பயனர் பேச்சு:Jagadeeswarann99/தொகுப்பு01
ஜெகதீஸ்வரன் நடராஜன் | |||||||
முகப்பு | உரையாடல் | உருவாக்கப்பட வேண்டியவை | பங்களித்துள்ள கட்டுரைகள் | பதக்கங்கள் | திட்டங்கள் | மணல்தொட்டி |
பேச்சுப் பக்கக் கையெழுத்து
தொகுபார்க்க: விக்கிப்பீடியா:கையெழுத்து--இரவி (பேச்சு) 11:01, 2 ஏப்ரல் 2012 (UTC)
மிகவும் உபயோகமாக இருந்தது. மிக்க நன்றி நண்பரே. - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:08, 3 ஏப்ரல் 2012 (UTC)
ஒரு வேண்டுகோள்
தொகுவணக்கம்! நீங்கள் தொடங்கியுள்ள சில கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை இல்லாமல் இருக்கின்றன. இவற்றை சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பு செய்ய வாழ்த்துக்கள்! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:51, 29 மே 2012 (UTC)
நிச்சயம் செய்கிறேன். நன்றி. சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:24, 21 செப்டெம்பர் 2012 (UTC)
வணக்கம் ஜெகதீஸ்வரன். பஞ்சகவ்யம் என்ற கட்டுரை ஏற்கனவே உள்ளதால் தாங்கள் உருவாக்கிய பஞ்சகாவியா என்ற கட்டுரை நீக்கப்படலாம். இது போலவே இயற்கை வேளாண்மை கட்டுரையையும் கவனத்தில் கொள்க. பார்க்கவும் கரிம வேளாண்மை. மிக்க நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:40, 24 செப்டெம்பர் 2012 (UTC)
தாராளமாக நீக்கம் செய்யவும். நன்றி. சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:42, 24 செப்டெம்பர் 2012 (UTC)
பெண்கவிஞர்கள்
தொகுவணக்கம். ஜெகதீஸ்வரன். தாங்கள் எழுதிய பெண் கவிஞர்கள் கட்டுரை நன்றாக உள்ளது. அக்கட்டுரையை இன்னும் விரிவு செய்ய எண்ணியிருந்தால் சங்க காலப் பெண் கவிஞர்கள் பகுதியில் சங்க இலக்கியங்களில் இடம்பெறும் பெண்பாற் கவிஞர்கள் பற்றியும் குறிப்பிடலாம். கவிஞர்களைப் பற்றிய சிறு குறிப்புகளையும் இடலாம். கட்டுரை இன்னும் சற்றே விரிவு பெறும். நன்றி. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:16, 26 செப்டெம்பர் 2012 (UTC)
பாராட்டுதலுக்கு மி்க்க நன்றிங்க. நிச்சயமாக இயன்றளவு செய்கிறேன். -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:19, 26 செப்டெம்பர் 2012 (UTC)
பொன்னியின் செல்வன்
தொகுவணக்கம், பொன்னியின் செல்வன் கட்டுரையில் நீங்கள் உருவாக்கிய பல வழிமாற்றல்களை நீக்கியுள்ளேன். அவை தனிக் கட்டுரைகளாக எழுதப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 21:22, 27 செப்டெம்பர் 2012 (UTC)
அவ்வாறு எழுதவே உத்தேசித்துள்ளேன் நண்பரே. நீங்கள் என் பங்களிப்பின் பக்கத்தினை கண்டால் தெரியும். சின்ன, பெரிய பழுவேட்டரையர் பக்கங்களை கண்டு, திருத்தங்களையும், அறிவுரைகளையும் கூறவும். நன்றி.சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:50, 28 செப்டெம்பர் 2012 (UTC)
- வழிமாற்றுகள் ஏற்படுத்துவது தவறல்ல. ஆனாலும், வழிமாற்றுகளினால் புதிய கட்டுரைகள் அந்தத் தலைப்பில் எழுதப்படுவதை புதியவர்களுக்குத் தூண்டாது. அதனால் சிவப்பு இணைப்பு இருந்தாலும் பரவாயில்லை. எப்போதாவது கட்டுரைகளை யாராவது எழுதுவார்கள் என்பது எனது நம்பிக்கை. இதனாலேயே இவற்றை நீக்கினேன். மேலும் இக்கட்டுரைகளை நீங்களோ அல்லது வேறு யாருமோ தொடங்கலாம். இதற்கு எவருடைய அனுமதியும் தேவையில்லையே?--Kanags \உரையாடுக 08:21, 28 செப்டெம்பர் 2012 (UTC)
- நன்றி நண்பரே. சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:22, 28 செப்டெம்பர் 2012 (UTC)
நீங்கள் பொன்னியின் செல்வன் குறித்த கட்டுரைகளை உருவாக்கி வருவது கண்டு மகிழ்கிறேன். பாராட்டுகளும் நன்றியும் --இரவி (பேச்சு) 18:28, 29 செப்டெம்பர் 2012 (UTC)
பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே. பொன்னியின் செல்வன் வார்ப்புருவில் மீதமிருப்பவர்களை இணைத்தபின் சற்று சலிப்படையும் வகையில் வார்ப்புரு மாறிவிட வாய்ப்புள்ளது. கதைமாந்தர்களை சோழ குடும்பம், படகோட்டி குடும்பம், பாண்டிய ஆபத்துதவிகள், சிற்றரசர்கள் என சிறுசிறு குழுக்களாக பிரிக்கலாம் என்ற யோசனை உள்ளது. தங்களின் மேலான ஆலோசனைகளை கூறவும். மேலும் பொன்னியின் செல்வனில் பங்கெடுத்திருக்கின்ற மற்றவர்களின் அலோசனைகளையும் கேட்டுநடக்க சித்தமாய் உள்ளேன்.நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:58, 29 செப்டெம்பர் 2012 (UTC)
படிமங்கள் தரவேற்றம்
தொகுசகோதரன், நீங்கள் அண்மையில் சில படங்களைத் தரவேற்றியிருக்கிறீர்கள். இவை உங்களால் ஆக்கப்பட்டதில்லை என்பது கண்கூடு. அப்படியிருக்கும் போது {{self|GFDL|cc-by-sa-all}} என்ற வார்ப்புரு இடுதல் காப்புரிமை மீறல் இல்லையா? இவற்றுக்கு வார்ப்புரு:Non-free book cover சிறந்ததாக இருக்கும். மாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 09:57, 28 செப்டெம்பர் 2012 (UTC)
- சரி நண்பரே அப்படியே செய்கிறேன். ஆனால் எதனை மாற்றி அவ்வாறு செய்வது என்றும் கூறுங்கள். காப்புரிமையில் ஏகப்பட்ட கேள்விகள் கேட்டமையினால் முதலிருப்பதை தெரிவு செய்து உள்ளீடு செய்துவிட்டேன். நீங்களே அவற்றினை மாற்று தருவீர்கள் என்றால் மிக்க மகிழ்ச்சி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:20, 28 செப்டெம்பர் 2012 (UTC)
கதை மாந்தர்கள் எதிர் வரலாற்று நபர்கள்
தொகுபொன்னியின் செல்வம் வார்ப்புருக்கள வரலாற்று நபர்களுக்குச் சேற்பது குளப்பம் தரக் கூடியது. வேண்டுமானால் கட்டுரையில் ஒரு சிறு குறிப்புத் தரலாம் ஆனால் பகுப்புக்களையோ வார்ப்புருவையோ சேர்க்க வேண்டாம். கதாபாத்திரம் என்ற ஒரு கட்டுரையை உருவாக்கி அங்கு சேர்க்கலாம். கதாபாத்திரம் ஒன்றைப் பற்றி எழுதும் போது இக் கதையில் வரும் கதாபாத்திரம் என்று தெளிவாகக் குறிப்பிட்டுவிடுதல் நன்று. அது வரலாற்று நபர் ஒன்றை அடித்தளாமாக வைத்து உருவாக்கப்பட்டது என்றால் அதையும் கட்டுரையில் குறிப்பிடலாம். ஆனால் இரண்டும் ஒன்றே போன்ற தோற்றம் தெளிவாகத் தவிர்க்கப்பட வேண்டும். நன்றி.
--Natkeeran (பேச்சு) 21:00, 29 செப்டெம்பர் 2012 (UTC)
அதற்கு வார்ப்புருவிலேயே யார் யார் வரலாற்று நபர்கள் என்றும், யார் புனைவு என்றும் இணைக்கலாம். ஆனால் அதற்கு மிகுந்த வரலாற்று அறிவுமிக்கவர்கள் வேண்டும். பகுப்புகளையோ, வார்ப்புருக்களை இணைக்காமலோ இருக்கும் போது அவர்களுக்கும் பொன்னியின் செல்வன் நாவலுக்குமான தொடர்பினை எளியதாக எப்படி விளக்குவது. ராஜராஜ சோழனின் கட்டுரையை படிக்கும் நபர் பொன்னியின் செல்வனில் இருக்கும் கதைப்பாத்திரங்களை எளிதில் அறிந்துகொள்ள முடியாமல் போய்விடுமே. என்ன நினைக்கின்றீர்கள்? -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 13:28, 30 செப்டெம்பர் 2012 (UTC)
பாராட்டு
தொகுபொன்னியின் செல்வன் கதைமாந்தர்கள் குறித்த கட்டுரைகளை உருவாக்கியமைக்கும் வாழ்த்துகள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:51, 30 செப்டெம்பர் 2012 (UTC)
மிக்க நன்றி நண்பரே. அவ்வப்போது பாராட்டுகளை தந்து உற்சாகம் செய்கின்றமை மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நண்பர் Natkeeran சொல்வதைப் போல வரலாற்று புனைவு புதினத்தில் இருக்கும் இடையூருகளை சில கேள்விகளாக்கி ஆலமரத்தடியில் இட்டிருக்கிறேன். தங்களின் மேலான கருத்துகளையும் கூறவும். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:01, 30 செப்டெம்பர் 2012 (UTC)
பொன்னியின் செல்வன்
தொகு- வணக்கம் ஜெகதீஸ்வரன், பொன்னியின் செல்வன் கதை மாந்தர்கள் கட்டுரைகள் கண்டு மிக்க மகிழ்ச்சி. பொன்னியின் செல்வன் புதினத்தை இப்பொழுதும் தொடர்ந்து படிக்கும் ரசிகை நான். உங்களது கட்டுரைகளில் நான் சில மாற்றங்கள் செய்திருக்கிறேன். அவற்றில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்திலோ அல்லது உங்களது பேச்சுப் பக்கத்திலோ தயங்காமல் தெரிவியுங்கள். கலந்துரையாடி சரியான முடிவை அடையலாம். ஆழ்வார்க்கடியான் நம்பி மந்தாகினியின் மகன் எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது தவறு என நினைக்கிறேன். உங்கள் கருத்தினை அறிந்தபின் கட்டுரையில் மாற்ற நினைக்கிறேன். உங்கள் பங்களிப்பு சித்திரக் கதைகளுக்கும் நீண்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. உங்கள் பயணம் தொடர நல்வாழ்த்துக்கள்.--Booradleyp (பேச்சு) 05:38, 2 அக்டோபர் 2012 (UTC)
- தாங்கள் கூறுவது சரியே. ஆழ்வார்க்கடியான் மந்தாகினியின் மகன் அல்ல. அவர் சின்ன ஊமைச்சின் மகன். அவருடைய பெயர் எனக்கு தெரியவில்லை. இரண்டு பகுதிகளை மட்டுமே பொன்னியின் செல்வனில் முழுமையாக முடித்திருக்கிறேன். அதனால் ஊமைச்சின் பெயரை மந்தாகினி என்று தவறாக இணைத்துவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி. தாங்களே அதனை மாற்றி எழுதிவிடுங்கள். சிறிய ஊமைச்சின் பெயரையும் தெரிந்தால் இணைத்திடுங்கள். நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:44, 2 அக்டோபர் 2012 (UTC)
மந்தாகினியின் தங்கையின் பெயர் வாணியம்மை. எனினும் சேந்தன் அமுதன் தான் வாணியால் வளர்க்கப்படுபவன். ஆழ்வார்க்கடியான் அல்ல. கட்டுரையில் மாற்றி விடுகிறேன்.நன்றி--Booradleyp (பேச்சு) 07:12, 2 அக்டோபர் 2012 (UTC)
மிக்க நன்றி. கட்டுரையில் எத்தவறுகள் இருப்பினும் தாமதியாமல் திருத்தி எழுதுங்கள். பொன்னியின் செல்வன் வார்ப்புருவில் பேட்மேனின் ஆங்கில வார்ப்புரு இருப்பதை போல சோழர் குடும்பம், படகோட்டி குடும்பம் என்று பிரித்து தரப்படுத்த நேரமிருப்பின் செய்துதாருங்கள் என கோரிக்கை வைக்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:34, 2 அக்டோபர் 2012 (UTC)
- புது வார்ப்புரு அமைப்பு நன்றாக உள்ளது. வந்தியத் தேவன், சோழ வம்சத்தைச் சேர்ந்தவன் அல்ல. வாணர் குலத்தினன். அதனால் வந்தியத் தேவனைச் சிற்றரசர்கள் பிரிவுக்கு மாற்றலாம் என நினைக்கிறேன். உங்களுக்கும் சரியென்று தோன்றினால் மாற்றிவிடுங்கள்.நன்றி.--Booradleyp (பேச்சு) 08:17, 2 அக்டோபர் 2012 (UTC)
- நன்றி. அவ்வாறே செய்கிறேன். மேலும் ஏதேனும் தவறுகள் இருப்பின் திருத்தி தரவேண்டுகிறேன். மிக்க நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு)
வணக்கம் ஜகதீஸ்வரன், குறுகிய காலத்தில் பொன்னியின் செல்வன் புதினத்தின் பெரும்பாலான கதைமாந்தர்களின் கட்டுரைகளை உருவாக்க்கியதற்கு சகபயனராகவும் பொன்னியின் செல்வன் புதினத்தின் ரசிகையாகவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். உங்கள் வேகமும் சுறுசுறுப்பும் வியக்க வைக்கிறது என்னை.
ஏனைய மூன்று பாகங்களையும் முடித்தபின்னர் இக்கட்டுரைகளை மேலும் வளர்த்தெடுப்பீர்கள் என நினைக்கிறேன். முடிந்தால் எல்லாக் கட்டுரைகளுக்கும் ஓவியம் சேர்க்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். வார்ப்புருவில் மேலும் சில கதாபாத்திரங்களைச் சேர்த்துள்ளேன். வானதியின் கட்டுரையில் தரப்பட்டுள்ள படம் வினு வரைந்ததா அல்லது மணியமா? சந்தேகமாக இருப்பதால் நான் அங்கு குறிப்பிடாமல் விட்டு வைத்திருக்கிறேன். தொடரட்டும் உங்கள் பணி. நன்றி.--Booradleyp (பேச்சு) 04:22, 3 அக்டோபர் 2012 (UTC)
- மிகவும் பழமையான ஓவியங்கள் கிடைக்கின்றன, அதனால் பெரியவர்களின் துணையோடு அவற்றினை வரைந்தவர்கள் பெயரினை பிறகு சேர்க்கலாம். பெரிய கதைமாந்தர்களின் ஓவியங்களை மட்டுமே அட்டைப்படத்தில் இட்டு வைத்திருக்கின்றார்கள். சிறு கதாப்பாத்திரங்களின் ஓவியங்கள் புத்தகத்தினுள் வரையப்பட்டிருக்கலாம், மற்ற கட்டுரைகளுக்கும் முடிந்தளவு ஓவியங்களை சேர்க்கிறேன். தொடர்ந்து ஊக்கம் கொடுத்துவரும் தங்களுக்கு என் நன்றிகள். வார்ப்புருவில் புதிய கதாப்பாத்திரங்களை சேர்த்தமைக்கு மற்றொருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:54, 3 அக்டோபர் 2012 (UTC)
- வணக்கம் ஜெகதீஸ்வரன். சின்னப் பழுவேட்டரையரின் பெயரில் ஒரு சிறு திருத்தம் செய்துள்ளேன்.
இரண்டாம் பாகம் சுழற்காற்றில் 15 ஆவது அத்தியாயத்தில், பராந்தக சோழர் நாடகம் பற்றிக் கூறுமிடத்தில் பராந்தகருக்கு உதவிய பழுவேட்டைரையர் இப்போதைய பழுவேட்டரையரின் தாத்தா, கண்டன் அமுதனார் என்று உள்ளது. கதையில் பெரிய பழுவேட்டையரின் இயற்பெயரும் கண்டன் அமுதனார் என்று குறிப்பிடப்பட்டுள்ள பகுதியை எனக்குச் சுட்டிக் காட்டும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.
பொன்னியின் செல்வன் புதினத்தை மணியம், வினு, மசெ ஆகியோரின் ஓவியங்களில் பார்த்திருக்கிறேன். நீங்கள் நந்தினியின் ஓவியத்தை பத்மவாசன் கை வண்ணத்தில் தந்துள்ளீர்கள். பொன்னியின் செல்வனின் எந்தப் பதிப்பு பத்மவாசனின் ஓவியத்தோடு வெளியானது என்பதையும் தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.--Booradleyp (பேச்சு) 13:18, 5 அக்டோபர் 2012 (UTC)
- சின்ன பழுவேட்டரையரின் பெயரை திருத்தம் செய்தமைக்கு நன்றிகள். பெரிய பழுவேட்டரையரின் பெயர் என்று கூகுளில் தேடி கண்டன் அமுதனார் என்பதை அறிந்தேன். பொன்னியின் செல்வனில் எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்று சரியாக தெரியவில்லை. மன்னிக்கவும், அது தவறாக இருந்தால் திருத்தம் செய்துதாருங்கள்.
கல்கி புத்தகத்தில் பொன்னியின் செல்வன் வெளிவந்த காலத்தில் பத்மவாசனின் ஓவியத்துடன் வெளிவந்திருக்கலாம். அல்லது மறுபதிப்பாக மீண்டும் வந்த காலத்தில் வெளிவந்திருக்கலாம். பத்மவாசனின் ஓவியக்குவியல்களிடையே நந்தினி ஓவியம் இருந்தது. கல்கி 2000 ஆம் ஆண்டு என்பதை மட்டும் சரியாக கூற இயலும், மாதம் 1 காவோ, 7 லாகவோ இருக்கலாம். மேலும் ஏதேனும் தவறுகள் இருப்பின் திருத்தி தரவேண்டுகிறேன். மிக்க நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:09, 5 அக்டோபர் 2012 (UTC)
- பெரியபழுவேட்டரையரைப் பற்றி மீண்டும் ஒரு முறை கதைக்குள் தேடிப் பார்க்கிறேன். அதன்பிறகு மாற்றிக் கொள்ளலாம். பத்மவாசன் கைவண்ணத்தில் நான் இப்போதுதான் பார்க்கிறேன். அதனால்தான் கேட்டேன். இவரது பாணியும் நல்ல உயிர்ப்புடன் அமைந்திருக்கிறது.
பூதி விக்கிரம கேசரி கட்டுரை அவரை ஆதித்த சோழன் காலத்தவர் எனக் குறிப்பிடுகிறது. ஆனால் பொன்னியின் செல்வன் புதினத்தில் வருபவர் சுந்தர சோழன் காலத்தைச் சேர்ந்தவர் அல்லவா? கட்டுரையின் நூல்கள்- பகுதியில் இதற்கேற்றவாறு மாற்றி அமைத்து விடட்டுமா?
மேலும் மேலும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களை உருவாக்குவதற்கும் மெருகூட்டுவதற்கும் எனது நன்றி.--Booradleyp (பேச்சு) 04:45, 6 அக்டோபர் 2012 (UTC)
- பெரிய பழுவேட்டரையர் பெயர் திருத்தம் பல கட்டுரைகளுக்கும் செய்ய வேண்டியிருக்கும், அதனால் பெயர் மாற்றப்பட்டவுடன் அனைத்து கட்டுரைகளையும் மறுகண்காணிப்பிற்கு உட்படுத்த வேண்டும். சிறிய தவறு எத்தனை சிரமம் தருகிறது என்பதை உணர்ந்தேன். தங்களுக்கும் இது வீண் வேலை,. தவறுக்கு மன்னிக்கவும். அப்படியே வானதியின் தந்தை சிறிய வேளார் பெயரையும் அறிந்தால் கூறுங்கள். வீரபாண்டியனின் மகனை பாண்டிய ஆபத்துதவிகள் சந்திப்பதை நேற்றுதான் பொன்னியின் செல்வன் ஒலிபுத்தகத்தில் கேட்டேன். கொலைவாள் பகுதியில் வருகிறது. அவருடைய பெயர் தெரிந்தாலும் இணைத்திடுங்கள். நன்றி.
1987களிலேயே பொன்னியின் செல்வன் எழுதப்பட்டிருப்பதாக தெரிகிறது. மணியம் காலத்தால் பத்மவாசனுக்கு முந்தையவராக இருக்கலாம். பத்மவாசன் ஓவியத்துடன் கூடிய புத்தக நகல்களில் 2000 என்று ஆண்டு மட்டுமே சரியாக தெரிகிறது. சில கதைமாந்தர்களின் ஓவியங்களும் கிடைத்திருக்கின்றன. வாணி அம்மை, பெரிய வேளார் போன்றார்களின் ஓவியங்களை தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்தால் இணைக்கிறேன். தொடர்ந்து வழிகாட்டுதலாய் இருப்பதற்கு மிக்க நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:31, 6 அக்டோபர் 2012 (UTC)
வானதியின் தந்தையின் பெயர் கொடும்பாளூர் சிறிய வேளார் என்பதைத் தவிர, மூன்றாம் பாகம் கொலைவாளில் 23 ஆம் அத்தியாயத்தில் (வானதி) அவர் ஈழத்துப்பட்ட சிறிய வேளார் என்ற பட்டப்பெயர் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
வீரபாண்டியன் மகனாகக் காட்டப்படும் சிறுவனின் கதைப் பெயர் எங்கும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. சக்கரவர்த்தி என்றுதான் பாண்டிநாட்டு ஆபத்துதவிகள் அழைக்கிறார்கள். ஆனால் ஐந்தாம் பாகத்தில் (இறுதி) 90 ஆவது அத்தியாயத்தில் குந்தவைக்கு நடந்த நிகழ்வுகளை வந்தியத்தேவன் கூறும்போது செம்பியன் மாதேவியின் மகனாக, சிவபக்தனாக வளர்ந்த மதுராந்தகன்-அமரபுஜங்க நெடுஞ்செழியன் என்றும் வீரபாண்டியன் மகன்-பாராங்குசன் நெடுஞ்செழியன் என்றும் ரவிதாசன் பாண்டிய நாட்டுரிமைக்கு இருவரை உருவாக்கி விட்டதாகச் சொல்கிறான். இது கதைப்படி உள்ளதாகும். வரலாற்றில் ராஜராஜ சோழன் அமர புஜங்கனைத் தோற்கடித்ததாக உள்ளது என நினைக்கிறேன்.--Booradleyp (பேச்சு) 15:07, 6 அக்டோபர் 2012 (UTC)
தற்போது ஐந்தாவது பாகத்தினை படித்துக் கொண்டிருக்கிறேன். முடித்த பிறகு ஏதேனும் தென்படுகின்றதா என்று பார்க்கிறேன். சந்திரமதி என்ற கதாப்பாத்திரத்தினை அறிந்து கொண்டேன். இறுதிவரை படித்துவிட்டு விடுபட்ட அவரைப் பற்றியும் எழுத வேண்டும். அத்துடன் தொக்கி நிற்கும் பிற கதாப்பத்திரங்களையும் முடித்துவிட்டால் பொன்னியின் செல்வன் கதைமாந்தர்கள் குறித்தான வேலை முடிந்துவிடும். வானமா தேவி, சந்திரமதி போன்று வேறு விடுபட்ட கதாப்பாத்திரங்களையும் குறிப்பிட வேண்டுகிறேன்.
கொடும்பாளூர் சிறிய வேளார் என்ற பெயரிலேயே வானதியின் தந்தை பற்றி எழுதலாம் என நினைக்கிறேன். பாராங்குசன் நெடுஞ்செழியன் என்ற பெயரிலேயே வீரபாண்யன் மகன் குறித்து எழுதலாம் அல்லவா?. தங்களுடைய ஆலோசனைகளை கூறுங்கள், மிக்க நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:55, 8 அக்டோபர் 2012 (UTC)
பாராங்குசன் நெடுஞ்செழியன் (கதை மாந்தர்) எனத் தலைப்பிடல் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் வரலாற்றில் அந்தப் பேருடைய மன்னன் இருந்தானா எனத் தெரியவில்லை. தமிழ் விக்கியில் பாண்டியர் கட்டுரை பார்த்தால், இக்காலகட்டம் எனக்கு குழப்பமாக உள்ளது. எனினும் அமரபுஜங்கன் (இக்கதைப்படி மதுராந்தகனாக வளர்பவன்) பெயர் உள்ளது. காலமும் ஒத்து வருகிறது.
பூதி விக்கிரம கேசரி கட்டுரையைப் பற்றி நான் சொல்லியிருந்த மாற்றத்தைச் செய்து விடட்டுமா?
பாண்டிய ஆபத்துதவிகளில் இன்னுமொருவன் இருக்கிறான்- கிரமவித்தன். ஐந்தாம் பாகத்தில் வருவான். பொன்னியின் செல்வன் ஏறிச் சென்ற யானைக்கு மதம் பிடிக்க வைத்து அவரைக் கொல்வதற்காக ஒரிஜனல் யானைப்பாகனைக் கட்டிப் போட்டு விட்டு இவன் யானைப்பாகனாக வருவான். இவனைப் பற்றியும் கட்டுரை உருவாக்கலாம். வேறு எவரேனும் விடுபட்டிருக்கிறார்களா என யோசித்துச் சொல்கிறேன்.--Booradleyp (பேச்சு) 07:21, 8 அக்டோபர் 2012 (UTC)
- மிக்க நன்றி - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:53, 8 அக்டோபர் 2012 (UTC)
தலைப்பு வைத்தல்
தொகுதலைப்புகளுக்கான சில குறிப்புதவிகள்:
- சில இடங்களில், t என்பதற்கு ற் வரும். இது இலங்கை வழக்கு. .net என்பதை .நெற் என்பர். நைட்ரஜன் என்பதை நைதரசன் என்பதும் இவ்வகையே. இது போன்ற தலைப்புகளை மாற்றக் கூடாது.
- ஹ, ஷ, ஸ்ரீ, ஜ, ஸ ஆகியன கிரந்த எழுத்துகள். இவற்றை நீக்கி எழுதுதல் தமிழுக்கு சிறப்பு.
(Henry)ஹென்றி என வந்தால், என்றி என எழுதலாம். (Sri)ஸ்ரீ என்பதற்கு பதிலாக சிறீ என எழுதலாம். இலங்கையை சிறீலங்கா என எழுதுவது வழக்கம். (ஸ்ரீலன்கா என்றல்ல!) ஈஸ்வரன்/ஈஷ்வரன் என்பதை ஈசுவரன் என எழுதலாம், பாரிஸ் என்பதற்கு பதிலாக பாரிசு என எழுதலாம். சாம்ஸ்கி என்பதை சாம்சுகி என்று எழுதலாம்.
- குறியீடுகளை பெயருடன் ஒட்டி எழுதக் கூடாது. எ.கா, பூங்குழலி (கதைமாந்தர்) என்று வர வேண்டும். மாநாடு - 1992 . இடைவெளியுடன். ”,” மட்டும் ஒட்டி வரும். எ.கா. ஐதராபாத்து, இந்தியா என்பதுபோல்
- சர்ச்சைக்குரிய கட்டுரைத் தலைப்பை மாற்ற பிறர் உரையாடிக்கொண்டிருக்கும்போது, நாம் தலைப்பை மாற்றக் கூடாது
ஒரு கட்டுரையை எந்த தலைப்பில் தேடினாலும் கிடைக்க வேண்டும் என்றால், ஒரு தலைப்பில் கட்டுரையை எழுதிவிட்டு, பிற தலைப்புகளில் #வழிமாற்று[[கட்டுரையின் பெயர்]] என எழுதலாம். எப்படித் தேடினாலும் கிடைக்கும். எ.கா. யப்பான், ஜப்பான், சப்பான், நிப்பான் என்பவற்றைப் பார்க்கவும்.
இவை நான் அவ்வப்போது கண்டவை. உங்களுக்கு உதவியாயிருக்கும் என்று நினைவூட்டினேன். உங்களுக்கு இவற்றுடன் முரண்பாடிருந்தால் உங்களுக்கு விருப்பமான தலைப்பை வைக்கலாம். புரியவில்லை என்றால் கேட்கலாம். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:19, 2 அக்டோபர் 2012 (UTC)
- வழிகாட்டுதலுக்கு நன்றி நண்பரே. ஆங்கில பெயர்களை கையாளும் போது பெரும் சிக்கல் ஏற்படுகிறது. பேட்மேன் வரைகதை மாந்தர்கள் குறித்தான கட்டுரைகளில் ஏகப்பட்ட ஆங்கில பெயர்கள் வருகின்றன. உதா - Bruce Wayne - ப்ரூஸ் வேனே என்றோ ப்ரூசு வேன் என்றோ எப்படி எழுதுவது. இதற்கு ஏதேனும் வழிகாட்டுதல்கள் இருக்கின்றனவா?. கூகுள் டிரேன்சிலேட்டர் மிகவும் உபயோகமற்றதாக உள்ளது. இவற்றைப் பற்றி ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கலாமென நினைத்திருந்தேன். நீங்களே வழிகாட்டியாக வந்துவிட்டீர்கள். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:32, 2 அக்டோபர் 2012 (UTC)
இது போன்ற குழப்பங்களில் நானும் சிக்குகிறேன். சமற்கிருதப் பெயர்களைத் தமிழாக்குவது பற்றி விதிகள் உள்ளன. ஆங்கிலப் பெயர்களை தமிழாக்க செல்வாவின் உதவியை நாடுவேன். அவர் உதவுவார். :) சில முக்கிய விதிகள், தமிழில் மெய்யெழுத்தில் சொல் தொடங்காது. ப்ரூஸ் என்பது தவறு. புரூஸ் என்றோ புரூசு என்றோ எழுதலாம். சொல்லின் முடிவிலும் மெய்யெழுத்து வரக்கூடாது. அர்னால்ட் என்பதை அர்னால்டு என எழுதலாம். (குற்றியலுகரம்!) மற்றபடி சொல்லை எப்படி வேண்டுமானலும் எழுதலாம். பிற தலைப்புகளில் வழிமாற்று தரலாம். எ. கா: # அர்னால்டு, வழிமாற்றுகள்: ஆர்னோல்டு, ஆர்னால்டு எப்படித் தேடினாலும் கட்டுரை கிடைக்கும்!!
- விளாடிமிர் வழிமாற்றுகள்: விளாதிமீர், விளாடிமர், விளாடிமிர்
-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:50, 2 அக்டோபர் 2012 (UTC)
- நன்றி நண்பரே. இந்த தயக்கத்தினாலேயே பல கட்டுரைகளை எழுத தொடங்கவில்லை. செல்வா அவர்களிடம் நானும் வழிமுறை கேட்டு என்னுடைய புது கட்டுரைகளை எழுதுகிறேன். மிக்க நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:56, 2 அக்டோபர் 2012 (UTC)
தலைப்புகளை மாற்றிய பின் அப்பெயர்களை இணைப்பாக வழங்கிய இடங்களிலும் மாற்றிவிடுங்கள். எ.கா> பூங்குழலி -> பூங்குழலி (கதைமாந்தர்) என மாற்றியபின், பூங்குழலி என்ற தலைப்பில் வேறு ஒரு கட்டுரை எழுதினாலும் (வழிமாற்றை நீக்கிவிட்டு), பொன்னி..செல்வன் வார்ப்புருவில் உள்ள பூங்குழலி என்பதை சொடுக்கினால் புதியக் கட்டுரை தோன்றும். கதைமாந்தரைப் பற்றிய கட்டுரை தோன்றாது. வார்ப்புருவிலும், பிற இடங்களிலும், எங்கெல்லாம் [[பூங்குழலி]] என வழங்கியிருக்கிறீர்களோ அங்கெல்லாம் [[பூங்குழலி (கதைமாந்தர்)|பூங்குழலி]] என மாற்றிவிடுங்கள். பின்னால் மாற்றுவது கடினம். தற்போது இப்பெயருக்கு இப்பிரச்சனை இல்லை இருந்தாலும் மாற்றிவிடுங்கள். பின்னர் மாற்றுவது கடினம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:56, 2 அக்டோபர் 2012 (UTC)
எந்தெந்த பெயருடன் (கதைமாந்தர்) வருகிறது என்ற குழப்பம் இருந்தது. எனவே அனைத்து பக்கத்தினையும் இப்போது மாற்றிவிட்டேன். நீங்கள் கூறியபடி இனி ஒவ்வொரு கட்டுரையாக சென்று அதிலுள்ளவைகளை திருத்துகிறேன். பூங்குழலி என்ற பக்கத்தினை நீக்கம் செய்துவிடுவீர்களா?. பார்த்திபேந்திர பல்லவர் போன்ற சில பக்கங்களில் வரலாற்று மாந்தர்களைப் பற்றி யாரேனும் எழுதக்கூடும். இப்போது பொன்னியின் செல்வன் கட்டுரையாக உள்ளதையும், வரலாறு மட்டுமேயான கட்டுரையாகவும் மாற்ற வேண்டும். தங்களின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி.- சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:04, 2 அக்டோபர் 2012 (UTC)
அனைத்தையும் விரைந்து செய்தமைக்கு நன்றி சகோதரன், இனி பின்னால் இது போன்ற பிரச்சனை எழாது .தற்போது பூங்குழலி என்ற பெயரைத் தேடினால் கதைமாந்தர் பற்றிய கட்டுரையே கிடைக்கும். நீக்கத்தேவையில்லை. இதே பெயருடைய வேறொருவர் பற்றி எழுத விரும்பினால், பூங்குழலி பக்கத்தின் உள்ளடக்கத்தை நீக்கிவிட்டு(வழிமாற்றினை நீக்கிவிட்டு) கட்டுரையை எழுதுங்கள். பக்கத்தை நீக்கும் அதிகாரம் நிர்வாகிகளுக்கு மட்டுமே உண்டு. ஏதேனும் கட்டுரையை நீக்க விரும்பினால், {{delete}} என்ற வார்ப்புருவை கட்டுரையில் சேருங்கள். நிர்வாகிகள் நீக்கிவிடுவர். தேவையான ஆலோசனைகளை கேட்டு உடனுக்குடன் செயல்படுத்தும் உங்கள் குணம் பிடித்திருக்கிறது. விரைவில் செயல்நயம் மிக்கவர் பதக்கத்தைப் பெற்றிடுவீர். :) நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:59, 2 அக்டோபர் 2012 (UTC)
- வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி நண்பரே. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:27, 2 அக்டோபர் 2012 (UTC)
மறுவருகைப் பயனர் பதக்கம்
தொகுபொன்னியின் செல்வன் திட்டத்திற்கான பதக்கம் தயாரிப்பு நிலையில் உள்ளது. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 18:12, 4 அக்டோபர் 2012 (UTC)
- மிக்க நன்றி நண்பரே. தங்களைப் போன்றோர் உடனிருந்து உற்சாகம் அளிப்பது இதமாக இருக்கிறது. மேலும் என்னை செம்மை செய்துகொள்ள உதவுவீர்கள் என்று எதிர்ப்பாக்கிறேன். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:33, 4 அக்டோபர் 2012 (UTC)
+1 விருப்பம் தொடர்ந்து பங்களிப்பதன்மூலம் விக்கியின் பண்பாட்டை (??) வெகு விரைவில் கற்றிடுவீர். :) மேலும் பல கட்டுரைகள் தந்து தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வளம் சேர்க்க வாழ்த்துகிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:15, 5 அக்டோபர் 2012 (UTC)
- வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே. இயன்றளவு என் பணியை செம்மையுற செய்யகிறேன். -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:31, 5 அக்டோபர் 2012 (UTC)
உதவிக் குறிப்புகள்
தொகு- பொதுப் பெயர்களில் கட்டுரை தொடங்கும்போது, அவற்றின் இணைப்பை பக்கவழிமாற்றப் பக்கத்தில் சேர்க்கவும்
எ. கா: மணிமேகலை என்பது பொதுப் பெயர் என்பதால் அதில் கட்டுரை எழுத முடியாது. மாறாக, அதே பெயரில் உள்ள புதினம், கதைமாந்தர், திரைப்படங்கள், ஊர்களின் இணைப்பை(தலைப்பை) இப்பக்கத்தில் தரலாம். இதுவே பக்க வழிமாற்றுப் பக்கமாகும். பிற்காலத்தில் பொதுப் பெயர் வந்தால் இணைப்பை பொதுத் தலைப்பில் சேருங்கள். மேலும் ஓர் உதாரணம், திருப்பத்தூர்
- புதுப் பயனர்களை வரவேற்க, அவர்களின் பேச்சுப் பக்கத்தில் புதுப்பயனர் வார்ப்புருவை பயன்படுத்துங்கள். கையொப்பத்தையும் இடுங்கள். -தமிழ்க்குரிசில்
நன்றி நண்பரே. இப்போது பொன்னியின் செல்வனில் இருக்கும் மணிமேகலையை மணிமேகலை (கதைமாந்தர்) என்பதற்குள் எழுதியாகிவிட்டது. துறவி மணிமேகலையை மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ள புதினங்கள் சிலவற்றையும் அறிவேன். அப்போது மணிமேகலை (கதைமாந்தர்) என்ற பக்கத்திலும் கட்டுரை எழுத முடியாமல் போகுமா?. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:39, 5 அக்டோபர் 2012 (UTC)
பிற கதைமாந்தர்களின் பெயர்களும் மணிமேகலை என வந்தால் பெயர் (நூலின் பெயர்) என தலைப்பிடலாம். அப்போது இக்கட்டுரையை மணிமேகலை (பொன்னியின் செல்வன்) என்ற தலைப்பிற்கு நகர்த்தவும். பின்னர் பிற மணிமேகலைகளின் இணைப்பையும் மணிமேகலை (கதைமாந்தர்) என்ற பக்கத்தில் தரலாம்.(பக்கவழிமாற்று ஆகிவிடும்.) பொன்.செனின் பெரும்பாலான கதைமாந்தர்கள் வேறு புதினங்களில் வந்தால் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை பெயர்(பொ...செல்வன்) என மாற்ற வேண்டிய நிலை வரலாம்! வரலாம்தான், தற்போதைக்கு மாற்றத் தேவையில்லை. நன்றி! - தமிழ்க்குரிசில்
- பொன்னியின் செல்வனில் வருகின்ற பல கதைமாந்தர்களுக்கும் அந்நிலை ஏற்படும் என நினைக்கிறேன். பொன்னியின் செல்வனுக்கு முன்னும், பின்னும் கதைகளமாக கொண்டு நாவல்கள் வந்திருப்பதை தாங்களும் அறிவீர்கள். அவைகளை எதிர்காலத்தில் பார்த்துக் கொள்வோம்\கொள்வார்கள். என்னுடைய ஐயத்தினை தீர்த்தமைக்கு மிக்க நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:00, 5 அக்டோபர் 2012 (UTC)
கட்டுரைகளை சிறப்பாக ஆக்கியுள்ளீர்கள். :-) சிறு குறிப்பு: கதைமாந்தர் பக்கத்திலுள்ள வார்ப்புருவினை அதன் (எ.கா வார்ப்புரு:infobox comic character) பக்கத்தில் தொகுக்கவும். அப் பக்கத்தில் "இன் கதைமாந்தர்" என்பதில் இன் என்பதை நீக்கவும். இப்போது ஒவ்வொரு கதைமாந்தர் வார்ப்புருவிலும், [[பொன்னியின் செல்வன்]] என்பதற்கு பதிலாக [[பொன்னியின் செல்வன்|பொன்னியின் செல்வனின்]] என்று மாற்றுங்கள். :-)தமிழ்க்குரிசில் (பேச்சு)
கொடும்பாளூர் சிறிய வேளார்
தொகுவணக்கம். சிறிய வேளாரின் பெயர் கிடைத்துள்ளது. மூன்றாம் பாகம் கொலைவாளில் அத்தியாயம் 33-வானதி கேட்ட உதவியில் வந்தியத்தேவனின் கூற்றாக வானதியின் தந்தை கொடும்பாளூர் பராந்தக சிறிய வேளார் என்றும், அத்தியாயம் 39-கஜேந்திர மோட்சம் இதில் அநிருத்தர் கூற்றாக வானதியின் தந்தை பராந்தகன் சிறிய வேளார் என்றும் உள்ளது.--Booradleyp (பேச்சு) 14:12, 10 அக்டோபர் 2012 (UTC)
- மிக்க நன்றி. பொன்னியின் செல்வனை நேற்று வாசித்து முடித்தேன். வலைப்பதிவில் திறனாய்வு கூட எழுதியாகிவிட்டது. இனி செப்பனிடுதலை செய்கிறேன். தங்களுடைய தேடலுக்கு மிக்க நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:03, 10 அக்டோபர் 2012 (UTC)
திறனாய்வு எழுதியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். அந்த வலைப்பதிவிற்கு நேரிடை இணைப்புத் தாருங்கள். படிக்கும் ஆர்வத்துடன்--Booradleyp (பேச்சு) 04:09, 11 அக்டோபர் 2012 (UTC)
தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சில நாட்கள் தங்கும் படி நேர்ந்துவிட்டது. இன்றுதான் தங்களின் மறுமொழியை பார்த்தேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். | பொன்னியின் செல்வன் திறனாய்வு முறைப்படியான திறனாய்வாக நினைத்து படிக்கவேண்டாம். கதையின் மையம் குறித்தான சில அலசல் இது. நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:54, 18 அக்டோபர் 2012 (UTC)
நன்றி, ஜெகதீஸ்வரன். உங்கள் திறனாய்வைப் படித்தேன். நன்று. பொன்னியின் செல்வன் வயது வித்தியாசமின்றி வாசகர்களைக் கவர்ந்த புதினம், அதன் தாக்கம் ஒவ்வொரு வாசகருக்கும் மாறுபட்டாலும் அதைப் படிக்கும் அனுபவம் அனைவருக்கும் கட்டாயம் சுவாரசியமானதாக இருக்கும்.--Booradleyp (பேச்சு) 04:11, 20 அக்டோபர் 2012 (UTC)
முதற்பக்க அறிமுகம் வேண்டல்
தொகுஉங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/ஜெகதீஸ்வரன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். உங்கள் விக்கிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி.--இரவி (பேச்சு) 17:53, 25 அக்டோபர் 2012 (UTC)
- மகிழ்ச்சி நண்பரே. நிச்சயம் சேர்க்கிறேன். மிக்க நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:56, 25 அக்டோபர் 2012 (UTC)
- நன்றிங்க. சற்று சுருக்கி எழுதி விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் இட்டுள்ளேன். அடுத்த முதற்பக்க அறிமுகங்கள் வரும் போது உங்களைப் பற்றிய அறிமுகம் இடம்பெறும். உங்கள் பதக்கப் பக்கத்திலும் எனது கருத்தை இட்டுள்ளேன். --இரவி (பேச்சு) 13:50, 26 அக்டோபர் 2012 (UTC)
பாராட்டிற்கும், பங்களிப்பாளர் அறிமுகத்திற்கும் மிக்க நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:22, 27 அக்டோபர் 2012 (UTC)
நாணயம் விகடன்
தொகுநாணயம் விகடன் கட்டுரையில் தவறுதலாக சக்தி விகடனின் படிமம் இணைக்கப்பட்டிருந்தது. நீக்கியிருக்கிறேன். நாணயம் விகடன் படிமத்தை முடிந்தால் இணைத்து விடுங்கள்.--Booradleyp (பேச்சு) 18:00, 26 அக்டோபர் 2012 (UTC) தவறுக்கு மன்னிக்கவும். தற்போது நாணயம் விகடன் அட்டைப்படத்தினை இணைத்து்ளேன். நன்றி -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:22, 27 அக்டோபர் 2012 (UTC)
மன்னிப்பு எல்லாம் கேட்காதீர்கள். இது தவறு அல்ல, சற்றுக் கவனச் சிதறல் தான். உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.--Booradleyp (பேச்சு) 14:05, 27 அக்டோபர் 2012 (UTC)
நன்றிங்க! -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:31, 27 அக்டோபர் 2012 (UTC)
பொன்னியின் செல்வன் வார்ப்புரு
தொகுவார்ப்புரு:பொன்னியின் செல்வன் பக்கத்தில் உள்ள சிகப்பு இணைப்புகளுக்கும் கட்டுரைகள் உருவாக்கி விட்டால், முதற்பக்க வார்ப்புருவாக இடலாம்.--இரவி (பேச்சு) 11:08, 29 அக்டோபர் 2012 (UTC)
செய்துவிடலாம் நண்பரே. நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:09, 29 அக்டோபர் 2012 (UTC)
- முதற்பக்கத்தில் இட்டுள்ளேன். எனது துவிட்டர் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி உள்ளேன். இது போன்ற முழுமையான கட்டுரைத் தொகுப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவின் வீச்சைக் கூட்ட உதவும். அதுவும் ஒவ்வொரு கட்டுரையும் படத்துடன் இருப்பது அழகு. சில கட்டுரைகளில் வெளி இணைப்புகள், மேற்கோள்கள் ஆகியவை வெறுமையாக உள்ளன. அவற்றை நீக்கி விடலாம். உங்கள் மறுமொழியையும் இங்கேயே இட்டால் கவனித்துப் பதில் சொல்வேன். நன்றி.--இரவி (பேச்சு) 14:16, 29 அக்டோபர் 2012 (UTC)
ஜெகதீஸ்வரன், நீங்கள் பொன்னியின் செல்வன் கதை மாந்தரை வைத்து உருவாக்கியுள்ள கட்டுரைகளில் அடைப்புக்குள் கதைமாந்தர் என்று தந்திருக்கிறீர்கள். ஆனால், உள்ளடக்கம் வெறுமனே பொன்னியின் செல்வனைப் பற்றி மட்டுமே இருப்பதைக் காண்கிறேன். இதே கதைப் பெயர்களைக் கொண்டோர் "நந்திபுரத்து நாயகி" போன்ற ஏனைய புதினங்களிலும் இருக்கின்றனரே. எனவே உங்களது கட்டுரைகள் பொன்னியின் செல்வனை அடிப்படையாகக் கொண்டவையாக இருப்பின் அடைப்புக்குள் பொன்னியின் செல்வன் என்றுதான் வர வேண்டுமென நினைக்கிறேன். அருள்கூர்ந்து அதைச் சற்றுக் கவனிக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 12:54, 30 அக்டோபர் 2012 (UTC)
- பொன்னியின் செல்வன் கட்டுரையை எழுத எத்தனிக்கையிலேயே இந்த ஐயம் வந்தது நண்பரே. விக்கிப்பீடியா ஒத்தாசைப் பக்கத்தில் பயனர்களின் கருத்துகளை கேட்டே இந்தப் பக்கங்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. பொன்னியின் செல்வன் கதைமாந்தர்கள் குறித்து என்ற தலைப்பின் கீழ் இருக்கும் விவாதங்களை படித்தால் அதை அறிந்து கொள்ள இயலும். நந்திபுரத்து நாயகி போன்ற நாவல்களிலும் இதே கதாப்பாத்தரமே கையாளப்பட்டுள்ளதால் பிரட்சனையில்லை. நீங்கள் இந்த பக்கங்களையே பயன்படுத்திக் கொள்ள இயலும். நந்திபுரத்து நாயகி கதாப்பாத்தரங்களை எழுதப்போகும் தங்களுக்கு என் வாழ்த்துகள். மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:48, 30 அக்டோபர் 2012 (UTC)
விரைவாக பகுப்புகளை இணைக்க
தொகுசில குறிப்பிட்ட செயல்களை பக்கத்தை தொகுக்காமல் நேரடியாக செய்ய முடியும். பகுப்பு சேர்த்தலும் இப்படியே,
”விரைவுப்பகுப்பி (ஆங்கிலம் HotCat) என்பது விக்கிப்பீடியாவில் உள்ள எளியமுறை பகுப்பு சேர்க்கும் கருவியாகும். இக்கருவியை கொண்டு தொகு என்னும் வார்ப்புருவை உபயோகிக்காமல் அக்கட்டுரைப் பக்கத்திற்கு சென்று நேரடியாக பகுப்புகளை இணைக்கவும், நீக்கவும் அல்லது வேறு பகுப்புக்கு மாற்றவோ முடியும்.”
- விக்கிப்பீடியா:விரைவுப்பகுப்பி பக்கத்தை பார்த்து கூறியுள்ளவாறு செய்தால், எளிதாக பகுப்புகளைச் சேர்க்கவும், நீக்கவும் முடியும். அதுமட்டுமின்றி, தேடல் பெட்டியில் சில எழுத்துகளை உள்ளிட்டால் கிடைக்கும் பெயர்களைப் போலே, பகுப்பிலும் சில எழுத்துகளை இட்டால் அவ்வெழுத்துகளில் தொடங்கும் பகுப்புகளின் பெயர்கள் கிடைக்கும்,. பயன்படுத்திப் பாருங்கள். எளிமையாய் இருக்கும் உதவிக்கு மறுமொழியிடுங்கள். :) --தமிழ்க்குரிசில் (பேச்சு)
- மிகவும் எளிமையாக இருக்கிறது நண்பரே. மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:19, 30 அக்டோபர் 2012 (UTC)
சிவன்
தொகுவணக்கம். அடுத்தடுத்து சரங்களாகக் தொடுக்கப்படும் உங்கள் கட்டுரைகள் அருமை!
- சிவனின் தோற்றங்கள் 63 எனக் கட்டுரைகளும் வார்ப்புரு 64 எனவும் உள்ளதே? நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா அல்லது மாறியுள்ளதா?
- பேச்சு:ஏகபாதமூர்த்தி -பார்த்து எனது சந்தேகத்தை தெளிவு படுத்த வேண்டும்.--Booradleyp (பேச்சு) 16:44, 1 நவம்பர் 2012 (UTC)
அறுபத்து நான்கு என்பதே சரியானது. இப்போதுள்ள பட்டியல் முழுமையாக மாறுபடும் என்பதால் சற்று தாமதமாகிறது. மற்ற கட்டுரைகளில் சரிசெய்கிறேன். ஏகபாதமூர்த்தி கட்டுரையில் ருத்திரன் என்ற பெயரை இணைத்துள்ளேன். தொடர்ந்து ஆதரவளித்து கட்டுரையின் மேம்பாட்டிற்கும், எனது விக்கி வாழ்க்கையில் மேம்படுத்த உதவியாக இருப்பதற்கும் மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு)
- நன்றி.--Booradleyp (பேச்சு) 14:39, 3 நவம்பர் 2012 (UTC)
- தற்போதுள்ள ஜோதிர்லிங்கம் பற்றிய கட்டுரையின் தலைப்பை சோதிலிங்க சிவத்தலங்கள் என்ற தலைப்புக்கு மாற்றுவது நல்லது என நினைக்கிறேன். அதற்கேற்ப கட்டுரையின் முதற்பத்தியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும்.--Kanags \உரையாடுக 20:08, 4 நவம்பர் 2012 (UTC)
- ஜோதிர்லிங்கம் கட்டுரையை நான் உருவாக்கவில்லை நண்பரே. சைவ சமயம் பகுப்பிலும் அது இடம்பெறாமல் இருந்தமையால் சோதிலிங்க சிவத்தலங்கள் கட்டுரையை தொடங்கிவிட்டேன். சுட்டிக்காட்டியப்பின்பே அந்த தலைப்பில் மற்றொரு கட்டுரை இருப்பதை அறிந்தேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 20:14, 4 நவம்பர் 2012 (UTC)
உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு
தொகுநீங்கள் பங்களித்த நூற்றியெட்டு சிவதாண்டவங்கள் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் நவம்பர் 21, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த லோலிதம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் பெப்ரவரி 27, 2013 அன்று வெளியானது. |
படிமப் பதிவேற்றம்
தொகுவணக்கம் ஜெகதீஸ்வரன், படிமங்களை பதிவேற்றும் போது அதற்கான காப்புரிமை வார்ப்புருக்களையும், எங்கிருந்து எடுத்தது போன்ற விவரங்களையும் தரவும். உதவிக்கு பார்க்க விக்கிப்பீடியா:பதிப்புரிமை, விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும், விக்கிப்பீடியா:கட்டுப்பட்ட உள்ளடக்கம், நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 14:19, 1 திசம்பர் 2012 (UTC)
சிவதாண்டவ படங்கள் முகநூல் நண்பர்கள் மூலம் குழுவில் இணைக்கப்பட்டு நான் பெற்றுக் கொண்டேன். அப்படங்கள் சைவம் சார்ந்தவை என்பதால் காப்புரிமையை தனியாக வைத்திருக்க மாட்டார்கள். எனவே வெற்றாக விட்டுவிட்டேன். இவ்வகை படிமங்களுக்கு எந்த காப்புரிமையை பயன்படுத்த வேண்டும் என்று கூறினால் வரும் காலங்களில் இணைக்கப்படும் கட்டுரைகளுக்கு பயன்படுத்துகிறேன். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:41, 1 திசம்பர் 2012 (UTC)
முதற்பக்க அறிமுகம் வாழ்த்துகள்
தொகுவணக்கம், செகதீசுவரன். அடுத்த இரு வாரங்களுக்கு உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் இடுவதில் மகிழ்கிறோம். தொடர்ந்து சிறப்பான பங்களிப்புகளைத் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி--இரவி (பேச்சு) 13:26, 22 பெப்ரவரி 2013 (UTC)
- அறிமுகத்திற்கு மிக்க நன்றி நண்பரே. என்னால் இயன்றவரை காலம் அனுமதிக்கும் போது நிச்சயம் பங்களிப்பு செய்கிறேன்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:43, 27 பெப்ரவரி 2013 (UTC)
- முதற்பக்கத்தில் தங்களின் அறிமுகம் கண்டேன். தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள் -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:59, 23 பெப்ரவரி 2013 (UTC)
- வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:43, 27 பெப்ரவரி 2013 (UTC)