மலேசிய அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர்

மலேசிய அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் (மலாய்: Ketua Setiausaha Negara Malaysia (KSN); ஆங்கிலம்: Chief Secretary to the Government of Malaysia) என்பவர் மலேசிய பொதுச் சேவையில் மிக மூத்த அதிகாரி; மலேசிய அமைச்சரவையின் செயலாளர்; மற்றும் பிரதமர் துறையின் பொதுச் செயலாளர் ஆவார்.

மலேசிய தலைமைச் செயலாளர்
Chief Secretary to the Government
Ketua Setiausaha Negara
மலேசியாவின் சின்னம்
தற்போது
டான் ஸ்ரீ
முகமட் சுக்கி அலி
(Mohd Zuki Ali)

1 சனவரி 2020 முதல்
மலேசியப் பிரதமர் துறை
சுருக்கம்KSN
உறுப்பினர்அமைச்சரவை
அறிக்கைகள்பிரதமர்
பரிந்துரையாளர்பிரதமர்
நியமிப்பவர்மாமன்னர்
பிரதமரின் ஆலோசனையின் பேரில்
முதலாவதாக பதவியேற்றவர்அப்துல் அசீஸ் அப்துல் மஜீத்
Abdul Aziz Abdul Majid
உருவாக்கம்1 ஆகத்து 1957; 67 ஆண்டுகள் முன்னர் (1957-08-01)
ஊதியம்MYR 23,577 மாத ஊதியம்
இணையதளம்www.ksn.gov.my

மலேசியாவில் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் என்ற பதவி மலாயா மாநிலங்களின் கூட்டமைப்பு உருவாவதற்கு முன்பு இருந்தே மலாயா நிர்வாகத் துறையின் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

பொது

தொகு

1911- ஆம் ஆண்டில் ’அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர்’ பதவி மலாயாவில் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னர் இந்தப் பதவி ரெசிடென்ட்-ஜெனரல் எனும் தலைமை ஆலோசகர் பதவி (Resident-General) என அழைக்கப்பட்டது.

முதன்முதலாக எட்வர்ட் லூயிஸ் புரோக்மேன் (Edward Lewis Brockman) என்பவர் தலைமைச் செயலாளர் பதவியை வகித்தார்.

1911-ஆம் ஆண்டில் இருந்து 1920-ஆம் ஆண்டு வரையில் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தலைமைச் செயலாளராக இருந்தார். கோலாலம்பூர் நகர திட்டமிடல் சேவையை மேற்பார்வையிட நகர திட்டமிடல் குழுவை நிறுவியவரும் இவரே ஆவார். [[கோலாலம்பூர்| கோலாலம்பூரில் உள்ள புரோக்மேன் சாலை (Brockman Road), அவரின் நினைவாகப் பெயரிடப்பட்டது. தற்போது அந்தச் சாலை டத்தோ ஓன் சாலை (Jalan Dato' Onn)என்று அழைக்கப் படுகிறது.

1936-ஆம் ஆண்டிற்குப் பிறகு, தலைமைச் செயலாளரின் நிர்வாக அதிகாரங்கள் மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையரிடம் வழங்கப்பட்டன.

பங்களிப்புகள்

தொகு

மலேசிய அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர், மலேசிய பொதுச் சேவையில் உயர்த் தலைவர்; மற்றும் மலேசிய அரசாங்கத்தின் மிக உயர்ந்த பதவியில் உள்ள அரசு ஊழியர் ஆவார்.

அவர் மலேசிய அரசாங்கத்தின் செயலாளராக அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்வதுடன் அவற்றின் முடிவுகள் செயல்படுத்துவதையும் கண்காணிக்கிறார்.[1]

மலேசிய அமைச்சரவை

தொகு

மலேசிய அமைச்சரவையில் மிகப் பெரிய அமைச்சான மலேசியப் பிரதமர் துறைக்கும் தலைமை தாங்குகிறார். இவர் பிரதமருக்கு ஆதரவு வழங்குவதுடன், பொதுச் சேவையின் நிர்வாகம், அரசு நெறிமுறை மற்றும் இசுலாமிய விவகாரங்கள் ஆகியவற்றையும் கவனித்துக் கொள்கிறார்.[1]

அத்துடன் மலேசிய அமைச்சரவையில் உள்ள அமைச்சுகளின் பொதுச் செயலாளர்கள் மற்றும் தலைமை இயக்குநர்கள் கூட்டங்களுக்கும் இவர் தலைமை தாங்குகிறார்.[2]

மலேசியாவின் தற்போதைய தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ முகமட் சுக்கி அலி ஆவார்.

தலைமைச் செயலாளர்களின் பட்டியல்

தொகு

தலைமைச் செயலாளர்கள் பட்டியல் பின்வருமாறு:

# தோற்றம் தலைமைச் செயலாளர் பதவி காலம் பிரதமர்
பதவியேற்பு பதவி முடிவு பதவி காலம்
1 துன்
அப்துல் அசீஸ் அப்துல் மஜீத்
(Abdul Aziz Abdul Majid)
(1908 – 1975)
1 ஆகத்து 1957 31 ஆகத்து 1964 7 ஆண்டுகள், 30 நாட்கள் துங்கு அப்துல் ரகுமான்
(31 ஆகத்து 1957 – 22 செப்டம்பர் 1970)
அப்துல் ரசாக் உசேன்
(22 செப்டம்பர் 1970 – 14 சனவரி 1976)
உசேன் ஓன்
(15 சனவரி 1976 – 16 சூலை 1981)
2   டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ
அப்துல் ஜமில் அப்துல் ராயிஸ்
(Abdul Jamil Abdul Rais)
(1912 – 1994)
1 செப்டம்பர் 1964 6 நவம்பர் 1967 3 ஆண்டுகள், 66 நாட்கள்
3 டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ
துங்கு முகமட் துங்கு பெசார் புர்கானுடின்
(Tunku Mohamad Tunku Besar Burhanuddin)
(1912 – 1994)
7 நவம்பர் 1967 31 திசம்பர் 1969 2 ஆண்டுகள், 54 நாட்கள்
4 டான் ஸ்ரீ
அப்துல் காதர் சம்சுதீன்
(Abdul Kadir Shamsuddin)
(1920 – 1978)
1 சனவரி 1970 30 செப்டம்பர் 1976 6 ஆண்டுகள், 273 நாட்கள்
5 துன்
அப்துல்லா முகமட் சாலே
(Abdullah Mohd Salleh)
(1926 – 2006)
1 அக்டோபர் 1976 31 திசம்பர் 1978 2 ஆண்டுகள், 91 நாட்கள் உசேன் ஓன்
(Hussein Onn)
(15 சனவரி 1976 – 16 சூலை 1981)
மகாதீர் பின் முகமது
(Mahathir Mohamad)
(16 சூலை 1981 – 30 அக்டோபர் 2003)
6 துன்
அப்துல்லா அயூப்
(Abdullah Ayub)
(1926 – 2018)
1 சனவரி 1979 30 நவம்பர் 1982 3 ஆண்டுகள், 333 நாட்கள்
7 டான் ஸ்ரீ டத்தோ
அசீம் அமான்
(Hashim Aman)
(1929 – 2018)
1 திசம்பர் 1982 14 சூன் 1984 1 ஆண்டு, 196 நாட்கள்
8 டான் ஸ்ரீ டத்தோ பாதுக்கா
சாலேவுதீன் முகமட்
(Sallehuddin Mohamed)
(பிறப்பு.1932)
15 சூன் 1984 31 சனவரி 1990 5 ஆண்டுகள், 230 நாட்கள் மகாதீர் பின் முகமது
(Mahathir Mohamad)
(16 சூலை 1981 – 30 அக்டோபர் 2003)
அப்துல்லா அகமது படாவி
(Abdullah Ahmad Badawi)
(31 அக்டோபர் 2003 – 3 ஏப்ரல் 2009)
9 துன்
அகமட் சார்ஜி அப்துல் அமீது
(Ahmad Sarji Abdul Hamid)
(1938 – 2021)
1 பெப்ரவரி 1990 16 செப்டம்பர் 1996 6 ஆண்டுகள், 228 நாட்கள்
10 டான் ஸ்ரீ
Abdul Halim Ali
(அப்துல் அலீம் அலி)
(பிறப்பு.1943)
17 செப்டம்பர் 1996 31 சனவரி 2001 4 ஆண்டுகள், 136 நாட்கள்
11 டான் ஸ்ரீ
சம்சுதீன் ஒசுமான்
(Samsudin Osman)
(பிறப்பு.1946)
1 பெப்ரவரி 2001 2 செப்டம்பர் 2006 5 ஆண்டுகள், 213 நாட்கள்
12 டான் ஸ்ரீ
முகமட் சீடேக் ஒசுமான்
(Mohd Sidek Hassan)
(பிறப்பு.1952)
3 செப்டம்பர் 2006 23 சூன் 2012 5 ஆண்டுகள், 294 நாட்கள் அப்துல்லா அகமது படாவி
(Abdullah Ahmad Badawi)
(31 அக்டோபர் 2003 – 3 ஏப்ரல் 2009)
நஜீப் ரசாக்
(Najib Razak)
(3 ஏப்ரல் 2009 – 9 மே 2018)
13 டான் ஸ்ரீ
அலி அம்சா
(Ali Hamsa)
(1955 – 2022)
24 சூன் 2012 29 ஆகத்து 2018 6 ஆண்டுகள், 66 நாட்கள் நஜீப் ரசாக்
(Najib Razak)
(3 ஏப்ரல் 2009 – 9 மே 2018)
மகாதீர் பின் முகமது
(Mahathir Mohamad)
(10 மே 2018 – 24 பிப்ரவரி 2020)
14 டான் ஸ்ரீ
இசுமாயில் பாக்கார்
(Ismail Bakar)
(பிறப்பு.1960)
29 ஆகத்து 2018 1 சனவரி 2020 1 ஆண்டு, 125 நாட்கள் மகாதீர் பின் முகமது
(Mahathir Mohamad)
(10 மே 2018 – 24 பிப்ரவரி 2020)
15 டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ}}
முகமட் சுக்கி அலி
(Mohd Zuki Ali)
(பிறப்பு.1962)
1 சனவரி 2020 Incumbent 4 ஆண்டுகள், 355 நாட்கள் மகாதீர் பின் முகமது
(10 மே 2018 – 24 பிப்ரவரி 2020)
முகிதீன் யாசின்
(Muhyiddin Yassin)
(1 மார்ச் 2020 – 16 ஆகத்து 2021)
இசுமாயில் சப்ரி யாகோப்
(Ismail Sabri Yaakob)
(21 ஆகத்து 2021 – 23 நவம்பர் 2022)
அன்வர் இப்ராகீம்
(Anwar Ibrahim)
(தொடக்கம் 24 நவம்பர் 2022)

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 Fungsi JPM பரணிடப்பட்டது 1 சூலை 2010 at the வந்தவழி இயந்திரம் Jabatan Perdana Menteri. Accessed 17 June 2010
  2. Role and Functions Chief Secretary to the Government. Accessed 17 June 2010

வெளி இணைப்புகள்

தொகு