பேச்சு:நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்
1
தொகுஇவர் பெயர் கட்டுரையில் கோப்பர்னிக்கஸ் என்று ப் சேர்த்தும், சில இடங்களில் கோபர்நிகஸ் என்று ப் இல்லாமலும், சில இடங்களில் க் இல்லாமலும், சில நி என்னும் தகர நி இட்டும் எழுதப் பட்டுள்ளது. இன்னொரு முக்கியக் கருத்து. தமிழில் மட்டும் அல்லாமல், பொதுவாக யாரும் ஸ் என்று நிறுத்தவே முடியாது. ஏதேனும் ஓர் சிறு உயிரொலி அதன் பின் வந்தே நிற்கும். இதனை நன்கு அறிந்தே தமிழர்கள் குற்றியலுகரம் போன்ற நுட்பமான ஒலியிலக்கணங்களைப் படைத்தனர். க், ச், ட், த், ப் என்று சொல்லி நிறுத்திப் பாருங்கள் ஒலி வரவே வராது. மேலும் அடுத்து வரும் சொல்லுக்காக வாயைத் திறக்கும்பொழுது ஒலி வரும். top என்பதைக் கூறும் பொழுது, இதழ்கள் ஒட்டி இருக்கும்பொழுது ஒலி வராது. ஆங்கிலத்திலேயும், மொழியியலில் இதனை "stop" என்றே கூறுகின்றனர். தமிழில் எழுதும் பொழுது நிக்கோலசு கோப்பர்னிக்கசு என்று எழுதுவது சரியான முறை. இதில் கடைசியில் முடியும் சு என்பது குற்றியலுகரம். எனவே பெரிய ஒலி வேஏறுபாடு ஏதும் இராது. இக்கட்டுரையில் சீராக எல்லா இடத்திலும் நிக்கோலசு கோப்பர்னிக்கசு என்று எழுதலாம் என்று கருதுகிறேன். --செல்வா 01:54, 20 சனவரி 2012 (UTC)
- இக்கட்டுரையில் நிக்கொலசு கோப்பர்னிக்கசு என மாற்றம் செய்ய இருக்கின்றேன். மறுப்பு இருந்தால் தெரிவிக்கவும். ஸ்ஸ்ஸ் என்று நிறுத்தவே முடியாது. வாய்விட்டுச் சொல்லிப்பாருங்கள்!! நிறுத்தும் பொழுது உகரம் போன்ற உயிரொலி வந்தே நிற்கும். இப்படியான அடிப்படையிலேயே தமிழில் குற்றியலுகரம் படைத்தனர். இது நுட்பமாக ஒலியியலை உற்று அறிந்ததன் விளைவு. காசு,கொசு முதலான சொற்களோடு பிற சொற்கள் சேரும்பொழுது காசு+ இல்லாமல் = காசில்லாமல் (குற்றியலுகரம் ஓடிவிட்டது), காசு + ஓடு = காசோடு என்று குற்றியலுகரம் கெட்டு அடுத்து வரும் உயிரோடு காற்றொலி சகரம் போன்ற ஒலி சேருவதைப் பார்க்கலாம். "காஸ்/கியாஸ் (gas) இல்லை" என்று சொல்லும்பொழுதும் ஸ் என்பது ஸு என சிறிதளவு உகரம் அல்லது ஓர் உயிரொலி சேர்ந்தே முடியும் (அடுத்த சொல்லைத் தொடங்கும் முன்). எனவே நிக்கோலசு கோப்பர்னிக்கசு என்று எழுதுவது சரியான முறை. இதில் வரும் ஈற்றெழுத்தாகிய சு என்பதைச் சூஊ என்று நீட்டி ஒலிக்கலாகாது. ஆங்கிலத்திலே தூத்துக்குடி, திருவனந்தபுரம் முதலான சொற்களில் வரும் எல்லா ஓலியன்கள் இருந்தும், அவர்கள் மொழியின் இயல்புக்கு ஏற்ப உயிரொலிகளைச் சுருக்கியும், களைந்தும், திரித்தும் Tuticorin, Trivandrum என்கிறார்கள். அதுபோலவேதானே நாமும் தமிழில் நம் மொழியின் இயல்பின் படியும், ஒலிநுட்ப உண்மையைப் பின்பற்றியும் நிக்கோலசு என்றும் கோப்பர்னிக்கசு என்றும் எழுத வேண்டும் என்கிறோம். எனவே கட்டுரையில் மாற்றிவிடுகிறேன். அதற்கு முன் மறுப்பு இருந்தால் தெரிவிக்கவும்.--செல்வா 15:40, 20 சனவரி 2012 (UTC)
- ஆம் மறுப்பு உள்ளது. குறுந்தகடு திட்டத்தின் கட்டுரைகளில் இது ஒன்று. அருள் கூர்ந்து சீராகச் சென்று கொண்டிருக்கும் அத்திட்டத்தில் கிரந்தப் பயன்பாடு பற்றிய பழைய சர்ச்சைகளை கொண்டு வரவேண்டாம். இந்தத் திட்டத்தைக் கையில் எடுக்கும் போதே சர்ச்சைக்குரிய மாற்றங்கள் செய்ய வேண்டாம் என்று பேசிய பின்னரே முடிவு செய்தோம். கிரந்தம் பற்றிய மீண்டும் மீண்டும் அதே போன்ற உரையாடல்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ் விக்கியில் பலரது நேரத்தையும் உழைப்பையும் வீணடித்து, தமிழ் விக்கி பற்றிய ஒரு கெட்ட பிம்பத்தை வெளியில் உருவாக்கியுள்ளது. இப்போது இந்தக் கட்டுரையிலும் இதை நுழைத்து 1001 வது தடவையாக பழைய விவாதங்களையே தொடர்ந்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். “நிக்கொலசு கோப்பர்னிக்கசு” என்று எழுத விரும்புவோர் எழுதட்டும் “நிக்கோலஸ் காப்பர்நிக்கஸ்” என்று எழுத விரும்புவோர் எழுதட்டும். கிரந்தமற்றல் தேவையற்ற வீண் சர்ச்சைகளை வளர்த்து நமது நேரத்தை வீணடித்து விக்கியின் வளர்ச்சியினைத் தடுக்கிறதே ஒழிய ஆக்கப்பூர்வமாக எதையும் சாதிப்பதில்லை. --சோடாபாட்டில்உரையாடுக 15:50, 20 சனவரி 2012 (UTC)
- சோடாபாட்டில், மறுப்பு உள்ளது என்கிறீர்கள், சரி, ஆனால் மேலே நான் சொல்லியதில் என்ன கருத்துப்பிழை என்று கூறவில்லை. "தமிழ் விக்கியில் பலரது நேரத்தையும் உழைப்பையும் வீணடித்து" என்னும் உங்கள் கருத்தையும் நான் மறுத்துக்கூறக் கடமைப்பட்டுள்ளேன். இங்கு கருத்துகளை முன் வைப்பதும், அதற்கான காரணங்களை முன் வைப்பதும் நேரத்தையும் உழைப்பையும் வீணடிப்பதா? இங்கு அறிவான முறையிலே, அறமான முறையிலே கருத்தாடித்தானே செய்துவருகின்றோம்? நேரத்தை வீணடிப்பது போன்ற புண்படுத்தும் சொற்களால் பிற பயனர்கள் நன்னோக்கத்துடன், முறையாக முன்வைப்பதைக் கூறுவதற்கு நான் என் எதிர்ப்பைப் பதிவு செய்கிறேன்! "1001 வது தடவையாக பழைய விவாதங்களையே தொடர்ந்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்" ??? நேரத்தை வீணடிப்பதா நோக்கம்?!! இதுகாறும் ("கடந்த ஐந்து ஆண்டுகளாக") நான் தமிழ் விக்கிப்பீடியாவுக்குச் செய்தவை, இங்கு பகிர்ந்த கருத்துகளை "நேர வீணடித்தல்" "பலரது நேரத்தையும் உழைப்பையும் வீணடித்தல்" என்று நீங்கள் கூறுதல் தனிப்பட செய்யும் தாக்குதல். இது கண்டு நான் வருந்துகிறேன்!! ஆனால் சோடாபாட்டில் உங்கள் கருத்துகள் நல்ல பண்பான உரையாடலுக்கு உகந்ததல்ல, ஏற்புடையதும் அன்று. --செல்வா 16:24, 20 சனவரி 2012 (UTC)
- (இது நான் மறுமொழி எழுதியபின் சோடாபாட்டில் சில திருத்தங்கள் செய்துள்ளார். என் மறுமொழி அவருடைய முன் பதிவைப் பார்த்து இட்டது)--செல்வா 16:25, 20 சனவரி 2012 (UTC)
- இதைத் தனிப்பட்ட தாக்குதலாக நீங்கள் எடுத்துக் கொண்டால் நானொன்றும் செய்ய இயலாது. உண்மை நிலையினை எடுத்துச் சொல்கிறேன். இங்கு எவ்வளவு முறை இந்த கிரந்த உரையாடல் நிகழ்ந்துள்ளது. எத்தனை முறை மீண்டும் மீண்டும் இதே கருத்துகளைப் பேசியிருக்கிறோம். இதை எத்தனை பேர் எதிர்த்திருக்கிறார்கள் என்பவை அனைவரும் அறிந்ததே. காப்பகங்களில் அவைக் காணக் கிடைக்கின்றன. 2006 இல் பேசிய அதே உரையாடலை ஐந்து ஆண்டுகளாகப் பேசி 2012 இலும் பேசிக் கொண்டிருப்போமெனில் அது நேரத்தை வீணடிப்பது தான். இவ்வளவு முறை பேசியும் இது மீண்டும் நிகழுகின்றது என்றால் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றே பொருள். உங்களை கிரந்தத்துடன் எழுது என்று யாரும் வற்புறுத்தவில்லை, அது போல பிறரை வற்புறுத்த வேண்டாம். இந்த உரையாடல்களால்/செயலகளால் என்ன பயன் விளைந்துள்ளது?. சில பயனர்கள் விக்கியை விட்டுச் சென்றிருக்கிறார்கள். “தமிழ் தாலிபான்” என்ற பட்டம் வாங்கியிருக்கிறோம். வெளியில் எங்கு சென்றாலும் தமிழ் விக்கியில் கிரந்தத் துப்புரவு செய்வீர்களாமே, தமிழ் தாலிபானாமே என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லியே நேரம் வீணாகுகிறது. கட்டாயமாக மாற்ற மாட்டார்கள், விக்கி தாராண்மிய நோக்குடையது, தாலிபான் எல்லாம் கிடையாது, அவரவர் விருப்பபடி எழுதலாம் என்று வலிந்து அனைவரிடம் இரு ஆண்டுகளாக சொல்லி விட்டு, இங்கு ஒவ்வொரு கட்டுரையில் கிரந்தம் களையப் படுவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் யாரையும் கிரந்தம் தவிர்த்து எழுதென்றும் சொல்வதில்லை, தவிர்த்து எழுதுவதை மாற்றுவதுமில்லை. இது பற்றி விவாதிப்பதை விட தமிழ் விக்கியில் செய்ய வேண்டியன ஆயிரக்கணக்கில் உள்ளன என்பது தான் என் நிலை. 2006 இல் என்ன பேசினோமோ அதையே 2012 இலும் பேசிக் கொண்டிருந்தால் தமிழ் விக்கி வளராது. செய்ய வேண்டிய துப்புரவுப் பணிகள் ஆயிரம் உள்ளன. இரு முறை தொடங்கி வேலை செய்ய ஆளில்லாமல் குறுந்தகடுத் திட்டம் சற்றும் நகராமல் நிற்கிறது. இதை இழுத்துப் போட்டு பயனர்களைத் திரட்டி, திட்டமிட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக சற்று முன்னேற்றம் கண்டிருக்கும் போது இந்த உரையாடல். வேறெந்தப் பணிகளிலும் உதவிக்கு வராமல், ஒரு கட்டுரையையும் உரை திருத்த உதவாமல் ஏழு ஆண்டுகளாக கிரந்தத் தலைப்புடன் இருந்த கட்டுரையில் கிரந்தம் களைய வந்திருக்கிறீர்கள். இத்திட்டத்தை எப்படியாவது நடத்தி குறுந்தகடை வெளியிட்டு விட வேண்டுமென்று முனைந்த போதே இம்மாதிரியான சர்ச்சைகள் வந்து நேரம் வீணாகக் கூடாது என்றே முடிவு செய்தோம். தெரிவு, துப்பரவு, சரி பார்த்தல், ஒருங்கிணைப்பு, நுட்பம், வெளியீடு, விநியோகம் என மூன்று மாதங்களுக்கு செய்ய வேண்டிய வேலைப்பளு முதுகை முறிக்குமளவுக்கு உள்ள போது இப்போது இந்த நிமிடம் நாம் செய்து கொண்டிருக்கும் உரையாடல் நேர வீணடிப்பே. இதில் எந்த ஐயமும் எனக்கில்லை. நான் மேற்சொன்ன அனைத்தும் உண்மை, உண்மைக்குப் புறம்பானது எதுவும் கிடையாது. இது தனிப்பட்ட தாக்குதலாக நீங்கள் கொள்வீர்களெனில் நான் என்ன செய்ய முடியும்.--சோடாபாட்டில்உரையாடுக 17:43, 20 சனவரி 2012 (UTC)--சோடாபாட்டில்உரையாடுக 17:43, 20 சனவரி 2012 (UTC)
2
தொகு- ஆங்கில விக்கிப்பீடியாவில் "Nicolaus Copernicus (German: Nikolaus Kopernikus; Italian: Nicolò Copernico; Polish: Mikołaj Kopernik" என்று தந்திருப்பதைப் பார்க்கவும். இத்தாலிய மொழியில் நிக்கொலோ கோப்பர்னிக்கோ என்று கூறுகிறார்கள். போலந்திய மொழியில் கோப்பர்னீக் என்று முடிக்கிறார்கள். தமிழில் நிக்கோலசு கோப்பர்னிக்கசு என்றால் என்ன பிழை? மேலும், மேலே தமிழின் ஒலிநுட்ப முறையைப் பற்றியும் குற்றியலுகரம் பற்றியும் கூறியுள்ளதைப் பார்க்கவும். அகராதி, கலைகளஞ்சியம் போன்றவை சீர்மை உடையதாக இருக்க வேண்டும். அறிவார்ந்த தமிழ் முறையை ஏன் ஒதுக்க வேண்டும்? --செல்வா 16:42, 20 சனவரி 2012 (UTC)
//இது நுட்பமாக ஒலியியலை உற்று அறிந்ததன் விளைவு. காசு,கொசு முதலான சொற்களோடு பிற சொற்கள் சேரும்பொழுது காசு+ இல்லாமல் = காசில்லாமல் (குற்றியலுகரம் ஓடிவிட்டது), காசு + ஓடு = காசோடு என்று குற்றியலுகரம் கெட்டு அடுத்து வரும் உயிரோடு காற்றொலி சகரம் போன்ற ஒலி சேருவதைப் பார்க்கலாம். "காஸ்/கியாஸ் (gas) இல்லை" என்று சொல்லும்பொழுதும் ஸ் என்பது ஸு என சிறிதளவு உகரம் அல்லது ஓர் உயிரொலி சேர்ந்தே முடியும்// - இதுபோன்ற இலக்கண விதிகளைக் கொண்டோ பல மாத்திரைக் கணக்குகளைக் கொண்டோ கிரந்தப் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவரமுடியாது. மேலும், இக்கட்டுரையினைப் படிப்பவருக்கு இதுபோன்ற விவாதங்களும் பயனற்றவை. அவர் கோபர்நிகசைப் பற்றி அறிந்து கொள்ளத்தான் விக்கி வருவாரேயொழிய அவரது பெயரினை வரிவடிவில் எழுதப் பழகவோ அதை உச்சரித்துப் பழகவோ கண்டிப்பாக இல்லை. மேலும், பல பாடநூல்களிலும் பொது ஊடகங்களிலும் இவ்வாறு பயன்படுத்தப்படும் ஒன்றை நாம் வலுவாக மாற்றுவது சோடாபாட்டில் சொல்வது போல தமிழ்விக்கி பற்றிய ஒரு கெட்ட பிம்பத்தையே வெளியில் உருவாக்கியுள்ளது. மேலும், எனது வகுப்புத் தோழர்கள் பலரும் என்னைப் பார்த்து ஆர்வமாகத் தொகுக்க முன்வருகின்றனர். ஆனால், சில கிரந்த எதிர்ப்புக் கட்டுரைகளைப் படிக்கும் அவர்கள் "தூய தமிழ்ல தான் விக்கியில எழுதனுமா?" என்று கேட்கின்றனர். "ஆம்" என்ற பதிலும் "இல்லை" என்ற பதிலும் ஒவ்வொருவரிடத்தும் ஒவ்வொரு வகையான புறத்தோற்றத்தை உருவாக்கக்கூடும். எனவே, நான் "பழைய" சண்டைகளை எடுத்துக் காட்டி "உனக்குப் புடிச்ச மாதிரி எழுது!" என்றுவிடுவேன். எனவே, இன்னும் இச்சிக்கலை விவாதிக்காமல், அவரவர் பாணியில் எழுதவும் இதுபோன்ற பல இலக்கணவிதிகளைக் காட்டிப் புதியவர்களைப் (இலக்கணத்திற்கு) பயமுறுத்தவும் வேண்டாம். கட்டுரையைத் தொடங்குபவர் நிக்கோலஸ் கோபர்நிகசையோ ஸ்டீவ் ஜாப்சையோ மார்க் சக்கர்பர்கையோ காண்டலீசா ரைசையோ இஸ்ரேலையோ குவார்ட்சையோ எப்படிப் படித்துப் பழகினாரோ அப்படித்தான் எழுதுவார். எனவே, இதுபோன்று பயனற்ற இடங்களில் (என் பார்வையில்) தமிழ் வளர்ப்போ தனித்தமிழ்ப் போக்கோ வேண்டாமென்று நினைக்கிறேன். இதுநாள் வரையில் விக்கியிலும் வெளியிலும் இப்படியே நான் தமிழில் எழுதுகிறேன். இதற்கு எந்தக் குறைபாடும் எந்த இழிசொல்லும் நான் எதிர்நோக்கியதில்லை. எனவே, ஆளாளுக்கு எப்படி வருகிறதோ அப்படி எழுதுவோம்.
- "பொதுமை என்பது பயன்பாடின்றி வராது!" என்பதையும் நான் உணருகிறேன். இருந்தாலும் அப்பயன்பாட்டை இயலா இடங்களில் வலுக்கட்டாயமாகப் புகுத்துதல் கண்டு அப்பயன்பாடே தமிழில் இல்லாமல் போய்விடுமோ என்று அச்சப்படுகிறேன். எனவே இதுபோன்ற விவாதங்களை இனி கூடியமட்டிலும் தவிர்த்து குறுந்தட்டுத் திட்டம், முதற்பக்க உள்ளடக்க மேம்படுத்தும் பணிகள், புதுப்பயனர் உதவிகள், புதுக்கருவி புகுத்தல், விக்கியைப் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லுதல் போன்ற புதிய கோணங்களில் தமிழ்விக்கியை எடுத்துச் செல்வோமாக! -- சூர்யபிரகாஷ் உரையாடுக 16:58, 20 சனவரி 2012 (UTC)
- நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் எனும் கட்டுரை மார்ச்சு 5 2004 அன்று Mayooranathan அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 200க்கு மேற்பட்ட திருத்தங்களைக் கண்டுள்ளது. இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்றாகவும் இருக்கின்றது. சுமார் 7 ஆண்டுகளுக்குப் பின் தலைப்பு தொடர்பான பிரச்சினையைப் பெரிது படுத்துவது ஏனென்று என்னால் ஊகிக்க முடியவில்லை. இதுவரை ஏன் இந்த இத்தவறுகள் கண்டறியப்படவில்லை? குறுந்தகடு திட்டத்திற்கு பாதிப்பாக இருந்தால் தலைப்பு மாற்றத்தை விட்டுவிடுவதே சிறந்தது. ஏனைனில் ஏழு ஆண்டுகள் காட்சிப்படுத்தப்பட்ட நேரத்தில் காணப்படாத தவறு இப்போது பெரிது படுத்தப்படும் போது இது தேவையற்ற சந்தேகங்களையே தோற்றுவிக்கும்--P.M.Puniyameen 17:17, 20 சனவரி 2012 (UTC)
- சீர்மை என்று வரும் பொழுது மட்டும் பிற விக்கிகளில் எப்படி தலைப்பிடுகிறார்கள் என்று சுட்டுகிறீர்கள். பிற விக்கிகளில் தலைப்பிடும் முறை பற்றி படித்துப்பாருங்கள் en:WP:COMMONNAME என்ற விதிப்பக்கம் இதனைத் தெளிவுபடுத்தும். எந்த வடிவம்/முறை ஒரு மொழியின் ஊடகங்களிலும் மக்களாலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறதோ அதையே அம்மொழி விக்கியில் பயன்படுத்த வேண்டுமென்பது மிகப் பெரும்பாலான விக்கிகளில் உள்ள கொள்கை. நானறிந்து இப்பொதுமை முறையை கட்டாயமாக அமல் படுத்தாத திட்டம் தமிழ் விக்கி ஒன்று தான். உங்களைப் போலவே பிற மொழி விக்கிகளை சுட்டி விட்டு, பொதுப்பெயர் என்று கிரந்ததை நானோ பிறரோ தலைப்புகளில் வலிந்து திணிக்கலாமா?. “காப்பர்நிக்கசு” என்று நீங்கள் எழுதுவதில் பிழை என்று நானும் இங்கு வேறு யாரும் சோல்லுவதில்லை. ஆனால் 99% பேர் பயன்படுத்தும் “காபர்நிகஸ்” ஐ பிழை என்று சொல்லி மாற்றக் கோருவது நீங்கள் தான். கிரந்தத்தை நீக்கும் போது அடைப்புகளில் கூட கிரந்ததம் கலந்த தலைப்பை சேர்க்க மறுப்பதும் நீங்கள் தான். கிரந்தம் மட்டுமன்றி இலங்கை வழக்கு/ தமிழ்நாடு வழக்கிலும் இதே போல “சீர்மை” வேண்டுமெனக் கோரி வருகிறீர்கள். ”சீர்மை” என்பதில் சிக்கல் ஏற்படின் பிற விக்கிகளில் மொழி பேசும் மக்களால் அதிக அளவில் பயன்படுவதையே எடுத்துக் கொள்வர். அப்படி நாமும் இங்கு “சீர்மை”யை அமல் படுத்தலாமா? அதனால் எவ்வளவு சர்ச்சைகள் நிகழும்.!!! பிற மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்தும் பொதுமொழிப் பயன்பாட்டின் பிரதிபலிப்புகளாகவே உள்ளன. எழுத்து தூய்மைப்படுத்தல் வாகனங்களாக அல்ல. இம்மாதிரியான ஒரே உரையாடலை ஆண்டு கணக்காக நடத்தி திட்டங்களைக் கோட்டை விடுவதற்கு கிரந்தம் எழுதுவோரும் எழுதாதோரும் அவரவர் விருப்பத்தில் எழுதட்டும் வழிமாற்றுகளும் அடைப்புகுறிகளும் கொண்டு பிற வடிவத்தைத் தரலாம் என்று விட்டுப் போகலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 17:40, 20 சனவரி 2012 (UTC)
3
தொகுஇப்படி ஒவ்வொரு கட்டுரையிலும் மாத்திரை, இலக்கணம், ஒலிப்பு பற்றி வகுப்பு எடுத்தும், விக்கிப்பீடியா கட்டுரைகளை மாற்றிக் கொண்டிருப்பதை விட விக்கிநூல்களில் கிரந்தமற்ற தமிழ் எழுதுவது எப்படி என்று இலக்கண நூலகள் எழுதுங்கள். பரப்புங்கள். பின்வரும் தலைமுறைக்குப் பயன்படும். படிப்பவர் படித்து விட்டு மனம் மாறி எழுதினால் உங்கள் நோக்கம் நிறைவேற வாய்ப்புண்டு. ஆனால் இப்போது எழுதுபவரை அவரவர் போக்கில் எழுத விட்டால் தான் தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிப் பாதையில் செல்லும்.--Booradleyp 17:57, 20 சனவரி 2012 (UTC) விருப்பம் -- சூர்யபிரகாஷ் உரையாடுக 18:04, 20 சனவரி 2012 (UTC)
- Booradleyp கருத்தை ஆதரிக்கின்றேன்--P.M.Puniyameen 18:12, 20 சனவரி 2012 (UTC)
வணக்கம். இங்கு நடக்கும் உரையாடல் குறித்து என்னுடைய சில கருத்துகளைப் பதிய விரும்புகிறேன். செல்வா கடந்த சில நாட்களாகப் பல கட்டுரைகளில் பங்களித்து வருகிறார். பேச்சுப் பக்கங்களிலும் கருத்து தெரிவித்து வருகிறார். அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாக இப்பேச்சுப் பக்கக் கருத்தும் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. இப்பக்கம், குறுந்தட்டுத்திட்டத்தில் இருப்பது, குறுந்தட்டுத் திட்டத்தில் உள்ள கட்டுரைகளில் கிரந்தப் பிரச்சினையைக் கொண்டு வர வேண்டாம் என்ற புரிந்துணர்வு உள்ளது குறித்து அவர் அறியாமல் இருக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே, குறுந்தட்டுத் திட்டத்தில் உள்ள ஒரே காரணத்துக்காக அவர் இங்கு கருத்து தெரிவித்திருப்பதாக எண்ணவில்லை. தகுந்த காரணங்களைச் சொல்லி மாற்றலாமா என்று முறையாகவே கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு உள்ளவர்கள் அதைச் சொல்லலாம். தவிர, இதே போன்ற உரையாடல்கள் பல பக்கங்களில் நடப்பது அயரச் செய்தால், பொதுவான ஒரு கொள்கைப் பக்கத்தில் இதனை முன்வைத்து உரையாடுமாறு வேண்டுவதும் முறை. இதையே தான் நான் செல்வாவிடமும் வேண்டுவேன். ஏனெனில், அவரது கருத்தைப் பலர் படிக்காமல் போகலாம். படித்தும் புறக்கணிக்கலாம். ஆனால், திரும்பத் திரும்ப இவற்றை எழுதுவதால் அவரது நேரம் தான் முதற்கண் வீணாகிறது. இந்த நேரத்தில் பல அரிய கட்டுரைகளை அவரால் படைக்க முடியும். அதனால், இந்தக் கருத்தால் குறுந்தட்டுத் திட்டத்துக்கான நேரம் வீணாவதாக நான் எண்ணவில்லை.
செல்வா 2006 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். கட்டுரைப் பங்களிப்புகள் போக, அப்போதைய பல பயனர்களுக்கு உந்துதலாகவும் கலைச்சொல்லாக்கத்தில் உதவியாகவும் இருந்துள்ளார். கட்டுரைப் போட்டி சமயத்தில் அதற்கான ஒருங்கிணைப்புகளில் உழைத்துள்ளார். இன்று வரையும் பல மட்டங்களில் தமிழ் விக்கிப்பீடியா பற்றி எடுத்துரைத்து ஒரு தூதுவராக விளங்கி வருகிறார். எனவே, அவருடைய செயற்பாடுகளால் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி தடைப்பட்டது என்பது போன்ற கருத்துகளுக்கு எனது மறுப்பைப் பதிவு செய்கிறேன்.
ஒரு திட்டத்தில் பல்வேறு வகையான உரையாடல்கள் திரும்பத் திரும்ப நிகழ்வது எதிர்பார்க்கக்கூடியது தான். இதற்கும் எல்லா விக்கிகளிலும் இருந்தும் எடுத்துக்காட்டு கொடுக்க முடியும். அதையும் தாண்டித் தான் திட்டம் வளர வேண்டும். பெரும்பான்மை வழக்கு, அவரவர் வழக்கு என்பது இலகுவான தீர்வாகத் தோன்றினாலும் தமிழ்நாட்டு வழக்கு, இலங்கை வழக்கிலும் கூட நாளை இது ஒரு பிரச்சினையாகலாம். தற்போது பல கட்டுரைகளில் இலங்கை வழக்கு முதன்மையாகவும் இணையாகவும் உள்ளது. அதையும் கூட தமிழ்நாட்டுத் தமிழர் சொல்வது போல் மாற்று என்று நாளை பிரச்சினை வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. (புன்னியாமீன் கவனிக்க) ஆனால், இன்று வரை இந்த விசயத்தில் நல்ல ஒரு புரிந்துணர்வைக் கொண்டுள்ளோம். அதே போன்ற புரிந்துணர்வை மற்ற விசயங்களிலும் எட்ட முடியும் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி--இரவி 19:27, 20 சனவரி 2012 (UTC)
- பெரும்பான்மை வழக்கு, அவரவர் வழக்கு என்பது இலகுவான தீர்வாகத் தோன்றினாலும் தமிழ்நாட்டு வழக்கு, இலங்கை வழக்கிலும் கூட நாளை இது ஒரு பிரச்சினையாகலாம். இதை எப்படிக் கையாளுகிறோம். முதலில் எழுதுவோர் எப்படி எழுதினாரோ அதை அப்படியே மாற்றாமல் விட்டு அடைப்பில் மாற்று வழக்கைத் தானே தருகிறோம். அதே முறையைத் தான் கிரந்ததுத்துக்கு கையாளச் சொல்கிறோம் இங்கே. தீர்வு காணுவோம் தீர்வு காணுவோம் என்று சொல்லி விட்டு “கிரந்தமகற்றல் என்பதே ஒரே தீர்வு” என்பதல்லவா இங்கு நடக்கிறது. இங்கு மூன்று தரப்புகள் உள்ளன
- கிரந்தம் கட்டாயம் அனைவரும் எழுத வேண்டும். வலிந்து முடிந்த வரை கிரந்தம் புகுத்துதல்
- கிரந்தம் கட்டாயம் அனைவரும் எழுத வேண்டாம். வலிந்து முடிந்தவரை நீக்குதல்
- அவரவர் விருப்பபடி எழுதுவோம். வழிமாற்றும் அடைப்புக் குறிகள் கையாளுவோம். (இலங்கை/தமிழ்நாடு வழக்கு போன்றே)
- முதல் தரப்பு தமிழ் தாலிபான்கள் என்று இரண்டாம் தரப்பைச் சாடிவிட்டு விக்கியை விட்டு வெளியே போய்விட்டது. மூன்றாம் தரப்பு அவரவர் பணியைச் செய்து கொண்டிருக்கிறது. இரண்டாம் தரப்பு அவ்வப்போது முடியும் போதெல்லாம் பழைய கட்டுரைகளையும், மூன்றாம் தரப்பினரின் கட்டுரைகளிலும் கிரந்தமகற்றிக் கொண்டு புதிய விவாதங்களை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. ”தாலிபான்கள்” என்ற அவப்பெயர் மட்டும் பிடிக்கவில்லை ஆனால் நான் சொல்லும் வழியே சிறந்தது, நான் சொல்வது போல அனைவரும் செய்யுங்கள் என்று வலியுறுத்துதல் எவ்விதத்தில் நியாயம்?. தாலிபானியத்தின் வரைவிலக்கணத்தை ஒத்த செயல்பாடே இது. இன்று தமிழ் விக்கியில் தொடர்ச்சியாக எழுதும் இத்தனை பேர் பிறரை விருப்பம் போல் எழுத விடுங்கள் என்று சொல்லி விட்டோம். இரண்டாம் தரப்பினர் ஒத்துக் கொள்ளவீர்களா?. மீண்டும் மீண்டும் நீங்கள் சொல்லும் தீர்வை நாங்கள் ஏற்கும் வரை வலியுறுத்தத்தானே போகிறீர்கள்?. இதைத் தானே செல்வா இங்கு ஆறாண்டுகளாகச் செய்து கொண்டிருக்கிறார். ஏதோ புதிதாகத் தீர்வு ஏற்பட்டுவிடும், புரிந்துணர்வு ஏற்பட்டுவிடும், எட்டி விடுவோம் என்று சொல்கிறீர்கள். அதாவது இரண்டாம் தரப்பின் கருத்தை அனைவரும் ஏற்கும் வரை இந்த உரையாடல் தொடரும். அப்படித்தானே? இலங்கைத் தமிழ்/தமிழ்நாட்டுத் தமிழ் விசயத்தில் எவ்வளவு எளிமையான அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வு உள்ளது. அதை கிரந்தத்திலும் செய்ய மறுப்பது யார்?. பெரும்பான்மையினர் சகித்துக்கொள்ளக்கூடிய தீர்வு கண் முன்னால் உள்ளது. ஏற்றுக் கொள்ள இயலாதவர்கள் மீண்டும் மீண்டும் கட்டுரை கட்டுரையாய் கிரந்தமகற்றல் நிகழ்த்தி வருகிறார்கள்.
- ஒரு கொள்கை உருவாக வேண்டுமெனில் இணக்க முடிவு வேண்டும். அது கிரந்த விசயத்தில் கிடையாதென்பதை அனைவரும் அறிவோம். இத்தனை நாள் கொள்கையாக மாறாமல் பொதுப்பரிந்துரையாக இருப்பதற்குக் காரணம் அதுதான். அதைப்போலவே இருக்க விடுங்கள். கிரந்தம் தவிர்த்தல் பொதுப்பரிந்துரையாக இருக்கட்டும். இதனை ஏற்று (நான் உட்பட) பலரும் பல அளவுகளில் தவிர்த்து எழுதி வருகிறோம். ஆனால் எழுதிய பின்னர் வந்து மாற்றி விட்டு, புரிந்துணர்வு ஏற்படுமென்றால் எப்படி ஏற்படும். கசப்புணர்வே மிஞ்சும்.--சோடாபாட்டில்உரையாடுக 19:56, 20 சனவரி 2012 (UTC)
3
தொகு//இது நடக்குமென்று தெரிந்து தானே ஜூலை உரையாடலின் போதே கிரந்தமகற்றல்/சேர்த்தல் செய்ய வேண்டாமென்று முடிவு செய்தோம். நீங்களும் ஒப்புக் கொண்டீர்கள்.//
இப்போதும் ஒப்புக் கொள்கிறேன். யாரும் வலிந்து மாற்றினால் கண்டிப்பாக எதிர்ப்பேன். ஆனால், கருத்து சொல்லும் உரிமையும் அதைக் குறித்து உரையாடுவதும் விக்கிக்கொள்கைக்கு உட்பட்டதே.
சோடாபாட்டில், கிரந்தம் என்பதை சற்று ஒதுக்கி வைத்து விட்டு, விக்கியில் ஏற்படக்கூடிய எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் இதை எப்படி அணுகுவது என்று சிந்தித்துப் பார்க்கிறேன். பன்னாட்டு வழக்குகள், ஆங்கில ஒலிபெயர்ப்புகள், கலைச்சொல் தெரிவுகள் என்று இது எந்த ஒரு பிரச்சினையாகவும் இருக்கலாம்.
- ஒரு கருத்து பல பக்கங்களில் வலியுறுத்தப்படுகிறது. இதனால் கருத்தை இடுபவர், ஆதரிப்பவர், மறுப்பவர் எல்லாருக்கும் நேரம் வீணாகிறது.
- இத்தகைய வேளையிலேயே இது குறித்த கொள்கை முன்மொழிவு உரையாடலுக்கு வேண்டுகிறோம்.
- கொள்கை முடிவு எட்டும் வரையில் அதே கருத்தை வலியுறுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு வேண்டலாம்.
இந்த அடிப்படையிலேயே என்னுடைய பரிந்துரையை முன்வைத்தேன். ஏற்கனவே கிரந்தம் பற்றிய உரையாடல்கள் முடிவின்றி ஒரு புரிந்துணர்வுடன் பொதுப் பரிந்துரையாக உள்ளதை நீங்கள் சுட்டிக் காட்டியுள்ளதை ஏற்றுக் கொள்கிறேன். இந்த பொதுப் பரிந்துரையைச் சுட்டிக் காட்டி முறையான மறுப்பைத் தெரிவித்து விட்டிருந்தால் இந்த உரையாடல் முடிந்திருக்கும். அதற்குப் பிறகும் செல்வா தனது கருத்துகளைத் தொடர்ந்திருந்தார் என்றால், அதை எப்படி அணுகுவது என்று சிந்திக்கலாம். ஆனால், இந்த அணுகுமுறையைத் தாண்டி ஒரு பயனரின் செயல்பாடுகளைத் தனிப்பட்ட முறையில் குறை சொல்வது போல் உரையாடல் நீண்டது விரும்பத்தக்கதாக இல்லை.
சில எடுத்துக்காட்டுகள்:
//வேறெந்தப் பணிகளிலும் உதவிக்கு வராமல், ஒரு கட்டுரையையும் உரை திருத்த உதவாமல் ஏழு ஆண்டுகளாக கிரந்தத் தலைப்புடன் இருந்த கட்டுரையில் கிரந்தம் களைய வந்திருக்கிறீர்கள்.//
ஒரு பயனர் விக்கிப்பீடியாவில் எல்லா வகையான பங்களிப்புகளையும் அவர் விரும்பியவாறு நல்கலாம். கண்டிப்பாக, பெரும்பாலானோர் பங்கேற்கும் திட்டத்தில் பங்கேற்கத் தான் வேண்டும் என்றில்லை.
//நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் எனும் கட்டுரை மார்ச்சு 5 2004 அன்று Mayooranathan அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 200க்கு மேற்பட்ட திருத்தங்களைக் கண்டுள்ளது. இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்றாகவும் இருக்கின்றது. சுமார் 7 ஆண்டுகளுக்குப் பின் தலைப்பு தொடர்பான பிரச்சினையைப் பெரிது படுத்துவது ஏனென்று என்னால் ஊகிக்க முடியவில்லை. இதுவரை ஏன் இந்த இத்தவறுகள் கண்டறியப்படவில்லை? குறுந்தகடு திட்டத்திற்கு பாதிப்பாக இருந்தால் தலைப்பு மாற்றத்தை விட்டுவிடுவதே சிறந்தது. ஏனைனில் ஏழு ஆண்டுகள் காட்சிப்படுத்தப்பட்ட நேரத்தில் காணப்படாத தவறு இப்போது பெரிது படுத்தப்படும் போது இது தேவையற்ற சந்தேகங்களையே தோற்றுவிக்கும்//
2004ல் தொடங்கிய கட்டுரையில் இப்போது மட்டுமல்ல 3004ல் கூட வந்தும் திருத்தங்கள் சொல்லலாம். அது விக்கி கொள்கைக்கு உட்பட்டதே. இதில் சந்தேகப்பட என்ன இருக்கு? தமிழ் விக்கிப்பீடியாவில் உரை திருத்துவோர் குறைவே. பல கட்டுரைகளில் பிழை மலிந்துள்ளது. இன்னும் பல ஆண்டுகள் கழித்துத் தான் பிழைகள் முதல் முறையாக காணப்பட்டு களையப்படும்.
இங்கு கிரந்தம் ஆதரிப்போர், எதிர்ப்போர் "நீங்கள், நாங்கள்" என்று ஏதும் கட்சிகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு பக்கத்தில் ஆதரவாகவும் மற்றொரு பக்கத்தில் எதிராகவும் உள்ள தெளிவற்ற நிலையே உள்ளது.
//இரவி, குறுந்தகடு திட்டத்தில் தற்போது வேலை செய்வோர் தான் தங்கள் நேரம் வீணாகிறதா இல்லையா என்று சொல்ல முடியும். சொல்லவும் செய்து விட்டோம். இங்கு திட்டத்தில் பணி புரியும் ஐந்து பேர் சொல்லி விட்டனர் செல்வாவின் இந்த செயல்பாடு திட்டத்திலிருந்து எங்களை திசை திருப்பியுள்ளதென்று. //
எப்படி விக்கியூடகத் திட்டமிடலில் உள்ள திட்டங்களை நிறைவேற்றுவது அந்தந்த திட்டங்களில் செயல்படுபவர்களின் பொறுப்பு, மற்றவர்களின் பங்களிப்புகளைக் கட்டுப்படுத்தக்கூடாது என்கிறோமோ, அதே போல் இதையும் கருதலாம். குறுந்தட்டுத் திட்டம் நடைபெறுவதாலேயே மற்ற பயனர்கள் தங்கள் வழமையான கருத்து தெரிவிக்கும் பங்களிப்பை நிறுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கமுடியாது.
மற்றபடி,
//பல கிரந்தத்தோடு எழுதி வந்த இத்தனை பேர் விக்கிக்கு வந்த பின்னர் கிரந்தம் குறைப்போம், பிறர் எழுதினால் எழுதட்டும் என்று மாறியிருக்கிறோம். //
நானும் இந்த வகை தான். என்னுடைய தனிப்பட்ட வலைப்பதிவுகளில் கிரந்தம் தவிர்க்கிறேன். விக்கிப்பீடியாவில் இயன்றவரை தவிர்க்கிறேன். வலிந்து கிரந்தம் நீக்குவதில்லை. குறிப்பாக, பிற கட்டுரைகளை உரை திருத்தும் போது. என்னைப் போன்று பலரும் உள்ளனர். அவர்களில் ஒரு சிலராவது செல்வா போன்றோர் சொல்லிய கருத்துகளைச் சீர் தூக்கிப் பார்த்து முடிவு செய்தவர்கள். செல்வாவின் வழமையான செயற்பாடுகளை அறிந்தும், தங்கள் நடையிலேயே வழக்கமாக கிரந்தோ கலந்தோ கலக்காமலோ எழுதுவோரும் விக்கிப்பீடியாவில் உள்ளனர்.
எனக்குத் தெரிந்து வினோத் மட்டுமே கிரந்தப் பிரச்சினையால் தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து வெளியேறியவர். அவர் ஒருவர் மட்டுமே தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வெளியேவும் தமிழ் வழி அறிவு சார் செயல்பாடுகளில் ஈடுபடுகிறவர். "தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்த ஒழிப்பு" என்று பூதம் காட்டும் பல பேரிடம் "நீங்கள் கிரந்தம் கலந்து உங்கள் நடையிலேயே எழுதுங்கள். அதை மற்றவர்கள் நீக்காமல் இருக்க நான் பொறுப்பு" என்று உறுதி கொடுத்து கூட அழைத்திருக்கிறேன். ஆனால், அவர்கள் ஒரு கட்டுரையைக் கூட எழுதியது இல்லை. விக்கிப்பீடியாவுக்கு வெளியேவும் கட்டற்ற அறிவு சார் செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை. "சமூகம் ஒரு சாக்கடை, நான் இறங்கி சுத்தம் செய்ய மாட்டேன்" என்று நொண்டிச் சாக்குச் சொல்லி விட்டு மேலும் துப்பி விட்டுப் போகிறாவர்கள் மாதிரியே, தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க சோம்பல்படுகிறவர்களுக்கு, விரும்பாதவர்களுக்கு கிரந்தம் ஒரு வசதியான சாக்குப் போக்காக இருக்கிறது. எனவே, நான் இது போன்ற முறையீடுகளைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. கிரந்தம் தொடர்பான உரையாடல்கள் அவ்வப்போது எழுந்து அடங்குவதால் தமிழ் விக்கியின்வளர்ச்சி தடைபடுவதாகவும் எண்ணவில்லை. விக்கி போன்ற பொதுத் திட்டத்தில் இதுவும் ஒரு பகுதி. இங்கு கிரந்தம் வேண்டுமா வேண்டாமா என்பதை விட எந்த ஒரு பிரச்சினையையும் எப்படி அணுகுகிறோம் என்பதே முக்கியம். . --இரவி 22:19, 20 சனவரி 2012 (UTC)
4
தொகு//இங்கு கிரந்தம் ஆதரிப்போர், எதிர்ப்போர் "நீங்கள், நாங்கள்" என்று ஏதும் கட்சிகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு பக்கத்தில் ஆதரவாகவும் மற்றொரு பக்கத்தில் எதிராகவும் உள்ள தெளிவற்ற நிலையே உள்ளது.//
இன்று இங்கு நடந்த உரையாடல்களே யார் எதை விரும்புகிறார்கள் என்று தெளிவாகச் சொல்கின்றன. கருத்து தெரிவித்தவர்களில் பெரும்பாலோனோர் அவரவர் விருப்பபடி எழுத விடலாம் என்று சொல்லிவிட்டோம். இதனை மதித்து அடுத்து மற்ற கட்டுரைகளில் இருந்து விட்டுப் போகிறது என்று விட்டு விடுவீர்களா?. வலிந்து திணிப்பதில்லை என்று சொல்கிறீர்கள். இந்த உரையாடலை பொதுவான பரிந்துரைக்கு அடித்தளமாக்கி “எழுதுவோர் எழுதட்டும்” என்று விடப்போவதில்லை. மீண்டும் மீண்டும் ஏதேனும் ஒரு கட்டுரையில் போய் கிரந்தம் அகற்றல் முயற்சி தான் நடக்கப் போகிறது என்பதில் எனக்கு ஐயமில்லை. இவ்வளவு பேரிடம் எதிர்ப்பிருக்கிறது. ஒரு ஆறு மாத காலம் கிரந்தமகற்றச் சோல்லி உரையாடவேண்டாமென யாரும் ஒத்துக்கொள்ளப் போவதில்லை. எதிர்ப்போர் சலிப்புத் தட்டி ஏதேனும் செய்யுங்கள் என்று விட்டுவிடும் வரை இது நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.
//குறுந்தட்டுத் திட்டம் நடைபெறுவதாலேயே மற்ற பயனர்கள் தங்கள் வழமையான கருத்து தெரிவிக்கும் பங்களிப்பை நிறுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கமுடியாது.//
இது தான் சிக்கலின் அடிப்படையே. பலருக்கு விக்கியில் பல வேலைகள் உள்ளன. சிலருக்கு கிரந்தமகற்றலே வழமையான பணியாக உள்ளது. எதிர்ப்பவர் ஒவ்வொரு கட்டுரையின் பேச்சுப்பக்கத்திலும் வந்து வாதம் செய்ய இயலாதிருப்பதை பயன்படுத்தி கிரந்த அகற்றம் நடக்கிறது இங்கே. இக்கட்டுரை தற்செயலாக குறுந்தட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் இங்கு அனைவரும் எதிர் கருத்து சொல்ல வந்து விட்டோம். பிற கட்டுரைகளில் தொடர்ச்சியாக வந்து நீக்காதீர்கள் நீக்காதீர்கள் என்று கருத்து சொல்லிக்க கொண்டிருக்க எங்களால் இயலாது. கிரந்தம் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் விக்கியில் பிற விருப்புகள் கொண்டுள்ளோம். இத்திட்டம் வேலை செய்ய ஆளின்றி இருமுறை நின்று போனது. இப்போது சிலர் தாமாக முன்வந்து அதை எடுத்துச் செய்து கொண்டிருக்கும் வேளையில், வந்து ஒவ்வொரு கட்டுரையாக மறுப்பு தெரிவித்துக் கொண்டிரு என்றால் என்ன செய்வது?. இழுத்துப் போட்டு செய்ய முன்வந்தோர் இவ்வாறு தொடர்ச்சியாக ஒரே சண்டையைப் பிடிவாதமாகப் போட்டுக் கொண்டிருக்காமல் இருப்பதால் தான் திட்டம் முன்னேறுகிறது. திட்டமும் நடைபெறாது விக்கியும் வளராது; கிரந்த உரையாடல் தான் நடந்து கொண்டிருக்கும். இன்னும் சில மாதம் நானும் இதைத் தொடர்ந்து செய்யலாம் என இப்போது நினைக்கிறேன். கிரந்தமகற்றலை எதிர்ப்பதே வழமையாகக் கொண்டு உரையாடுகிறேன். அப்படிச் செய்தால் தான் இந்த உரையாடல்களைக் குறைக்க இயலும்.
//"நீங்கள் கிரந்தம் கலந்து உங்கள் நடையிலேயே எழுதுங்கள். அதை மற்றவர்கள் நீக்காமல் இருக்க நான் பொறுப்பு" என்று உறுதி கொடுத்து கூட அழைத்திருக்கிறேன்.//
இதே உறுதியை இங்கு எங்களுக்குத் தாருங்களேன். எவ்வளவு எதிர்ப்பிருக்கிறது என்று இப்போது உங்களுக்குத் தெரிந்து விட்டது. இருப்பதை மாற்ற வேண்டாமென்று பலரும் கருதுகிறார்கள் என்று தெளிவாகிவிட்டது. இதை இப்படியே ஏன் விட்டு விடக்கூடாது. மீண்டும் இன்னொரு கட்டுரையில் இதே உரையாடலைத் தொடங்கி அங்கும் எதிர்ப்போர் வந்து கருத்து தெரிவிக்க வில்லையெனக் கூறி கிரந்தமகற்றுவது அறமா?
//கிரந்தம் தொடர்பான உரையாடல்கள் அவ்வப்போது எழுந்து அடங்குவதால் தமிழ் விக்கியின் வளர்ச்சி தடைபடுவதாகவும் எண்ணவில்லை.//
ஏனெனில் கிரந்தமகற்றலை எதிர்ப்போர் பேசி நீட்டிப்பதை விடப் பல்லைக்கடித்துக் கொண்டு கிரந்தமகற்றலைத் தொழிலாகக் கொண்டவர் செய்துவிட்டுப் போகட்டும், நமக்கு வேறு வேலை இருக்கிறது என்று பொறுத்துப் போவதே. இதைப் பயன்படுத்தியே கட்டுரை கட்டுரையாக உரையாடல் நடக்கிறது. இணக்க முடிவு இல்லையென்பது அனைவருக்கும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்த ஒன்று. பின் எதற்காக கட்டுரை கட்டுரையாகப் போய் புதிய உரையாடல்கள்?. இன்று பலரது கருத்து தெளிவாகத் தெரிகிறது. சரி இனி இந்த உரையாடல்கள் வேண்டாமென்று சில மாதங்களாவது தவிர்க்க முன்வருகிறீர்களா?. குறைந்த பட்சம் குறுந்தட்டுத் திட்டம் முடியும் வரையாவது மீண்டும் மீண்டும் கிரந்தம் பற்றி பேசுவதை நிறுத்தி அவரவர் விருப்புப்படி எழுதலாம் என்று விடலாமே?--சோடாபாட்டில்உரையாடுக 23:23, 20 சனவரி 2012 (UTC)
சோடாபாட்டில்,
//சிலருக்கு கிரந்தமகற்றலே வழமையான பணியாக உள்ளது.//
நீங்கள் பெயர் குறிப்பிடாமல் விட்டிருக்கும் அத்தனை பேரும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு அன்றும் இன்றும் தொடர்ந்து பல்வேறு வகைகளில் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பவர்களே. கிரந்தத்தை நீக்குவதை மட்டுமே வேலையாக கொண்டிருக்கிறார்கள் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்குவதற்கு என் மறுப்பைப் பதிவு செய்கிறேன்.
//இதே உறுதியை இங்கு எங்களுக்குத் தாருங்களேன். //
தருகிறேன். வலிந்து மாற்றாமல் இருக்கத் தான் உறுதி தர முடியும். கொள்கைப் பக்கத்தில் கூட உரையாடவே கூடாது என்று உறுதி தருவதற்கு விக்கி நடைமுறைக்கு உட்பட்டுச் சாத்தியம் இல்லை.
//இதைப் பயன்படுத்தியே கட்டுரை கட்டுரையாக உரையாடல் நடக்கிறது. இணக்க முடிவு இல்லையென்பது அனைவருக்கும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்த ஒன்று. பின் எதற்காக கட்டுரை கட்டுரையாகப் போய் புதிய உரையாடல்கள்?//
ஒரு கட்டுரையில் மாற்றம் செய்வது என்றால் அதன் உரையாடல் பக்கத்தில் எழுதுவது தான் முறை. இதில் முறைகேடாக ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. எனினும், இது அனைவருக்கும் நேர இழப்பாக இருப்பதால், இந்தப் பிரச்சினையை மாறுபட்டு அணுகுமாறு செல்வாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். செல்வாவின் மறுமொழியை எதிர்பார்த்து சற்று பொறுமை காக்குமாறு வேண்டுகிறேன்.
//இத்திட்டம் வேலை செய்ய ஆளின்றி இருமுறை நின்று போனது. இப்போது சிலர் தாமாக முன்வந்து அதை எடுத்துச் செய்து கொண்டிருக்கும் வேளையில், வந்து ஒவ்வொரு கட்டுரையாக மறுப்பு தெரிவித்துக் கொண்டிரு என்றால் என்ன செய்வது?. இழுத்துப் போட்டு செய்ய முன்வந்தோர் இவ்வாறு தொடர்ச்சியாக ஒரே சண்டையைப் பிடிவாதமாகப் போட்டுக் கொண்டிருக்காமல் இருப்பதால் தான் திட்டம் முன்னேறுகிறது. திட்டமும் நடைபெறாது விக்கியும் வளராது;//
மீண்டும் மீண்டும் குறுந்தட்டுத் திட்டத்துடன் இதனை முடிச்சிடுவது சலிப்பூட்டுகிறது. சோடாபாட்டிலுக்கும் நேரத்தை வீண்டிப்பதாகக் கூறும் அனைவருக்கும் பணிவுடன் ஒன்றைக் கூறிக் கொள்கிறேன்: 2010ல் இருந்த தமிழ் விக்கிப்பீடியா வானத்தில் இருந்து நேராக வரவில்லை. 2003 முதற்கொண்டு பலரது உழைப்பையும், நேரத்தையும், நன்னோக்கையும் செலுத்தியே இந்த நிலைக்கு வந்துள்ளது. இதில் கிரந்த ஆதரவாளர்கள், நடுநிலையாளர்கள், எதிர்ப்பாளர்கள் அனைவரும் அடக்கம். தமிழ் விக்கிப்பீடியா திட்டத்தைக் குலைத்தேனும் தமிழை வளர்க்க இங்கு யாரும் நினைக்கவும் இல்லை. எனவே, சிலர் மட்டுமே நேரத்தைச் செலவிட்டு விக்கியை வளர்க்க முனைவதாகவும் மற்றவர்கள் வேலை வெட்டியின்றி கிரந்த மாற்றங்களில் ஈடுபடுவதாகவும் நினைக்க வேண்டாம். நன்றி--இரவி 23:49, 20 சனவரி 2012 (UTC)
Granthification / Degranthafication
தொகுI dont want to get started into reasoning, most of you are probably more knowledgeable on language. To sum up my point on grantha issue, proper nouns, other language words *must* be written how its written by common man. Wikipedia should not be used as a propoganda tool (even if the propoganda promotes technical correctness in using a language which is spoken by millions). Such propoganda must be done outside Wikipedia. I respect editors preference of usage, which is why am not into editing pages making it to use grantha / make it void of it.
As for the CD project is concerned, Back in july when we discussed about content issues, the following were discussed and agreed.
- srikanthlogic: ravidreams: a detailed page on current grantha usage would be mandated in the CD.. they must not think its spelling mistake.. we must make it clear the "as is where is" policy of ta.wiki now06:53:50 PM
- ravidreams: ஓ.. சரி 06:54:03 PM
- ravidreams: பொறுப்புத் துறப்புப் பக்கத்தின் ஒரு பகுதியாக இதனை இடலாம்06:54:18 PM
- srikanthlogic: i suppose asking people to review / correct grantha chars is too much06:54:18 PM
- srikanthlogic: yes06:54:24 PM
- mahir: ஆமாம் நல்ல நினைவூட்டல், அதுபோல் இலங்கை வழக்கு பற்றியும் குறிப்பிடப் படவேண்டும் உதா, றொறன்டோ06:54:45 PM
- ravidreams: புரியல. கிரந்த நீக்கம் / மாற்றம் கட்டுரைத் திருத்தத்தின் பகுதியாக இருக்காது06:54:46 PM
- ravidreams: சரி06:55:09 PM
- srikanthlogic: yes.. grantha changes should not be made.. they must be as is where is.. no granthafication / degranthafication06:55:16 PM
- ravidreams: 06:55:30 PM
- srikanthlogic: on the flip side, you are reaching more people with the agenda 06:55:32 PM
- srikanthlogic: mahir: good note of cultural usage of vocabulary06:56:15 PM
I dont want to get into content issues which is not related to me, I am already pained to see CD project was stopped once and 1 month of my work went waste. If this comes in the middle of CD project,please let me know in advance, I would not start any work(I spent few hours to restart yesterday, but that can die!) so I can spend my time in a better way than working for something that wont happen. (There are things beyond CD project which needs my time even in Tamil Wikipedia). ஸ்ரீகாந்த் 17:01, 20 சனவரி 2012 (UTC)
வேண்டுகோள்
தொகுகடந்த சில நாட்களில் குறுந்தட்டுத் திட்டம் நல்ல வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்ததைக் கண்டு மகிழ்ந்திருந்த வேளையில் மனதில் தைக்கும் நெருஞ்சியென மறுபடியும் கிரந்தமகற்றல் பிரச்சனை குறுந்தட்டுக் கட்டுரையில் விவாதிக்கப்படுவது வருத்தமளிக்கிறது. இவ்விவாதம் நமது கவனத்தைத் திசை திருப்புவதாகவும் நம் ஆற்றலைக் குறைப்பதாகவும் நேரத்தை விழுங்குவதாகவும் அமையாதா? நான் கடந்த வருடம் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் துவங்கிய போது,விக்கிப்பீடியா ஒரு தமிழ் வளர்ச்சி மையம் அன்று என்பதைக் கண்டு உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்தேன். நாளடைவில் புரிந்து கொண்டேன். விக்கிமீடியாவின் நோக்கம் கட்டற்ற அறிவை வருங்காலத் தலைமுறைக்கு அவர்களுக்குப் புரியும் வகையில் பாதுகாத்து வைப்பது தானே? விக்கிப்பீடியாவில் இன்று பங்களித்துக் கொண்டிருக்கிற யாரும் மரணத்தை வென்றவர் அல்லரே, நமது காலத்திற்குப் பின் வரும் தலைமுறை எப்படி இருப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்? ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரைகளுக்கு தமிழ்ப் பெயர் தந்து வழிமாற்று தந்திருப்பது போன்ற நிலை கூட இங்கு ஏற்படலாம். யார் தான் அறிவார்? மாற்றம் என்பதே மாறாதது.
தனிப்பட்ட வகையில் நான் தனித்தமிழையே விரும்புபவன். ஆனால் எல்லோரும் அதையே விரும்ப வேண்டும் என்று நான் வற்புறுத்தினால் அஃது அறிவுடைமை ஆகாதன்றோ ? கிரந்தத்தை யாரும் தமிழ் விக்கிப்பீடியாவில் வலியப்புகுத்தவில்லையே! பயன்படுத்தும் கட்டாயம் வரும் போதே பயன்படுத்துகிறார்கள். ஒரோவிடத்து “இது மாதிரியான விவாதங்களில் காலங்கழிப்பதை விடுத்து எறும்பு பற்றி 3 வரி எழுதலாம்” என்று ஒரு பயனர் உரையாடலில் கூறியது என் நினைவுக்கு வருகிறது.
கிரந்தமகற்றல் விவாதம் போன்றவை பக்குவமில்லாத புதுப்பயனர்களை இங்கிருந்து அனுப்பி விடக்கூடியது. இங்கிருந்து சென்றவர்கள் நம்மைப் பற்றி அவதூறு பரப்பிக் கொண்டிருக்கும் நிலையையும் உண்டாக்கி விடும். பேராசிரியரின் நுண்மாண் நுழைபுலத்தைக் கண்டு மகிழும், மதிப்பு வைத்திருக்கும் அதே வேளையில் அதே நுண்மாண் நுழைபுலம் குறுந்தட்டுத் திட்டப்பணிகட்குத் தடங்கலாய் அமைந்து விடக்கூடாதே என்ற அச்சமும் உண்டாகிறது. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 19:34, 20 சனவரி 2012 (UTC)
- மன்னிக்கவும், திரும்பத் திரும்ப இது குறுந்தட்டுத் திட்டத்துக்கான நேர வீண்டிப்பு, திசை திருப்பல் என்பது போன்ற கருத்து வருவதில் எனக்கு உடன்பாடில்லை. செல்வா, தனது கருத்துகளை முறையாக முன்வைத்து மாற்றலாமா என்று கேட்டுள்ளார். மறுப்பு இருக்கும் வேளையில் அவர் வலிந்து மாற்றுபவரும் அல்லர். வேண்டுமானால், குறுந்தட்டுத் திட்டத்தில் உள்ள கட்டுரைகளில் இத்தகைய கருத்துகளை இடுவதைத் தற்காலிகமாகத் தவிர்க்குமாறு வேண்டலாம். --இரவி 19:44, 20 சனவரி 2012 (UTC)
- இரவி, நீங்கள் மேலே எழுதும் முன்னரே நான் எழுதத் துவங்கியிருந்தால் உங்கள் கருத்தை அறிய முடியாது போய்விட்டது. மேலே (இதற்கும் மேலே) நீங்கள் கூறியிருப்பது போல பேராசிரியரும் தனது பொன்னான நேரத்தைச் சேமிக்கும் பொருட்டு பொதுவான ஒரு கொள்கைப் பக்கத்தில் இது போன்ற இலக்கண விதிகள் போன்றவற்றைத் தந்தால் அது தற்போதைய தலைமுறைக்கு மட்டுமின்றி இனிவருவோருக்கும் வழிகாட்டியாய் அமையும்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 19:53, 20 சனவரி 2012 (UTC)
- இரவி, குறுந்தகடு திட்டத்தில் தற்போது வேலை செய்வோர் தான் தங்கள் நேரம் வீணாகிறதா இல்லையா என்று சொல்ல முடியும். சொல்லவும் செய்து விட்டோம். இங்கு திட்டத்தில் பணி புரியும் ஐந்து பேர் சொல்லி விட்டனர் செல்வாவின் இந்த செயல்பாடு திட்டத்திலிருந்து எங்களை திசை திருப்பியுள்ளதென்று. இது நடக்குமென்று தெரிந்து தானே ஜூலை உரையாடலின் போதே கிரந்தமகற்றல்/சேர்த்தல் செய்ய வேண்டாமென்று முடிவு செய்தோம். நீங்களும் ஒப்புக் கொண்டீர்கள். கொள்கைப் பக்கத்தில் உரையாடினால் ”கிரந்தத்தை அகற்றி விடுவோம்” இணக்க முடிவு வராது என்பது அனைவரும் அறிந்ததே. எனவே தான் பக்கம் பக்கமாக உரையாடல் நடக்கிறது ஆண்டாண்டுகளாக. அவர் நினைத்திருந்தால் பல கட்டுரைகள் எழுதியிருக்கலாம் இந்நேரத்தில் என்கிறீர்கள். நாங்கள் யாரும் அவரைத் தடுக்கவில்லை. கட்டுரை கட்டுரையாய் இயன்றவரை கிரந்தமகற்றுவதற்கு பதில் நூற்றுக்கணக்கில் கிரந்தமில்லாக் கட்டுரைகள் எழுதியிருக்கலாம். அதனால் கிரந்தமற்ற உள்ளடக்கம் தமிழில் கூடி பொதுப்பயன்பாட்டில் கிரந்தமற்ற தனித்தமிழ் பரவ வாய்ப்புகள் அதிகம். கிரந்தமின்றி எழுதி முன்னுதாரணமாக எவ்வளவோ நிறுவ முடியும் இங்கே. தமிழில் இல்லாத பல விசயங்களை முதலில் விக்கியில் கொண்டுவந்து இது தான் தமிழ் என்று நிறுவ இயலும். தமிழில் கிரந்தம் கூடாதென்போர் பிறருடன் விவாதிக்கும் நேரத்தில் ஒரு பத்தாயிரம் நெடுங்கட்டுரைகள் கிரந்தமற்ற தமிழில் எழுதினால் போதும் முன்னதாரணத்தை நிலை நாட்டி விடலாம் (நான் இயன்றவரை இரு ஆண்டுகளாகச் செய்து வருகிறேன்).
- எழுதுவோர் போல் விடுங்கள் என்பது நடைமுறைக்கு ஏற்ற தீர்வு. இதனை ஏற்றுக்கொள்ள உங்கள் மனம் மறுக்கிறது. பல கிரந்தத்தோடு எழுதி வந்த இத்தனை பேர் விக்கிக்கு வந்த பின்னர் கிரந்தம் குறைப்போம், பிறர் எழுதினால் எழுதட்டும் என்று மாறியிருக்கிறோம். ஆனால் ஆறாண்டுகளாக எடுத்த நிலை மாறாது, சற்றும் இறங்கி வராது, ஒவ்வொரு கட்டுரையாக இந்த கிரந்தமகற்றல் போரை தொடர்ந்து நடத்துவது யார் என்பது நான் சொல்லத் தேவையில்லை. --சோடாபாட்டில்உரையாடுக 20:20, 20 சனவரி 2012 (UTC)
இங்கே இருப்பது அனைத்தையும் வாசித்து முடிக்கவே நேரம் போய் விட்டது. இப்படியான உரையாடல்கள் சிலசமயம் முடிவின்றிப் போய்க் கொண்டிருக்கின்றதும் உண்மையே.
நான் முன்னர் எழுதும்போது கிரந்தம் கலந்து எழுதுவதுண்டு. அப்படி எழுதாவிட்டால் நன்றாக வராததுபோல் ஒரு நினைப்பு. ஆனால் பின்னர் புரிந்துகொண்டு முடிந்த வரையில் கிரந்தம் தவிர்ப்பேன். ஆனால் எல்லோரும் அப்படி எடுப்பதில்லை. இந்தப் பிரச்சனையைத் தவிர்ப்பதற்காகவே பல புதுப் பயனர்கள் தொடர்ந்து பங்களிக்காமல் போய் விடுகின்றார்கள் என்பதும் உண்மையே. என்னிடம் சிலர் ""தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தமிழைப் பார்க்கவே பயமாக உள்ளது, எப்படி எழுதுவது?" என்று கேட்டிருக்கின்றார்கள். "நீங்கள் உங்கள் முறைப்படி எழுதுங்கள். மற்றவர்கள் திருத்துவார்கள்." என்று கூறியிருக்கின்றேன். ஆனாலும் இது ஒரு வித தயக்கத்தைப் பலருக்கு கொடுப்பதும் உண்மையே. அதேபோல்தான் இலங்கைத் தமிழ், தமிழகத் தமிழ் பிரச்சனையும். நான் இங்கே பல இலங்கைத் தமிழர்களிடம் விக்கி பரப்புரை செய்தபோது, தாங்கள் நினைக்கும் சொற்கள் இங்கே காணோமே என்றார்கள். "நாங்கள் பயன்படுத்தியது சரியான தமிழ் இல்லையாம், அதனால் சரியான தமிழை பயன்படுத்தக் கற்றுக் கொள்வோமே" என்று கூறியிருக்கின்றேன். ஆனால் அனைவரும் அந்தப் பதிலில் திருப்தியடைவதில்லை என்பதும் உண்மையே. நான் பல இடங்களில் அடைப்புக் குறிக்குள் ஏனைய சொற்களைக் கொடுத்திருக்கின்றேன். பல சமயங்களில் சரியாக புரிந்து கொள்ளப்படுமா என்ற சந்தேகத்தில், அல்லது தேடுபவர்களுக்கு கிடைக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் ஆங்கிலச் சொற்களைக் கூட அடைப்புக் குறிக்குள் கொடுப்பேன். மாற்ற விரும்புபவர்கள் மாற்றட்டுமே என்று விட்டு விடுவேன்.
மேலே கருத்துக்கள் வந்திருப்பதுபோல், எழுதுபவர்களைத் தமது பாணியில் எழுதவிடலாம். அது தவறெனக் கருதினால் அவர்களிடம் சொல்லலாம். அவர்கள் ஏற்றுக் கொண்டு எழுதினால் நல்லது. அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால், அவர்களை அவர்கள் போக்கில் விடுவதே நல்லதென்று தோன்றுகின்றது.
இங்கே இதுபற்றிய கருத்துத் தெரிவித்திருப்பவர்கள் அனைவருமே முடிந்தளவில் கிரந்தம் தவிர்த்து எழுதுபவர்கள் என்றே தோன்றுகின்றது. எனவே குறுந்தகட்டுத் திட்டத்தில் உள்ள இந்தக் கட்டுரையில் இப்போது இதைப்பற்றி பேசிக் கொண்டிராமல், தற்போதுள்ள தலைப்பையே வைத்துக்கொண்டு, விரும்பினால் அடைப்புக் குறிக்குள் கிரந்தமற்ற சொல்லைக் கொடுத்துவிட்டு, வேலையைத் தொடர்வதே நல்லதென்று தோன்றுகின்றது. இதை எழுதி முடிக்கையில் என் மனதில் தோன்றுவது 'இந்த நேரத்தில் அந்த ஈழை நோய் கட்டுரையின் உரை திருத்தத்தை செய்திருக்கலாமோ' என்பதுதான்.--கலை 21:58, 20 சனவரி 2012 (UTC)
- இந்த நீண்ட உரையாடல் "முன்பு நிகழ்ந்ததை நினைவுபடுத்தும்" (deja vu) வகையிலேயே உள்ளது. கிரந்தப் பயன்பாடு குறித்து தமிழ் ஆர்வலர்களிடம் நீண் நாட்களாகவே விக்கியினுள்ளும் வெளியிலும் நடந்துள்ளது;நடக்கிறது;நடந்து கொண்டுதான் இருக்கும். மதிப்பிற்குரிய செல்வா பல பயனுள்ள பங்களிப்புகளை அளித்து தமிழ் விக்கியின் இன்றைய வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவர் என்பதில் ஐயமில்லை; நான் கண்கூடாக கண்டவன். இரவி கூறுவது போல இது குறுந்தட்டு திட்டத்தைப் பாதிக்கும் என்பதை அறியாதநிலையில் தம் தமிழ் ஆர்வத்தினால் இக்கட்டுரையில் தம் கருத்தைப் பதிந்துள்ளார். எனவே இரவியின் வேண்டுகோளுகிணங்க அவர் தமது கருத்துக்களை தற்போது தவிர்க்கலாம். குறுந்தட்டு திட்டங்களில் "உள்ளது உள்ளபடியே" பேணுவோம்.
- இங்கு நடந்திருக்கும் உரையாடல்கள் வலிந்து கிரந்தம் தவிர்ப்பதை எதிர்த்துள்ளன. விக்கிப்பீடியாவின் நோக்கம் பாமர மக்களுக்கு அறிவை பரப்புவதுதான். முன்பு நல்ல நூல்கள் ஆங்கிலத்திலும் சமசுகிருதத்திலும் இருந்தமையாலும் பெரும் பணம் கொடுத்து வாங்க வேண்டியிருந்ததாலும் எளியவர்களும் ஏழைகளும் விலக்கப்பட்டனர். எனவே அனைவருக்கும் சென்றடைவது என்பது விக்கியின் முக்கிய கொள்கையாகும். இதில் தனித்தமிழ் என்று ஒரு சாரார் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடியதாக ஆக்குவதும் இந்தக் கொள்கைக்கு எதிரானதாகும். கிரந்த தவிர்ப்பிற்கான போராட்டம் வெளியில் நடத்தப்பட்டு உணர்வுகள் உருவாக்கப்படுமானால் தமிழ் விக்கியில் தானே கிரந்தம் தவிர்க்கப்படும். அதுவரை இதனை விருப்பத்தேர்வாகவே விடுதல் தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கு வழிகோலும். --மணியன் 04:51, 21 சனவரி 2012 (UTC)
மணியன், கொஞ்சம் deja vu தான். கொஞ்சம் புதிய வூ :) . இதற்கு முன்பு கிரந்தம் வேண்டும் என்று விடாப்பிடியாக உரையாடிய பலர் தமிழ் நலத்தையும், மரபையும் பேணாது வலிந்து கிரந்தம் வேண்டியவர்கள். வினோத் தவிர மற்றவர் யாரும் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பெரிய பங்களிப்பையும் நல்கவில்லை. சோவியத் யூனியனை சோவியத் ஒன்றியம் என்று கூட எழுதக்கூடாது வாதிட்டுள்ளனர். ஆனால், தற்போதைய சூழல் அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. அனைவரும் தமிழ் விக்கிக்கு நன்கு பங்களிப்பவர்கள். கிரந்தம் விடுப்பவர்களை எதிர்ப்பதில்லை. சோடாபாட்டில் உட்பட பலரும் தங்கள் கட்டுரைகளிலும் இயன்ற அளவு கிரந்தம் தவிர்த்து எழுதுகிறார்கள். ஆனால், இதற்கு மேலும் ஒவ்வொரு இடத்திலும் கிரந்த எதிர்ப்பு / ஆதரவு உரையாடல் மேற்கொள்வது அயர்ச்சியாக உள்ளதாக உணரப்படுவது நடைமுறைச் சிக்கல். இந்தச் சூழலை ஏற்றுக் கொண்டு கிரந்தப் பயன்பாடு குறித்து ஏற்கனவே உள்ள புரிந்துணர்வை எப்படி திறம்பட நடைமுறைப்படுத்துவது எப்படி என்று சிந்திக்க வேண்டும்.
இந்திய-இலங்கை வழக்குப் பிரச்சினை இரு நாட்டவரிடையே உள்ள நட்புணர்வால் இலகுவாகக் கையாளப்படுகிறது. ஆனால், கிரந்தப் பிரச்சினையைப் பொறுத்தவரை, உள்ளது உள்ளபடியே என்பது குறுந்தட்டுத் திட்டத்துக்கான புரிந்துணர்வாக இருந்தாலும், அதில் இல்லாத கட்டுரைகளிலும் அத்திட்டத்துக்குப் பின்பும் இந்தச் சிக்கல் மீண்டும் எழவே வாய்ப்பு உண்டு. தத்தம் கட்டுரைகளில் கிரந்தம் விடுத்து எழுத உரிமை இருக்கிறது என்பதை நாம் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டாலும், நடைமுறையில் அது அவ்வளவு இலகு அன்று. தமிழ்நாட்டில் உள்ள பிரபலங்கள் பெயர்கள் உட்பட பல பெயர்களும் தற்போது கிரந்த மயமாகவும் ஆங்கில மயமாகவும் உள்ளது. கிரந்தம் கொண்டு எழுதினால் தான் பொருளே புரியும் என்போரும் உள்ளனர். எனவே, செல்வாவோ மற்ற யாருமோ தாங்கள் தொடங்கும் கட்டுரைகளில் கிரந்தம் விடுத்து எழுதினால் கூட அவை காக்கப்படும் என்பதற்கு உறுதி இல்லை. எப்படி கிரந்தம் அகற்றுவதற்கு எதிர்ப்பு உள்ளதோ அப்படியே கிரந்தம் விடுத்து எழுதுவதற்கும் எதிர்ப்பு இல்லாதவரை இந்தச் சமநிலையின்மையும் புரிந்துணர்வை நடைமுறைப்படுத்தும் சிக்கலும் தொடரும். இந்த அடிப்படையிலேயே கிரந்தப் பயன்பாடு குறித்த புரிந்துணர்வு உரையாடலை இன்னும் தெளிவான எடுத்துக்காட்டுகள், வழிகாட்டுகளுடன் மேம்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.
// விக்கிப்பீடியாவின் நோக்கம் பாமர மக்களுக்கு அறிவை பரப்புவதுதான்.// இல்லை. கட்டற்ற அறிவைப் பரப்புவது தான். ஆங்கில விக்கிப்பீடியாவின் பல கட்டுரைகள் பல்கலையில் படித்தவருக்குக் கூட புரியாது. எனினும், அறிவுச் செழுமையை முன்வைத்து அவர்கள் எழுதுகிறார்கள். புரியாதவர்கள், அகரமுதலிகளைப் பயன்படுத்திப் புரிந்து கொள்ள முனைகிறார்கள். இதே, தமிழில் ஒரு துறை சார் கட்டுரையில் இதே போன்று ஒரு கட்டுரையில் தக்க கலைச்சொற்களுடன் எழுதினால், புரியவில்லை என்ற கூப்பாடே வருகிறது.
//இதில் தனித்தமிழ் என்று ஒரு சாரார் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடியதாக ஆக்குவதும் இந்தக் கொள்கைக்கு எதிரானதாகும். //
தனித்தமிழ், தூய தமிழ், கிரந்தம் அற்ற தமிழ் ஆகியவற்றுக்கான எதிர்ப்பு பெரும்பாலும் அடையாள அடிப்படைச் சிக்கலே. புரியவில்லை என்று பெரும்பாலும் யாரும் சொல்வதில்லை. தனித்தமிழ் சிலருக்குப் புரியாது என்கிற அதே வாதம், ஆங்கிலமோ மற்ற மொழியோ கலந்த நடை வேறு சில சாராருக்குப் புரியாமல் இருக்க வாய்ப்புண்டு என்பதையும் காணலாம். குறிப்பாக, தமிழ் வழியத்தில் பயிலும் மாணவர்கள், ஆங்கிலம் முதன்மை மொழியாக இல்லாத நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு இந்தப் பிரச்சினை வரலாம். "தூய தமிழில் எழுத வேண்டுமா என்று நண்பர்கள் தயங்குகிறார்கள்" என்று சூரியா கூறினார். எது தூய தமிழ் என்பதே இங்கு ஆளுக்கு ஆள் மாறுகிறது.
"ஹைகோர்ட் செசன்ஸ் ஜட்ஜ் தீர்ப்பு வழங்கினார்" என்று கூட தினமலர் செய்தி வெளியிடுகிறது. "மூவி ஃபென்டாஸ்டிக்" என்று ஒரு தமிழ் வலைப்பதிவர் எழுதக்கூடும். "ஆசம். ஸ்ருதி இன்னும் இம்ப்ரூவ் பண்ணனும்" என்று விசய் தொலைக்காட்சியில் பேசுகிறார்கள். இவர்களைப் பொறுத்த வரை இது பாமரரும் புரிந்து கொள்ளும் தமிழ். "உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதி தீர்ப்பு வழங்கினார்", "திரைப்படம் அருமை" என்பது போல் தான் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுத வேண்டும் என்று சொன்னால் கூட தங்களால் அப்படி எழுத இயலாது என்போர் உள்ளனர். தெரிந்தாலும் எழுத மாட்டேன் என்போர் உள்ளனர். நீதிமன்றம் என்பதற்குப் பதில் அறமன்றம் என்பது தூய தமிழ்ச் சொல்லாக இருக்கும் என்போர் சிலர். இதற்கு அடுத்த நிலையாக எழுத்துகளிலும் கூட கிரந்தம் விடுத்து தமிழுக்கு முன்னுரிமை தரலாமே என்பவர்கள் சிலர். இந்த ஒவ்வொரு நிலையில் உள்ளோருக்கும் மற்ற நிலைக்குச் செல்வது இயலாததாகவும் ஏற்புடையதாகவும் இல்லை. இங்கு, தூய தமிழ் என்பதன் புரிதலே ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது.
2002 தொடக்கம் 2010 வரை பல இந்திய விக்கிகள் மெதுவான வளர்ச்சி நிலையையே கொண்டுள்ளன. இதற்குப் பல பொதுவான காரணங்கள் உண்டு. மக்களிடைய கணினி-இணையத்தின் பரவல், கணினி மென்பொருள்களின் தமிழ் ஆதரவு, உள்ளூர் மொழி விக்கிப்பீடியாக்கள் குறித்த விழிப்புணர்வு, தமிழ்த் தட்டச்சுக் கருவிகள் கிடைப்பு, தகுந்த கலைச்சொற்களின் கிடைப்பு, பொதுவாக ஒரு திட்டம் முதிர்ச்சி அடைவதற்கான காலம், இலங்கையில் இருந்த போர்ச்சூழல் என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வளவு தடைகளையும் தாண்டி தமிழ் விக்கிப்பீடியாவில் ஒருவர் எழுத முனையும் போது, கிரந்தம்-பிறமொழிச் சொல் கலந்தே எழுதுவது என்றாலும் முழுக்க ஆங்கிலவழியக்கல்வியாக உள்ள சூழலில் அதற்கான திறனும் ஊக்கமும் நேரமும் உள்ளோர் சிலரே. எனவே, தூய தமிழ் பிரச்சினையால் தான் தமிழ் விக்கிப்பீடியா வளரவில்லை என்பது போன்ற தொனி வருவது ஏற்புடையதாக இல்லை. --இரவி 08:17, 21 சனவரி 2012 (UTC)
- பிரதான கிரந்த வாததிலிருந்து விலகினாலும்(அதில் என் குரல் எடுபடாது என்பதாலும்) ,தமிழ் விக்கிப்பீடியா ஏன் வளரவில்லை என பார்க்கும் பொழுது, தூய தமிழ் பிரச்சினையும் ஓர் முக்கிய காரணம் என நான் கருதுகிறேன். ஸ்ரீகாந்த் 08:40, 21 சனவரி 2012 (UTC)
தூய தமிழ் என்பதன் வரையறையே ஆளாளுக்கு வேறுபடுவதை மேலே சுட்டியுள்ளேன். விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம். அதற்கு என்று ஒரு சீரான நடை இருத்தல் அவசியம். கிரந்தப் பிரச்சினை தவிர்த்து பல இடங்களிலும் தகுந்த கலைச்சொற்கள், தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதின் காரணம் இதுவே. இது தமிழில் கலைக்களஞ்சியப் பணியில் ஈடுபடுபவருக்கான ஒரு அடிப்படை :en:WP:COMPTENCE. இது கூட இல்லாமல் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்றால் எழுதலாம். ஆனால், கலைக்களஞ்சியமாக இருக்காது.
//தமிழ் விக்கிப்பீடியா ஏன் வளரவில்லை என பார்க்கும் பொழுது, தூய தமிழ் பிரச்சினையும் ஓர் முக்கிய காரணம் என நான் கருதுகிறேன்//
சென்ற விக்கிமேனியாவுக்குச் சென்ற போது, உலக மொழிகள் பலவற்றிலும் இதை ஒத்த பிரச்சினை இருப்பது தெரியவருகிறது. taglish, greeklish என்று அந்தந்த மொழிகளில் மிகை ஆங்கிலம் கலப்பதால் விக்கிப்பீடியாவிலும் என்ன வகையான சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற குழப்பமும் பிரச்சினையும் இருக்கிறது. உலக மயமாக்கலின் காரணமாக ஆங்கிலத்தின் தாக்கம் கூடுதலாக இருக்கிறது. நம்முடைய வரலாற்றுக் காரணங்களால், தமிழில் வேறு பல மொழிகளின் தாக்கமும் உள்ளது. எனவே, இது தமிழ் விக்கிப்பீடியாவில் மட்டும் இருக்கிற பிரச்சினை இல்லை. இந்தப் பிரச்சினை இல்லாத எல்லா மொழி விக்கிப்பீடியாக்களும் வளர்ந்து விடவும் இல்லை. இதனால் தமிழ் விக்கிப்பீடியா வளரவில்லை என்பது ஒரு அகவயமான (subjective) கருத்தாகவே இருக்க முடியும். --இரவி 11:09, 21 சனவரி 2012 (UTC)
- //எனவே, செல்வாவோ மற்ற யாருமோ தாங்கள் தொடங்கும் கட்டுரைகளில் கிரந்தம் விடுத்து எழுதினால் கூட அவை காக்கப்படும் என்பதற்கு உறுதி இல்லை. எப்படி கிரந்தம் அகற்றுவதற்கு எதிர்ப்பு உள்ளதோ அப்படியே கிரந்தம் விடுத்து எழுதுவதற்கும் எதிர்ப்பு இல்லாதவரை இந்தச் சமநிலையின்மையும் புரிந்துணர்வை நடைமுறைப்படுத்தும் சிக்கலும் தொடரும்.//
- இந்த வலிந்து கிரந்தமாக்கலை இங்கு கருத்து கூறிய அனைவரும் இது வரை எதிர்த்து வந்திருக்கிறோம். அவ்வாறான தொகுப்புகள் கண்ணில் பட்ட போதெல்லாம் உடனடியாக மீளமைக்கப்பட்டிருக்கின்றன. நானுட்பட இங்கு அனைவரும் கிரந்தம் தவிர்ப்போர் எழுதியதை பிறர் கிரந்தமாக்குவதைக் கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறோம் .எ.கா [1] - இதைச் செய்ததற்கு கூகிள் பஸ்சில் ஒரு இலக்கிய வட்டத்தாரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டேன். மேலும் பலரும் புதிய பயனர்கள் கிரந்தம் சேர்ப்பதை மாற்றியே வந்துள்ளனர். [2] [3] [4][5][6]. தனிப்பட்ட முறையில் வேண்டினால் கிரந்தம் தவிர்த்து எழுத முன்வருவோர் பலர் உள்ளனர். பொதுப்பரிந்துரை உள்ளது என்று எடுத்தியம்பினாலே “சரி முயற்சிக்கிறோம்” பலர் சொல்லி விடுகிறார்கள். தனித்தமிழ்/கிரந்தமற்ற நடை பிடிக்கவில்லை என்று சொல்வோரிடம் வலிந்து மாற்றம் ஏற்படாது அனைவரும் அவரவர் விரும்பும்படி எழுதலாம் என்று எடுத்துரைத்தால் பலர் ஏற்றுக் கொள்கிறார்கள். கிரந்தம் வேண்டாம் என்பதை தனிப்பட்ட முறையில் பயனர்களுக்கு எடுத்து சொல்லாம், இதை ஒப்புக்கொண்டு இயன்ற வரை கிரந்தம் தவிர்ப்போர் தவிர்க்கட்டும். எழுதுவோர் எழுதட்டும். இதனால் நமக்கு மிகுந்த லாபமே. ஒவ்வொரு கட்டுரையிலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதை விட பயனரிடம் தனிப்பட்ட முறையில் நேரடியாகப் பேசுவது, நிறைய கிரந்தமற்ற கட்டுரைகளை எழுதுவது, விக்கிக்கு வெளியில் கிரந்தமற்ற நடையைப் பரப்புவது போன்றதே இதற்குத் தீர்வு. இதுவே கிரந்தமற்ற தமிழ் பரவ வேண்டும் என்பதற்கு நல்ல விளைவுகளைத் தரும் உத்தி. விக்கி நடைக்காகப் பொதுப் பரிந்துரையை ஏற்று தங்களை மாற்றிக் கொண்டு விக்கியில் இயன்றவரை கிரந்தம் தவிர்த்து, கிரந்தமாக்கலை செய்ய முனைவோரைத் தடுத்து வரும் போது, கிரந்தமகற்றம் வேண்டுமென்போர் சற்றிலும் இறங்கி வராது, அவர்கள் நிலைப்பாட்டை 100% அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கட்டுரை தோறும் உரையாடுவது தான் இங்கு அயற்சியைக் கொடுப்பதுடன் கசப்புணர்வை வளர்க்கிறது. --சோடாபாட்டில்உரையாடுக 08:54, 21 சனவரி 2012 (UTC)
//இதைச் செய்ததற்கு கூகிள் பஸ்சில் ஒரு இலக்கிய வட்டத்தாரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டேன். //
சோடாபாட்டில், இதே இலக்கிய வட்டம் தான் கிரந்தம் நீக்கினாலும் தாலிபான் என்கிறது. பயனர் ஒருவர் தான் தொடங்கும் கட்டுரையில் கிரந்தம் விடுத்து எழுதினாலும் தாலிபான் என்கிறது. கிரந்தம் இருப்பதை ஏற்றுக் கொள்வோர் கிரந்தம் இல்லாமல் இருப்பதை அவ்வளவு இலகுவாக ஏற்றுக் கொள்வதில்லை. இதைத் தான் புரிந்துணர்வில் சமநிலையின்மை என்று குறிப்பிட்டேன். நாம் வெகுவாக கவலைப்படும் விக்கிப்பீடியாவுக்கு வெளியேயான பிம்பத்தில் இந்தச் சமநிலையின்மை கூடுதலாக உள்ளது.
//தனிப்பட்ட முறையில் வேண்டினால் கிரந்தம் தவிர்த்து எழுத முன்வருவோர் பலர் உள்ளனர். பொதுப்பரிந்துரை உள்ளது என்று எடுத்தியம்பினாலே “சரி முயற்சிக்கிறோம்” பலர் சொல்லி விடுகிறார்கள். தனித்தமிழ்/கிரந்தமற்ற நடை பிடிக்கவில்லை என்று சொல்வோரிடம் வலிந்து மாற்றம் ஏற்படாது அனைவரும் அவரவர் விரும்பும்படி எழுதலாம் என்று எடுத்துரைத்தால் பலர் ஏற்றுக் கொள்கிறார்கள். கிரந்தம் வேண்டாம் என்பதை தனிப்பட்ட முறையில் பயனர்களுக்கு எடுத்து சொல்லாம், இதை ஒப்புக்கொண்டு இயன்ற வரை கிரந்தம் தவிர்ப்போர் தவிர்க்கட்டும். எழுதுவோர் எழுதட்டும். இதனால் நமக்கு மிகுந்த லாபமே. ஒவ்வொரு கட்டுரையிலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதை விட பயனரிடம் தனிப்பட்ட முறையில் நேரடியாகப் பேசுவது, நிறைய கிரந்தமற்ற கட்டுரைகளை எழுதுவது, விக்கிக்கு வெளியில் கிரந்தமற்ற நடையைப் பரப்புவது போன்றதே இதற்குத் தீர்வு. இதுவே கிரந்தமற்ற தமிழ் பரவ வேண்டும் என்பதற்கு நல்ல விளைவுகளைத் தரும் உத்தி. விக்கி நடைக்காகப் பொதுப் பரிந்துரையை ஏற்று தங்களை மாற்றிக் கொண்டு விக்கியில் இயன்றவரை கிரந்தம் தவிர்த்து, கிரந்தமாக்கலை செய்ய முனைவோரைத் தடுத்து வரும் போது, கிரந்தமகற்றம் வேண்டுமென்போர் சற்றிலும் இறங்கி வராது, அவர்கள் நிலைப்பாட்டை 100% அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கட்டுரை தோறும் உரையாடுவது தான் இங்கு அயற்சியைக் கொடுப்பதுடன் கசப்புணர்வை வளர்க்கிறது. //
ஏற்றுக் கொள்கிறேன். இதை விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு பக்கத்திலும் சேர்க்கலாம். இது போன்ற பரிந்துரைகள் ஆக்கப்பூர்வமாக உள்ளன. நன்றி--இரவி 11:09, 21 சனவரி 2012 (UTC)
என் மறுமொழி
தொகு- எதிர்பாராத அளவுக்கு இங்கு உரையாடல் நீண்டு நிற்கின்றது. இதனை நீட்டிக்க விரும்பவில்லை என்றாலும் பலவற்றையும் நான் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
- நான் ஆகத்து 2011 முதல் சனவரி 2012 வரை பல ஊர்களில் பயணத்தில் இருந்ததால் இங்கு பங்கு கொள்ள இயலாமல் இருந்தது (குறிப்பாக இறுவட்டு/குறுந்தட்டு திட்டத்தில்; எனினும் பயணம் செல்லும் முன் சூலை 2011 இல் தலைப்புகளைப் பரிந்துரைத்தேன்). எனவே சில நடவடிக்கைகளை, முன்னெடுப்புகளை நான் அறியாமல் இருந்திருக்கலாம்.
- முதற்கண், கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. தக்க கருத்துகளை முன் வைத்து விரிவாக உரையாடிய இரவிக்கு நன்றி. விக்கிப்பீடியாவின் சிறப்புகளுள் ஒன்று, முறைப்படி கருத்தாட வழி இருப்பதே. அறிவடிப்படையிலும், அறமான முறையிலும் கருத்துகளை முன் வைக்கும் உரிமையும் உண்டு, அதனைக் கருதவேண்டிய கடமையும் உண்டு. விக்கிப்பீடியாவும் அதன் திட்டங்களும் பலருடைய கூட்டுழைப்பால் உருவாவது, அவரவர் தனித்தனியே அவரவருக்கு விருப்பமான முறையில் எழுதி வைத்துவிட்டு பிறர் யாரும் எதனையும் மாற்றக்கூடாது என்று கட்டளையிட்டுப் போகும் இடம் அல்ல. அதற்காக யார் வேண்டுமானாலும் என்ன திருத்தம் வேண்டுமானாலும் செய்யலாம் என்று பொருள் அல்ல. பொறுப்பான முறையில் செய்வதற்காகத்தான் உரையாடல் பக்கம் உள்ளது. உரை திருத்தம் செய்வதும், சீர்மை பேண முற்படுவதும் பிழையாகாது.
w:WP:Ownership of articles என்பதில் கூறப்படும் முதல் வரியைப்பாருங்கள் "All Wikipedia content is open to being edited collaboratively. No one, no matter how skilled, and regardless of their standing in the community, has the right to act as if they are the owner of a particular article." முழு கட்டுரையையும் படித்துப்பாருங்கள்.
- இங்கு கருத்துக் கூறிய சிலர் அவர்கள் சூழலில் கேட்க நேர்ந்ததைக் கூறினர், அதற்கு நேர் எதிர்மறையான கருத்துகளை நானும் கேட்டிருக்கின்றேன். தமிழை மிகக் கொடுமையாக எழுதும் செய்தி ஊடகங்களை, இங்கு குறிப்பிட முடியாத அளவுக்குக், கடும் வெறுப்புச் சொற்களால் மீண்டும் மீண்டும் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அதே நேரம் தமிழ் விக்கிப்பீடியாவின் நல்ல நடையைப் வியந்து போற்றுவதையும் கேட்டிருக்கின்றேன். நானும் முகநூல், வலைப்பதிவுகள், மடலாடற்குழுமங்கள் போன்ற போன்ற பல இடங்களில் நிகழ்வதை அறிவேன். பற்பல அகவையிலும் (வயதிலும்) பின்னணியிலும் உள்ளவர்களோடும், பல நாடுகளிலும் உள்ளவர்களோடு நேரிலும் தொலைபேசி வழியாகவும் பேசிக்கொண்டுதான் இருக்கின்றேன். என்னவோ எனக்கு நடப்புகள் எதுவுமே தெரியாதவன் போல் சிலர் பேசுவது வியப்பாக இருக்கின்றது. இங்கு நிகழும் உரையாடல் பண்பான முறையில் நிகழ வேண்டுகிறேன்.
- சோடாபாட்டில், நீங்கள் w:WP:COMMONNAME பார்க்கச் சொன்னீர்கள். அங்கே அவர்கள் சுட்டியது அவர்களே கூறுவது போல ஆங்கில மொழிக்கு (தமிழ் மொழிக்கு அல்ல). மேலும் ஆங்கில மொழிக்குமே அவர்கள் கூறுவதைப் பாருங்கள் (சிலவற்றுக்கு அழுத்தம் தந்துள்ளேன்): "The most common name for a subject, as determined by its prevalence in reliable English-language sources, is often used as a title because it is recognizable and natural. Editors should also ask the questions outlined above. Ambiguous or inaccurate names for the article subject, as determined by reliable sources, are often avoided even though they may be more frequently used by reliable sources. இவற்றைப் பற்றி இன்னும் கூறலாம். ஆனால் இப்பொழுது வேண்டாம்.
- சோடாபாட்டில், நீங்கள் பேசுவது முறையல்ல, உண்மையில் மிகவும் அத்து மீறிப் பேசுகின்றீர்கள், உங்களுக்கு இன்னொரு பயனரை "தாலிபான்", "தாலிபானியத்தின் வரைவிலக்கணத்தை ஒத்த செயல்பாடே இது" என்பதெல்லாம், தகாத தாக்குதல்கள் "Do not make personal attacks anywhere in Wikipedia. Comment on content, not on the contributor. Personal attacks do not help make a point; they only hurt the Wikipedia community and deter users from helping to create a good encyclopedia. Derogatory comments about another contributor may be removed by any editor. Repeated or egregious personal attacks may lead to blocks." என்று w:WP:No personal attacks இருப்பதையும் பார்க்கவும்.
- நான் சனவரி 20, 2012 அன்று 1:54 மணிக்கு நிக்கோலசு கோப்பர்னிக்கசு என எழுதலாமா என்று உரையாடல் பக்கத்தில் கேட்ட பின், இறுவட்டு/குறுந்தட்டு திட்டப்பக்கத்தில் diff சில மணிநேரம் கழித்து, புதிதாக சட்ட திட்டங்களை சோடாபாட்டில் சேர்த்து உள்ளார். இது பற்றி திட்டப் பக்கத்தில் பொதுவில் உரையாடியதாகத் தெரியவில்லை.
- மேலும் இது பற்றி கூறுவது தேவை எனினும், கூறாதே விடுகின்றேன்.
--செல்வா 05:36, 21 சனவரி 2012 (UTC)
- //சோடாபாட்டில், நீங்கள் w:WP:COMMONNAME பார்க்கச் சொன்னீர்கள். அங்கே அவர்கள் சுட்டியது அவர்களே கூறுவது போல ஆங்கில மொழிக்கு (தமிழ் மொழிக்கு அல்ல). மேலும் ஆங்கில மொழிக்குமே அவர்கள் கூறுவதைப் பாருங்கள் (சிலவற்றுக்கு அழுத்தம் தந்துள்ளேன்)//
- ஆங்கில் விக்கியின் கொள்கைகளை இங்கு அப்படியே பின்பற்ற முடியாது என்று நான் தெளிவாக மேலே சொல்லிவிட்டேன். பிற மொழி விக்கிகளில் தலைப்பை எப்படி இடுகிறார்கள் என்று முதலில் சுட்டியது நீங்கள் தான். அதற்கு பதிலாகவே அம்மாதிரியான செயல்பாடுகள் இங்கு செய்ய முடியாது என்பதே நான் இக்கொள்கைப் பக்கத்தைச் சுட்டியதன் நோக்கம். பிற மொழி விக்கிக் கொள்கைகளில் உங்கள் நிலைக்கு ஏற்ற கொள்கைகளை மட்டும் எடுத்துக் காட்டி விட்டு, உங்கள் நிலைக்கு எதிரான கொள்கைகளும் உள்ளன என்பதை குறிப்பிடாது விடுகிறீர்கள். இதையே நான் சுட்டுகிறேன்.
- “//சோடாபாட்டில், நீங்கள் பேசுவது முறையல்ல, உண்மையில் மிகவும் அத்து மீறிப் பேசுகின்றீர்கள், உங்களுக்கு இன்னொரு பயனரை "தாலிபான்", "தாலிபானியத்தின் வரைவிலக்கணத்தை ஒத்த செயல்பாடே இது" என்பதெல்லாம், தகாத தாக்குதல்கள்//
- பண்பற்ற முறையில் பேசுகிறேன், அத்துமீறிப் போகிறேன், தகாத தாக்குதல்கள் என்று என்னைத் தனிப்பட்டமுறையில் தாக்குவது நீங்கள் தான். “தாலிபான்” என்று சொன்னது நானல்ல. தாலிபான் என்று விக்கிப்பீடியரைத் தூற்றுவதை நானா செய்கிறேன்?. பிறர் நம்மைத் தூற்றுகிறார்கள், அது “அவப்பெயர்” என்று தெளிவாகச் சொல்லியுள்ளேன். அதைத் திரித்து ஏதோ நான் “தாலிபான்” என்று சொல்கிறேன் என்று சொல்லுகிறீர்கள். "dont comment on the editor, comment on the edit" என்பார்கள் அதைத்தான் செய்திருக்கிறேன் “நாங்கள் சொல்வதே சிறந்த வழிமுறை, அப்படியே நாங்கள் சொல்வதை அனைவரும் பின்பற்றுங்கள்” என்று சொல்வதையே “தாலிபானியத்தின் வரைவிலக்கிணத்தை ஒத்த செயல்பாடு” என்று குறிப்பிடுகிறேன். இந்தச் செயல்பாடு நான் பின்பற்றுவதோ பரிந்துரைப்பதோ அன்று. எந்தத் தரப்பு இதைச் செய்கிறார்கள் என்றும் தெளிவாகப் பிரித்து காட்டிய பின்னர் தான் இந்தச் செயல்பாடு எத்தகையது என்று சொல்லியிருக்கிறேன். இங்கு செயல்பாட்டு முறையை விமர்சித்தால், out of context ஆக எடுத்துப் போட்டு தனி மனிதத் தாக்குதல் என அதைத் திரிக்கிறீர்கள். தடை செய்து விடலாம் என்பதை தடித்த எழுத்துகளில் போட்டு மறைமுகமாக அச்சுறுத்துகிறீர்கள். கிரந்தத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசினால் தனிமனிதத் தாக்குதல் என்று சொல்லித் தடை செய்து விடுவோம் என்ற அச்சுறுத்துவது நன்றாக இருக்கிறது.
- //w:WP:Ownership of articles என்பதில் கூறப்படும் முதல் வரியைப்பாருங்கள் "All Wikipedia content is open to being edited collaboratively. No one, no matter how skilled, and regardless of their standing in the community, has the right to act as if they are the owner of a particular article." முழு கட்டுரையையும் படித்துப்பாருங்கள். //
- இது உங்களுக்கு முழுமையாகப் பொருந்தும். கிரந்தம் பற்றி உங்கள் நிலைக்கு பலர் எதிர் கருத்துகளைக் கொண்டிருப்பது இப்பக்கத்தில் இருந்து தெளிவாகப் புரியும். ஆனால் மீண்டும் மீண்டும் உங்கள் நிலைப்பாட்டை பிறர் மீது வலிந்து ஏற்றுக் கொள்ளுங்கள் என வறுபுறுத்துவது தான் ”ஓனர்ஷிப்”. பொதுக் கொள்கை இல்லாமல் இருந்தும், பிறரால் இவ்வளவு எதிர்க்கப்படுகிறது என்று தெரிந்தும் இவ்விசயத்தில் இம்மியளவும் மாற மறுத்து மீண்டும் மீண்டும் பல ஆண்டுகளாக அதே மாற்றங்களை நிகழ்த்துவது தான் ஒட்டு மொத்த தமிழ் விக்கிக்கும் எடுத்துள்ள “ஓனர்ஷிப்”. கிரந்தமில்லாக் கட்டுரையில் பெரும்பான்மையினர் யாரும் வலிந்து போய் கிரந்தம் சேர்ப்பதில்லை. எழுதுவோர் எழுதட்டும், நாங்கள் எழுதுவதில்லை, மாற்றுவதுமில்லை என்றே பலரும் நினைக்கிறோம். ஆனால் தமிழ் விக்கியில் முற்றிலுமாக கிரந்தத்தை அகற்றியே ஆக வேண்டும் என்று செயல்படுவது யார். இதுவே “ஓனர்ஷிப்”?
- //சில மணிநேரம் கழித்து, புதிதாக சட்ட திட்டங்களை சோடாபாட்டில் சேர்த்து உள்ளார். இது பற்றி திட்டப் பக்கத்தில் பொதுவில் உரையாடியதாகத் தெரியவில்லை.//
- இவை ஏதோ நான் நேற்று புதிதாக செய்த சட்ட திட்டங்கள் போல் பிம்பம் உண்டாக்குகிறீர்கள். இத்திட்டத்தை ஜூலையில் உரையாடிய போதே இந்த சிக்கல்கள் எழக்கூடாதென்று முடிவு செய்ததை ஸ்ரீகாந்த் மேலே சான்றுடன் வெளியிட்டுவிட்டார்.
இவ்வுரையாடல் ஒப்புக்கொண்டது போல ஆவணப்படுத்தப்பட்டு ஜூலையில் தொடங்கப்பட்ட திட்டப்பக்கத்தில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் - அது செய்யப்படவில்லை. அப்போது நான் இத்திட்டத்தை ஒருங்கிணைக்கவும் இல்லை.இந்த உரையாடல் திட்டப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது விக்கிப்பீடியா:இணைய சந்திப்பு/9 சூலை 2011 பதிவு. ஸ்ரீகாந்த் இதைத் திட்டப் பேச்சுப் பக்கத்தில் பதிவு செய்த போது அதற்கு அங்கு யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. எனவே இவை ஒன்றும் புதிதாக நான் நேற்று வகுத்த சட்டதிட்டங்கள் கிடையாது. நின்று போன இத்திட்டம் ஐந்து மாதம் கழித்து மீண்டும் நான் ஒருங்கிணைப்பு பொறுப்பேற்ற பின் மீண்டும் மெதுவாக நகரத் தொடங்கியுள்ளது. நீங்கள் வரும் வரை மீண்டும் கிரந்தம் பற்றி பேச்சு எழுமென்று நாங்கள் யாரும் நினைத்ததுப் பார்க்கவில்லை. எழுதுவோர் எழுதட்டும் என்பதே பலர் நிலைப்படென்பது இதிலிருந்து தெளிவாகிறது. எங்கள் குறிக்கோள் திட்டத்தை நகர்த்துவதில் தான் உள்ளது. அதற்கான பலதரப்பட்ட வேலைகள் பல பயனர்கள் செய்து வருகிறார்கள். கிரந்தத்தைப் பற்றி கவலையின்றி வேலைகள் செய்துவருகிறோம். கிரந்தமகற்றல் நடைபெறத் தொடங்கியது நீங்கள் வந்த பின்னர் தான். நீங்கள் இக்கட்டுரையில் முதல் அறிவிப்பை இட்ட பின்னர் தான் பழைய உரையாடல்/வழிமுறை குறிப்பிடப்பட்டுள்ளதா என ஆராய்ந்தேன். என் கண்ணில் படவில்லையென்றதும் வெளிப்படையாகக் பக்க ஆரம்பத்தில் குறிப்பாக சேர்த்தேன். இப்போது ஜூலையில் நடந்த சாட் உரையாடலுடன் இப்போது இப்பக்கத்தில் உள்ள உரையாடலும் பயனர்களின் பெரும்பான்மைக் கருத்து என்ன என்பதைத் தெளிவு படுத்தி விட்டது. “உள்ளது உள்ளபடி பேணுங்கள்” (as is where is) என்று திட்டப்பயனர்கள் கேட்டுக் கொண்டுவிட்டோம். இணக்க முடிவெல்லையெனில் ஒரு விசயத்தை செய்யாதிருப்பது விக்கிப் பண்பு. இங்கு குறுந்தட்டுக் கட்டுரைகளில் கிரந்தமகற்றலில் பெரும்பாலோனோருக்கு உடன்பாடில்லை என்பது தெளிவாகிவிட்டது. இதை யார் ஏற்றுக்கொள்கிறார்கள் யார் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 06:34, 21 சனவரி 2012 (UTC)- விருப்பம் +1 -- சூர்யபிரகாஷ் உரையாடுக 15:46, 21 சனவரி 2012 (UTC)
- விருப்பம் +1 --P.M.Puniyameen 16:01, 21 சனவரி 2012 (UTC)
- விருப்பம் +1--பரிதிமதி 17:44, 23 சனவரி 2012 (UTC)
- சோடாபாட்டில், இதை உங்களைப் போன்ற பயனரிடம் இருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை. இந்த விசயத்தில் நீங்கள் எவ்வித நிலைப்பாடும் கொள்ளுங்கள். சில குறிப்பிட்ட தகவல்களைச் சொல்லி மறுப்புத் தெரிவித்திருக்கிறீர்கள். அதெல்லாம் சரியே. ஆனால், தேவைக்கதிகமாகக் கடுமையாகப் பேசியிருக்கிறீர்கள். அதுவும் இந்தப் பரிந்துரையைக் குறுந்தட்டுத் திட்டக் கட்டுரைகளில் முதல் முறையாகச் செய்த போதே முதல் மறுப்பிலேயே அவ்வளவு கடுமையும் அலட்சியமும் காட்ட வேண்டிய தேவை என்ன எனப் புரியவில்லை. (இத்திட்டப் பக்கத்தில் உள்ள புரிந்துணர்வைச் சுட்டியிருக்கலாமே.) நீங்களே அருள்கூர்ந்து திரும்பப் படித்துப் பார்க்க வேண்டுகிறேன். மற்றபடி உங்கள் நிலைப்பாட்டையும் கருத்து அடிப்படையிலான மறுப்பையும் நான் எதுவும் சொல்ல வரவில்லை. -- சுந்தர் \பேச்சு 10:06, 25 சனவரி 2012 (UTC) பி.கு. அப்போது சூடான உரையாடல் நடந்து கொண்டிருந்தால் இதை இட விரும்பவில்லை. இப்போது நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.
என் கருத்து
தொகுநண்பர்களே, இங்கு இவ்வளவு பெரிதாக நடந்துள்ள உரையாடலை இப்போதுதான் பார்க்கிறேன். சில நாட்களாகப் பங்களிக்காமைக்குக் காரணம் மொழியியல் திட்டமொன்றை கூகுள் நிறுவனம் என்னிடம் ஒப்படைத்துள்ளமையால் ஏற்பட்ட வேலைப்பளுதான். கிரந்தம் இருக்க வேண்டுமா தவிர்க்க வேண்டுமா என்பதில் செல்வாவின் கருத்துக்குப் பெரும்பாலும் உடன்படுகிறேன். கிரந்தத்தைத் தவிர்க்க வேண்டும் என்று கூறும் போது, நானும் முதலில் வசதிக் குறைபாடாக உணர்ந்தாலும், கிரந்த எழுத்துக்களைத் தவிர்த்து எழுதும் போது தமிழின் தனித் தன்மை பேணப்படுகிறது என்பதை நன்கு உணர்ந்து கொண்ட பின்னர் விக்கிப்பீடியாவுக்கு வெளியிலும் பெரும்பாலும் கிரந்தம் தவிர்த்தே எழுதுவது மட்டுமன்றி, நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதையே விரும்புகிறேன். மாணவர்கள் எப்போதாவது உதவி வேண்டினால், இது தமிழ் இது வடமொழி இது வேறு மொழி என்று தெளிவாகப் பிரித்துக் காட்டுகிறேன். அதனால், தமிழின் தனித்துவம் பேணப்படுவதில் நானும் ஓரளவுக்கேனும் பங்களிக்கிறேன் என்று மனநிறைவு கொள்கிறேன். இது இவ்வாறிருக்க, ஏனைய மொழிப் பெயர்களைத் தமிழில் கிரந்தம் தவிர்த்து ஆக்கும் போது சில வேளைகளில் குழப்பம் ஏற்படுவதுண்டு. அவ்வாறான நிலைமைகளில் மாத்திரம் நாம் கிரந்தத்தைக் கையாளலாம் என்பது என் கருத்து. ஏனைய எல்லா இடங்களிலும் கிரந்தம் அகற்றியும் நற்றமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியும் எழுதுவதையே நானும் வரவேற்கிறேன். எனவே, இந்தக் கட்டுரையின் தலைப்பை செல்வாவின் பரிந்துரைக்கு ஏற்ப நிக்கோலசு கோப்பர்னிக்கசு என்று மாற்றுவதில் எனக்கும் உடன்பாடே.--பாஹிம் 16:30, 21 சனவரி 2012 (UTC)
- பாஃகிம், உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. ஆனால் இப்பொழுது இது பற்றி மேலும் நான் பேச வேண்டாம் என்று இருக்கின்றேன், பேச நிறையவே இருந்தாலும். நானும் உங்களைப் போலவே கிரந்தத்தை கலந்தே எழுதி வந்தேன், இங்கு தமிழ் விக்கிப்பீடியாவிலும் எழுதிவந்தேன். எத்தனையோ எடுத்துக்காட்டுகள் தர முடியும் ஓர் எடுத்துக்காட்டு: ஆக்ஸிஜன் என்றே நான் கட்டுரையை மார்ச்சு 5, 2007 இல் தொடங்கினேன். பின்னர் கனகு சிறீதரன், கேட்டார் ஏன் அறிவியல் பெயர்களில் மட்டும் கிரந்தம் கலந்து எழுத வேண்டும் என்று. அதன் பின்னரே சிறுகச் சிறுக கிரந்தம் இல்லாமலும் எழுதிப்பார்த்து அதன் அருமையையும் எளிமையையும் உணர்ந்தேன். நான் ஆக்ஸிஜன் என மார்ச்சு 2007 இல் தொடங்கிய கட்டுரை இரண்டு முழு ஆண்டுகள் கழித்து மார்ச்சு 14, 2009 அன்றுதான் ஆக்சிசன் என மாற்றப்பட்டது (இது ஒரு குறிப்புக்காக* மட்டுமே). கிரந்தப்பயன்பாடு பற்றி இப்பொழுது மேலும் உரையாட வேண்டாம். இக்கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என்று பெரும்பாலோர் நினைக்கின்றார்களோ அப்படியே இருக்கட்டும். இறுவட்டு திட்டம் இவ்வுரையாடலால் தடை படுகின்றது என்று பலர் நினைப்பதால் மேலும் தொடராமல் இருப்பதே நல்லது. எல்லாவற்றுக்கும் மேலாக பண்பான முறையில் உரையாடல் நிகழவேண்டும். அறிவாக்கம் நிகழும் இடத்தில் கருத்தை முதன்மைப்படுத்தி, நட்புறவான முறையில் கருத்தாடுதல் நல்லது என்பது என் கருத்து. --செல்வா 19:14, 21 சனவரி 2012 (UTC) *குறிப்பைப் பதிவு செய்த நேரம் --செல்வா 21:24, 21 சனவரி 2012 (UTC)
நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் (அ) நிக்கோலசு கோப்பர்னிக்கசு விளைவித்த புரட்சி!
தொகுஆம், வானவியல் துறையில் இந்த அறிஞர் மாபெரும் புரட்சியைக் கொணர்ந்தார். இவர் "15 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவியிருந்த பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற கொள்கையை மாற்றி கதிரவனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன என உலகிற்குக் காட்டியவர்" (காண்க: "நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்", தமிழ் விக்கிப்பீடியா).
அந்த மாபெரும் கோப்பர்னிக்கஸ் (அ) கோப்பர்னிக்கசு இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கின்ற காரசாரமான உரையாடலுக்கும் காரணமாகி, ஒரு புரட்சியையே நிகழ்த்திவிட்டாரோ! :)
செல்வாவும் சோடாபாட்டிலும் தமிழ் விக்கிக்குச் சிறப்பான பங்களிக்கும் சான்றோர்கள். அவர்களது தொடர் பங்கேற்பு/பங்களிப்பு தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கும் வளமைக்கும் மிகமிகத் தேவை. "வை திஸ் கொலவெறி" பாடலில் வருகின்ற "தமிழ்" நடை நம் தமிழ் விக்கியிலும் புகுந்துவிடக் கூடாதே என்றும், மணிப்பிரவாளம் அங்கே அரியணை ஏறிவிடலாகாதே என்றும் நாம் கவலைப்பட வேண்டிய இக்காலக் கட்டத்தில், கடுமையான விவாதங்களைத் தவிர்த்து, பொதுவான ஒருசில கொள்கைகளை உருவாக்கும் வழியைப் பார்ப்போம்.
- மணிப்பிரவாளமும் ஆங்கிலம் கலந்த மொழிநடையும் தமிழ் விக்கிக்கு ஒவ்வாதன என்பதில் ஒத்த கருத்து உள்ளது.
- கிரந்த எழுத்துகள் எங்கு வந்தாலும் அவற்றைக் கூடிய அளவு தவிர்த்து, தமிழ் மரபுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும் என்பதில் ஒத்த கருத்து உள்ளது.
- தமிழ்நாட்டுத் தமிழ், இலங்கைத் தமிழ் (மலேசியா...) போன்ற வேறுபாடுகள் தமிழ் விக்கிக்கு வளமையே தவிர குறையல்ல என்பதில் ஒத்த கருத்து உள்ளது.
- வெளிநாட்டு ஆள் பெயர், இடப்பெயர் போன்றவற்றைத் தமிழில் இடும்போது சிக்கல்கள் எழுவது இயல்பு. England என்பதை "இங்க்லாண்ட்" என்று நாம் சொல்வதில்லை. அது "இங்கிலாந்து" என்று தமிழ் மரபுக்கு ஏற்பவே கையாளப்படுகிறது. ஆனால் Scotland என்பதை "ஸ்காட்லாந்து" என்று சிலர் எழுத விரும்புவர். அதை "இசுக்கொட்லாந்து" அல்லது "இசுக்காட்லாந்து" அல்லது "எசுக்காத்லாந்து" என்று எழுத முனைந்தால் தமிழ் மரபு காக்கப்படும், ஆனால் அதில் சிலருக்கு விருப்பக் குறைவு இருக்கலாம். இந்த நிலையில்தான் "நிக்கோலாஸ்" (நிக்கோலசு) போன்ற பெயர்களும் உள்ளன. இங்கே அடைப்புக் குறிகள், வழிமாற்று போன்ற உத்திகளைக் கையாளலாம். அதே நேரத்தில் தமிழ் மரபுக்கு முன்னுரிமை கொடுப்பது தேவை என்பது என் கருத்து.
- கட்டுரையில் சீர்மை வேண்டும் என்பதிலும் ஒத்த கருத்து உள்ளது. ஒரு வரியில் "கோப்பர்னிக்கசு", மறுவரியில் "கோபர்நிகசு" என்றால் அது குழப்பத்தையே விளைவிக்கும்.
- தமிழ் விக்கியின் குறுந்தகடு திட்டச் செயல்பாடு சற்றே பிந்திவிடும் என்பது குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை. "செய்வன திருந்தச் செய்" என்பதே நமது இலக்காக இருப்பது நல்லது.
- சோடாபாட்டிலுக்கும் செல்வாவுக்கும் இடையே நிகழ்ந்த "உரையாடல்-மோதல்" பொழுது இரவி, பாஹிம், கலை.... போன்ற பல பயனர்கள் ஆக்கப்பூர்வமான கருத்துகளைத் தெரிவித்தனர். அவர்கள் கூறியவற்றையும் மனத்தில் இருத்தி, ஒத்த கருத்து உருவாக்க முனைவோம்.
- குடும்பங்களில் உடன்பிறப்புகளிடையே கருத்து வேறுபாடுகள் எழலாம். விக்கிக் குடும்பமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் வேறுபாடுகளையும் கடந்துசென்று ஒன்றுபட்டால்தான் தமிழ் விக்கிக்கு வாழ்வு உண்டு. இல்லையேல் அனைவருக்கும் தாழ்வே.
- குறிப்பு
மேற்காட்டிய பதிவை இடுகை செய்த அதே நேரத்தில் செல்வாவும் எழுதிக்கொண்டிருந்ததால் "முரண்பாடு" ஏற்பட்டது. இருப்பினும் எனது கருத்தைப் பதிவுசெய்ய விழைகிறேன்.--பவுல்-Paul 19:35, 21 சனவரி 2012 (UTC)
- விருப்பம் +1 நன்றி பவுல்! என் கருத்துகள் உங்களுடையதோடும் பாஃகிம்மோடும் மிகவும் ஒத்ததே! சுவையாக கோப்பர்நிகசின் விளைவித்த புரட்சி என்றும் சொன்னதை இரசித்தேன் :) --செல்வா 20:07, 21 சனவரி 2012 (UTC)
- பவுல், உங்கள் கருத்துக்களுடன் முழுமையாக உடன்படுகிறேன். --Natkeeran 18:21, 23 சனவரி 2012 (UTC)
ஜடாவர்மன்
தொகுமன்னிக்கவும். எனக்கு கிரந்தம் என்றவுடன் இத்தலைப்பு தான் நினைவுக்கு வருகிறது. ஆங்கிலத்தில் சடையவர்மன் என்று தலைப்பு இருக்க வேண்டியதெல்லாம் ஜடாவர்மன் என்று ஒருவர் எழுதியிருந்தார். தற்போது மாற்றியாகிவிட்டது. ஏன் சடையவர்மன் என்று சரியாக எழுதவில்லை. சடை என்ற சொல் பயன்பாட்டில் ஏற்கனவே உள்ளது. அதை அவர் அறியாமல் இருக்குமளவு நாம் கிரந்தத்தை தெரியாமலே ஆதரித்து வருகிறோம் என்று அறிய முடிகிறது. அதனால் முடிந்தளவுக்கு கிரந்தம் தவிர்த்து வழக்கிலுள்ள தமிழ் சொற்களை பயன்படுத்துவது நன்று. ஆனால் அதை வேண்டுகோளாக வைக்காமல் கட்டாயமாக்குவது சரிதானா என்பதில் எனக்கு தெளிவில்லை. நான் விக்கியில் நுழைந்த போது பேச்சுப்பக்கம் என்று ஒன்று இருந்தது என்பதே தெரியாது. ஒருவேளை அதைப்பர்க்காமல் போயிருந்தால் நானும் சில சர்சைகளுக்காக வெளியேறி இருப்பேன். அது போலவே இங்கு விதியேற்படும் முன்பே அதை அமல்படுத்துவதால் தமிழ் ஆர்வம் கொண்டு சிலர் மாற்றம் செய்தாலும் அவர் வேண்டுமென்றே நம்மை பிடிக்காமல் மாற்றம் செயவது போல் ஒரு பின்பம் உருவாகும். இதனால் இங்கு வரும் புதியவர்கள் வெளியேற வாய்ப்புளது. இங்குள்ள புது விக்கிப்பயனர்களை தக்க வைக்க வேண்டுமானால் அவர்கள் நுழையும்போதே இதை போல் விதியுள்ளது என்பதை தெளிவு படுத்த வேண்டும். கிரந்தம் குறித்த விதியில்லாமல் அதை அமல்படுத்தினால் நீங்கள் நன்மையாக செய்தாலும் தீமையாகவேபடும். அதனால் இதற்கு முதல் விதி ஏற்படுத்துங்கள். அதன்பின் மாற்றம் செய்வது சிறந்தது. இங்கு சிறிது நேரத்தில் மின்தடை ஏற்பட உள்ளதால் உரையாடலை முழுதும் படிக்க முடியவில்லை. அதனால் சிலவற்றை கவனிக்காமலும் சிலவற்றை தவறாகவும் சம்பந்தமில்லாமலும் எழுதியிருந்தால் மன்னிக்கவும்.
@George46 நான் முரண்பாடு ஏற்படும் பக்கங்களில் உரையாடும் போது, சேமிக்கும் முன் தகவலை வலசொடுக்குதல் மூலம் சேமித்து வைத்து விடுவேன். மீண்டும் ஒட்டி சேர்த்துவிடலாம்.--தென்காசி சுப்பிரமணியன் 05:16, 22 சனவரி 2012 (UTC)
- விருப்பம் +1--P.M.Puniyameen 12:47, 22 சனவரி 2012 (UTC)
// ஆனால் அதை வேண்டுகோளாக வைக்காமல் கட்டாயமாக்குவது சரிதானா என்பதில் எனக்கு தெளிவில்லை. //
கிரந்தப் பயன்பாடு குறித்த வழிகாட்டல் பக்கம் ஒன்று மட்டுமே உள்ளது. இது குறித்து விதி ஏதும் இல்லை. தமிழ் விக்கிப்பீடியா போன்ற கூட்டுத் திட்டங்களில் 100% கிரந்தம் சேர்த்து எழுதுவது, 100% கிரந்தம் விடுத்து எழுதுவது இரண்டுமே சாத்தியப்படாது. எனவே, இது குறித்து கண்டிப்பான விதி என்றும் வர இயலாது. தற்போதைய நடைமுறை, அந்தந்தப் பேச்சுப் பக்கங்களில் கிரந்தம் குறித்த கருத்து தெரிவித்து மற்ற பயனர்களின் ஏற்பை வேண்டி அதற்கேற்ப மாற்றல் மட்டுமே. ஆனால், பல பக்கங்களில் இதே போன்ற உரையாடல்கள் நிகழ்வதால் ஆதரிப்போர், மறுப்போர் இருவருக்குமே நேர இழப்பு ஆவதால், இதற்கு உள்ள முறைமையை இன்னும் எப்படி மேம்படுத்தலாம் என்பதே கேள்வி. பேச்சுப் பக்கத்தில் உரையாடினால் கூட புதுப்பயனர்கள் அவற்றைப் பற்றி அறியாமல் இருக்கலாம் என்று நீங்கள் சுட்டி உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. தங்கள் கருத்துகளுக்கு நன்றி.--இரவி 07:48, 22 சனவரி 2012 (UTC)
விருப்பம் இரவி + தென்காசி சுப்பிரமணிய்ன் --செல்வா 05:06, 25 சனவரி 2012 (UTC)
கருத்து
தொகுநான் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பங்களிக்க இயலாமையில் பல உரையாடல்களைக் கவனிக்க இயலவில்லை. இந்த உரையாடல் நடந்து கொண்டிருக்கும்போது சில கட்டுரைகளின் உரையைத் திருத்திக் கொண்டிருந்தேன், அதனால் கவனிக்கவில்லை. அந்தந்த இழையில் அல்லாமல் பொதுவாகக் கருத்துத் தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.
2004-இல் இருந்து இப்போது வரை கூடிய வரையில் கிரந்தத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதில் பொதுவாகவே உடன்பாடு இருந்து வந்துள்ளது. இருந்தாலும் ஒரு சிலரே எதிர்த்தாலும் ஒரு தாராண்மை ஏற்பு நோக்கிலேயே இறுக்கம் குறைந்த கொள்கையை உருவாக்கினோம். அதிலும் தமிழில் சமய நோக்கில் நெடுநாள் வழக்கில் இருந்த சில பெயர்களில் மட்டும் தான் ஏற்பு விலக்கு பற்றிய கருத்து வேறுபாடு மிகுந்திருந்தது. ஆங்கில, அறிவியற் சொற்களை இதுவரைத் தமிழில் எழுதாதபோது அதை இயன்றவரை தமிழ் எழுத்துக்களைக் கொண்டே எழுதலாம் எனப் பொதுவான புரிந்துணர்வு இருந்தது. இங்கு செல்வாவின் பரிந்துரையில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு கட்டுரையின் தலைப்பையும் உள்ளடக்கத்தையும் பற்றி பேச்சுப் பக்கத்தில் முறையாகக் கேட்டுள்ளார். (குறுந்தகட்டுப் பணிகளின்போது இதை எழுப்ப வேண்டாம் என்ற புரிந்துணர்வு இருப்பதை நானும் முன்னர் கவனிக்கவில்லை. அவ்வாறு இருப்பதால் அதைச் சுட்டினால் போதுமானது. நானும் அந்தக் காரணத்தினால் தலைப்பை இப்போது மாற்றப் பரிந்துரைக்கவில்லை.)
பொதுவாக இந்த உரையாடலில் குறிப்பிடப்பட்ட சில கருத்துக்கள்:
- பல நாட்களாக இந்தக் கட்டுரை இருந்து வந்துள்ளது, திடீரென மாற்ற வேண்டுமா?
எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். தனிப்பட்ட அளவில் நான் எழுதிய கட்டுரைகளை வேறு யாரும் திருத்தாமல் இருந்த போது 5-6 ஆண்டுகள் கழித்து நானே திருத்தியிருக்கிறேன். நமது தனிப்பட்ட, கூட்டுப் புரிதல்கள் வளர்வது இயல்பே. தவிர விக்கியில் இருப்பவர்கள் தொடர்ந்து அன்றாடம் கலந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. அவரவர்க்குத் தோதான நேரங்களில் தான் வர முடியும். (அதனால் தான் ஐ.ஆர்.சி., கீச்சு, முகநூல் உரையாடல் போன்றவற்றைக் காட்டிலும் விக்கியிலேயே உரையாடுவது சிறந்தது.)
- எழுத்து, இலக்கணம் என்று பார்க்க வேண்டுமா? அவரவர் போக்கில் எழுதட்டுமே.
கிரந்தத்தையும் தாண்டி பொதுவாக அப்படிச் சொல்லத் தொடங்கியுள்ளது மிகவும் அபாயமான போக்கு எனக் கருதுகிறேன். விக்கிப்பீடியா உட்பட எந்தவொரு கலைக்களஞ்சியமானாலும் எழுத்து, இலக்கணம், நடை போன்றவற்றில் இசைந்து கொடுக்க மாட்டார்கள். நானறிய ஒலிக்கோப்புக்களாகப் பேசிப் பதியும் கட்டுரைகளிலும் கூட அதே நிலைதான். அதிலும் தமிழ் போல செந்தர மரபு (இருதர வழக்கு) இருக்கும் மொழியில் இன்னும் உறுதியாக இருப்பதே சரி.
எந்த ஒரு பயனரும் எழுதும்போது பிழை விட வாய்ப்புள்ளது. அதை திருத்துவதும், திருத்தங்களைப் பரிந்துரைப்பதும் தவறில்லை. தொடர்ந்து நடக்கும்.
- பயனர் வரத்தும் பங்களிக்கும் வாய்ப்பும் இறுக்கமான நெறிமுறைகளால் குறையும்.
மேலே பலரும் (சோடாபாட்டில் உட்பட) தாங்கள் இயன்றவரை கிரந்தத்தை விடுத்து எழுதுவதாகவே சொல்லியுள்ளார்கள். நல்லெண்ணம் கொண்ட பயனர்கள் தக்க காரணத்துடன் விளக்கும்போது ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார்கள். அவ்வாறு இல்லாமல் வரத் தயங்குபவர்கள் தயங்கினால் பரவாயில்லை. தமிங்கிலமாகவோ, இலக்கணப்பிழைகள் மலிந்தோ, எழுத்துப்பிழைகள் நிறைந்தோ ஒரு கோடி கட்டுரைகள் வந்தாலும் வேண்டாம். சிறிது காலம் தாழ்ந்தேனும் தரமாகவே வருவது நல்லது.
- தமிழ் விக்கி நடை மிரட்டுகிறது. புரியவில்லை.
இது தான் நாம் முக்கியமாக எண்ணிப் பார்க்க வேண்டிய கருத்து. நிக்கோலசு என்று எழுதினால் படிப்பதில் சிரமமாக உள்ளதா என எண்ணிப் பார்க்க வேண்டும். பிறமொழிச் சொற்களைக் குறைத்து ஈடான தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தும்போதும் இதே கேள்விதான் எழுந்தது. உண்மையாகப் பார்த்தால் புரியவில்லை என்று சொல்பவர்கள் தாம் பழகியது போல இல்லை என்ற பொருளிலேயே சொல்கின்றனர். முதலில் வரும்போது எனக்கும் அப்படித்தான் இருந்தது. நாளாக நாளாக இதுவே இயல்பாய்த் தெரிகிறது. தமிழ் விக்கி இயல்பாகவே இணையத்தில் முன்னிலையில் நிற்கும் (தேடுபொறிகளினாலும், இங்குள்ள உள்ளடக்கம் இணையத்தில் வேறெங்கும் கிடைக்காது என்பதாலும்). அந்நிலையில் இந்த நடை பழகி விடும் வாய்ப்புகளே மிகுதி. அடுத்தது, ஆங்கிலச் சொற்களைத் துல்லியமாகத் தராத போது குறையாகத் தோன்றும் நபர்கள் பொதுவாக ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர்களே. அவர்கள் ஒரு கட்டுரையை இங்கு படிக்க முடியவில்லை என்றாலும் கூட ஆங்கிலத்தில் படிக்க வாய்ப்புள்ளது. தமிழையே முதன்மையாகக் கற்றுள்ளவர்களை எண்ணிப் பார்க்க வேண்டுமல்லவா?
நமது நடையில் எனக்குத் தெரிந்த ஒரே குறை மொழிபெயர்ப்பு நோக்கில் இருப்பதுதான். ஒரு ஆங்கில விக்கிக் கட்டுரையை மொழிபெயர்க்கும்போது தெரிந்தோ தெரியாமலோ சொல்வரிசை, செயப்பாட்டு வினைகளைக் குறைத்து எழுதும் தமிழ் மரபு போன்றவற்றில் கவனம் குறைந்து இயல்பாக இல்லாமல் எழுதி விடுகிறேன். அதுவே நம்மில் பலருக்கும் வருகிறது. பார்வதி போன்றோரது திருங்களைப் பார்த்த பின்னால் சில நேரங்களில் என்னை நானே குட்டிக் கொண்டிருக்கிறேன். சற்று ஊன்றிப் படித்துவிட்டு மொழிபெயர்க்காமல் தமிழிலேயே எண்ணிப் பார்த்து எழுதும்போது இது குறையும். பட்டாம்பூச்சி கட்டுரை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
- நேரம் வீணாகிறது.
யாருடைய நேரம் வீணாகிறது எனப் புரியவில்லை. செல்வா மாற்றட்டுமா எனக் கேட்கிறார் என்றால் தொடர்ந்து கொள்கையில் மறுப்பு இருப்பவர்கள் இருந்தால் அவர்களுக்கு நேரம் வீணாகும். ஆனால் மேலே கருத்துத் தெரிவித்துள்ள அனைவரும் தாமாகவே கிரந்தம் விடுத்து எழுதுவதாகவே தெரிவித்துள்ளதாகக் காண்கிறேன். மெதுமெதுவாக அந்தக் கொள்கையைப் பொதுவான ஒரு இடத்தில் உரையாடி இணக்க முடிவை எட்ட வேண்டும். அதன் பின்னர் அதைச் சுட்டிவிட்டு விரும்புபவர்கள் தாமாகவே மாற்றிக் கொள்ளலாம்.
- குறுவட்டுத் திட்டம் தடைபடுகிறது.
குறுவட்டுத் திட்டம் மிகவும் முக்கியமான திட்டம். அதனால் நல்ல பயன் கிடைக்கும். இதில் முனைந்து ஈடுபடும் அனைவரையும் குறிப்பாக முடுக்கி விட்டு முனைந்து செயலாற்றும் சோடாபாட்டிலையும் உளமாறப் பாராட்டுகிறேன். ஆனால், என்னைப் பொருத்தவரை விக்கிப்பீடியாவின் உள்ளடக்கம் பற்றிய கேள்விகள் முதலானவற்றை ஒதுக்கிவிட்டு நடத்தும் அளவுக்கு எந்தத் திட்டமும் முக்கியமில்லை. அதிலும் விக்கியைப் போலன்றி குறுவட்டாகவோ அச்சிலோ வெளியிடும்போது அதைத் திருத்தும் வாய்ப்பு இல்லாததால் இன்னும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். ஆங்கில விக்கியின் Version 1.0 திட்ட முனைப்பாளரை விக்கிமேனியாவில் கண்டு பேசியபோது அவரும் அதை வலியுறுத்தினார். சிக்கல் இருந்தால் அந்தக் கட்டுரையை விட்டுவிட்டுக் கூட வெளியிடலாம். குறுவட்டுத் திட்டத்தின் தொடக்கத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு என்பதால் நான் இதை வலியுறுத்தவில்லை. ஆனால் இந்தத் திட்டத்தைக் காட்டித் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதால் விக்கியும் அதன் நோக்கமும் முதன்மையானவை எனக் கூறிக் கொள்கிறேன்.
இவை தவிர, இந்த உரையாடலின் போக்கில் கவலை தரும் சிலவற்றைச் சுட்டிக் காட்ட விரும்பினேன். இருந்தாலும், இப்போது சூட்டோடு சூடாக மனக்கசப்புத் தர வாய்ப்புள்ளவற்றைத் தவிர்க்க விரும்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 11:17, 22 சனவரி 2012 (UTC)
why this kolaveri ? I watch from outside and want to talk plainly. why all people are against Selva.. bcoz he is coming last minute and do nattamai. All old guys like Ravi, Selva, Sundr busy with thier work when tamil wiki is down. when sodabottle brings new people, corrects all mistakes and help new users it is given new life. people get more help in sodabottle page than help page. That is why this fight.. old caucus vs new turk.. nothing to do grantha..everybody agrees no grantha..
2. for grantha..it is only notation why so much opposition i dont know..but if all want keep one IPA chart like english where allow grantha and avoid grantha in article. say no grantha in tamil wiki strictly..no such fights u want new users to write grantha and give sermon.. -- −முன்நிற்கும் கருத்து 183.83.61.124 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- மேலே பயனர்:183.83.61.124 குறிப்பிட்டுள்ள கருத்தில் நாட்டாமை செய்வது போன்ற கூற்றைக் கண்டிக்கிறேன். விக்கியில் எவர் வேண்டுமானாலும் எந்த ஒரு கட்டுரையைப் பற்றியும் கேள்வி எழுப்பலாம். பழைய பங்களிப்பாளரானாலும் புதிய பங்கிப்பாளரானாலும் அவரவர் கருத்துக்களின் அடிப்படையில் தான் எந்த முடிவையும் எடுக்க வேண்டும். இதில் தலைமுறை இடைவெளி என்றெல்லாம் இல்லை. முன்னால் கடுமையாக உழைத்து நிறையப் பங்களித்தவர்கள் இப்போது குறைவாகப் பங்களிக்கின்றனர். விக்கி ப்பங்களிப்பாளர்கள் அனைவருக்குமே கதிரியக்கம் போன்ற அரைவாழ்வு ஒன்று உண்டு. அவ்வளவுதான். அதிலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பங்களிப்பார் என்பதை உணர்ந்து போற்ற வேண்டும். சிலர் புதுக்கட்டுரைகளை எழுதுவார்கள், சிலர் உரைகளைத் திருத்துவார்கள், பகுப்புக்களைச் சேர்ப்பார்கள், வேறு சிலர் வளர்முகக் கருத்துக்களைத் தெரிவிப்பார்கள். அனைத்துமே இன்றியமையாத பணிகள் தாம். மேலே பயனர்:183.83.61.124 குறிப்பிட்டுள்ள கருத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் கொள்கைகளை உரையாடி ஒருமுறைத் தெளிவு செய்து கொள்ள வேண்டும் என்ற கருத்து ஏற்கத்தக்கதாக உள்ளது. -- சுந்தர் \பேச்சு 08:51, 23 சனவரி 2012 (UTC)
கிரந்தம் கிரந்தமகற்றல்
தொகுவிக்கி பீடியா ஒரு பன்முகத் தகவல்கள் கொண்ட கட்டற்ற கலைக் களஞ்சியம். இதில் தகவல் தேடுவோர்கள் அவரவர்கள் அறிந்த (படித்த) ஒலியியலில் கொண்டு தான் தேடுவார்கள். இதில் நாடு, வட்டாரம் எல்லம் அடங்கும். தலைப்புகளுக்கிடையே ஒரு சிறிய இடைவெளி விட்டாலுமே அக்கட்டுரை கிடைப்பதிலை. எனக்கு இது போன்ற கட்டுரைத் தேடலில் மிக அதிக நேரம் செலவாகியுள்ளது. எனவே தேடுவோருக்கு முதலில் விக்கியில் தகவல் உள்ளது என்ற நம்பிக்கை வரவேண்டும். அதன் பின் அதன் உள்ளடக்கத்தில் நாம் செய்த கிரந்தம்/ கிரந்தமகற்றல் மாற்றங்கள் பார்த்து அவர் இதற்கேற்ற தமிழ் இது தான் எனத் தெளியட்டுமே... அனைவரிடத்திலும் விக்கி பீடியா சென்று சேர வேண்டும் எனில் கிரந்தம்/ கிரந்தமகற்றல் என்ற தருக்கங்கள் இங்கு தேவையில்லை. ஆனால் தமிழ் என்று நோக்கும் போது அது தேவை. அதுவும் ஓர் உரை திருத்தப் பணியே. ஆயினும் எனது வேண்டுகோள்: பொதுவான தவறுகளின்றி எத்தலைப்புகளில் கட்டுரை தொடங்கப்பட்டதோ அவ்வாறே இருக்கட்டும். ஆனால் கட்டுரையின் உள்ளடக்கங்களில் நாம் விரும்பும் தமிழ் வளர்க்கலாமே? --Parvathisri 16:22, 23 சனவரி 2012 (UTC)
//இவர் பெயர் கட்டுரையில் கோப்பர்னிக்கஸ் என்று ப் சேர்த்தும், சில இடங்களில் கோபர்நிகஸ் என்று ப் இல்லாமலும், சில இடங்களில் க் இல்லாமலும், சில நி என்னும் தகர நி இட்டும் எழுதப் பட்டுள்ளது.//
- இப்பிழைகள் நான் செய்தவையே. காரணம் நான் நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் என தொகுத்த பின்னர் நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ் என நகர்த்தப்பட்டதால் எனக்கேற்பட்ட குழப்பமே. நான் விக்கியில் அப்போது தான் பங்கேற்க தொடங்கியிருந்த காலம். மேலும் நான் தமிழில் ஒலியியல் வழியாகவே தமிழ் தட்டச்சிக் கொண்டிருக்கிறேன். எனவே இப்பிழைகள் எனது கட்டுரையில் மிக அதிகமாகவே இருக்கும். நான் அடுத்தவரது கட்டுரையைத் திருத்தும் போதுதான் நான் எவ்வளவு பிழைகள் செய்துள்ளேன் எனத் தெரிகிறது. [ இதில் சூர்யா வேறு எனக்கு பதக்கம் எல்லாம் தந்துவிட்டார் :) எங்கிட்ட இருந்து வாங்கிடுவாங்களோ!! (:0) ] --Parvathisri 16:22, 23 சனவரி 2012 (UTC)
- தேடும்போது கட்டுரைகள் கிடைக்காமல் இருப்பதைத் தவிர்க்க மாற்றுவழிப் பக்கங்களை உருவாக்கலாம், பார்வதி. சில இடங்களில் இரண்டு வழக்குகள் பரவலாக இருந்தால் ஒன்றை அடைப்பில் தரலாம்.
- மற்றபடி எழுத்துப்பிழைகள் ஏற்படுவது இயல்புதான். நீங்களே மீண்டும் பார்க்கையிலோ வேறு யாராவது காணும்போது திருத்தினால் போதுமானது. தமிழ் எழுத்துப்பெயர்ப்பு தவிர தமிழ்99 விசைப்பலகையையும் நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாம். அதில் தட்டுப்பிழைகளுக்கான வாய்ப்பு சற்று குறைவு என்றே நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 16:35, 23 சனவரி 2012 (UTC)
- பி.கு. உங்கள் பதக்கத்தை யாரும் வாங்கிவிட மாட்டோம். அது உங்கள் சிறப்பான பங்களிப்புக்காகத் தரப்பட்டது. தருமி போல் எண்ண வேண்டியதில்லை. :)