மலேசிய மேலவைத் தலைவர்
மலேசிய மேலவைத் தலைவர் (மலாய்: Yang di-Pertua Dewan Negara; ஆங்கிலம்: President of the Senate; சீனம்: 马来西亚国会上议院主席) என்பவர் மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவையான டேவான் நெகாராவின் தலைவர் அல்லது மலேசிய மேலவைத் தலைவர் (Senate President) ஆவார்.
மலேசிய மேலவைத் தலைவர்
Yang di-Pertua Dewan Negara President of the Dewan Negara | |
---|---|
தற்போது (பதவி காலியாக உள்ளது) 10 மே 2024 முதல் | |
மலேசிய மேலவை | |
உறுப்பினர் | தேர்வுக் குழு, நிலையியல் கட்டளைக் குழு, அவைக் குழு, சலுகைகள் குழு |
அறிக்கைகள் | மலேசிய மேலவை |
நியமிப்பவர் | மேலவை உறுப்பினர்களால் தேர்வு |
பதவிக் காலம் | புதிய தேர்தல் முறையில் |
அரசமைப்புக் கருவி | மலேசியக் கூட்டரசு அரசியலமைப்பு |
முதலாவதாக பதவியேற்றவர் | அப்துல் ரகுமான் முகமது யாசின் |
உருவாக்கம் | 11 செப்டம்பர் 1959 |
துணை | துணை மேலவைத் தலைவர் |
ஊதியம் | MYR 362,000 (ஆண்டு ஊதியம்) |
இணையதளம் | Parliament of Malaysia |
மலேசிய மேலவைத் தலைவர் பதவி, மலேசிய அரசியலமைப்பின் 56ஆவது பிரிவின் (Article 56 of the Constitution of Malaysia) கீழ் உருவாக்கப்பட்டது. இந்தப் பதவி மலேசிய மக்களவைத் தலைவர் பதவியைப் போன்ற பதவி ஆகும். மலேசிய மேலவை உறுப்பினர்களால் மலேசிய மேலவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.
மலேசிய மேலவைக்கு ஒருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் போது; அவர் ஒரு மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது மக்களவை உறுப்பினராகவோ இருந்தால், மேலவைத் தலைவர் பணிகளை ஏற்பதற்கு முன்னர், அவர் அந்தப் பதவிகளை துறப்பு செய்ய வேண்டும்.
தற்போது மலேசிய மேலவை தலைவர் பதவி காலியாக உள்ளது. மே 2024-இல் சரவாக் கட்சிகள் கூட்டணியின் (Gabungan Parti Sarawak) தலைவர்களில் ஒருவரான முத்தாங் தாகல் (Mutang Tagal) என்பவர் காலமானதைத் தொடர்ந்து மலேசிய மேலவை பதவி காலியானது.
செயல்பாடுகள்
தொகுமலேசிய மேலவைத் தலைவரின் முக்கியப் பணிகள்:[1]
- மேலவையின் அமர்வுகளுக்குத் தலைமை தாங்குவது
- மேலவையின் ஒழுங்கு முறைகள் பின்பற்றப் படுவதற்குப் பொறுப்பாக இருப்பது
- சொல்லாடல்களின் போது எழுப்பப்படும் கேள்விகளின் அவசியத்தை உறுதி செய்வது
- தகராறுகள் அல்லது சர்ச்சைகள் ஏற்பட்டால், நிலையியல் கட்டளைகளை விளக்குவது; மற்றும் இறுதியான முடிவுகளை எடுப்பது
நியமனங்கள்
தொகுதேசிய மேலவை அல்லது டேவான் நெகாரா (Dewan Negara) என்பது ஈரவைகளைக் கொண்ட மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை ஆகும். 70 உறுப்பினர்களைக் கொண்ட மேலவையில், மலேசிய மாநிலங்களில் ஒவ்வொன்றில் இருந்தும் இருவராக 26 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
மேலும் 44 உறுப்பினர்கள் மலேசிய மன்னரால் நியமிக்கப்படுகின்றனர். இவர்களில் நால்வர் கூட்டாட்சிப் பகுதிகளில் இருந்து தேர்தெடுக்கப்படுகின்றனர்.
சட்ட மூலங்கள்
தொகுமலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் கூடுகின்றது. கீழவையான மக்களவையில் சமர்ப்பிக்கப்படும் சட்டமூலங்கள் மேலவையினால் மறு ஆய்வு செய்யப்படுகின்றன. இரண்டு அவைகளாலும் ஏற்றுக் கொள்ளப்படும் சட்டமூலங்கள் மன்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
ஆனாலும், ஏதாவது ஒரு சட்டமூலம், மேலவையினால் ஏற்றுக் கொள்ளப்படாத கட்டத்தில், அந்தச் சட்டமூலம் ஓராண்டுக்குப் பின்னரே மலேசிய மாமன்னரிடம் வழங்கப்படும்.
மலேசிய மேலவைத் தலைவர்களின் பட்டியல்
தொகு17 திசம்பர் 2024 வரையிலும் நடைபெற்ற மலேசிய மேலவைத் தேர்தலில், ராயிஸ் யாத்திம் தவிர, மற்றத் தலைவர்கள் அனைவரும் போட்டியின்றி நியமனம் செய்யப்பட்டனர்.[2]
அரசியல் கட்சிகள் / கூட்டணிகள்:
மலேசிய கூட்டணி கட்சி மலேசிய இசுலாமிய கட்சி மலாயா தொழிலாளர் கட்சி ஜனநாயக செயல் கட்சி சரவாக் தேசியக் கட்சி மக்கள் நீதிக் கட்சி பாக்காத்தான் அரப்பான் பாரிசான் நேசனல் பெரிக்காத்தான் நேசனல்
# | தோற்றம் | பெயர் (பிறப்பு-இறப்பு) |
பதவி காலம் | கட்சி | அமர்வு | |||
---|---|---|---|---|---|---|---|---|
பதவியேற்பு | பதவி விலகல் | பதவி காலம் | ||||||
1 | டத்தோ அஜி அப்துல் ரகுமான் முகமது யாசின் (Abdul Rahman Mohamed Yassin) ஜொகூர் மேலவை உறுப்பினர் (1890–1970) |
11 செப்டம்பர் 1959 |
31 டிசம்பர் 1968 |
9 ஆண்டுகள், 111 நாட்கள் | கூட்டணி (அம்னோ) |
1-ஆவது மலாயா மேலவை | ||
2-ஆவது மலேசிய மேலவை | ||||||||
2 | சையத் சே பராக்பா (Syed Sheh Barakbah) நியமன மேலவை உறுப்பினர் (1906–1975) |
27 சனவரி 1969 |
5 பிப்ரவரி 1969 |
0 ஆண்டுகள், 9 நாட்கள் | கூட்டணி (அம்னோ) | |||
3 | டத்தோ அஜி முகமட் நோவா ஒமார் (Mohamed Noah Omar) நியமன மேலவை உறுப்பினர் (1897–1991) |
24 பிப்ரவரி 1969 |
28 சூலை 1970 |
1 ஆண்டு, 154 நாட்கள் | கூட்டணி (அம்னோ) | |||
4 | டான் ஸ்ரீ அஜி அப்துல் அமீட் கான் (Abdul Hamid Khan) நியமன மேலவை உறுப்பினர் |
20 பிப்ரவரி 1971 |
22 பிப்ரவரி 1973 |
2 ஆண்டுகள், 2 நாட்கள் | கூட்டணி (அம்னோ) |
3-ஆவது மலேசிய மேலவை | ||
5 | துன் டத்தோ அஜி ஓங் யோக் லின் (Ong Yoke Lin) நியமன மேலவை உறுப்பினர் (1917–2010) |
23 பிப்ரவரி 1973 |
30 டிசம்பர் 1980 |
7 ஆண்டுகள், 311 நாட்கள் | கூட்டணி (மசீச) | |||
பாரிசான் (மசீச) |
4-ஆவது மலேசிய மேலவை | |||||||
5-ஆவது மலேசிய மேலவை | ||||||||
6 | டான் ஸ்ரீ இசுமாயில் கான் இப்ராகிம் கான் (Ismail Khan Ibrahim Khan) நியமன மேலவை உறுப்பினர் (1905–2000) |
31 டிசம்பர் 1980 |
13 ஏப்ரல் 1985 |
4 ஆண்டுகள், 103 நாட்கள் | பாரிசான் (அம்னோ) | |||
6-ஆவது மலேசிய மேலவை | ||||||||
7 | டான் ஸ்ரீ டத்தோ பெனடிக் இசுடீபன்ஸ் (Benedict Stephens) நியமன மேலவை உறுப்பினர் (1926–2003) |
15 ஏப்ரல் 1985 |
11 ஏப்ரல் 1988 |
2 ஆண்டுகள், 362 நாட்கள் | சுயேச்சை | |||
7-ஆவது மலேசிய மேலவை | ||||||||
8 | டான் ஸ்ரீ டத்தோ அபாங் அமாட் ஊராய் (Abang Ahmad Urai) சரவாக் மேலவை உறுப்பினர் (1933–2022) |
11 சூலை 1988 |
9 சூலை 1990 |
1 ஆண்டு, 363 நாட்கள் | பாரிசான் (பூமிபுத்ரா கட்சி) | |||
9 | டான் ஸ்ரீ டத்தோ சான் சூங் தாக் (Chan Choong Tak) நியமன மேலவை உறுப்பினர் |
17 டிசம்பர் 1990 |
31 மார்ச் 1992 |
1 ஆண்டு, 105 நாட்கள் | பாரிசான் (மசீச) |
8-ஆவது மலேசிய மேலவை | ||
10 | டான் ஸ்ரீ டத்தோ வடிவேலு கோவிந்தசாமி (Vadiveloo Govindasamy ) நியமன மேலவை உறுப்பினர் |
13 ஏப்ரல் 1992 |
12 சூன் 1995 |
3 ஆண்டுகள், 60 நாட்கள் | பாரிசான் (மஇகா) | |||
9-ஆவது மலேசிய மேலவை | ||||||||
11 | டான் ஸ்ரீ டத்தோ அடாம் காதிர் (Adam Kadir) நியமன மேலவை உறுப்பினர் |
13 சூன் 1995 |
30 நவம்பர் 1997 |
2 ஆண்டுகள், 170 நாட்கள் | பாரிசான் (அம்னோ) | |||
12 | டான் ஸ்ரீ டத்தோ முகமட் யாக்கோப் (Mohamed Yaacob) நியமன மேலவை உறுப்பினர் (1926–2009) |
10 டிசம்பர் 1997 |
5 டிசம்பர் 2000 |
2 ஆண்டுகள், 361 நாட்கள் | பாரிசான் (அம்னோ) | |||
10-ஆவது மலேசிய மேலவை | ||||||||
13 | டான் ஸ்ரீ டத்தோ மைக்கல் சென் (Michael Chen Wing Sum) நியமன மேலவை உறுப்பினர் (பிறப்பு 1932) |
7 டிசம்பர் 2000 |
11 ஏப்ரல் 2003 |
2 ஆண்டுகள், 125 நாட்கள் | பாரிசான் (மசீச) | |||
14 | டான் ஸ்ரீ டத்தோ அப்துல் அமீட் பாவான்தே (Abdul Hamid Pawanteh) நியமன மேலவை உறுப்பினர் (1944–2022) |
7 சூலை 2003 |
6 சூலை 2009 |
5 ஆண்டுகள், 364 நாட்கள் | பாரிசான் (அம்னோ) | |||
11-ஆவது மலேசிய மேலவை | ||||||||
12-ஆவது மலேசிய மேலவை | ||||||||
15 | டான் ஸ்ரீ டத்தோ வோங் பூன் மெங் (Wong Foon Meng) நியமன மேலவை உறுப்பினர் |
7 சூலை 2009 |
12 ஏப்ரல் 2010 |
0 ஆண்டுகள், 279 நாட்கள் | பாரிசான் (மசீச) | |||
16 | டான் ஸ்ரீ அபு சாகார் ஊஜாங் (Abu Zahar Ujang) நியமன மேலவை உறுப்பினர் (பிறப்பு 1944) |
26 ஏப்ரல் 2010 |
25 ஏப்ரல் 2016 |
5 ஆண்டுகள், 365 நாட்கள் | பாரிசான் (அம்னோ) | |||
13-ஆவது மலேசிய மேலவை | ||||||||
17 | டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ ச. விக்னேசுவரன் (Vigneswaran Sanasee) நியமன மேலவை உறுப்பினர் (பிறப்பு 1965) |
26 ஏப்ரல் 2016 |
22 சூன் 2020 |
4 ஆண்டுகள், 57 நாட்கள் | பாரிசான் (மஇகா) | |||
14-ஆவது மலேசிய மேலவை | ||||||||
18 | டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ ராயிஸ் யாத்திம் (Rais Yatim) நியமன மேலவை உறுப்பினர் (பிறப்பு 1942) |
2 September 2020 |
15 சூன் 2023 |
2 ஆண்டுகள், 276 நாட்கள் | பெரிக்காத்தான் (பெர்சத்து) | |||
15-ஆவது மலேசிய மேலவை | ||||||||
19 | டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ வான் சுனைடி துங்கு ஜாபார் (Wan Junaidi Tuanku Jaafar) நியமன மேலவை உறுப்பினர் (பிறப்பு 1945) |
19 சூன் 2023 |
18 சனவரி 2024 |
0 ஆண்டுகள், 213 நாட்கள் | ஜிபிஎஸ் (பூமிபுத்ரா கட்சி) | |||
20 | டத்தோ முத்தாங் தாகால் (Mutang Tagal) நியமன மேலவை உறுப்பினர் (1954–2024) |
19 பிப்ரவரி 2024 |
10 மே 2024 |
0 ஆண்டுகள், 81 நாட்கள் | ஜிபிஎஸ் (பூமிபுத்ரா கட்சி) | |||
21 |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ President of the Senate பரணிடப்பட்டது 2010-02-01 at the வந்தவழி இயந்திரம், Parliament of Malaysia
- ↑ "Parliamentary Services Bill to be tabled in November, says Rais".
வெளி இணைப்புகள்
தொகு- Parliament of Malaysia (Official site)