யூத, கிறித்தவ, இசுலாமிய பாரம்பரியத்தின்படி, பெஞ்சமின் அல்லது புன்யாமீன் (Benjamin) யாக்கோபுவின் பதின்மூன்று பிள்ளைகளில் (12 ஆண்கள், 1 பெண்) கடைசிப் பிள்ளையும், ராகேலின் இரண்டாவதும் கடைசி மகனும் ஆவார். இவர் இசுரயேலிய பெஞ்சமின் கோத்திரத்தின் தந்தையாவார். விவிலியம் கூறுவதன்படி, ராகேலின் முதற்பிள்ளை யோசேப்பு போலல்லாது பெஞ்சமின் கானானில் பிறந்தார்.

பெஞ்சமின் (வலம்) தன் சகோதரர் யோசேப்புவை ஆரத்தழுவுதல்

சொல்லிலக்கணம்

தொகு

தோரா குறிப்பிப்பிடுவதன்படி, பெஞ்சமினுடைய பெனோனி எனும் பெயர் யாக்கோப்பினால் பிழையாக பெஞ்சமின் என அழைக்கப்பட்டது. பெஞ்சமின் என்பதன் உண்மையான பெயர் பெனோனி என்பதாகும். ராகேல் பிள்ளையைப் பிரசவித்து இறந்ததால் பெனோனி, அதாவது என்னுடைய வலியின் மகன் என அர்த்தம் கொடுக்கிறது.[1] விவிலிய அறிஞர்கள் இவ்விரு பெயர் வேறுபாடுகள் யாவேப் பாரம்பரியம் மற்றும் எலோகிம் பாரம்பரியம் என்பவற்றால் உண்டானது என்கின்றனர்.[2]

குடும்ப மரம்

தொகு
தேராகு
சாராள்ஆபிரகாம்ஆகார்ஆரான்
நாகோர்
இஸ்மவேல்மில்காலோத்துஇசுக்கா
இஸ்மவேலர்7 மகன்கள்[3]பெத்துவேல்1 வது மகள்2 வது மகள்
ஈசாக்குரெபேக்காலாபான்மோவாப்பியர்ஆமோனியர்
ஏசாயாக்கோபுராகேல்
பில்கா
ஏதோமியர்சில்பா
லேயா
1. ரூபன்
2. சிமியோன்
3. லேவி
4. யூதா
9. இசக்கார்
10. செபுலோன்
11. தீனாள்
7. காத்து
8. ஆசேர்
5. தாண்
6. நப்தலி
12. யோசேப்பு
13. பெஞ்சமின்


உசாத்துணை

தொகு
  1. தொடக்க நூல் 35:19
  2. Richard Elliott Friedman, Who wrote the Bible?
  3. Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெஞ்சமின்&oldid=1982550" இலிருந்து மீள்விக்கப்பட்டது