பழ. கருப்பையா

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்
(பழ. கருப்பைய்யா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பழ. கருப்பையா (Pala. Karuppiah, பிறப்பு: 02 ஏப்ரல் 1943) தமிழக அரசியல்வாதியும், எழுத்தாளரும் நடிகரும் ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார்.

பழ. கருப்பையா
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2011–2016
தொகுதிதுறைமுகம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 ஏப்ரல் 1943 (1943-04-02) (அகவை 81)
காரைக்குடி, தமிழ்நாடு, இந்தியா[1]
அரசியல் கட்சிகாங்கிரஸ் கட்சி
நிறுவன காங்கிரஸ்
ஜனதா கட்சி
ஜனதா தளம்
திமுக
மதிமுக
அதிமுக[2]
மநீம
தமிழ்நாடு தன்னுரிமை கழகம் (2023–தற்போது வரை)
பிள்ளைகள்பேராசிரியர் கரு. ஆறுமுகத்தமிழன்[3]
வேலைநடிகர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர்[1]

அரசியல் வாழ்க்கை

தொகு

பழ. கருப்பையா தனது அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய காங்கிரசில் தொடங்கினார்.

பின்பு 1969ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் பிரதமர் இந்திரா காந்தியின் வரைமுறையற்ற அதிகாரம், வாரிசு அரசியல் போன்ற காரணத்தால் பிளவுபட்டபொழுது காமராசர் தலைமையிலான நிறுவன காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.[4] 1971ஆம் ஆண்டில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைசென்றார்.[5]

1975ஆம் ஆண்டில் காமராசர் மறைந்த பின்னர் ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[4] 1977 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.[6]

ஜனதா கட்சியின் நீட்ச்சியான 1988ஆம் ஆண்டில் பிரதமர் வி. பி. சிங் ஜனதா தளம் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார்.[4]

1989ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்தார்.[4]

1993ஆம் ஆண்டில் வைகோ திமுகவிலிருந்து பிரிந்து சென்று மதிமுக தொடங்கியபொழுது அதில் இணைந்தார்.[4] பின்னர் அதிலிருந்து விலகினார்.

சுயட்சையாக

தொகு

1994 ஆம் ஆண்டில் காரைக்குடி குடிநீர்ப் போராட்டத்தில் ஈடுபட்டு 19 நாள்கள் பட்டினிப்போராட்டம் நடத்தினார்.[5] 1996 ஆம் ஆண்டில் மதிமுகவிலிருந்து விலகி தனியாளாக காரைக்குடி தொகுதியில் சுயட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டார்.[4]

பின்னர் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். பின்னர் சிறிதுகாலத்தில் அங்கிருந்து விலகினார்.[4]

2010ஆம் ஆண்டில் நடிகர் சோவின் ஆலோசனையின்படி[4] அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சியில் சேர்ந்தார்.[7] அக்கட்சியின் இலக்கிய அணி மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[8] 2010 ஆம் ஆண்டில் திமுகவை தாக்கி பழ. கருப்பையா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டிக்காக திமுகவினரால் தாக்கப்பட்டார்.[9]

பின்னர் அதிமுகவின் சார்பாக சென்னையில் உள்ள துறைமுகம் தொகுதியில் 2011 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு திமுகவின் செல்வாக்கு மிக்க அப்பகுதியில் முதல் முறையாக அதிமுக சார்பில் வெற்றிபெற்று 14வது தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினரானார்.[10] 2016 சனவரி 15ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டுவிழாவில் தான் சார்ந்திருந்த அதிமுக கட்சியைத் தாக்கிப் பேசினார்.[7] அதன் விளைவாக, 2016 சனவரி 28ஆம் நாள் கட்சி கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டார் என்றும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு அதிமுக பொதுச்செயலாளர் ஜெ. ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.[11] அடுத்தநாள் தன்னுடைய துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து இவரது மனைவி அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டார். பின்னர் இவர் ஊடகங்கள் வாயிலாக அதிமுக அரசின் ஊழல்கள் குறித்த செய்திகளை வெளியிட்டார்.[12]

பின்னர் மு.கருணாநிதி முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 2016 சூலை 19ஆம் நாள் இணைந்தார்.[2] 2019 திசம்பர் 12 ஆம் நாள், "கழகத்தின் நிகழ்கால நடவடிக்கைகள், போக்குகள், சிந்தனைப் பாங்கு, ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல கட்சியை நடத்துகிற விதம், அறிவும், நேர்மையும் பின்னுக்கு தள்ளப்பட்டு பணமே எல்லாம் என கருதுகிற தன்மை, இவையெல்லாம் என்னிடம் மிகப்பெரிய சலிப்பை உண்டாக்கின. இவற்றோடு பொருந்திப் போக முடியாத நிலையில் திமுகவிலிருந்து விலகுவது என முடிவெடுத்தேன்" என்று அறிக்கைவிடுத்து திமுகவிலிருந்து பழ. கருப்பையா விலகினார்.[13]

இவர் 2021 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தி.நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.[14]

நூல்கள்

தொகு

பழ. கருப்பையா பின்வரும் நூல்களை எழுதியிருக்கிறார்:

  1. அரசியல் சதிராட்டங்கள்
  2. எல்லைகள் நீத்த ராம கதை, 2012, கிழக்குப் பதிப்பகம்
  3. கண்ணதாசன் காலத்தின் வெளிப்பாடு, 2012, கிழக்குப் பதிப்பகம்
  4. கருணாநிதி என்ன கடவுளா?, 2011, கிழக்குப் பதிப்பகம்
  5. காலம் கிழித்த கோடுகள்
  6. நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, 2010, அழகப்பர் பதிப்பகம்.
  7. பட்டினத்தார் ஒரு பார்வை, 2012, கிழக்குப் பதிப்பகம்
  8. மகாபாரதம் மாபெரும் விவாதம், கிழக்குப் பதிப்பகம்

திரைத்துறை

தொகு

நடிகர்

தொகு

மூன்றாம் படி (1992)

தயாரிப்பாளர்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Thiru. Pala. Karuppiah (AIADMK) 18. Harbour Chennai District". Tamil Nadu Legislative Assembly.
  2. 2.0 2.1 "கருணாநிதி முன்னிலையில் திமுக-வில் இணைந்தார் பழ.கருப்பையா".
  3. "பழ.கருப்பையா மகனிடம் மைக் பறிப்பு... புத்தகக் காட்சியில் தொடரும் சர்ச்சைகள்". ஒன் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 6 February 2021.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 Do you know about the history of this 72 years old man | Pala. Karuppiah விகடன் டிவி 2016 சனவரி 30
  5. 5.0 5.1 [1]
  6. தோற்றவர்கள் வென்ற கதை, கட்டுரை, மு. இராமனாதன், 2021 மார்ச் 28, இந்து தமிழ்
  7. 7.0 7.1 பழ.கருப்பையா... நீங்க நல்லவரா... கெட்டவரா?, விகடன் 2019 சனவரி 30
  8. கருணாநிதிக்கு கோபம் வந்ததால் நான் தாக்கப்பட்டேன்: பழ.கருப்பையா பேட்டி, தினமலர் 2010 சூலை 5
  9. கருணாநிதிக்கு கோபம் வந்தால் அவர் ஒரு காட்டுமிராண்டி: பழ.கருப்பையா பேட்டி, Tamil Express News 2010 சூலை 5
  10. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  11. "Pala. Karuppiah expelled from AIADMK". தி இந்து. 28 January 2016.
  12. "Pala. Karuppiah's house attacked". தி இந்து. 31 January 2016.
  13. திமுகவிலிருந்து விலகிய பழ.கருப்பையா, மின்னம்பலம், பகல் 1, வியாழன், 12 டிச 2019
  14. மக்கள் நீதி மய்யம் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்; திநகரில் பழ.கருப்பையா, மயிலாப்பூரில் ஸ்ரீப்ரியா போட்டியிடுகின்றனர். தி ஹிந்து தமிழ் நாளிதழ். 12 மார்ச் 2021. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழ._கருப்பையா&oldid=3986241" இலிருந்து மீள்விக்கப்பட்டது