பி. கலைமணி

இந்திய திரைக்கதை ஆசிரியர்

பி. கலைமணி (P. Kalaimani) என்பவர் தமிழ் திரைப்படத்தில் பணியாற்றிய எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் ஆவார். இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை, திரைக்கதை, உரையாடல்களை எழுதியுள்ளார்.[2]

பி. கலைமணி
பிறப்புபி. கலைமணி
1950
இறப்பு3 ஏப்ரல் 2012(2012-04-03) (அகவை 62)[1]
தமிழ்நாடு, சென்னை
பணிஎழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர்
வாழ்க்கைத்
துணை
சரஸ்வதி

திரைப்பட வாழ்க்கை தொகு

இவர் மூன்று தசாப்தங்களாக திரைப்படத் துறையில் எழுத்தாளராக இருந்தார். மேலும் இவரது படைப்புகள் மூலமாக வெற்றியடைந்தார். இவரது படைபுகளில் குறிப்பிடத்தக்கவையாக பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே, மண்வாசனை, கோபுரங்கள் சாய்வதில்லை, முதல் வசந்தம், இங்கேயும் ஒரு கங்கை போன்ற பலபடங்களாகும். இவர் சில திரைப்படங்களை தயாரித்து இயக்கியுள்ளார். இவர் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தனது வாழ்க்கையில் சத்தியராஜ், விஜயகாந்த் போன்றவர்களுடன் பணியாற்றினார். உரையாடல் எழுத்தாளராக இவரது கடைசி படம் குருவி ஆகும்.[3] தெற்கத்திக்கள்ளன், மனித ஜாதி போன்ற படங்களை எழுதி இயக்கியுள்ளார்.[4]

மேலும் இவர் எவரெஸ்ட் பிலிம்ஸ் என்ற பதாகையின் கீழ் நிறைய படங்களை தயாரித்தார்.[4] இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியது.

பகுதி திரைப்படவியல் தொகு

ஆண்டு படம் பணி குறிப்பு
இயக்குநர் எழுத்தாளர் தயாரிப்பாளர்
1977 பதினாறு வயதினிலே  N  Y  N உரையாடல் மட்டும்
1979 நீயா ?  N  Y  N
1979 மங்களவாத்தியம்  N  Y  N
1980 எங்க ஊர் ராசாத்தி  N  Y  N
1982 வாலிபமே வா வா  N  Y  N
1982 காதல் ஓவியம்  N  Y  N
1982 கோபுரங்கள் சாய்வதில்லை  N  Y  Y
1983 மண்வாசனை  N  Y  N
1983 மனைவி சொல்லே மந்திரம்  N  Y  Y
1984 இங்கேயும் ஒரு கங்கை  N  N  Y
1985 பிள்ளைநிலா  N  Y  Y
1985 அம்பிகை நேரில் வந்தாள்  N  N  Y
1986 முதல் வசந்தம்  N  Y  Y
1986 பாரு பாரு பட்டணம் பாரு  N  Y  Y
1987 சிறைப் பறவை  N  Y  N
1987 தீர்த்தக் கரையினிலே  N  Y  N
1987 பானுமதி காரி மொகுடு  N  Y  N தெலுங்கு
1988 தெற்கத்திக்கள்ளன்n  Y  Y  Y
1988 வரசுடொச்சாடு  N  Y  N தெலுங்கு
1989 என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்  N  Y  N
1989 பொறுத்தது போதும்  Y  Y  N
1990 மல்லுவேட்டி மைனர்  N  Y  Y
1991 மனித ஜாதி  Y  Y  Y
1992 ஹத்தமரி ஹென்னு கில்லாடி கண்டு  N  Y  N கன்னட படம்
1993 காத்திருக்க நேரமில்லை  N  Y  N உரையாடல் மட்டும்
1993 சின்ன மாப்ளே  N  Y  N
1993 பாரம்பரியம்  N  Y  N
1994 கண்மணி  N  Y  N
1994 பிரியங்கா  N  Y  N உரையாடல் மட்டும்
1994 கருப்பு நிலா  N  Y  N உரையாடல் மட்டும்
1994 பொண்டாட்டியே தெய்வம்  N  Y  N
1994 மனசு ரெண்டும் புதுசு  N  Y  N
1995 மக்கள் ஆட்சி  N  Y  N
1995 கூலி நம்பர். 1  N  Y  N இந்தி படம்; பெயர் போடப்படவில்லை
1996 புருஷன் பொண்டாட்டி  N  Y  N
1997 பாசமுள்ள பாண்டியரே  N  Y  N
1997 புதல்வன்  N  Y  N உரையாடல் மட்டும்
1998 குருப்பார்வை  N  Y  N திரைக்கதை மட்டும்
2000 ஏழையின் சிரிப்பில்  N  Y  N
2000 உன்னைக் கண் தேடுதே  N  Y  N
2001 தாலி காத்த காளியம்மன்  N  Y  N உரையாடல் மட்டும்
2001 சூப்பர் குடும்பம்  N  Y  N
2002 நைனா  N  Y  N
2002 ஷக்கலக்கபேபி  N  Y  N
2005 வீரண்ணா  N  Y  N
2008 குருவி  N  Y  N கதை உரையாடல்

இறப்பு தொகு

நீண்டகாலமாக நோயினால் பாதிக்கபட்டிருந்த இவர் 2012 ஏப்ரல் 3 ஆம் நாள் நள்ளிரவில் இறந்தார். இவரது மனிவின் பெயர் சரஸ்வதி.

குறிப்புகள் தொகு

  1. "Popular Film Writer Kalaimani Passed Away". kollytalk.com. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.
  2. "P Kalaimani passes away". supergoodmovies.com இம் மூலத்தில் இருந்து 2014-11-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141129063444/http://www.supergoodmovies.com/42482/kollywood/p-kalaimani-passes-away-news-details. பார்த்த நாள்: 2014-11-19. 
  3. "Dialogue Writer P Kalaimani Passed Away". cineshadow.com இம் மூலத்தில் இருந்து 19 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20141119195936/http://www.cineshadow.com/dialogue-writer-p-kalaimani-passed-away/. பார்த்த நாள்: 2014-11-19. 
  4. 4.0 4.1 "தமிழ் சினிமாவின் 'கதை மன்னன்' பி கலைமணி மரணம்!". tamil.filmibeat.com. http://tamil.filmibeat.com/news/popular-script-writer-producer-p-kalaimani-is-no-more-aid0136.html. பார்த்த நாள்: 2014-11-19. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கலைமணி&oldid=3954142" இலிருந்து மீள்விக்கப்பட்டது