வாருங்கள்!

வாருங்கள், TNSE sankarkuppan vlr, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- இரவி (பேச்சு) 07:15, 3 மே 2017 (UTC)

கலைக்களஞ்சியக் கட்டுரைதொகு

வணக்கம், TNSE sankarkuppan vlr!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 05:53, 4 மே 2017 (UTC)

May 2017தொகு

  வணக்கம், உங்கள் அண்மைய தொகுப்பில் பேணுகை வார்ப்புருக்களை நீக்கியுள்ளீர்கள். ஒரு பேணுகை வார்ப்புருவை நீக்கும்போது, அதில் குறிப்பிட்ட சிக்கல் தீர்ந்துவிட்டதா எனக் கவனிக்கவும். அல்லது தொகுப்புச் சுருக்கத்தில் செல்லுபடியாகும் காரணத்தைக் குறிப்பிடுங்கள். நீங்கள் தவறுதலாக இதனைச் செய்திருந்தால் வருந்தவேண்டாம். உங்கள் தொகுப்பை நான் மீளமைத்துள்ளேன். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. ~AntanO4task (பேச்சு) 17:26, 7 மே 2017 (UTC)

கிருஷ்ணமூர்த்தி (அறிவியல் அறிஞர்)தொகு

வணக்கம். உங்கள் கட்டுரை இது: கிருஷ்ணமூர்த்தி (அறிவியல் அறிஞர்) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:39, 10 சூன் 2017 (UTC)

பதக்கம்தொகு

  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
ஒரே நாளில் 100 கட்டுரைகளை எழுதிக் குவித்து வியக்க வைத்துள்ளீர்கள். உங்களுக்குச் சிறந்த உழைப்பாளர் பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். நீங்களே கட்டுரைகளை உருவாக்கியது போக உடன் பங்காற்றும் ஆசிரியர்கள் பலருக்கும் விக்கிப்பீடியா பற்றி எடுத்துரைத்து அருமையான பணி ஆற்றி வருகிறீர்கள். அடுத்து மாணவர்களுக்கு உடனடியாகப் பயன் நல்கக் கூடிய தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து விரிவான கட்டுரைகளைப் படைக்க முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 15:35, 26 சூன் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம்தொகு

  ஊக்குவிப்பாளர் பதக்கம்
வணக்கம் சங்கர். தங்கள் மூலமே விக்கியார்வம் வேலூர் ஆசிரியர்களுக்குத் தொற்றியது என்று ஊகிக்கிறேன். தமிழகம் முழுவதும் பயிற்சிகளுக்குச் சென்று இன்னும் பலரையும் ஊக்குவித்தது சிறப்பு. தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். அன்புடன்... --இரவி (பேச்சு) 06:02, 8 சூலை 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

போட்டிக் கட்டுரை விரிவாக்கம்தொகு

வணக்கம் சங்கர்! போட்டியில் பங்குபற்றுவதற்கு முதலில் வாழ்த்துக்கள். நீங்கள் விரிவாக்கும் கட்டுரைகள் தரமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இங்குள்ள உரையாடலின்படி, மனம் கட்டுரையை முன்னிருந்த நிலைக்கு மீள்விக்கிறேன். தயவுசெய்து கட்டுரையை முழுமையாகப் படித்து உள்வாங்கி நீங்களே தமிழாக்கம் செய்துவிட்டு அறியத் தாருங்கள். நன்றி. --கலை (பேச்சு) 20:27, 12 சூலை 2017 (UTC)

இன்னும் ஒரு விடயம். நீங்கள் புதிதாக முடிவிலி கட்டுரையை முற்பதிவு செய்துள்ளீர்கள். ஆனால் புதிய கட்டுரை விரிவாக்கத்திற்கு முன்னர், உங்கள் தமிழாக்கம் தரமுயர்த்தப்பட்டால் நன்று. எனவே தயவுசெய்து மனம் கட்டுரையை மீண்டும் விரிவாக்கம் செய்து பாருங்கள். நன்றி. --கலை (பேச்சு) 21:48, 12 சூலை 2017 (UTC)

கட்டுரைப் போட்டிக்கு வருக!தொகு

வணக்கம், தமிழ் விக்கிப்பீடியா இந்திய அளவில் நடைபெறும் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் விடுத்த அழைப்பை ஏற்று பங்கேற்க முன்வந்தமைக்கு நன்றி.

சில முக்கியமான குறிப்புகள்:

(இது அனைத்து ஆசிரியர்களுக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. சில குறிப்புகள் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கலாம்)

  • சென்ற ஆண்டு பயிற்சி நோக்கில், அனைத்து தலைப்புகளிலும் உங்கள் பங்களிப்புகளை வரவேற்றோம். ஆனால், தற்போது நடைபெறும் போட்டியில் சில குறிப்பிட்ட விதிகளைப் பின்பற்றி எழுதினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
  • இங்குள்ள தலைப்புகளின் கீழ் மட்டும் கட்டுரை எழுதுங்கள். தலைப்புகளைத் தேடுவது சிரமமாக இருந்தால், இங்குள்ள 10,000 தலைப்புகள் பட்டியலில் உள்ள சிகப்பு இணைப்புகளை மட்டும் காணுங்கள். இவற்றில் உங்களுக்கு விருப்பமான, நீங்கள் நன்கு அறிந்த துறை குறித்த கட்டுரைகளை உருவாக்கலாம். தமிழக வரலாறு குறித்து இங்குள்ள தலைப்புகளிலும் எழுதலாம்.
  • கட்டுரை ஒவ்வொன்றும் குறைந்தது 9000 பைட்டுகள் அளவும், 300 சொற்கள் அளவும் இருக்க வேண்டும். போட்டி முடிய இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. எனவே, நிறைய கட்டுரைகள் எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை. நீங்கள் மேலே குறிப்பிட்ட அளவில் 4 அல்லது 5 கட்டுரைகளை முழுமையாக எழுதினாலே உதவியாக இருக்கும்.
  • கட்டுரை எழுதி முடித்த உடன், மறக்காமல் இந்தக் கருவியில் உங்கள் கட்டுரையைச் சமர்ப்பியுங்கள். அப்போது தான் நீங்கள் போட்டியில் பங்கேற்கிறீர்கள் என்று தெரியும். உங்கள் கட்டுரைகளை அங்கு வைத்து தான் மதிப்பிட இயலும்.
  • வேறு ஏதேனும் ஐயம் இருந்தால் என் பேச்சுப் பக்கத்திலோ ஆசிரியர்களுக்கான வாட்சாப்பு குழுவிலோ கேளுங்கள்.
  • உங்கள் நண்பர்கள், மற்ற ஆசிரியர்களையும் போட்டியில் பங்கேற்க வேண்டுங்கள்.

தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 11:20, 30 மே 2018 (UTC)

வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்தொகு

வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018தொகு

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)

Project Tiger 2.0தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TNSE_sankarkuppan_vlr&oldid=2796009" இருந்து மீள்விக்கப்பட்டது