பொட்டாசியம் பெர்ரோசயனைடு

வேதிச் சேர்மம்

பொட்டாசியம் பெர்ரோசயனைடு (Potassium ferrocyanide) என்பது K4[Fe(CN)6]·3H2O என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். [Fe(CN)6]4− அணைவின் பொட்டாசியம் உப்பாக இச்சேர்மம் கருதப்படுகிறது. எலுமிச்சை மஞ்சள் நிறத்தில் ஒற்றைச்சரிவச்சுப் படிகக் கட்டமைப்பில் பொட்டாசியம் பெர்ரோசயனைடு உருவாகிறது. பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது.

பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II)
Potassium hexacyanidoferrate(II)
பொட்டாசியம் பெர்ரோசய்னைடு முந்நீரேற்று
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II)
வேறு பெயர்கள்
  • (மஞ்சள்) பொட்டாசின் புருசைடு [1]
  • பொட்டாசியம் அறுசயனோபெர்ரேட்டு(II) முந்நீரேற்று
  • டெட்ராபொட்டாசியம் பெர்ரோசயனைடு முந்நீரேற்று
  • பெர்ரேட்டு அறுசயனோ டெட்ராபொட்டாசியம் முந்நீரேற்று[2]
இனங்காட்டிகள்
13943-58-3 (நீரிலி) Y
14459-95-1 (முந்நீரேற்று) Y
ChemSpider 20162028
EC number 237-722-2
InChI
  • InChI=1S/6CN.Fe.4K.3H2O/c6*1-2;;;;;;;;/h;;;;;;;;;;;3*1H2/q6*-1;+2;4*+1;;;
    Key: UTYXJYFJPBYDKY-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 161067
  • [K+].[K+].N#C[Fe-4](C#N)(C#N)(C#N)(C#N)C#N.[K+].[K+]
UNII GTP1P30292 (நீரிலி) Y
961WP42S65 (முந்நீரேற்று) Y
பண்புகள்
K4[Fe(CN)6]
வாய்ப்பாட்டு எடை 368.35 கி/மோல் (நீரிலி)
422.388 கி/மோல் (முந்நீரேற்று)
தோற்றம் இளம் மஞ்சள், படிக மணிகள்
அடர்த்தி 1.85 கி/செ.மீ3 (முந்நீரேற்று)
கொதிநிலை (சிதைவடையும்)
முந்நீரேற்று
28.9 கி/100 மில்லிலிட்டர் (20 °செல்சியசு)
கரைதிறன் எத்தனால், டை எத்தில் ஈதர் ஆகியவற்றில் கரையாது
−130.0·10−6 செ.மீ3/மோல்
தீங்குகள்
GHS pictograms The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H411
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ?
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
Lethal dose or concentration (LD, LC):
6400 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[3]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பொட்டாசியம் பெர்ரிசயனைடு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் பெர்ரோசயனைடு
புருசியன் நீலம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

1752 ஆம் ஆண்டில், பிரெஞ்சு வேதியியலாளர் பியர் இயோசெப் மக்கெர் (1718-1784) முதன் முதலில் பொட்டாசியம் பெர்ரோசயனைடு தயாரிப்பை முதன்முதலில் அறிவித்தார். புருசியன் நீலத்தை (இரும்பு(III) பெர்ரோசயனைடு) பொட்டாசியம் ஐதராக்சைடுடன் வினைபுரியச் செய்து இதை தயாரித்தார்.[4][5]

நவீன தயாரிப்பு முறை

தொகு

ஐதரசன் சயனைடு, இரும்பு(II) குளோரைடு மற்றும் கால்சியம் ஐதராக்சைடு ஆகியவற்றிலிருந்து தொழில்துறையில் பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) உற்பத்தி செய்யப்படுகிறது. இவை ஒன்றாகச் சேர்வதனால் Ca2[Fe(CN)6]·11H2O என்ற கரைசல் உருவாகும். பின்னர் இக்கரைசல் பொட்டாசியம் உப்புகளுடன் சேர்த்து சூடுபடுத்தப்பட்டு கலப்பு கால்சியம்-பொட்டாசியம் உப்பு CaK2[Fe(CN)6] வீழ்படிவாகும். இவ்வீழ்படிவுடன் பொட்டாசியம் கார்பனேட்டைச் சேர்த்து சூடுபடுத்தினால் டெட்ரா பொட்டாசியம் உப்பு கிடைக்கும்.[6]

வரலாற்று முறை

தொகு

வரலாற்று ரீதியாக, பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) சேர்மம் நைட்ரசன் கரிமப் பொருட்கள், இரும்பு நிரப்பிகள் மற்றும் பொட்டாசியம் கார்பனேட்டு ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கப்பட்டது.[7] சிதைந்த கொம்புகள், குப்பை கூளம், வேண்டாத சீவல்கள், தோல், அல்லது உலர்ந்த இரத்தம் போன்றவை பொதுவான நைட்ரசன் மற்றும் கார்பன் மூலங்களாகும். ஐதரசன் சயனைடிலிருந்து நகர எரிவாயுவை சுத்திகரித்தல் செயல்முறையில் விளைந்த ஆக்சைடுகளிலிருந்தும் இது வணிக ரீதியாக பெறப்பட்டது.

வேதி வினைகள்

தொகு

நைட்ரிக் அமிலத்துடன் பொட்டாசியம் பெர்ரோசயனைடு சேர்மத்தைச் சேர்த்து சூடுபடுத்தினால் H2[Fe(NO)(CN)5] உருவாகிறது. சோடியம் கார்பனேட்டுடன் சேர்த்து இந்த இடைநிலையை நடுநிலையாக்கிய பிறகு, சோடியம் நைட்ரோபுருசைடின் சிவப்பு நிறப்படிகங்கள் படிகமாகின்றன.[8]

தொடர்ந்து குளோரின் வாயுவைச் சேர்த்து சூடாக்கினால் பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) சேர்மம் பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(III) சேர்மமாக மாற்றமடைகிறது:

2 K4[Fe(CN)6] + Cl2 → 2 K3[Fe(CN)6] + 2 KCl

பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) சேர்மத்துடன் பெர்ரிக் உப்புகளைச் சேற்த்து சூடுபடுத்தி புருசியன் நீலம் தயாரிப்பது பரவலாக அறியப்பட்ட ஒரு வினையாகும்.

பயன்பாடுகள்

தொகு

பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) சேர்மம் தொழில்துறையில் பல முக்கிய பயன்பாடுகளைக் காண்கிறது. இதுவும் இதனுடன் தொடர்புடைய சோடியம் உப்பும் சாலை உப்பு மற்றும் மேசை உப்பு இரண்டுக்கும் கட்டியாக்கத் தடுப்பு முகவராகப் பயன்படுகிறது. பொட்டாசியம் மற்றும் சோடியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) உப்புகள் வெள்ளீயத்தை சுத்திகரிப்பதிலும் மாலிப்டினம் தாதுக்களிலிருந்து தாமிரத்தைப் பிரிப்பதிலும் பயன்படுத்தப்படுகின்றன. பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) மது மற்றும் சிட்ரிக் அமிலம் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது.[6]

2017 ஆம் ஆண்டின்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் அறுசயனிடோபெர்ரேட்டு(II) (ஐ 535–538) உப்பு சேர்க்கைகள் என இரண்டு உணவு வகைகளில் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது.

இது கால்நடை தீவனத்திலும் பயன்படுத்தப்படுகிறது.[9]

ஆய்வகத்தில், பொட்டாசியம் பெர்மாங்கனேட்டின் செறிவைத் தீர்மானிக்க பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) பயன்படுத்தப்படுகிறது. ஆக்சிசனேற்ற ஒடுக்க வினைகளின் அடிப்படையில் தரம்பார்த்தல் செயல்பாட்டில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) ஆனது பீட்டா-கேலக்டோசிடேசுக்கு ஓர் இடையகத்தை வழங்கப் பயன்படும் பொட்டாசியம் பெர்ரிசயனைடு மற்றும் பாசுபேட்டு இடையகக் கரைசலில் பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) பயன்படுத்தப்படுகிறது.

1900 ஆம் ஆண்டுக்கு முன், காசுட்னர் செயல்முறை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) கார உலோக சயனைடுகளின் மிக முக்கியமான ஆதாரமாக இருந்தது.[6] இந்த வரலாற்று செயல்முறையில், பொட்டாசியம் சயனைடு பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) சேர்மத்தை சிதைப்பதன் மூலம் தயாரிக்கப்பட்டது:[6] In this historical process, potassium cyanide was produced by decomposing potassium hexacyanidoferrate(II):[7]

K4[Fe(CN)6] → 4 KCN + FeC2 + N2

கட்டமைப்பு

தொகு

மற்ற உலோக சயனைடுகளைப் போலவே, திண்ம பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) சேர்மமும் நீரேற்று மற்றும் நீரற்ற உப்புகள் என இரண்டும் சிக்கலான பல்லுருவ அமைப்பைக் கொண்டுள்ளன. பலபடி CN ஈந்தணைவிகளுடன் பிணைக்கப்பட்டுள்ள K+ அயனிகளுடன் குறுக்காக இணைக்கப்பட்ட எண்முக [Fe(CN)6]4− மையங்களைக் கொண்டுள்ளது.[10]

பாதுகாப்பு

தொகு

சிறுநீரகங்கள் பெர்ரோசயனைடு நச்சுத்தன்மையின் பாதிப்புக்கு உள்ளாகும் உறுப்பு ஆகும்.[11]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Five Hundred Useful and Amusing Experiments in Chemistry, and in the Arts and Manufactures: With Observations on the Properties Employed, and Their Application to Useful Purposes. Thomas Tegg. 1825.
  2. "POTASSIUM FERROCYANIDE MSDS Number: P5763 - Effective Date: 12/08/96". J. T. Baker Inc. Archived from the original on 2015-11-21. பார்க்கப்பட்ட நாள் 2012-04-08.
  3. https://chem.nlm.nih.gov/chemidplus/rn/13943-58-3 [தொடர்பிழந்த இணைப்பு]
  4. Macquer (1752). "Éxamen chymique de bleu de Prusse" (in fr). Histoire de l'Académie Royale des Sciences …, § Mémoires de l'Académie royale des Sciences: 60–77. https://www.biodiversitylibrary.org/item/88112#page/250/mode/1up.  From pp. 63-64: "Après avoir essayé ainsi inutilement de décomposer le bleu de Prusse par les acides, … n'avoit plus qu'une couleur jaune un peu rousse." (After having tried so vainly to decompose Prussian blue by acids, I made recourse to alkalies. I put a half ounce of this [Prussian] blue in a flask, and I poured on it ten ounces of a solution of nitre fixed by tartar [i.e., potassium nitrate (nitre) which is mixed with crude cream of tartar and then ignited, producing potassium carbonate]. As soon as these two substances had been mixed together, I saw with astonishment that, without the aid of heat, the blue color had entirely disappeared; the powder [i.e., precipitate] at the bottom of the flask had only a rather gray color: having put this vessel on a sand bath in order to heat the solution until it simmered, this gray color also disappeared entirely, and all that was contained in the flask, both the powder [i.e., precipitate] and the solution, had only a yellow color [that was] a little red.)
  5. Munroe, Charles E.; Chatard, Thomas M. (1902). "Manufactures: Chemicals and Allied Products". Twelfth Census of the United States: Bulletins (210): 1–306. https://books.google.com/books?id=8UIUAQAAMAAJ&pg=RA1-PA31. ; see p. 31.
  6. 6.0 6.1 6.2 "Cyano Compounds, Inorganic". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (October 2011). Weinheim: Wiley-VCH. DOI:10.1002/14356007.a08_159.pub3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3527306732. 
  7. 7.0 7.1 Von Wagner, Rudolf (1897). Manual of chemical technology. New York: D. Appleton & Co. p. 474 & 477.
  8. Seel, F. (1965). "Sodium nitrosyl cyanoferrate". Handbook of Preparative Inorganic Chemistry (2nd) 2. Ed. Brauer, G.. New York: Academic Press. 
  9. "EuSalt Expert Meeting on E 535 and E 536 as Feed Additives". EUSalt. Archived from the original on 2019-05-12. பார்க்கப்பட்ட நாள் 2018-12-06.
  10. Willans, Mathew J.; Wasylishen, Roderick E.; McDonald, Robert (2009-05-18). "Polymorphism of Potassium Ferrocyanide Trihydrate as Studied by Solid-State Multinuclear NMR Spectroscopy and X-ray Diffraction" (in en). Inorganic Chemistry 48 (10): 4342–4353. doi:10.1021/ic802134j. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:19425611. https://pubs.acs.org/doi/10.1021/ic802134j. 
  11. Peter Aggett, Fernando Aguilar, Riccardo Crebelli, Birgit Dusemund, Metka Filipič, Maria Jose Frutos, Pierre Galtier, David Gott, Ursula Gundert-Remy, Gunter Georg Kuhnle, Claude Lambré, Jean-Charles Leblanc, Inger Therese Lillegaard, Peter Moldeus, Alicja Mortensen, Agneta Oskarsson, Ivan Stankovic, Ine Waalkens-Berendsen, Rudolf Antonius Woutersen, Matthew Wright and Maged Younes. (2018). "Re-evaluation of sodium ferrocyanide (E 535), potassium ferrocyanide (E 536) and calcium ferrocyanide (E 538) as food additives". EFSA Journal 16 (7): 5374. doi:10.2903/j.efsa.2018.5374. பப்மெட்:32626000. பப்மெட் சென்ட்ரல்:7009536. https://www.efsa.europa.eu/en/efsajournal/pub/5374. 
  12. Kosugi, Nobuhiro; Yokoyama, Toshihiko; Kuroda, Haruo (May 1986). "Polarization dependence of XANES of square-planar Ni(CN)2−4 ion. A comparison with octahedral Fe(CN)4−6 and Fe(CN)3−6 ions". Chemical Physics 104 (3): 449–453. doi:10.1016/0301-0104(86)85034-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0301-0104. http://dx.doi.org/10.1016/0301-0104(86)85034-0. 

வெளி இணைப்புகள்

தொகு