புதுக்கோட்டை பேருந்து நிலையம்

புதுக்கோட்டை பேருந்து நிலையம் (Pudhukkottai bus stand) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள புதுக்கோட்டை நகரில் அமைந்துள்ள மிகவும் பழமையான பேருந்து நிலையங்களில் ஒன்றாகும். 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட [1]இப்பேருந்து நிலைய கட்டிடங்கள் மற்றும் தரைத்தளங்கள் சேதமடைந்த காரணத்தால் புதுக்கோட்டை நகராட்சியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் தமிழக அரசால் ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதி 50 கோடி ரூபாயில் 1.17 கோடி இப்பேருந்து நிலைய பராமரிப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவு பெற்றன.[2] இங்கிருந்து இலுப்பூர், பொன்னமராவதி, மணப்பாறை, திண்டுக்கல், பழனி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், கறம்பகுடி, திருச்சி, சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர், சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம், மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர், திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, திருப்பதி, ஆவுடையார் கோவில், அறந்தாங்கி, மணல்மேல்குடி, தஞ்சாவூர், சிதம்பரம், கும்பகோணம், மயிலாடுதுறை போன்ற நெடுந்தூர ஊர்களுக்கு நேரிடையாக பேருந்து வசதி உள்ளது. மேலும் புறநகர் பேருந்துகளும் இயங்குகின்றன.

புதுக்கோட்டை பேருந்து நிலையம்

மேற்கோள்கள்

தொகு