மகுமுதுல்லா

வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர்

முகம்மது மகுமுதுல்லா ரியாத் (Mohammad Mahmudullah Riyad, பிறப்பு: 4 பெப்ரவரி 1986, டாக்கா), வங்காளதேசத் துடுப்பாட்ட வீரர்.[1] இவர் டாக்கா பிரிவு அணிக்காக முதல்-தர, மற்றும் பட்டியல்-அ போட்டிகளில் விளையாடி, வங்காளதேச 'ஏ' அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். பல்துறை ஆட்டக்காரரான இவர் நடு-வரிசை அல்லது கீழ்-வரிசை துடுப்பாட்டத்திலும், சுழல் பந்து வீச்சிலும் விளையாடி வருகிறார். இவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் , பன்னாட்டு இருபது20 மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார்

மகுமுதுல்லா ரியாத்
Mahmudullah Riyad
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்முகம்மது மகுமுதுல்லா ரியாத்
பிறப்பு4 பெப்ரவரி 1986 (1986-02-04) (அகவை 38)
மைமன்சிங், டாக்கா, வங்காளதேசம்
பட்டப்பெயர்ரியாத்
உயரம்6 அடி 1 அங் (1.85 m)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை சுழல்
பங்குபல்துறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 55)9-13 சூலை 2009 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு12-16 நவம்பர் 2014 எ. சிம்பாப்வே
ஒநாப அறிமுகம் (தொப்பி 84)25 சூலை 2007 எ. இலங்கை
கடைசி ஒநாப13 மார்ச் 2015 எ. நியூசிலாந்து
ஒநாப சட்டை எண்30
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2004/05-இன்றுடாக்கா பிரிவு
2013–இன்றுசிட்டகொங் கிங்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.நா.ப மு.த ப.அ
ஆட்டங்கள் 23 114 75 181
ஓட்டங்கள் 1285 2,467 4,078 4,297
மட்டையாட்ட சராசரி 30.59 35.24 33.70 33.86
100கள்/50கள் 1/11 2/12 6/24 3/26
அதியுயர் ஓட்டம் 115 128 152 116
வீசிய பந்துகள் 2,876 3,456 7,580 6,011
வீழ்த்தல்கள் 35 68 122 126
பந்துவீச்சு சராசரி 46.31 43.13 34.11 37.11
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 3 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 5/51 3/4 7/94 4/75
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
24/– 36/– 72/– 67/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, மார்ச் 6 2014

மகுமுதுல்லா 2007 சூலையில் இலங்கையில் இடம்பெற்ற அந்நாட்டு அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதன் முதலில் விளையாடினார். இப்போட்டியில் இவர் 36 ஓட்டங்களை எடுத்ததுடன், 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.[2] 2009 சூலை 9 இல் தனது முதலாவது தேர்வுப் போட்டியை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடி, இரண்டு காலப் போட்டிகளிலுமாக மொத்தம் எட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.[3]

2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

தொகு

மார்ச் 9, 2015 இல் நடைபெற்ற 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் நூறு ஓட்டங்களை அடித்தார். இதன்மூலம் உலகக் கிண்ணத் தொடரில் நூறு ஓட்டங்கள் அடித்த முதல் வங்காளதேசத் துடுப்பாட்ட வீரர் எனும் சாதனை படைத்தார். மார்ச் 13 இல நடைபெற்ற அடுத்த போட்டியில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியிலும் நூறு ஓட்டங்கள் அடித்தார். இதன்மூலம் தொடர்ச்சியாக உலகக் கிண்ணத் தொடரில் இரண்டு நூறு ஓட்டங்களை அடித்த முதல் வங்காளதேசத் துடுப்பாட்ட வீரர் எனும் சாதனை படைத்தார். மேலும் இந்தப் போட்டியில் வென்றதன் முலம் வங்காளதேச அணி காலிறுதிக்குச் சென்றது.[4] இருந்தபோடிலும் இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 3 இலக்குகள் வித்தியாசத்தில்ம் வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் இவர் விளையாடிய ஆறு போட்டிகளில் 365 ஓட்டங்கள் எடுத்தார்.இவரின் சராசரி 73.00 ஆக இருந்தது.[5] இவரும் சகீப் அல்ஹசனும் இணைந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்த வங்காளதேச இணை எனும் சாதனை படைத்தனர்.[6]

தேர்வுத் துடுப்பாட்டம்

தொகு

2009 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . சூலை 9 இல் கிங்ஸ்டவுனில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[1] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 28 பந்துகளில் 9 ஓட்டங்கள் எடுத்து ரோச்சி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் பந்துவீச்சில் . இதில் 20 ஓவர்கள் வீசினார். அதில் 2 ஓவர்கள் மெய்டனாகும். 59 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்கினைக் கைப்பற்றினார். இவரின் பந்துவீச்சுசராசரி 3.00 ஆகும். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 29 பந்துகளில் 8 ஓட்டங்கள் எடுத்து மீண்டும் ரோச்சி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் பந்துவீச்சில் . இதில் 15 ஓவர்கள் வீசினார். அதில் 4 ஓவர்கள் மெய்டனாகும். 51 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 இலக்கினைக் கைப்பற்றினார். இவரின் பந்துவீச்சுசராசரி 3.40 ஆகும். இந்தப்போட்டியில் வங்காளதேச அணி 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது[7]

தலைவராக

தொகு

2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் சகீப் அல் அசனுக்கு காயம் ஏற்பட்டது. எனவே அதனைத் தொடர்ந்து வந்த இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தலைவராக இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.[8] சனவரி 31 , 2018 இல் நடைபெற்ற போட்டியிலிவர் 10 ஆவது தேர்வுத் துடுப்பாட்டத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[9][10]

2017 வாகையாளர் கோப்பை

தொகு

2017 ஐசிசி வாகையாளர் கோப்பைத் தொடரில் விளாஇயாடும் வங்காளதேச அணியில் இடம்பெறார். பெர்த்தில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இவரும் இவரும் சகீப் அல்ஹசனும் இணைந்து 224 ஓட்டங்கள் சேர்ததனர். இதன்மூலம் வாகையளர் கோப்பைத் தொடரில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 5 ஆவது இணைக்கு அதிக ஓட்டங்கள் சேர்த்த இணை எனும் சாதனை படைத்தனர்.[6]

பன்னாட்டு சதங்கள்

தொகு

பன்னாட்டு ஒருநாள் சதங்கள்

தொகு
மகுமுதுல்லாவின் பன்னாட்டு ஒருநாள் சதங்கள்
# ஓட்டங்கள் ஆட்டம் எதிராக நகரம்/நாடு அரங்கு ஆண்டு முடிவு
1 103 114   இங்கிலாந்து   அடிலெயிட், ஆத்திரேலியா அடிலெய்டு நீள்வட்ட அரங்கம் 2015 வெற்றி
2 128* 115   நியூசிலாந்து   ஆமில்டன், நியூசிலாந்து செடான் பூங்கா அரங்கம் 2015 தோல்வி

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Mahmudullah", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-29
  2. "3rd ODI: Sri Lanka v Bangladesh at Colombo (RPS)". 25 சூலை 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-09-01.
  3. "1st Test: West Indies v Bangladesh at Kingstown, Jul 9–13, 2009". espncricinfo. பார்க்கப்பட்ட நாள் 2011-12-18.
  4. Mahmudullah, Rubel knock England out, Cricinfo, 9 March 2015, பார்க்கப்பட்ட நாள் 2015-03-09
  5. "Batting and fielding for Bangladesh, World Cup 2014–15". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 23 March 2015.
  6. 6.0 6.1 "Cricket Records | Records | / | Bangladesh | One-Day Internationals | Highest partnerships by wicket | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/engine/records/fow/highest_partnerships_by_wicket.html?class=2;id=25;type=team. 
  7. "1st Test, Bangladesh tour of West Indies at Kingstown, Jul 9-13 2009 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-29
  8. "Finger injury rules Shakib out of first Sri Lanka Test". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 January 2018.
  9. "In-form Sri Lanka look to upset hosts Bangladesh". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 30 January 2018.
  10. "Didn't want it this way but excited: Mahmudullah". BDCrictime. Archived from the original on 30 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 30 January 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகுமுதுல்லா&oldid=3566026" இலிருந்து மீள்விக்கப்பட்டது