தேராகு (ஆங்கிலம்:Terah) (எபிரேயம்: תֶּרַח, தற்கால תָּרַח திபேரியம் Téraḥ ; Táraḥ) என்பவர் பழைய ஏற்பாடின் தொடக்க நூலில் உள்ள நாகோரின் மகன் ஆவார், மேலும் இஸ்ரயேல் மக்களின் முதுபெரும் தந்தையான ஆபிரகாம் மற்றும் நாகோர் II, ஆரான், சாராள் ஆகியோரின் தந்தையும் ஆவார். தேராகு வரலாற்றுக் குறிப்புகள் எபிரேய விவிலியம் [1]மற்றும் புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.[2]

தேராகு
Terah
தேராகுவின் படிம உருவம்
பிறப்புகிமு. 2000 ஆண்டுக்கு முன்
மெசொப்பொத்தேமியா
இறப்புஆரான்
பெற்றோர்நாகோர்
பிள்ளைகள்ஆபிரகாம்
நாகோர் II
ஆரான்
சாராள்

வாழ்க்கை தொகு

நாகோர் இருபத்தொன்பது வயதான போது, தேராகுப் பிறந்தார். தேராகு எழுபது வயதாக இருந்த பொழுது அவருக்கு ஆபிராம், நாகோர், மற்றும் ஆரான் ஆகியோர் பிறந்தனர். தேராகு தொடக்கக் காலத்தி தீய விக்கிரக ஆராதனை செய்பவரும், சிலைகளை செய்து விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வந்தார்.[3] தனது தந்தையின் தொழிலில் விருப்பம் இல்லாத ஆபிரகாம் தனது தந்தையின் சிலைக்கடையை எதிர்க்கும் விதமாக, தனது தந்தை செய்த சிலைகளை அடித்து நொறுக்கி, வரும் வாடிக்கையாளர்களை விரட்டியடித்தார்.[4][5] பின்னர் தேராகு தம் மகன் ஆபிராமையும், தம் மகன் ஆரானின் புதல்வன் லோத்தையும், தம் மருமகளும் தம் மகன் ஆபிராமின் மனைவியுமான சாராயையும் அழைத்துக் கொண்டு ஊர் என்ற கல்தேயர் நகரை விட்டுக் கானான் நாட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். காரான் என்ற இடத்திற்கு வந்ததும் அங்கேயே அவர்கள் தங்கி வாழலாயினர்.தேராகு விக்கிரக வழிபாட்டில நம்பிக்கை உடையவராய் இறக்கும்வரை காராணிலே தங்கினார். தேராகு இருநூற்று ஐந்து வயதாக இருந்தபொழுது ஆரானில் மரித்தார்.

குடும்ப மரம் தொகு

தேராகு
சாராள்ஆபிரகாம்ஆகார்ஆரான்
நாகோர்
இஸ்மவேல்மில்காலோத்துஇசுக்கா
இஸ்மவேலர்7 மகன்கள்[6]பெத்துவேல்1 வது மகள்2 வது மகள்
ஈசாக்குரெபேக்காலாபான்மோவாப்பியர்ஆமோனியர்
ஏசாயாக்கோபுராகேல்
பில்கா
ஏதோமியர்சில்பா
லேயா
1. ரூபன்
2. சிமியோன்
3. லேவி
4. யூதா
9. இசக்கார்
10. செபுலோன்
11. தீனாள்
7. காத்து
8. ஆசேர்
5. தாண்
6. நப்தலி
12. யோசேப்பு
13. பெஞ்சமின்


ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேராகு&oldid=1982685" இலிருந்து மீள்விக்கப்பட்டது