பாப் கார்ன்

2003 திரைப்படம்

பாப் கார்ன் (Pop Corn) என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். நாசர் எழுதி இயக்கிய [1] இப்படத்தில் மோகன்லால், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.[2] மேலும் புதுமுகங்களான குணால் ஷா மற்றும் ஜோதி நேவால் ஆகியோர் இப்படத்தின் மூலமாக அறிமுகமானார்கள்.[3] இப்படத்தின் பெயரானது "பாப் கார்னிவல்" [4] என்ற சொற்றொடரின் சுருக்கமாகும். தன்முனைப்புகளுக்கு இடையிலான மோதல்களால் பிரபலங்களுக்கிடையேயான திருமணங்கள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதை மையமாகக் கொண்ட ஒரு வரிக்கதையாகும்.[5]

பாப் கார்ன்
இயக்கம்நாசர்
தயாரிப்புகமீலா நாசர்
கதைஎஸ். ராமகிருஷ்ணன்
(உரையாடல்)
திரைக்கதைநாசர்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுதரன்
படத்தொகுப்புஎஸ். சத்திஷ்
ஜே. என். அர்சா
கலையகம்கணா பிலிம் மேக்கர்ஸ்
வெளியீடு24 சனவரி 2003 (2003-01-24)(இந்தியா)
ஓட்டம்127 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைதொகு

பிரபல இசை அமைப்பாளர் விக்ரமாதித்யா ஒரு இளம் இசை குழுவுடன் பணிபுரிந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார். இவர் நடனக் கலைஞரான ஜமுனாவை காதலிக்கிறார். இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் இவர்கள் தங்கள் தங்கள் கலை தன்முனைப்புகள் காரணமாக பிரிந்து செல்கிறார்கள். விக்ரமாதித்யாவின் மகள் மேகா தனது தந்தையையும் தாயையும் மீண்டும் ஒன்றிணைக்க முயற்சிக்கிறாள், ஆனால் அவள் அதில் தோல்வியடைகிறாள்.

நடிகர்கள்தொகு

தயாரிப்புதொகு

இப்படத்திற்கு துவக்கத்தில் தீம் தரி கிட என்று பெயரிடப்பட்டது.[6] 2002 சூலையில், இந்த படத்தின் பணிகள் "இறுதி கட்டத்தில்" இருப்பதாக அறிவிக்கப்பட்டது. படத்திற்கான ஒளிப்பதிவை ஸ்ரீதர் மேற்கொள்ள, சண்டைக் காட்சிகளை விக்ரம் தர்மா அமைத்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படம் 2003 சனவரி 24, அன்று வெளியிடப்பட்டது, பின்னர் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2007 இல் அதே பெயரில் வெளியிடப்பட்டது.

பாடல்கள்தொகு

இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த ஏழு பாடல்கள் இடம்பெற்றன. இந்த பாடல் வரிகளை 'கவிஞர்' வாலி எழுதினார். படத்தின் முன்னணி நடிகரான மோகன்லால், "அம்மா இங்கே வா" என்ற பெயரிலான ஒரு பாடலைப் பாடுவதாகக் கூறப்பட்டாலும், அது ஒலிப்பேழையிலோ அல்லது படத்திலோ இடம்பெறவில்லை.[7]

எண் பாடல் பாடகர் (கள்) காலம் குறிப்புகள்
1 "பூவைத்த பூவை" பிரசன்னா ராவ், மாதங்கி 4:42
2 "காதலகி கனிந்தத்து" எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஸ்ரீலேகா பார்த்தசாரதி 4:25
3 "அந்த சீமை துரை" ஹரிஹரன், மாணிக்க விநாயகம், சுஜாதா மோகன் 5:25
4 "பூவெல்லாம் பரட்டடும்" கார்த்திக், திப்பு, பாப் ஷாலினி 1:38
5 "என் இசைக்கு" ஹரிஹரன், ஸ்ரீராம் பார்த்தசாரதி 4:28
6 "நான் வச்சேன் லேசா" சீனிவாஸ், வசுந்தரா தாஸ் 5:19
7 "கருப்பொருள் இசை" கருவி 3:04

குறிப்புகள்தொகு

  1. Kumar, S.R. Ashok (23 February 2006). "Nasser: a one-man industry". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/nasser-a-oneman-industry/article3182325.ece. பார்த்த நாள்: 8 April 2015. 
  2. staff (2003). "review: Pop-carn". சிஃபி. Archived from the original on 17 நவம்பர் 2003. https://web.archive.org/web/20031117140901/http://sify.com/movies/tamil/preview.php?ctid=5&cid=2423&id=11921472. பார்த்த நாள்: 7 April 2015. 
  3. staff (6 February 2013). "review: Popcarn (2003) (Tamil)". Now Running. Archived from the original on 4 மார்ச் 2016. https://web.archive.org/web/20160304081601/http://www.nowrunning.com/movie/235/tamil/popcarn/93/review.htm. பார்த்த நாள்: 8 April 2015. 
  4. Kamath, Sudhish (23 January 2002). "Pop goes Nasser's carnival". தி இந்து. http://www.thehindu.com/lf/2002/01/23/stories/2002012300400200.htm. பார்த்த நாள்: 7 April 2015. 
  5. staff (2003). "Nasser". சிஃபி. Archived from the original on 15 ஏப்ரல் 2016. https://web.archive.org/web/20160415224946/http://www.sify.com/movies/tamil/interview.php?id=12572822&cid=2408. பார்த்த நாள்: 7 April 2015. 
  6. staff. "Cinebits". Nilacharal e-magazine. 7 April 2015 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Mohan Lal sings in Nasser's Pop Corn". india4u.com. 13 July 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-18 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்_கார்ன்&oldid=3660441" இருந்து மீள்விக்கப்பட்டது