புருஷன் பொண்டாட்டி

என். கே. விசுவநாதன் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

புருஷன் பொண்டாட்டி (Purushan Pondatti) என்பது 1996 ஆண்டைய தமிழ் நகைச்சுவை நாடகத் திரைப்படம் ஆகும். என். கே. விசுவநாதன் இயக்கிய இப்படத்தில் பாண்டியராஜன், ரஞ்சிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பி. கே. யாதவ் தயாரித்த இப்படத்திற்கு, சிற்பி இசை அமைத்துள்ளார். இப்படம் 1996 திசம்பர் 6 அன்று வெளியானது.[1][2]

புருஷன் பொண்டாட்டி
இயக்கம்என். கே. விசுவநாதன்
தயாரிப்புபி. கே. யாதவ்
கதைபி. கலைமணி (உரையாடல்)
திரைக்கதைபி. கலைமணி
இசைசிற்பி (இசையமைப்பாளர்)
நடிப்பு
ஒளிப்பதிவுஎன். கே. விஸ்நாதன்
படத்தொகுப்புவி. உதயசங்கரன்
கலையகம்சுந்தர் தியேட்டர்ஸ்
வெளியீடுதிசம்பர் 6, 1996 (1996-12-06)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விற்பனை பிரதிநிதியான பாண்டியன் ( பாண்டியராஜன் ) ராஜேஸ்வரியை ( ரஞ்சிதா ) திருமணம் செய்து கொள்கிறார். பாண்டியனின் தாய் வடிவு ( வடிவுக்கரசி ) ஒரு கொடுமைக்காரி, அதே நேரத்தில் அவரது தந்தை வேல்முருகன் ( மணிவண்ணன் ) ஒரு நல்ல மனிதர். அவர்களுக்கு மூன்று மகள்களும் உள்ளனர். ராஜேஸ்வரியின் சம்பளம், வரதட்சணை ஆகியவற்றை வடிவு எடுத்துக் கொள்கிறார். ராஜேஸ்வரியின் நகைகளைப் போட்டு தனது முதல் மகள் மாலினி (லதா) திருமணத்தை நடத்துகிறார் வடிவு. திருமணத்துக்குப் பின்னர், மாப்பிள்ளை (தியாகு) வேலையை இழக்கிறார். இதற்கிடையில் பாண்டியனும், ராஜேஸ்வரியும் குடும்ப நலனுக்காக கருக்கலைப்பு செய்ய முடிவு செய்கிறார்கள். இதற்கிடையில், மாலினி கர்ப்பமாகிறாள். வடிவு தன்னை பணம் ஈட்டும் இயந்திரமாக கருதுவதினால் கோபமடைந்த ராஜேஸ்வரி, தனது வேலையை ராஜினாமா செய்கிறார். ராஜேஸ்வரியின் சம்பளப் பணத்தை எதிர்பார்க்கும் வடிவு, இதனால் கோபமடைந்து, ராஜேஸ்வரியை கொளுத்த முயற்சிக்கிறார். ஆனால் வேல்முருகன் அவளைக் காப்பாற்றுகிறார். பின்னர் ராஜேஸ்வரி பாண்டியனின் வீட்டை விட்டு வெளியேறி வேலை தேட ஆரம்பிக்கிறார். வேலையைத் தேடி அது கிடைக்காததினால் அவர் ஒரு ஆடை தயாரிப்பாளராக மாறுகிறார், அதன் பிறகு, அவர் வெற்றிகரமாக ஒரு துணி தொழிற்சாலையின் உரிமையாளராக வளர்கிறார். இதற்கிடையில், பாண்டியனின் குடும்பம் கடன்களால் முடங்குகிறது. பின்னர் என்ன நடக்கிறது என்பது கதையின் முக்கிய அம்சமாகும்.

நடிகர்கள்

தொகு

இந்த படத்திற்கான பின்னணி இசை மற்றும் பாடல் போன்றவற்றிற்கு இசையமைப்பாளர் சிற்பி இசையமைத்தார். 1966 இல் வெளியிடபட்ட பாடல் பதிவில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றன. பாடல் வரிகளை வைரமுத்து, எஸ். ஜே. சூர்யா ஆகியோர் எழுதினார்.[3]

எண் பாடல் பாடகர் வரிகள் காலம்
1 'லாட்டரி எனக்கு' மனோ, சங்கீதா எஸ். ஜே. சூர்யா 4:57
2 'மழையடிக்குது' மனோ, சித்ரா வைரமுத்து 4:52
3 'நட்ட நடுராத்திரி' மனோ, சித்ரா 4:30
4 'புள்ள வேணும்' சிற்பி, சித்ரா 4:26
5 'வாடா வயசு பைய்யா' மரகதமணி 4:06

குறிப்புகள்

தொகு
  1. "Purushan Pondatty (1996) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2013-06-14.
  2. "Filmography of purushan pondatty". cinesouth.com. Archived from the original on 2012-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-06-14.
  3. "Download Purushan Pondatti by Sirpy on Nokia Music". music.ovi.com. Archived from the original on 15 June 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-06-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புருஷன்_பொண்டாட்டி&oldid=3792591" இலிருந்து மீள்விக்கப்பட்டது