பொன்தலை விசிறிவால் கதிர்க்குருவி

பறவை இனம்
பொன்தலை விசிறிவால் கதிர்க்குருவி
A golden-headed cisticola perched on a tree branch
இனப்பெருக்க காலத்தில் ஆண் பறவை
பொன்தலை விசிறிவால் கதிர்க்குருவி ஓசை மேற்கு தொடர்ச்சி மலையில் பதிவு செய்யப்பட்டது
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிசுடிகோலிடே
பேரினம்:
சிசுடிகோலா
இனம்:
சி. எக்சிலிசு
இருசொற் பெயரீடு
சிசுடிகோலா எக்சிலிசு
(விகோர்சு & கோர்சூபீல்டு, 1827)
வேறு பெயர்கள்
  • மல்லூரசி எக்சிலிசு (விகோர்சு & கோர்சூபீல்டு, 1827)[2]

பொன்தலை விசிறிவால் கதிர்க்குருவி ( Golden-headed cisticola ) என்பது ஆத்திரேலியா மற்றும் பதின்மூன்று ஆசிய நாடுகளில் காணப்படும் சிஸ்டிகோலிடே குடும்பத்தில் உள்ள போர்ப்லர் இனப் பறவையாகும். இது சுமார் 9–11.5 cm (3.5–4.5 அங்) நீளம் வரை வளரும். இது பொதுவாக பழுப்பு மற்றும் பாலேட்டு வெண்மை நிறத்தில் இருக்கும். ஆனால் இனச்சேர்க்கை காலத்தில் வித்தியாசமான தோற்றமாக, தங்க நிற உடலாகவும் குறுகிய வால் உள்ளதாகவும் மாறும். இது ஒரு அனைத்துண்ணியாகும். மேலும் அடிக்கடி பலவிதமான குரல்களை எழுப்புவதாக உள்ளது. "அனைத்து பறவைகளிலும் சிறந்த தையல்காரர்" என்று இது அறியப்படுகிறது, இது தாவரங்கள் மற்றும் சிலந்தி நூல்களிலிருந்து கூட்டை உருவாக்குகிறது. இது மழைக்காலத்தில் இணைசேரும். இப்பறவை மிகப் பெரிய வாழிடப் பரப்பையும் எண்ணிக்கையையும் கொண்டுள்ளது, இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கருதப்படுகிறது.

வகைபிரித்தல்

தொகு

இதில் பன்னிரண்டு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[3]

  • C. e. tytleri ஜெர்டன், 1863 – தெற்கு நேபாளம் மற்றும் வடகிழக்கு இந்தியா முதல் வடக்கு மியான்மர் மற்றும் தென்மேற்கு சீனா வரை
  • C. e. erythrocephalus பிளைத், 1851 - தீபகற்ப இந்தியா
  • C. e. equicaudatus Baker, ECS, 1924 – கிழக்கு மியான்மர், தாய்லாந்து மற்றும் இந்தோசீனா
  • C. e. courtoisi La Touche, 1926 - தெற்கு மற்றும் கிழக்கு சீனா
  • C. e. volitans ( R. Swinhoe, 1859) - தைவான்
  • சி. ஈ. semirufus Cabanis, 1872 – பிலிப்பைன்ஸ் மற்றும் சூலு தீவுக்கூட்டம்
  • C. e. rusticus வாலஸ், 1863 - சுலாவெசி மற்றும் தெற்கு மலுக்கு தீவுகள்
  • C. e. lineocapilla Gould, 1847 – சுமத்ரா, தென்மேற்கு போர்னியோ, சாவகம், சிறிய சுந்தா தீவு மற்றும் வடமேற்கு ஆத்திரேலியா
  • C. e. diminutus மேத்யூஸ், 1922 – நியூ கினியா, டொரெஸ் நீரிணையில் உள்ள தீவுகள் மற்றும் வடகிழக்கு ஆத்திரேலியா
  • C. e. alexandrae மேத்யூஸ், 1912 - வடக்கு ஆத்திரேலியாவின் உள் பகுதி
  • C. e. exilis (Vigors & Horsfield, 1827) - கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆத்திரேலியா
  • C. e. polionotus மேயர், 1934 - பிசுமார்க் தீவுக்கூட்டம்

விளக்கம்

தொகு
 
தங்கத் தலை சிஸ்டிகோலாவின் பாலேட்டு நிற அடிப்பகுதி

பொன் தலை விசிறிவால் கதிர்குருவி ஒரு சிறிய இனமாகும். இது 9–11.5 cm (3.5–4.5 அங்) வரை நீளமாகவும், 6–10 g (0.21–0.35 oz) எடையிலும் இருக்கும். ஆண் பறவைகளை விட பெண் பறவைகள் சற்று கனமாக இருக்கும். இதன் தோற்றம் கருப்பு-முதுகு கதிர்குருவி ( சிஸ்டிகோலா எக்ஸிமியஸ் ) போலவே இருந்தாலும், பொன் தலை விசிறிவால் கதிர்க்குருவி இனப்பெருக்க காலத்தில் குறுகிய வால் கொண்டிருக்கும். கருங்கொட்டு கதிர்க்குருவிவியும் ( சிஸ்டிகோலா ஜுன்சிடிஸ் ) ஒத்தது, ஆனால் பொன் தலை விசிறிவால் கதிர்க்குருவியைப் போன்று "செழுமையான பொன்" தலை இல்லை.

ஆண் பறவைக்கு பல பண்புகள் உள்ளன, அவை இனப்பெருக்க காலத்தில் மட்டுமே தங்க நிற உடல், தங்க ஆரஞ்சு நிறத் தலை, மங்கிய கன்னம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மேலும் அது அப்போது குறுகிய வாலைக் கொண்டிருக்கும்; குறுகிய வால் என்பது ஆணின் இனப்பெருக்க வெற்றியைக் கூட்டுவதாக காட்டப்படுவதால் அது பாலியல் தேர்வின் விளைவாக இருக்கலாம்.[4] இனப்பெருக்க காலம் தவிர்த்த சமயத்தில் பெண் பறவைகளும் ஆண் பறவைகளும் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருக்கும். இவை பாலேட்டு நிற அடிப்பகுதியும், பழுப்பு நிற மேல்பகுதியையும் கொண்டிருக்கும். இவற்றின் உடலின் மேற்பகுதியில் கருப்பு அல்லது அடர் பழுப்பு நிற கோடுகள் இருக்கும். கறுப்பு நிற இறக்கைகளின் விளிம்புகள் மஞ்சள் நிறத்தில் உள்ளன. மேலும் பொன்நிறத் தலையைக் கொண்டிருக்கும்.[5] இவற்றின் தொண்டை வெண்மையாகவும், கழுத்தின் பின்புறம் மங்கிய பொன் நிறத்தில் இருக்கும். இளம் பறவைகள் நிறத்தில் சற்று மங்கியதாக முதிர்ந்த பறவைகளின் தோற்றத்திலேயே இருக்கும்.[5] சன்ஷைன் கோஸ்ட் கவுன்சிலின் கூற்றுப்படி, இது "டீவிப்" முதல் "வீஸ், விட்-விட்" வரையிலான பல்வேறு வகையான ஒலிகளை பிற பறவைகளிலிருந்து வேறுபட்டு உருவாக்குகிறது.

பரவலும் வாழ்விடமும்

தொகு

இப்பறவை ஆத்திரேலியா, கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோ மக்கள் சனநாயகக் குடியரசு, மியான்மர், நேபாளம், பப்புவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ், தைவான், தாய்லாந்து, கிழக்கு திமோர், வியட்நாம் ஆகிய மிகப்பெரிய வாழிடப் பரப்பை பொன்தலை விசிறிவால் கதிர்குருவி கொண்டுள்ளது. இது காணப்படும் பரப்பு 36,800,000 km2 (14,200,000 sq mi) என மதிப்பிடப்பட்டுள்ளது.

இப்பறவை புல்வெளி மலைகள், சவன்னாக்கள், மரக்காடுகள், புதர்க்காடுகள், ஆறுகள், ஈரநிலங்கள் அல்லது நீர்ப்பாசன விவசாய நிலங்கள், புற்கள் உயரமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும் பகுதிகளை வாழ்விடமாக கொண்டுள்ளது. இனப்பெருக்க காலத்தைத் தவிர, இவ்வினம் பெரும்பாலும் தரைக்கு அருகில் இருக்க விரும்புகின்றன. வடக்கு ஆத்திரேலியாவின், புல்வெளிகளில் காட்டுத்தீ ஏற்படலாம், இதனால் இது சில சமயங்களில் வன விளிம்புகளில் வாழும்.[6] BioLife என்ற அறிவியல் இதழின் படி, இது 1,200 m (3,900 அடி) அல்லது தற்கும் குறைவான உயரத்தில் வாழ்கிறது.  இருப்பினும் உலகப் பறவைகளின் உசாநூல் சானாவில் 1,500 m (4,900 அடி) உயரம் வரையும், உலொம்போ தீவில் 1,800 m (5,900 அடி) உயரம் வரையும் வாழ்கிறது என்று குறிப்பிடுகிறது.[6]

நடத்தை

தொகு
ஒரு முதிர்ந்த பொன்தலை விசிறிவால் கதிர்க்குருவி

பொன்தலை விசிறிவால் கதிர்க்குருவி ஒரு அனைத்துண்ணி ஆகும்.[7] முதன்மையாக பூச்சிகள், சிறிய நத்தைகள் போன்ற முதுகெலும்பில்லாத உயிரினங்களை உண்கிறது,[6] என்றாலும் புல் விதைகளையும் உண்கிறது.[5] இது பொதுவாக தரையில் உணவு தேடுகிறது, புல் போன்ற பல்வேறு தாவரங்களுக்கு இடையில் தன்னை மறைத்துக் கொண்டு, மெதுவாக நகரும். இது பொதுவாக அதன் வாழ்நாள் முழுவதும் ஒரே பகுதியில் வாழ்கிறது, சில சமயங்களில் வேறு இடத்திற்கு நகரும். நியூ கினியா மற்றும் டாஸ்மேனியாவின் பதிவுகள் இது திசைமாறி அலைந்து திரியும் பறவையாக இருப்பதைக் காட்டுகின்றன. மேலும் இது சீனாவில் பகுதி இடப்பெயர்வு மேற்கொள்வதாக உள்ளது. இனப்பெருக்கம் இல்லாத பருவத்தில் இதைக் கண்டறிவது பெரும்பாலும் கடினமாகும்.[6] இது பெரும்பாலும் தனித்தோ அல்லது சிறு கூட்டமாகவோ காணப்படுகிறது.[6]

இனப்பெருக்கம்

தொகு

பொன்தலை விசிறிவால் கதிர்க்குருவி பொதுவாக மழைக்காலத்தில் இணச்சேர்கையில் ஈடுபடும். இது நாடுகளிடையே மாறுபடும். ஆசியாவில், இனப்பெருக்க காலம் சீனாவில் மே-சூலை, இந்தியாவில் ஏப்ரல்-ஆகத்து, மொலுக்காஸ் மற்றும் சுலவேசியில் செப்டம்பர்-மார்ச், நியூ கினியாவில் திசம்பர்-மார்ச், தென்கிழக்கு ஆசியாவில் ஏப்ரல்-செப்டம்பர் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. வட ஆத்திரேலியாவில் ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்கின்றன. அதே நேரத்தில் மேற்கு ஆத்திரேலியாவில் சனவரி முதல் மே வரையிலும், கிழக்கு ஆத்திரேலியாவில் அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. தென்கிழக்கு ஆத்திரேலியாவில், இனப்பெருக்கம் பொதுவாக செப்டம்பர்-அக்டோபரில் நடக்கிறது. இது அதன் பகுதியைப் பொறுத்து, ஒருதுணை மண அல்லது பலதுணை மண பழக்கத்தைக் கொண்டிருக்கின்றன.[6] இனப்பெருக்க காலத்தில், ஆண் பறவைகள் சில நேரங்களில் பறந்து விளையாட்டுக் காட்டி குரல் கொடுக்கும்.[5] இந்த நிகழ்ச்சிகளில், ஆண் பறவை "உயர எழுந்து, சுமார் 50 மீ உயரத்திற்கு மேல்நோக்கி சென்று ஐந்து நிமிடங்கள் வரை இடமும் வலமுமாக மாறி மாறித் திரும்பிப் பறந்து, இறக்கைகளை மூடுகிறது", பின்னர் செங்குத்தாக தரையில் இருந்து சற்று மேலே இறங்கி வந்து சேர்கிறது. இது உடனடியாக இந்த மாதிரி மீண்டும் செய்யும் அல்லது அதன் பிராந்தியத்தின் மற்றொரு பகுதிக்கு பறந்து பின்னர் அவ்வாறு செய்யும்.[6]

இந்தப் பறவை புதர்கள், புல் மற்றும் பிற வகை தாவரங்களில் தன் கூட்டை கட்டுகிறது. கூடுகளை தரையில் இருந்து 3 m (10 அடி) க்கு மேலே கட்டுவதில்லை. "அனைத்து பறவைகளிலும் சிறந்த தையல்காரர்" என்று இப்பறவை வர்ணிக்கப்படுகிறது. இது தன் கூடுகளை உருவாக்க, சிலந்தி நூல்களைப் பயன்படுத்தி கூட்டை ஒன்றாக இணைக்கிறது.[7] இரு பாலினத்தவையும் கூடு சேர்ந்து கூடு கட்டும் பணியில் ஈடுபடும், பெண் பறவை கூடு தைக்க, ஆண் பறவை பெண்ண் பறவைக்குத் தேவைப்படும் சிலந்தி வலை நூல்களை கொண்டுவந்து கொடுக்கிறது.[8]

பெண்பறவை மூன்று அல்லது நான்கு முட்டைகள் இட்டு அடைகாக்கிறது,[7] அடைகாத்தல் காலம் 11 நாட்கள் ஆகும். குஞ்சு பொரித்து உயிர்வாழும் முட்டைகளின் விகிதம் 32% ஆகும். குஞ்சு பொரித்த பிறகு, பெண் குஞ்சுகளுக்கு உணவளிக்கிறது, ஆண் கூட்டை பாதுகாக்கிறது, அதன் அருகே வரும் விலங்குகளை விரட்டுகிறது. குஞ்சுகள் 11-13 நாட்கள் கூட்டில் இருக்கும்.[6]

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Cisticola exilis". IUCN Red List of Threatened Species 2016: e.T22713544A94378885. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22713544A94378885.en. https://www.iucnredlist.org/species/22713544/94378885. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Nicholas Aylward Vigors; Thomas Horsfield (1827). "Australian birds in the collection of the Linnean Society; with an attempt at arranging them according to their natural affinities" (in en, la). Transactions of the Linnean Society of London 15 (1): 170–334 [223]. doi:10.1111/j.1095-8339.1826.tb00115.x. https://biodiversitylibrary.org/page/778469.  The title page is dated 1826.
  3. "Grassbirds, Donacobius, Malagasy warblers, cisticolas & allies". World Bird List Version 8.2. International Ornithologists' Union. 2019. பார்க்கப்பட்ட நாள் 7 January 2019.
  4. Balmford, Andrew; Lewis, Milton J.; Brooke, M. de L.; Thomas, Adrian L.R.; Johnson, C.N. (2000). "Experimental analyses of sexual and natural selection on short tails in a polygynous warbler.". Proceedings of the Royal Society 267 (1448): 1121–1128. doi:10.1098/rspb.2000.1117. பப்மெட்:10885517. 
  5. 5.0 5.1 5.2 5.3 "Golden-headed Cisticola". Archived from the original on 8 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 8 January 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)"Golden-headed Cisticola" பரணிடப்பட்டது 2019-01-08 at the வந்தவழி இயந்திரம்.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 6.7 Handbook of the Birds of the World. Vol' I 1. Old World Flycatchers to Old World Warblers. பார்க்கப்பட்ட நாள் 13 February 2019.del Hoyo, J.; Elliott, A.; Christie, D. A. (2006).
  7. 7.0 7.1 7.2 "Golden-headed Cisticola". பார்க்கப்பட்ட நாள் 8 January 2019."Golden-headed Cisticola".
  8. Thompson (31 December 2015). "Jim Thomson catches an amazing character of the bush | PHOTOS". https://www.maitlandmercury.com.au/story/3633650/jim-thomson-catches-an-amazing-character-of-the-bush-photos/. பார்த்த நாள்: 8 January 2019.