விக்கித் திட்டம் 100

தொகு
வணக்கங்க, வழமை போலவே இம்மாதம் உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். இம்மாதமும் தொடர்ந்தும் மேலும் பல முனைப்பான பங்களிப்பாளர்களை உருவாக்குவது தொடர்பான உங்கள் ஆலோசனைகளை இங்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:10, 16 சனவரி 2015 (UTC)Reply

தகவலுக்காக....

தொகு

வணக்கம்! வாகை சூட வா என்பது ஏற்கனவே (நல்ல நிலையில்) இருப்பதால், புதிதாக எழுதப்பட்ட வாகை சூடவாவை நீக்கிவிட்டேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:12, 31 சனவரி 2015 (UTC)Reply

சிவகுரு, தகவலுக்கு நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 05:35, 1 பெப்ரவரி 2015 (UTC)

திறந்த மின்சுற்று

தொகு

புதுபயனர் ஒருவரின், திறந்த மின்சுற்று என்ற கட்டுரை எதனால் நீக்கப்பட்டது ?--≈ உழவன் (உரை) 17:05, 3 பெப்ரவரி 2015 (UTC)

திறந்த மின்சுற்று என்ற கட்டுரையின் பேச்சுப் பக்க உரையாடலுக்குப் பின், அதே பயனர் திறந்தசுற்று மின்னழுத்தம் என்ற தலைப்பில் பழைய உள்ளடக்கத்தினைக் கொண்டு வேறு புதியக் கட்டுரையை உருவாக்கியிருந்ததால், இரு வேறு கட்டுரைகள் அதே உள்ளடக்கத்துடன் இருப்பதைக் கண்டு பயனர் பூங்கோதை அவர்களால் பழையக் கட்டுரையை நீக்க அல்லது இணைக்கப் பேச்சுப் பக்கத்தில் பரிந்துரைச் செய்யப்பட்டிருந்தது. வேறு புதிய உள்ளடக்கம் இல்லாமையாலும், புதிய பயனரே திறந்தசுற்று மின்னழுத்தம் கட்டுரையை உருவாக்கியிருந்ததாலும், இணைப்பதற்கு பதிலாக நீக்கப்பட்டுவிட்டது. உங்களுக்கு கருத்து மாறுபாடு இருந்தால் தெரிவிக்கவும். --நந்தகுமார் (பேச்சு) 18:26, 3 பெப்ரவரி 2015 (UTC)
மாற்றுக் கருத்து ஏதுமில்லை.வழமையாக பக்கமொன்றினை நீக்கும் போது, நான் பகுப்பு நீக்கவுரையில், //திறந்தசுற்று மின்னழுத்தம் உள்ளது//எனக் குறிப்பிடுவேன். நீக்கல் பதிவில், //பேச்சுப்பக்க படி நீக்கப்படுகிறது// என்று இருந்தத்தால், அதன் உள்ளடக்கத்தை அறிய வினவினேன். விரிவான பதிலுக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம். வணக்கம். --≈ உழவன் (உரை) 01:46, 4 பெப்ரவரி 2015 (UTC)

சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு:பிலிப்பீன்சு

தொகு

சிகரம் திட்டத்தினூடாக விரிவாக்கப்பட்ட பிலிப்பீன்சு கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக நியமிப்பதற்கு இப்பக்கத்தில் முன்மொழிந்துள்ளேன். உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவியுங்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 12:02, 5 பெப்ரவரி 2015 (UTC)

கன்னியாகுமரி மாவட்டம்

தொகு

உங்களுக்கு தெரியுமா? கன்னியாகுமரி மாவட்டம்,கன்னியாகுமரிக் மாவட்டம் எது சரியானது உங்களுக்கு தெளிவாக தெரியுமா? தெரிந்த பிறகு மாற்றவும்.--Arunnirml (பேச்சு) 09:07, 9 பெப்ரவரி 2015 (UTC)

வணக்கம் Arunnirml. தவறாகக் குற்றம் கூற வேண்டாம். கன்னியாக்குமரி மாவட்டம் என்பதை கன்னியாகுமரி மாவட்டம் என்று நீங்கள் மாற்றியதை நான் நீக்கவில்லை. கன்னியாக்குமரி மாவட்டத்தின் பேச்சுப் பக்கம் கன்னியாகுமரி மாவட்டத்தின் பேச்சுப் பக்கமாக வழிமாற்று செய்யப்பட்டிருந்ததைதான் விக்கி வழிமுறைகளுக்கு ஏற்ப நீக்கியிருந்தேன். இதில் நீங்கள் கண்ட குறை என்ன? விளக்குவீர்களா? --நந்தகுமார் (பேச்சு) 11:30, 9 பெப்ரவரி 2015 (UTC).

நான் அப்பொழுது பார்க்கும் போது கன்னியாகுமரிக் மாவட்டம் என்ற முந்தய வழிமாற்று இருந்து. இப்பொழுது எல்லாம் சரியாக உள்ளது.--Arunnirml (பேச்சு) 12:05, 9 பெப்ரவரி 2015 (UTC)

பகுப்பு பெயர் மாற்றம்

தொகு

வணக்கம், பகுப்புகளின் தலைப்புகளை கட்டுரைகளின் தலைப்பு மாற்றுவது போல மாற்ற முடியாது. புதிய பகுப்பை ஆரம்பித்து, பழைய பகுப்பில் உள்ள கட்டுரைகளை ஒவ்வொன்றாக இடம் மாற்றிய பின்னர் பழைய தலைப்பை நீக்க வேண்டும். வழிமாற்றும் வைத்திருக்கக் கூடாது--Kanags \உரையாடுக 20:14, 10 பெப்ரவரி 2015 (UTC)

உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கும் முன்பு இத்தகைய வழிகாட்டலை, கனகு முன்பு வழங்கியிருந்தார். அதன்பிறகு, இத்தகைய செயலை செய்து முடிக்கத் தேவையான, பைத்தான் நிரலாகத்தைக் கற்றுள்ளேன். எனவே,ஒவ்வொன்றாக மாற்றத் தேவையில்லை. புதிய பகுப்பின் தலைப்பு, மாற்றவேண்டிய பகுப்பின் தலைப்பு இரண்டினையும் எனக்குத் தந்தால், அம்மாற்றத்தை எளிமையாக செய்து முடிப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆவலுடன்..--≈ உழவன் (உரை) 02:17, 11 பெப்ரவரி 2015 (UTC)
  விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:43, 11 பெப்ரவரி 2015 (UTC)
வணக்கம், கனக்ஸ், தகவலுழவன், மா. செல்வசிவகுருநாதன். பகுப்பு தலைப்பை நான் மாற்ற முனையவில்லை. பகுப்புப் பேச்சு வழிமாற்றத்தை மட்டுமே நீக்கியிருந்தேன். இங்கு நீக்கல் பதிவைப் பாருங்கள். பயனர்:Arulghsr பகுப்புத் தலைப்பை மாற்றியிருந்தார். தகவல்களுக்கு நன்றி--நந்தகுமார் (பேச்சு) 05:30, 11 பெப்ரவரி 2015 (UTC)
நீங்கள் மாற்றம் செய்யவில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால், வழிமாற்றுப் பகுப்பை நீக்காமல் உரையாடல் பக்கத்தை மட்டும் நீங்கள் நீக்கியமையால் உங்களுக்கு பகுப்பு எவ்வாறு மாற்றப்பட வேண்டும் என்பது தெரியாமல் இருக்கக்கூடும் என்பதற்காகவே நினைப்பூட்டினேன். தகவலுழவன், உங்கள் உதவி கட்டாயம் தேவைப்படும். நன்றி.--Kanags \உரையாடுக 07:49, 11 பெப்ரவரி 2015 (UTC)
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 07:52, 11 பெப்ரவரி 2015 (UTC)

deletion of user page

தொகு

Can you please delete my user page, So, I can see my global page instead.☆★சஞ்சீவ் குமார் (✉✉) 10:22, 22 பெப்ரவரி 2015 (UTC)

Deleted--நந்தகுமார் (பேச்சு) 13:25, 22 பெப்ரவரி 2015 (UTC)

நீக்கும் பொழுது வரலாற்றினை கண்டு செயல்படவும்.

தொகு

வணக்கம் நண்பரே, நலமா. விக்கிப்பீடியாவில் எண்ணற்றோர் பங்களிக்கின்றனர் என்பதோடு, விக்கியைப் பற்றிய போதிய அறிவு இன்றி ஓர் முயற்சியாக தொகுக்கும் பயனர்களும் இருக்கின்றார்கள். அது போன்ற ஒரு நபர் விக்கிப்பீடியா:நினைவுக்குறித்தாள் கட்டுரையில் தவறாக தொகுத்தமைக்காக தாங்கள் அப்பக்கத்தினை நீக்கியுள்ளீர்கள். ஆனால் அவர் தொகுக்கும் முன்பு அக்கட்டுரை நல்ல தரத்தில் இருந்தது. அது மிகவும் உபயோகமாக இருந்தமையால் நான் என் பேச்சுப் பக்கதிலேயே இணைப்பினைத் தந்துள்ளேன். தற்போது அத்தொகுத்தலுக்கு முன்பு இருந்ததை மீட்டெடுத்திருக்கிறேன். ஒரு கட்டுரையை நீக்கும் முன்பு அக்கட்டுரையின் வரலாற்றில் சென்று அக் கட்டுரையின் முந்தைய மாற்றங்களை காணுவது சிறப்பாகும். நானும் இது போன்ற தேவையான கட்டுரையை அழித்த பின்பு, அதன் வரலாற்றினை அறிந்து பின் மீள்வித்திருக்கிறேன். இது தவறானது அல்ல, எனினும் ஒரு முறை வரலாற்றினை காணுவது சிறப்பு என்ற என் அனுபவத்தினைப் பகிரவே இதனை இட்டுருக்கிறேன். இதனை வளர்முக கருத்தாக தாங்கள் ஏற்றுக் கொண்டு மேலும் விக்கிக்கு பங்களிக்க என் வாழ்த்துகள். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:00, 20 மார்ச் 2015 (UTC)

புதிய நிருவாகிகள் பரிந்துரை

தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த தலைமுறை நிருவாகிகளை இனங்காண உங்கள் பரிந்துரைகள் தேவை. ஒவ்வொருவரும் ஒருவரை இனங்கண்டு வழிகாட்டி மெருகேற்றி வந்தால் கூட நாம் இன்னும் பல புதிய பொறுப்பாளர்களைப் பெற முடியும். நன்றி. --இரவி (பேச்சு) 07:34, 28 மார்ச் 2015 (UTC)

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு

தொகு



Translating the interface in your language, we need your help

தொகு
Hello Nan, thanks for working on this wiki in your language. We updated the list of priority translations and I write you to let you know. The language used by this wiki (or by you in your preferences) needs about 100 translations or less in the priority list. You're almost done!
 
எல்லா விக்கிகளுக்கும் மொழிபெயர்ப்புகளைச் சேர்க்க அல்லது மாற்ற, மீடியாவிக்கி உள்ளூராக்கல் திட்டமான translatewiki.net ஐப் பயன்படுத்துக.

Please register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:07, 26 ஏப்ரல் 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு

தொகு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:48, 7 மே 2015 (UTC)Reply

உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை

தொகு

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 18:19, 4 சூலை 2015 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

தொகு
 
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:37, 7 சூலை 2015 (UTC)Reply

பிற்காலப் பல்லவர்

தொகு
  • \\ மூன்றாம் நந்திவர்மனுக்குப் பின்பு அவனது முதல் மனைவியின் மூத்த மகன் நிருபதுங்கவர்மன் முடி சூட்டிக் கொண்டான். மூன்றாம் நந்திவர்மனின் இன்னொரு மனைவியின் மகன் அபாரசிதவர்மன் அரச பதவியைக் கைப்பற்ற எண்ணினான். இதனால் பல்லவ அரசாட்சிக்கு வாரிசு உரிமைப் போர் தொடங்கியது.\\ - எனவும்( இங்கு)
  • \\கி.பி.882 இல் நிருபதுங்கவர்மன் இறந்தவுடன் அவனது மகன் அபராசிதவர்ம பல்லவன் (கி.பி.882-890) ஆளத் தொடங்கினான். \\ என்று அதே தளத்தில் 5.1.1 அரசியல் பின்புலம் இங்கு என்றும் தமிழ் இணையக்கல்வி தளத்தில் தரப்பட்டுள்ளது.

இது குழப்பமாக உள்ளதே. எது சரியானது? நீங்கள் பல்ல்வருக்கும் பாண்டியருக்கும் இடையே நடந்த போர்களைப் பற்றி சமீபத்தில் எழுதி வரும் கட்டுரைகளைப் படித்தபோது எனக்கு ஏற்பட்ட குழப்பம் இது. இதுமட்டுமில்லாமல் த.விக்கியில் உள்ள ”வார்ப்புரு:பல்லவர் வரலாறு” காட்டும் பல்லவ மன்னர்களின் ஆட்சி காலமும் தமிழ் இணையக் கல்வித்தளம் தரும் காலமும் சில இடங்களில் மாறுபடுகின்றன.

இவ்விரு விஷயங்களையும் பார்க்கும்படியும். உங்களிடம் இருக்கும் வேறு ஏதேனும் ஆதாரங்களில் சரிபார்த்து எனது குழப்பத்திற்கு விடையிருந்தால் கூறும்படியும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 08:59, 18 சூலை 2015 (UTC)Reply

@Booradleyp1: பூங்கோதை, ”வார்ப்புரு:பல்லவர் வரலாறு” காட்டும் பல்லவ மன்னர்களின் ஆட்சி காலமும் தமிழ் இணையக் கல்வித்தளம் தரும் காலமும் சில இடங்களில் மாறுபடுகின்றன என்பதை நானும் பார்த்தேன். எனவே, அவைக் குறித்த எந்தத் திருத்தங்களையும் நான் செய்யவில்லை. தமிழ் அறிஞர்கள்தான் இதற்கு பதில் கூற முடியும்.

மேலே, நீங்கள் குறிப்பிட்ட குழப்பத்தையும் கண்டேன். நான் செய்ய முற்படுவது தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திலுள்ள செய்திகளும், விக்கிபீடியாவில் எழுதியுள்ள செய்திகளும் ஒன்றுபடும் இடங்களில், அல்லது விடுபட்டச் செய்திகளை இணைத்து, தமிழ் இணையப் பல்கலைக்கழக வெளியீட்டை மேற்கோளாக சேர்ப்பது மட்டுமே. இக்கட்டுரைகளில் மேற்கோள்களே இல்லாமல் இருந்ததால் இதைச் செய்தேன்.

நான் தமிழ் வேந்தர்கள் வரலாற்று ஆய்வாளன் இல்லை. வேறு மேற்கோள்கள் கிடைக்கும்போது தமிழ் இணையப் பல்கலைக்கழக பதிப்பிலுள்ள கருத்துக் குழப்பத்தைத் திருத்துகிறேன். அல்லது மற்ற விக்கிபீடியர்கள் மேற்கோள்களை வைத்திருந்தால் உதவவும். நன்றி --நந்தகுமார் (பேச்சு) 09:20, 18 சூலை 2015 (UTC)Reply

@Booradleyp1:, இங்கு அபராசிதவர்ம பல்லவன் நிருபதுங்கவர்மனின் ஒன்றுவிட்ட சகோதரனின் மகன் என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.--நந்தகுமார் (பேச்சு) 10:39, 18 சூலை 2015 (UTC)Reply
@Booradleyp1:, ஒரு புத்தகம் கூகிள் தேடலில் கிடைத்தது. அதன்படி தற்பொழுது நிருபதுங்கவர்மன் பக்கத்தைத் திருத்தியுள்ளேன். கம்பவர்மன் பக்கத்தையும் ஆரம்பித்துவிட்டேன். பாருங்கள். --நந்தகுமார் (பேச்சு) 12:18, 18 சூலை 2015 (UTC)Reply

உங்கள் முயற்சிக்கு நன்றி நந்தகுமார், இந்த உரையாடலைத் தொடர்புடைய கட்டுரைப் பக்கங்களில் இட்டுவைத்தால், இத்துறையில் ஆர்வமும் ஆழமும் கொண்ட பயனர்கள் மேலும் மேம்படுத்தக்கூடும் என நினைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 12:57, 18 சூலை 2015 (UTC)Reply

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 16:10, 18 சூலை 2015 (UTC)Reply

உங்களுக்குத் தெரியுமா? திட்டம்

தொகு


உளங்கனிந்த நன்றி!

தொகு
 

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:10, 25 சூலை 2015 (UTC)Reply

வேண்டுகோள்

தொகு

இந்திய பிரதர் நரேந்திர மோதி கட்டுரையில் அவரின் வெளிநாட்டுப்பயணம் பற்றி சேர்க்க உதவுங்கள். [1]--Muthuppandy pandian (பேச்சு) 05:58, 8 செப்டம்பர் 2015 (UTC)

 Y ஆயிற்று. @Muthuppandy pandian: முத்துப்பாண்டி பாண்டியன், நீங்களே புகுபதிகை செய்து தொகுக்கலாமே. புகுபதிகை செய்யாதவர்கள் மட்டுமே தடுக்கப்பட்டுள்ளார்கள். நன்றி--நந்தகுமார் (பேச்சு) 06:44, 8 செப்டம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Nan/தொகுப்பு03&oldid=1933074" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Nan/தொகுப்பு03".