பிரதீப் சாவந்த்
பிரதீப் சாவந்த் (Pradip Sawant) (பிறப்பு 1962) ஒரு இந்தியக் காவல் அதிகாரியாவார். தற்போது மும்பை காவல்துறையில் பாதுகாப்பு பிரிவில் காவல்துறைக் கண்காணிப்பாளராக பணியாற்றுகிறார்.[1] இவர் 2002 இல் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கத்தைப் பெற்றவர்.[2] 2000 மற்றும் 2003 க்கு இடையில் காவல் கண்காணிப்பாளராக (கண்டறிதல் குற்றப்பிரிவு) இருந்த போது மும்பையில் நடந்த 300 க்கும் மேற்பட்ட என்கவுண்டர்களுக்குப் பின்னால் இவர் இருந்தார்.[3][4]
பிரதீப் சாவந்த் | |
---|---|
மும்பை காலல் துறை | |
பிறந்த நாள்: 25 சனவரி 1962 | |
பிறந்தயிடம் | தானே, மகாராட்டிரம், இந்தியா |
பணிபுரிந்த பிரிவு | இந்தியா |
தரம் | காவல்துறைக் கண்காணிப்பாளர் |
விருதுகள் | சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கம் |
இவர் 2004 இல் அப்துல் கரீம் தெல்கியுடன் சேர்ந்து முத்திரைத் தாள் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் 2009 இல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் பணியமர்த்தப்பட்டார். மேலும் இவர் குற்றமற்றவர் என்று கண்டறியப்பட்ட பின்னர் ஜூன் 2007 இல் மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படை துணை ஆணையராக நியமிக்கப்பட்டார் [5]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுமும்பை ராம்நரேன் ரூயா கல்லூரியில் வேதியியலில் பட்டம் பெற்ற இவர் காவல் துணைக் கண்காணிப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986 ஆம் ஆண்டு மகாராட்டிரா காவல்துறையில் காவல் கண்காணிப்பாளரானர். இவர் நாசிக்கில் உள்ள மகாராட்டிரா காவலர் பயிற்சிப்பள்ளியில் முதலிடம் பிடித்ததாக இந்தியாவின் அவுட்லுக் தெரிவித்துள்ளது. [6]
தொழில்
தொகு1998 மற்றும் 2003 க்கு இடையில் சோட்டா சகீல், சோட்டா ராஜன், அசுவின் [7], அருண் காவ்லி உள்ளிட்ட மும்பையின் பல நிழல் உலகக் கும்பல்களின் குற்றச் செயல்களைத் தடுப்பதில் சாவந்த் முக்கிய பங்கு வகித்தார்.[8]
1998 இல் தாவூத் இப்ராகிமின் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட ரூபம் என்ற விற்பனை மையத்தின் உரிமையாளரான பரத் சா என்பவரின் கொலை வழக்கையும் இவர் கண்டறிந்தார்.[9] [10]
மார்ச் 1999 இல் மும்பையின் முன்னாள் நகரத் தந்தை மிலிந்த் வைத்யா மீது கொலை முயற்சிக்காக சோட்டா சகீலுடன் ( தாவூத்தின் கூட்டாளி ) தொடர்புடைய கும்பல்களை கைது செய்வதற்கு இவர் பொறுப்பேற்றார். இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். வைத்யா உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். [11]
டிசம்பர் 1999 இல், நேபாளத்தின் காட்மாண்டுவில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்துவதற்கு உறுதுணையாக இருந்த மூன்று பயங்கரவாதிகளை இவரது குழு கைது செய்தது.[12] பிரதீப் சாவந்த் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புக் காவல் படை, 486 குண்டர்களை கைது செய்து 156 குற்றவாளிகளை என்கவுன்டர்களில் சுட்டுக் கொன்றதாகத் தெரிகிறது.[12]
சர்ச்சை
தொகுஜனவரி 2004 இல், சாவந்த் அப்துல் கரீம் தெல்கியின் போலி முத்திரைத் தாள் ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டார்.[13] ஜூன் 27, 2007 அன்று, இவர், புனேவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட போலி முத்திரைகள் மற்றும் முத்திரைத் தாள்கள் வழக்கில் ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்.[14][15]
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
தொகு- 2002 ஆம் ஆண்டில் சிறந்த சேவைக்காக குடியரசுத் தலைவர் காவலர் பதக்கம்[12] இவருக்கு வழங்கப்பட்டது.
- 2000 ஆம் ஆண்டுக்கான சிறந்த புலனாய்வு அதிகாரிக்கான தீபக் ஜோக் நினைவுக் கோப்பையைப் பெற்றார்.[16]
- 12 ஜூன் 1998 அன்று, மும்பையில் உள்ள காவலர் சங்கத்தில் மகாராட்டிராவின் துணை முதல்வர் கோபிநாத் முண்டேவிடமிருந்து சாவந்த் சிறந்த குற்றத்தைக் கண்டறியும் விருதைப் பெற்றார்.[17]
பிரபலமான கலாச்சாரத்தில்
தொகுஆமிர் கான் நடித்த 1999 ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்படமான சர்பரோஷ் பிரதீப் சாவந்தின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. [18] சர்பரோஷ் படத்தில் ஆமிர் கான் நடித்திருந்த அஜய் சிங் ரத்தோட் என்ற கதாபாத்திரம் சாவந்துடன் நெருங்கிய தொடர்புடையது.[19]
மேலும் படிக்க
தொகு- Dangerous Minds. Penguin Random House, 2018. 2017. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9386495996.
{{cite book}}
: Text "Dangerous Minds: Eight Riveting Profiles of Homegrown Terrorists" ignored (help) - Dongri to Dubai: Six Decades of the Mumbai Mafia. Roli Books Private Limited, 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788174368188.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Major reshuffle in Mumbai police". டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ். 4 May 2017. http://www.dnaindia.com/mumbai/report-major-reshuffle-in-mumbai-police-2427894.
- ↑ "DCP honoured with President’s medal". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 August 2002. https://timesofindia.indiatimes.com/city/mumbai/DCP-honoured-with-Presidents-medal/articleshow/19197478.cms.
- ↑ "Former Mumbai crime branch DCP Pradeep Sawant walks free". ஒன்இந்தியா. 27 June 2007. https://www.oneindia.com/2007/06/27/former-mumbai-crime-branch-dcp-pradeep-sawant-walks-free-1182935224.html.
- ↑ Pawar, Prabhakaar (12 February 2003). "एकाकी लढत" (in Marathi). சாம்னா.
- ↑ "Cops Hail Return Of Encounter Specialist". மிட் டே. 19 July 2009. https://www.mid-day.com/articles/cops-hail-return-of-encounter-specialist/52644.
- ↑ "DCP Pradip Sawant's wife claims he is innocent". அவுட்லுக் (இதழ்). 28 February 2004. https://www.outlookindia.com/newswire/story/dcp-pradip-sawants-wife-claims-he-is-innocent/204416.
- ↑ Singh, Vijay (7 January 2004). "SIT arrests top Mumbai cop Pradeep Sawant". ரெடிப்.காம். http://m.rediff.com/%0D%0Anews/2004/jan/07stamp1.htm.
- ↑ Naidu, Jayprakash S. (1 November 2015). "Encounter cops too have shot into oblivion". Asian Age. http://www.asianage.com/editorial/encounter-cops-too-have-shot-oblivion-027.
- ↑ "Bharat Shah trial to resume in special court". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 1 June 2003. https://timesofindia.indiatimes.com/city/mumbai/Bharat-Shah-trial-to-resume-in-special-court/articleshow/821.cms.
- ↑ "Gangster arrested for murder of apparel superstore owner". 22 October 1998. http://m.rediff.com/news/1998/oct/22roopam.htm.
- ↑ "Vaidya attack case: HC sets aside death sentence". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 18 December 2003. https://timesofindia.indiatimes.com/city/mumbai/Vaidya-attack-case-HC-sets-aside-death-sentence/articleshow/365803.cms.
- ↑ 12.0 12.1 12.2 "DCP honoured with President’s medal". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 August 2002. https://timesofindia.indiatimes.com/city/mumbai/DCP-honoured-with-Presidents-medal/articleshow/19197478.cms."DCP honoured with President's medal". The Times of India. 15 August 2002.
- ↑ "Stamp scam: DCP Pradip Sawant granted bail". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 27 August 2004. https://www.hindustantimes.com/india/stamp-scam-dcp-pradip-sawant-granted-bail/story-Cs3iRSpJz6KuhHQKikKq3I.html.
- ↑ "DCP Pradeep Sawant arrested in fake Stamp paper scam". Zee News. 7 January 2004. http://zeenews.india.com/home/dcp-pradeep-sawant-arrested-in-fake-stamp-paper-scam_140465.html.
- ↑ Singh, Vijay (7 January 2004). "SIT arrests top Mumbai cop Pradeep Sawant". ரெடிப்.காம். http://m.rediff.com/%0D%0Anews/2004/jan/07stamp1.htm.
- ↑ "DCP Sawant gets Jog Memorial trophy". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Wn.com. https://article.wn.com/view/2001/01/17/DCP_Sawant_gets_Jog_Memorial_trophy/.
- ↑ "Restore confidence, Munde tells police". The Afternoon Despatch & Courier. 12 January 1998.
- ↑ "Mumbai cops emulate 'Sarfarosh' spirit in terror bust". Zee News. 11 May 2003. http://zeenews.india.com/home/mumbai-cops-emulate-sarfarosh-spirit-in-terror-bust_97641.html.
- ↑ "Cops Hail Return Of Encounter Specialist". மிட் டே. 19 July 2009. https://www.mid-day.com/articles/cops-hail-return-of-encounter-specialist/52644.
வெளி இணைப்புகள்
தொகு- Sawant ko Aane do (Let Sawant come) at Afternoon DC (Interview)
- The Killing Field at தி அப்சர்வர் (Interview)