற புகழ்பெற்ற கோயில் மத்திய பிரதேசத்தின் விந்தியாச்சலின் மையத்தில் பன்னா நகரில் அமைந்துள்ளது.

பன்னா
நகரம்
பன்னா is located in மத்தியப் பிரதேசம்
பன்னா
பன்னா
மத்தியப் பிரதேசத்தில் பன்னாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 24°16′N 80°10′E / 24.27°N 80.17°E / 24.27; 80.17
நாடு India
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்பன்னா
ஏற்றம்410 m (1,350 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்59,091
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்
வாகனப் பதிவுஎம்பி-35
இணையதளம்www.panna.nic.in

வரலாறு தொகு

பொ.ச. 13 அல்லது 17ஆம் நூற்றாண்டு வரை பன்னா ஒரு கோண்டு (மத்திய இந்தியாவின் திராவிடர்கள்) குடியேற்றமாக இருந்தது. இவர்கள் சந்தேலர்கள்களால் (மத்திய இந்தியாவின் ராஜபுத்திரர்கள்) தோற்கடிக்கப்பட்டபோது மத்திய பிரதேசத்தின் பிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். இந்த காலம் வரை பல மன்னர்கள் இந்த நிலத்தை ஆண்டனர்.

புந்தேல இராசபுத்திர குல மன்னன் சத்திரசால் முகலாயப் பேரரசன் ஔரங்கசீப்பை எதிர்த்து நின்று, புந்தேல்கண்ட் பகுதியில், 1731ல் பன்னா இராச்சியத்தை நிறுவினான். 1732-இல் இவனது மறைவிற்குப் பின், பன்னா இராச்சியம், அவரது மகன்களுக்கிடையே பிரித்து வழங்கப்பட்டது. மேலும் இராச்சியத்தின் மூன்றில் ஒரு பங்கு, சத்திரசாலின் மகளான மஸ்தானியை மணந்த மராத்திய பேஷ்வா பாஜிராவுக்கு வழங்கப்பட்டது.

பொ.ச. 19ம் நூற்றாண்டில், பன்னா இராச்சியம், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழ் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. இந்தியப் பிரிவினைக்குப் பின்னர், 1 சனவரி 1950-இல் பன்னா இராச்சியம், இந்தியாவின் விந்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டு, பன்னா மாவட்டமாக மாறியது. இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட போது, 1 நவம்பர் 1956-இல் விந்தியப் பிரதேசம், மத்தியப் பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

சுற்றுலா தொகு

பன்னாவில் புலிகளின் இருப்பு உள்ளது. இது பன்னா தேசியப் பூங்கா என்று அழைக்கப்படுகிறது. பன்னாவில் புலிகளின் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் குறைந்துள்ளது. மேலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட புலிகளின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. 2009இல் இரண்டு பெண் புலிகளை பன்னாவுக்கு மாற்றுவதற்கான திட்டங்கள் இருந்தன, [1] இதற்கிடையில் ஒரு ஆண் புலி காணாமல் போனது. [2] ஒரு ஆண் புலி அங்கு கொண்டுவிடப்பட்டது. இடமாற்றம் செய்யப்பட்ட பெண்புலிகளில் ஒன்று 2010இல் மூன்று குட்டிகளை ஈன்றது. [3] இந்த தேசியப் பூங்காவில் பல்வேறு வகையான இனங்கள் காணப்படுகின்றன. [4] அவற்றில் பல மற்ற இருப்புக்களை விட நெருக்கமான இடங்களில் காணப்படுகின்றன, ஏனெனில் பன்னாவுக்கு குறைவான பார்வையாளர்களே வருகின்றானர். சரணாலயம் அருகே காடுகளில் விடுதிகளும், உணவகங்களும் உள்ளன. இதை கஜுராஹோருந்து அடையலாம். ரானே அருவி, பாண்டவ அருவி, சமீபத்தில் பட்டியலில் சேர்க்கப்பட்ட பிரகஸ்பதி குண்டம் ஆகியவை மழைக்காலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூடுமிடங்களாகும்.

மாவட்ட தலைமையகத்திலிருந்து 32 கி.மீ தூரத்தில் அஜய்கர் என்ற ஒரு பழங்கால நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் அஜய்பால் மகாராஜ் என்ற பெயரில் மிகவும் பழமையான கோட்டை ஒன்றுள்ளது. இது முகலாய அரசர்களின் ஒரு முக்கிய மையமாக இருந்துள்ளது. இந்த கோட்டை இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பின் கீழ் உள்ளது.

பன்னாவின் புறநகரில் அமைந்துள்ள ஒரு அருவியின் பரந்த காட்சி.

வைரச் சுரங்கங்கள் தொகு

விந்திய மலைத்தொடரின் வடகிழக்கில் 240 கி.மீ தொலைவில் பன்னா குழுக்களில் வைர வைப்புக்கள் கிராமத்தில் உள்ளன. [5] [6] அவற்றின் மொத்த பரப்பளவு 20 ஏக்கருக்கு மேல் இல்லை. 25 அடி விட்டம் மற்றும் 30 அடி ஆழம் கொண்ட பெரிய குழிகள் வைரங்களுக்காக தோண்டப்பட்டன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வைரங்கள் மிக மெல்லிய அடுக்கில் காணப்படுகின்றன.

ஜீன்-பாப்டிஸ்ட் டேவர்னியரின் 1676 'டிராவல்ஸ் இன் இந்தியா' என்பதைத் தொகுத்த வாலண்டைன் பால் என்பவரின் கூற்றுப்படி, 1765 இல் சுரங்கங்களைப் பார்வையிட்ட முதல் ஐரோப்பியர் டிஃபென்டலார் என்பவராவார். இந்தியாவின் பிற பகுதிகளில் காணப்படுவதை ஒப்பிடும்போது பன்னா வைரங்கள் குறைந்த கடினத்தன்மையைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த பகுதியில் இருந்து பெரிய வைரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. 1860களில் பன்னாவிலிருந்து 32 கி.மீ தூரத்தில் அதிக உற்பத்தி சுரங்கங்கள் அமைந்திருந்தன. தூரத்தில் ஜகாரியாவிலும் காணப்படுகிறது. பன்னா வைரங்கள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன: முதல், மோட்டிகுல், தெளிவான மற்றும் பளபளப்பான; 2 வது, ரூபி, அடர் ஆரஞ்சு; 3 வது பன்னா, பச்சை; 4 வது பன்ஸ்புட், செபியா நிறம்.

சுரங்கங்கள் பன்னா மாவட்டத்தின் உட்புறத்தில் அமைந்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் தேசிய கனிம மேம்பாட்டுக் கழகத்தின் வைர சுரங்கத் திட்டத்தின் கீழ் பன்னாவில் உள்ள வைர சுரங்கங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. கண்டுபிடிக்கப்பட்ட வைரங்கள் அனைத்தும் பன்னா மாவட்ட நீதிபதி தலைமையில் ஜனவரி மாதத்தில் ஏலம் விடப்படுகின்றன. பொதுமக்களும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். வெவ்வேறு காரட் மற்றும் நிறங்களில் 100 வைரங்களுக்கு மேல் ஏலத்திற்கு விடப்படுகின்றன.

நிலவியல் தொகு

பன்னாவின் பால்தாவ் கோயிலின் அருகேயுள்ள ஒரு தெரு.

பன்னா 24.72 ° வடக்கிலும் 80.2 ° கிழக்கிலும் அமைந்துள்ளது. [7] இதன் சராசரி உயரம் 406 மீட்டர் (1332 அடி) ஆகும்.

போக்குவரத்து தொகு

பன்னா விமான நிலையம் தற்போது செயல்படவில்லை. அருகிலுள்ள விமான நிலையம் கஜுராஹோவிலும், அருகிலுள்ள தொடர் வண்டி நிலையம் சத்னாவிலும் உள்ளது. இது 75 கி.மீ தூரத்தில் உள்ளது. கஜுராஹோ 45 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து மத்தியப் பிரதேசத்தின் அனைத்து பகுதிகளுக்கும், புது தில்லி, பரீதாபாது, ஆக்ரா, கான்பூர், ஜான்சி, குவாலியர், நாக்பூர், அலகாபாத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து சேவை கிடைக்கிறது. இந்தோர், குவாலியர், ஜபல்பூர், போபால் போன்ற இடங்களுக்கு படுக்கை வசதியுடன் கூடிய குளிர்ச்சாதன பேருந்து சேவைகள் உள்ளன.

புள்ளிவிவரங்கள் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி,[8] பன்னாவின் மக்கள் தொகை 59,091 என்ற அளவில் இருந்தது. சராசரி வயதுவந்தோரின் கல்வியறிவு விகிதம் 64.79% ஆகும். இது தேசிய சராசரியான 74.04% ஐ விடக் குறைவு: ஆண் கல்வியறிவு 74.14%, மற்றும் பெண் கல்வியறிவு 54..44%. பன்னாவில், 16.10% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள்.

பன்னாவைச் சேர்ந்த முக்கிய நபர்கள் தொகு

  • பாலிவுட்டின் இசை இயக்குனரும், ராப் இசைப்பாடகரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரிஷிகேஷ் பாண்டே .
  • இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பைசானுதீன் .
  • வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளரும், நகைச்சுவை நடிகருமான ஆர்.ஜே.வேத், தற்போது துபாயில் வசிக்கிறார்.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. [1]
  2. [2]
  3. [3]
  4. "Inhabitants". Archived from the original on 31 January 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-01-27.
  5. See for a more extensive geological explanation: Goodchild: Precious Stones (1908) Page 113 பரணிடப்பட்டது 2014-08-19 at the வந்தவழி இயந்திரம்
  6. "Streeter: Precious Stones and Gems, (1899) on Indian Diamonds". Archived from the original on 22 May 2011. பார்க்கப்பட்ட நாள் 16 December 2006.
  7. Falling Rain Genomics, Inc - Panna
  8. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னா,_மத்திய_பிரதேசம்&oldid=3397622" இலிருந்து மீள்விக்கப்பட்டது