வாருங்கள்!

வாருங்கள், சிந்து, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--Natkeeran 01:50, 24 ஜூலை 2006 (UTC)

கருநாடக இசை தொகு

சிந்து, தங்கள் கருநாடக இசைக்கலைஞர்கள் பற்றிய கட்டுரைகள் அருமையானவை. தொடர்ந்து தாருங்கள். வாழ்த்துக்கள். கருநாடக இசை பற்றிய கட்டுரைகளையும் தாருங்கள்.--Kanags 21:37, 1 ஆகஸ்ட் 2006 (UTC)

உங்கள் இசைசார்ந்த பங்களிப்பால் விக்கிப்பீடியா மேலும் பல கட்டுரைகளைப் பெறும் என்பதில் ஐயமில்லை. தொடர்ந்து எழுதுங்கள்.--ஜெ.மயூரேசன் 10:54, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

சிந்து, தங்கள் ஹனுமத்தோடி கட்டுரையை தோடிக்கு வழிமாற்றியுள்ளேன். ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கவும். தொடர்ந்து இராகங்கள் பற்றிய கட்டுரைகளைத் தாருங்கள். குறிப்பாக பிரபலமான இராகங்கள் பற்றி கட்டுரைகள் எழுதுங்கள். நன்றி.--Kanags 13:58, 8 செப்டெம்பர் 2006 (UTC)Reply

பாராட்டுக்கள் தொகு

கருநாடக இசை குறித்து தாங்கள் தொடர்ந்தும் விரிவாகவும் எழுதி வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி. தொடர்க தம் பணி. --Sivakumar \பேச்சு 08:31, 14 செப்டெம்பர் 2006 (UTC)Reply

சிந்து, சத்தம் இல்லாமல் அரை சதம் அடித்ததற்கு பாராட்டுக்கள். தொடர்ந்து, கருநாடக இசை சார்ந்தும் பிற ஆர்வமுடைய துறைகளிலும் பங்களிக்க வாழ்த்துக்கள். --ரவி 07:54, 16 செப்டெம்பர் 2006 (UTC)Reply

வெகு விரைவில் சதத்தை எட்ட முன்கூட்டியே வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். நன்றி,--Kanags 10:07, 16 செப்டெம்பர் 2006 (UTC)Reply

நன்றிகள் தொகு

என்னை வரவேற்ற நற்கீரன், ஊக்குவிப்பும் பாராட்டுக்களுக்கும் தெரிவித்த Kanags, மயூரேசன், சிவகுமார், ரவி ஆகியோருக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். Kanags, தங்கள் ஊக்குவிப்புக்களுக்கு மீண்டும் நன்றிகள்! மேலும் பல கட்டுரைகளைத் தருவேன் என்று நம்புகின்றேன். சிந்து 11:34, 17 செப்டெம்பர் 2006 (UTC)Reply

பார்க்க தொகு

பேச்சு:ராமப்பிரியா இலிருந்து

  • சிந்து, நீங்கள் இசை பற்றி எழுதி வரும் கட்டுரைகளை விரும்பிப் படிப்பவன் நான். நானும் இவை பற்றி எழுத எண்ணியிருந்தேன். நீங்கள் தரும் கருத்துக்கள் பயனுடைய கருத்துக்கள், ஆனால் தங்கள் எழுத்து-நடையை சிறிதளவு மாற்றி மேலும் நல்ல தமிழில் எழுத வேண்டும் என பரிந்துரைக்க நான் என் விடுமுறையில் இருந்து வந்ததிலிருந்து எண்ணி வருகிறேன். திருத்தவோ, மாற்றி எழுத பரிந்துரைகளைத் தரவோ நேரம் இல்லை (பல கட்டுரைகளும் மிகவும் தொடர்பானவை, எனவே எங்கு தொடங்குவது என்றே புரியவில்லை). முதலில் ஒன்றை முன் வைக்கின்றேன். எண்ணிப்பாருங்கள். ஆரோகணம், அவரோகணம் என்று நீங்கள் எல்லா மேளகர்த்தா இராகங்களுக்கும் ஒரே மாதிரியாக ஸ ரி க ம ப த நி என்று குறிப்பிடுகிறீர்கள். கட்டுரையின் உட்பகுதியிலே சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம், பிரதி மத்திமம் முதலியவற்றைக் குறிக்கிறீர்கள். ஆரோகண அவரோகணத்திலேயே ரி2 , க1, ம2 முதலிய குறித்தல் நலம். பிறவற்றை பின்னர் எழுதுகிறேன். --C.R.Selvakumar 13:40, 29 செப்டெம்பர் 2006 (UTC)செல்வாReply

Selvakumar, தங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி. மேளகர்த்தா இராகங்கள் அட்டவணையிலேயே நீங்கள் குறிப்பிட்டிருந்த போல் இருந்தமையினாலேயே நான் மீண்டும் அவ்வாறு தொகுக்க முனையவில்லை. ஆயினும், அட்டவணையினை நோக்காது இராகத்தை மட்டும் தேடி அதன் குறிப்பை அறிய விரும்புவோருக்கு நீங்கள் குறிப்பிட்ட ரீதியில் கட்டுரை அமைந்தால் அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதனால், இனிமேல் தங்களுடைய கருத்தின் படி இராகம் பற்றிய கட்டுரைகளை அமைப்பதற்கு கவனம் எடுக்கின்றேன். நன்றி.

விக்கியாக்கம் தொகு

சிந்து, உங்கள் இணையத்தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டது என்பதால் விக்கியாக்கம் செய்வது உங்களுக்கு கஷ்டமாக இருக்கலாம். எனக்கு இசையில் அவ்வளவு பாண்டித்தியம் இல்லை. கேள்வி ஞானம் தான், எனினும் உங்கள் இசைக்கட்டுரைகளை முடிந்தவரை விக்கியாக்கம் செய்ய முயற்சிக்கிறேன். செல்வாவும் உதவ முன்வந்துள்ளார். எனவே தொடர்ந்து உங்கள் கட்டுரைகளைத் தாருங்கள்.--Kanags 06:11, 2 அக்டோபர் 2006 (UTC)Reply

மிக்க நன்றிகள். நான் முதலில் type பண்ணியதையே அவசரமாக paste செய்கிறேன். ஆதலால் பிழைகளைத் திருத்தி மாற்றங்களைச் செய்து உதவும் உங்களுக்கும் selvakumar க்கும் மீண்டும் என் நன்றிகள்.

One small note தொகு

Hi Sindu. thank you for you continues work in Tamil wikipedia. One small note: please can you change the form of articles on Music in Tamil wikipedia. They all lack the informative nature. These articles should be able to describe something about the subject to a person with zero can understand some thing.--டெரன்ஸ் \பேச்சு 16:20, 12 ஜனவரி 2007 (UTC)


“இரண்டு வயதுக் குழந்தை தனது தந்தையிடம் அப்பா ‘கப்பல்னா என்னப்பா? எனக் கேட்டால் அதற்கு அக்குழந்தையின்
தந்தை கப்பல்னா நாம ரோட்ல கார்ல போறம்ல அதுமாதிரி தண்ணீல போறதுக்குக் கப்பல்ன்னு பேர்’ என எளிய விளக்கம்
அளிப்பார்.  

அதே குழந்தை ஐந்து ஆறு வயதில் அதே கேள்வியைக் கேட்கும் போது கப்பல் என்பது நீவழிப் போக்குவரத்திற்கு உதவும்
வாகனம்.  படகின் பெரிய வடிவம் என விளக்க்கம் கூறலாம்.  

அதே குழந்தை மேலும் வளர்ந்து பத்து பதினைந்து வயதில் கேட்கும் போது பொதுவாக இரும்பு நீரில் மூழ்கும் தன்மை
உடையது.  ஆனால் ஒரு பொருள் வெளியேற்றும் நீரின் கொள்ளளவும், அதனால் நீரின் மீது ஏற்படும் அழுத்தமும் என 
இயற்பியல் விளக்கங்களுடன் முழுமையாகப் பதிலுரைக்க வேண்டியதிருக்கும்.

ஆனால் தமிழில் மருத்துவம் எழுத வருபவர்கள் மட்டும் முதலிரண்டு நிலைகளிலேயே நின்று விடுகின்றனர்.  பலர் தமிழில் 
அதுபோன்ற முயற்சி தேவையில்லை என்றும் சிலர் தமிழில் அவ்வாறு தர இயலாது என்னும் கருத்துக்களுடன் உள்ளனர்.”  

மேற் குறிப்பிட்ட கருத்துக்களை நரம்பு மண்டல நோய்கள் என்ற தனது நூலுக்கான முன்னுரையில் மருத்துவர் ஐ. எஸ். ஜெயசேகர் தந்துள்ளார். இவை மிகவும் யதார்த்தமான கருதுக்கள். தமிழ் அறிவியல் புத்தகங்கள் பல சிறு துணுக்குகள் அல்லது குறுங்கட்டுரைகளின் கோர்வையாவே அமைவது வழக்கம். இதைவிடுத்து நுணுக்கமாக ஆயும் நூல்கள் அரிது.


த.வி. விளக்கங்கள் எந்த நிலையில் அமைதல் வேண்டும்? அனேகமான கட்டுரைகள் மருத்துவர் ஐ. எஸ். ஜெயசேகர் குறிப்பிட்ட மூன்றாம் நிலையில் அமைவதே நன்று.


இருப்பினும், ஒரு விதத்தில் Trengarasu கருத்துடனும் ஒத்துப் போகின்றேன். சற்று எளிமைப்படுத்தலாம் போல தெரிகின்றது. இசை அனைவரும் அறியக்கூடியதுதானே. அதற்காக எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள்!--Natkeeran 16:33, 12 ஜனவரி 2007 (UTC)

Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language

--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)

பாராட்டுக்கள் மற்றும் ஒரு விண்ணப்பம் தொகு

சிந்து, அண்மையில் நீங்கள் பல இராகங்களின் பெயர்களில் கட்டுரைகள் உருவாக்கி வருகிறீர்கள். பாராட்டுக்களும் நன்றிகளும்.

ஒரு சிறு விண்ணப்பம்: கட்டுரையின் தலைப்பை ''' ''' என்ற குறியீட்டிற்கிடையில் துவக்கத்தில் இட்டு விடுங்கள். மற்ற விக்கியாக்கங்களை உங்களுக்கு நேரமிருந்தால் செய்யுங்கள், இல்லையெனில் மற்றவர்கள் பார்த்துக் கொள்வர். (டெரென்சின் தானியங்கி மூலமும் சில தகவல்களைச் சேர்க்க முடியுமென நினைக்கிறேன்.) -- Sundar \பேச்சு 15:27, 13 மே 2007 (UTC)Reply

சிந்து, நீங்கள் இராகங்கள் பற்றித் தொடர்ச்சியாக எழுதிவருவதற்கு வாழ்த்துக்கள். ஒரு வேண்டு கோள் நேரம் இருந்தால் (மற்றும் கர்நாடக சங்கீதப்படி சரியாக இருந்தால்), ஷட்ஜம், சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம், பிரதி மத்திமம், காகலி நிஷாதம் போன்றவற்றிற்கு தனித்தனிக் கட்டுரைகள் எழுதவியலுமா?. ஒரு சில வரிகளாக இருந்தால் கூடப் பரவாயில்லை குறுங்கட்டுரையாக ஆக்கிவிடலாம். நன்றி. --Umapathy 16:52, 21 மே 2007 (UTC)Reply

சிந்து கவனிக்க தொகு

இராகங்களினைப் பற்றியும் இசை வடிவங்களினைப் பற்றியும் நீங்கள் தொகுப்பன மிகவும் பயனுள்ளன. இத்தகு இராகங்களினைப் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள் என நினைக்கின்றேன். இவற்றினை அனைவரும் எளிதில் தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் எடுத்துக்காட்டு என வெளியிணைப்பினை இட்டு தமிழ்த் திரைப்பாடல்கள் மற்றும் திரைப்படத்தின் பெயர்களினை போன்றவற்றினை வழங்கினால் அனைவரும் ராகங்களினை மிகவும் எளிய முறையில் தெரிந்து கொள்ள இயலுமல்லவா.உங்களுக்குத் தெரிந்தனவற்றை அளித்தால் மிகவும் பயனுள்ளதாகவிருக்கும்.--நிரோஜன் சக்திவேல் 00:08, 14 மே 2007 (UTC)Reply

புகுபதிகை செய்க தொகு

சிந்து, 124.43.107.238 நீங்களென்றே நினைக்கிறேன். புகுபதிகை செய்யலாமே! --கோபி 15:54, 21 மே 2007 (UTC)Reply

பாராட்டுக்கள் தொகு

கடந்த சில நாட்களாக அதிவேகத்தில் நீங்கள் இராகங்கள் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள். த.வி.யில் பங்களிப்பவர்கள் மாறிமாறி இவ்வாறு கட்டுரைகள் எண்ணிக்கையை அதிகரிக்க உதவி வருவதைக் காண மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொருவரும் வெவ்வேறு துறைகளில் கவனம் செலுத்திவருவது கட்டுரைகளின் பல்வகைமைத் தன்மையை அதிகரிக்க உதவுகிறது. உங்களுடைய இராகங்கள் பற்றிய கட்டுரைகள் இன்னும் விரிவாக வளர்த்தெடுக்கப்படக் கூடியவை. இதன்மூலம் எதிர்காலத்தில் த.வி.யை இராகங்களுக்கான அடிப்படைத் தரவுத் தளமாகவும் விளங்கவைக்க முடியும். நன்றி சிந்து. Mayooranathan 18:00, 26 மே 2007 (UTC)Reply

சிந்து, உங்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்! இராகங்களைப் பற்றி எழுதி குவித்துள்ளீர்கள்! இசைக் கருவிகலைப் பற்ரியும் எழுதியுள்ளீர்கள்! உங்கள் நற்பணியைக் காண மிக மகிழ்ச்சியாய் உள்ளது.--செல்வா 17:27, 5 ஜூன் 2007 (UTC)

இசைக் கட்டுரைகள் தொகு

நீங்கள் இசை தொடர்பான பல கட்டுரைகளை ஆக்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள், நன்றி. அதேவேளை சற்று கவனமெடுத்து இணையான அல்லது முதன்மையான தமிழ் சொற்களைப் பயன்படுத்தினால் அல்லது குறிப்பிட்டால் மிக்வும் சிறப்பாக அமையும். பல இடங்களின் நீங்கள் இவ்வாறு செய்துள்ளீர்கள் என்றும் தெரிகின்றது. இவற்றுக்கு முனைவர் மார்கரெட் பாஸ்டின் வபிச எழுதிய இன்னிசை யாழ், விபுலானந்தரின் யாழ்நூல், மணிமோகலை பிரசுரத்தின் இராக, தாள வகைகளைத் தெரிந்து கொள்ளுங்கள், மாத்தளை சோமுவின் தமிழர் அறிவியல் போன்ற நூல்கள் உதவக்கூடும். நன்றி. --Natkeeran 14:44, 21 ஜூலை 2007 (UTC)

மீள்வருகை வரவேற்பு தொகு

சிந்து, நீங்கள், பல மாதங்களுக்குப் பிறகு வந்து இராகமாலிகை கட்டுரை வரைந்துள்ளீர்கள். மீண்டும் வருக என்று வரவேற்கிறேன். --செல்வா 04:08, 6 ஜனவரி 2008 (UTC)

சிந்து, தமிழ் விக்கிப்பீடியாவில் மீண்டும் உங்கள் பங்களிப்பைக் காண மகிழ்ச்சியாய் உள்ளது. இயன்றவாறு தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி. --செல்வா 15:01, 25 மே 2008 (UTC)Reply

சிந்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வரலாற்றில் இதுகாறும் பங்களித்தவர்களில் நீங்கள், தொடங்கிய கட்டுரைகளின் எண்ணிக்கைப்படி , வரிசையில் 10 ஆவதாக நிற்கின்றீர்கள் (484). இங்கே பார்க்கவும்.--செல்வா 15:11, 25 மே 2008 (UTC)Reply

ஆறு மாதத்திற்குப் பிறகு மீண்டும் வந்து பங்களிக்கும் உங்களுக்கு நல்வரவு! இலங்கையில் நிலவரம் மிகவும் கவலைக்கு இடமாக இருக்கும் இப்பொழுதும் தமிழ் விக்கியை நீங்கள் நினைத்து பங்களிப்பதற்கு நன்றி. எல்லோரும் மீண்டும் இன்பமுடன், நலமுடன் வாழ வேண்டுகிறேன்.--செல்வா 18:48, 28 ஜனவரி 2009 (UTC)
5-6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் உங்கள் பங்களிப்புகளைக்காண மகிழ்ச்சியாய் உள்ளது. இளங்கலை படிப்பை முடித்துவிட்டு முதுகலைப் படிப்பைத் துவங்கி உள்ளீர்கள் என்று அறியவும் மகிழ்ச்சி. மேலும் மேலும் வெற்றிகள் கிட்ட நல்வாழ்த்துகள். --செல்வா 17:04, 13 ஜூலை 2009 (UTC)
உங்கள் மறுமொழிக்கு நன்றி. இயன்றபொழுது இயன்றவாறு பங்களியுங்கள். ஆம், சில நேரங்களில் பங்களிக்க இயலாமல் பிற பணிகள் அல்லாது அலுவல்கள் அழுத்தங்கள் இருக்கும். --செல்வா 21:30, 20 ஜூலை 2009 (UTC)

சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல் தொகு

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:59, 18 பெப்ரவரி 2010 (UTC)

முதற்பக்க அறிமுகம் தொகு

வணக்கம் சிந்து. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சிந்து பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி--ரவி 10:52, 15 மே 2010 (UTC)Reply

விக்கி மாரத்தான் தொகு

விக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:24, 27 அக்டோபர் 2010 (UTC)Reply

மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள் தொகு

வணக்கம் சிந்து. நலமா? கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா? நன்றி--இரவி 13:00, 2 மே 2011 (UTC)Reply

பங்களிப்பு வேண்டுகோள் தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:40, 21 சூலை 2011 (UTC)Reply

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு தொகு


விக்கிப்பீடியர் சந்திப்பு ஏற்பாடுகள் தொகு

கொழும்பில் வரும் ஏப்ரல் 27, 28 இல் நடைபெறும் தமிழ் ஆவண மாநாட்டில் பங்குபெற பல விக்கிப்பீடியர் வருவதாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தும்வகையில் விக்கிப்பீடியர் சந்திப்பொன்றை நடாத்துவது குறித்து சிந்தித்தோம். ஆலமரத்தடியில் இது குறித்த உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இலங்கைப் பயனர்கள் இதனைப் பயன்படுத்தி சந்திப்பில் கலந்து கொள்ளுவதும் விக்கி குறித்த மேம்பாட்டு முன்னெடுப்புகள் மற்றும் தொடர்புபட்ட விடயங்கள் பற்றி உரையாடுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக இலங்கைப் பயனராகிய தங்களின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:33, 13 மார்ச் 2013 (UTC)

ஒளிப்படம் தொகு

வணக்கம், சிந்து. பெண்கள் வரலாற்று மாதத்தை ஒட்டி பெண் பங்களிப்பாளர்களை முன்னிறுத்தி புதிய பங்களிப்புகளை வேண்டி வருகிறோம். இது தொடர்பாக உங்கள் அறிமுகத்தையும் இட விரும்புகிறோம். உங்கள் உயர் நுணுக்க முகப்படம் (high resolution profile picture) இருந்தால் தந்துதவ வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 16:24, 13 மார்ச் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:சிந்து&oldid=1817233" இலிருந்து மீள்விக்கப்பட்டது