வாருங்கள், Srunika rajkumar!

வாருங்கள் Srunika rajkumar, உங்களை வரவேற்கிறோம் ! :D
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--சிவக்குமார் \பேச்சு 05:27, 16 மே 2009 (UTC)Reply[பதில் அளி]

நல்வரவு தொகு

தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நல்வரவு. உங்கள் பங்களிப்புக் கண்டு மகிழ்ச்சி. ஆங்கில இலக்கணம் பற்றி நீங்கள் எழுதும் கட்டுரைக்கு தேவையான தமிழ்ச் செற்கள் தமிழ் இலக்கணக் குறியீடுகளுக்கு நேரான ஆங்கிலச் சொற்கள் பக்கத்தில் கிடைக்கக்கூடும். நன்றி. --Natkeeran 03:59, 17 மே 2009 (UTC)Reply[பதில் அளி]

பாராட்டுகள் தொகு

இலக்கணத் துறை சார்ந்த கட்டுரைகளை நீங்கள் எழுதி வருவதைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. உங்கள் பங்களிப்பு தொடர வேண்டுகிறேன். நன்றி --ரவி 08:24, 31 மே 2009 (UTC)Reply[பதில் அளி]


நன்றி.


இலக்கணக் கலைச்சொற்கள் தொகு

நீங்கள் பயன்படுத்தும் இலக்கணக் கலைச்சொற்களை ஒரு பக்கத்தில் பட்டியல் இட முடியுமா? நீங்கள் பல கட்டுரைகளில் இச்சொற்களைப் பயன்படுத்துவதால், அவற்றைப் பற்றி ஒரு இடத்தில் அறிந்து கொள்ள இயல்வது நன்றாக இருக்கும். நன்றி--ரவி 04:18, 6 ஜூன் 2009 (UTC)

பட்டியலைத் துவங்கியதற்கு நன்றி--ரவி 10:30, 7 ஜூன் 2009 (UTC)

பியானோ தொகு

பியானோ கட்டுரையை மேம்படுத்துவதற்கு பாராட்டுக்கள். கின்னரப்பெட்டி என்ற தலைப்பை மீண்டும் பியானோ என்ற தலைப்பிற்கு மாற்றியுள்ளீர்கள். கின்னரப்பெட்டிக்கும் பியானோவுக்கும் என்ன வேறுபாடு என்பதை பியானோவின் பேச்சுப் பக்கத்தில் தந்தால் உதவியாக இருக்கும். நன்றி.--Kanags \பேச்சு 07:25, 9 ஜூன் 2009 (UTC)


கின்னரம் என்னும் சொல், Harpஐ குறிக்கும். ஆனால், பியானோ கின்னரத்தை பயன்படுத்துவதில்லை. Harpsichord மட்டுமே கின்னரத்தை பயன்படுத்துகிறது. ஆனால், கின்னரப்பெட்டி Harpsichordஐ குறிப்பினும், தமிழ் மொழியில் இச்சொல் சிலரால் பியானோவை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. அதனால், கின்னரப்பெட்டி என்பதை விட பியானோ என்பது அதற்கு பொருத்தமானதும் அனைவராலும் அறியப்பட்ட சொல் என்ற காரணத்தினாலும் இக்கட்டுரையின் பெயரை மாற்றி அமைத்துள்ளேன்.


பாராட்டுகள் தொகு

உங்கள் ஆக்கங்கள் ஒவ்வொன்றும் மிக அருமை. என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்! பலமுறை கண்டு வியந்துள்ளேன். தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி.--செல்வா 13:45, 9 ஜூன் 2009 (UTC)

இது வரை தமிழ் விக்கியில் இல்லாத துறைகளில் நீங்கள் தொடர்ந்து எழுதுவது கண்டு மகிழ்ச்சி--ரவி 18:23, 26 ஜூன் 2009 (UTC)


உங்கள் பாராட்டிற்கு நன்றி.


குறிப்புகள் தொகு

பொதுவாக கட்டுரைகளில் ஆங்கிலச் சொற்களை பரந்து பயன்படுத்துவதை தவிர்ப்பது நன்று. அறிவியல் பெயர், ஒரு நபர் பெயர், வேதிப் பெயர் போன்றவற்றை ஒரு முறை தருவது பயன் மிக்கதே. தமிழ் இலக்கணம் பற்றிய கட்டுரைகளில் ஆங்கிலம் முற்றிலும் தேவையற்றது. ஒரு கட்டுரையின் பொதுவாக இணைப்பாக்குவதில்லை. வேண்டும் என்றால் அந்த தலைப்புக்கு கீழே முதன்மைக் கட்டுரை என்று இணைப்பு தரலாம். எ.கா தமிழர். நன்றி. --Natkeeran 00:35, 12 ஜூன் 2009 (UTC)


தாய்மொழி தமிழாக இருப்பினும், சில தமிழர்களால் சில வேளைகளில் தமிழ் சொற்கள் சிலவற்றின் பொருளை உணரமுடிவதில்லை. எனவே தான் அதன் பொருளை அவ்வப்போது முடிகிற இடத்திலெல்லாம் கொடுத்துள்ளேன்.

உங்கள் பதிலுக்கு நன்றி. பல தமிழர்கள் பிரான்சிய, இடச்சு மற்றும் பல மொழிகளைப் பேசுபவர்கள். எனவே எல்லா மொழிகளிலும் அடைப்புக் குறிக்குள் தர முடியாது. எனினும் ஆங்கிலம் பெரும்பான்மை என்பதைக் கருத்தில் கொண்டு சில இடங்களில் தேவைப்படுகிறது, அப்படிப் பயன்படுத்தலாம்.
தமிழ் விக்கிப்பீடியாக் கட்டுரைகளுக்கு இணையாக ஆங்கில கட்டுரைகள் இருப்பதாலும், விளக்கம் தேவை என்றால் உள் இணைப்புகள்/அல்லது விக்சனரி போன்றவற்றில் பெற முடிவதாலும் பரந்து இவ்வாறு பயன்படுத்துவதை தவிர்ப்பது நன்று. கலைச்சொற்கள் என்று ஒரு பகுதி தொடங்கி, அதி தமிழ் - ஆங்கிலம் என்று சொற்களைப் தேவையான கட்டுரைகளுக்குப் பட்டியலிடலாம். இதனால் கட்டுரைகளில் ஆங்கிலச் சொற்களை எல்லா இடங்க்களிலும் தவிர்ப்பது நன்று. உங்கள் ஒத்துளைப்புக் நன்றி. நீங்கள் எந்த துறையில் படிக்கிறீர்கள் என்று அறிய ஆவல். --Natkeeran 14:29, 5 ஜூலை 2009 (UTC)

தலைப்புகள் மாற்றம் பற்றி தொகு

நீங்கள் கட்டுரைகளைன் தலைப்புகளை மாற்ற வேண்டும் எனில், பேச்சுப்பக்கத்தில் கேட்டு, உரையாடி பின் மாற்றுமாறு வேண்டிக்கொள்கிறேன். சுவிட்சர்லாந்து ரஷ்யா ஆகியவை எடுத்துக்காட்டுகள். நீங்கள் மாற்றம் செய்துள்ள தலைப்புகள் நல்ல பரிந்துரையே, ஆனால் வேறுவிதமாகவும் இடலாம் அல்லவா. இரச்சியா என்பது சரியென்றாலும், உருசியா என்பது தமிழ்முறைப்படி பயன்பாட்டில் உள்ள பெயர். அதே போல சுவிட்சர்லாந்து என்பதும் வழக்கம். நீங்கள் பரிந்துரைக்கும் தலைப்புகளுக்கு தேவையாயின் மாற்றுவழி தரலாம். நன்றி.--செல்வா 03:04, 15 ஜூன் 2009 (UTC)


தமிழ் மொழியின் பயன்பாட்டில் இருப்பினும் தமிழ் ஆர்வம் கொண்ட சிலரால் போதிய வார்த்தைகள் தெரியாததால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஏனெனில், தமிழ் விக்கியை தமிழர்கள் மட்டுமே பயன்படுத்துகின்றார்கள் என நினைத்துவிட முடியாது. தமிழ் கற்கும் வேறு மொழி மக்களும் இதனை பயன்படுத்தலாம். எனவே, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட சில சொற்களை பயன்படுத்தினேன். தங்கள் அறிவுரைக்கு நன்றி. வருங்காலத்தில் அதை பின்பற்ற முயல்கிறேன்.


ஒரு வரிக் கட்டுரைகள் தொகு

உங்களின் சீரிய பணி கண்டு மகிழ்ச்சி. தயவுசெய்து ஒரு வரிக் கட்டுரைகளைத் தவிர்த்தால் நன்று. குறைந்தது 3 வசனங்களாவது ஒரு கட்டுரையில் இடுவது நன்று. --Natkeeran 18:15, 20 ஜூன் 2009 (UTC)


நேரமின்மையால் சில வேளைகளில் சில கட்டுரைகள் ஒரு வரியில் தான் ஆரம்பிக்கப்படவேண்டி உள்ளது. நீங்கள் அக்கட்டுரைகளை மேம்படுத்தினால் நலமாகும். நன்றி.


பகுப்புகள் தொகு

இரு துறை வல்லுனர்களை இரு துறைகளுக்கும் பகுப்புகளைத் தனித்தனியே உருவாக்கி அதனுள் இடுங்கள். உதாரணமாக, பாடகர்கள்+பாடலாசிரியர்கள் என்ற தனிப்பகுப்பு தேவையற்றது. பாடகர்கள் தனியேயும், பாடலாசிரியர்கள் தனியேயும் பகுப்பிடுங்கள். இந்த இரு துறையினரை ஒரு பகுப்புக்குள் இடுவதற்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? நன்றி.--Kanags \பேச்சு 00:28, 28 ஜூன் 2009 (UTC)


நிச்சயமாக உண்டு. ஏனெனில், இப்பகுப்பில் உள்ளவர்கள் பாடகர்கள் மட்டுமின்றி பாடலாசிரியகலாவும் இருக்கிறார்கள். சில திறமைசாளிகளால் மட்டுமே அவ்வாறு இரு துறைகளிலும் ஒரே சமயத்தில் பணியாற்ற முடியும். எனவே, தான் நான் அவ்விரு துறைகளிலும் ஒரே சமயத்தில் இரு துறைகளிலும் உள்ளவர்களை பட்டியலிடுவதர்க்காக இப்பகுப்பை வழங்கியுள்ளேன். இது, தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் உள்ளதை நீங்கள் காணலாம். விளக்கம் கேட்டதற்கு நன்றி.


விக்சனரி தொகு

தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள பயனர்கள் தமிழ் விக்சனரியிலும் பங்களிப்பது உண்டா?

பல் பயனர்கள் இரண்டிலும் பங்களித்தே வருகின்றார்கள்.--Terrance \பேச்சு 00:05, 5 ஜூலை 2009 (UTC)


விக்கிபீடியாவில் உள்ளது போல Wikinewsஇல் தமிழ் மொழி கிடையாதா?

உண்டு. அதன் நிலை தற்போது கவலைகிடமாக உள்ளது. விக்கி செதிகள் பக்கத்தை இங்கே காணலாம். உங்களைப் பற்றிய தகவல்களை அறிய அனைவரும் ஆவலாக உள்ளதால் பயன்ர் பக்கத்தில் உங்களைப் பற்றிய சில தகவல்களை தரவும். தொடர்ந்து பங்களிக்கவும். கேள்விகள் இருப்பின் தயங்காமல் கேற்கவும். --Terrance \பேச்சு 00:05, 5 ஜூலை 2009 (UTC)


A SUGGESTION

"நாம் ஏன் விக்கி செய்திகள் நிறுத்தப்படக்கூடாது என்று கூறுவதுடன் நிறுத்திவிடவேண்டும்? செய்திகளிலும் journalismஇலும் ஆர்வமுடைய பயனர்கள் செய்திகளை விக்கி செய்திகளில் தோற்றுவித்தால் அது மறுபரிசீலனைக்கு உதவியாக இருக்கும் அல்லவா? நாம் செய்ய வேண்டியதை செய்வோம். நம்மால் இயன்ற மட்டும் கட்டுரைகளை எழுதுவோம். மற்றதை இறைவன் பார்த்துக்கொள்வான்." என்பதே என்னுடைய கருத்து.

யாழல் --> ஆழல் = கறையான் தொகு

இப்பக்கத்தில் யாழல் என்று சொல்லை சேர்த்திருந்தீர்கள். மிக அருமையான சொல். எனினும், ஆழல் என்று சொல்லலாமா?

  • கறையான் அகழ்ந்தே (to dig = ஆழ் ), தன் இருப்பிடத்தைக் கட்டுகிறது. ஆழ் -->ஆழல் -->யாழல்.
  • ஆழ்ந்து காணா ருயர்ந்தெய்த கில்லார் (தேவாரம்)
ஆழ் --> ஆழல்
ஆழல் --> (முன்னிலை அசை சேர்ந்து) யாழல். ஆனதல்லவா?
ய் என்ற முன்னிலையசை செய்யுள் நடைக்கு அவசியம்.
உரைநடைக்கு அது இல்லாமல். யாழல் என்பதனை ஆழல் எனலாமா? யாழல் --> ஆழல் = கறையான்.
த* உழவன் 02:54, 24 ஜூலை 2009 (UTC).தொடர்புக்கு..

பங்களிப்பாளர் அறிமுகம் தொகு

வணக்கம் srunika rajkumar, விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் இடம்பெறச் செய்யும் வகையில் உங்களைப் பற்றிய சிறு அறிமுகம், புகைப்படம் தந்து உதவுவீர்களா? நன்றி--ரவி 11:07, 5 அக்டோபர் 2009 (UTC)Reply[பதில் அளி]

சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல் தொகு

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 00:01, 19 பெப்ரவரி 2010 (UTC)Reply[பதில் அளி]

முதற்பக்க அறிமுகம் தொகு

வணக்கம் ராஜ்குமார். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்யூர/ராஜ்குமார் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி--ரவி 10:52, 15 மே 2010 (UTC)Reply[பதில் அளி]

விக்கி மாரத்தான் தொகு

விக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:24, 27 அக்டோபர் 2010 (UTC)Reply[பதில் அளி]

மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள் தொகு

வணக்கம் ராஜ்குமார். நலமா? கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா? நன்றி--இரவி 12:58, 2 மே 2011 (UTC)Reply[பதில் அளி]

பங்களிப்பு வேண்டுகோள் தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:39, 21 சூலை 2011 (UTC)Reply[பதில் அளி]

உங்களுக்குத் தெரியுமா திட்டம் தொகு


நலமா? தொகு

வணக்கம், Srunika rajkumar! உங்களைத் தமிழ் விக்கிப்பீடியா பக்கம் நீண்ட நாட்களாகக் காணவில்லையே?! நலமாக உள்ளீர்களா? தற்போது, நாம் 1,57,587 கட்டுரைகளைக் கொண்டு நன்றாக வளர்ந்து வருகிறோம். நீங்களும் அவ்வப்போது பங்களித்து வந்தால் மிக்க உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்! நன்றி.--இரவி 22:37, 19 பெப்ரவரி 2012 (UTC)   விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:56, 24 அக்டோபர் 2012 (UTC)Reply[பதில் அளி]

உதவி தொகு

கெபெக் பிரெஞ்சு கட்டுரையை பிழை திருத்தி, உரை திருத்தி மேம்படுத்தித் தருமாறு வேண்டுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:56, 24 அக்டோபர் 2012 (UTC)Reply[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Srunika_rajkumar&oldid=1242123" இருந்து மீள்விக்கப்பட்டது