மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்

(மான்செஸ்டர் யுனைட்டெட் கால்பந்து அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம், (பொதுவாக மேன் யுனைடெட் எனக் குறிப்பிடப்படுகிறது) இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் ஓல்ட் டிராஃபோர்டை தளமாகக் கொண்ட ஒரு தொழில்முறை கால்பந்துக் கழக அமைப்பாகும். இது ஆங்கில கால்பந்து அமைப்பின் பிரீமியர் லீக் போட்டிகளில் போட்டியிடுகிறது. ரெட் டெவில்ஸ் (சிகப்பு பிசாசுகள்) என்ற புனைப்பெயர் கொண்ட இந்த அணியானது 1878 ஆம் ஆண்டில் நியூட்டன் ஹீத் கால்பந்துக் கழகமாக நிறுவப்பட்டது. பின்னர் 1902 ஆம் ஆண்டில் மான்செஸ்டர் யுனைடெட் என்று பெயர் மாற்றம் பெற்றது. 1910 ஆம் ஆண்டில் தற்போதைய விளையாட்டரங்கமான ஓல்ட் டிராஃபோர்டில் விளையாடத் தொடங்கியது.

மான்செஸ்டர் யுனைடெட்
Manchester United
முழுப்பெயர்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்
அடைபெயர்(கள்)தி ரெட் டெவில்ஸ்
(சிகப்பு பிசாசுகள்)[1]
தோற்றம்1878 (நியூட்டன் ஹீத் கால்பந்துக் கழகம்)
ஆட்டக்களம்ஓல்ட் டிராஃபோர்ட்
ஆட்டக்கள கொள்ளளவு74,310[2]
உரிமையாளர்ஐக்கிய அமெரிக்கா மால்கம் கிலேசர்
இணைத் தலைவர்கள்ஐக்கிய அமெரிக்கா ஜோயல் கிலேசர் & அவரம் கிலேசர்
மேலாளர்நெதர்லாந்து எரிக் டென் ஹாக்
கூட்டமைப்புபிரீமியர் லீக்
2022–23பிரீமியர் லீக், 3ஆவது

மான்செஸ்டர் யுனைடெட் 20 இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டங்கள், 12 எஃப் ஏ கோப்பைகள், 6 கால்பந்து கூட்டிணைவுக் கோப்பைகள் மற்றும் 21 எஃப் ஏ சமூக கவச கோப்பைகளை வென்றுள்ளது. பன்னாட்டுக் கால்பந்தில், இந்த அணி மூன்று ஐரோப்பிய கோப்பை/யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு பட்டங்கள் மற்றும் யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு, யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை, யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை, கண்டங்களுக்கிடையேயான கோப்பை, பிபா கழக உலகக் கோப்பை ஆகியவற்றை தலா ஒரு முறையும் வென்றுள்ளது.[3]

மான்செஸ்டர் யுனைடெட் உலகின் மிகவும் பரவலாக ஆதரிக்கப்படும் கால்பந்துக் கழகங்களில் ஒன்றாகும்.[4][5] 2016-17 ஆம் நிதியாண்டில் மான்செஸ்டர் யுனைடெட் ஆண்டுக்கு 676.3 மில்லியன் டாலர் வருவாயுடன் உலகின் அதிக வருமானம் ஈட்டிய கால்பந்து கழகமாக இருந்தது. 2019 ஆம் ஆண்டில் இதன் மதிப்பு 3.81 பில்லியன் டாலர் மதிப்புடன் உலகின் மூன்றாவது மதிப்புமிக்க கால்பந்துக் கழகமாக இருந்தது.

வரலாறு

தொகு

ஆரம்ப ஆண்டுகள் (1878-1945)

தொகு

மான்செஸ்டர் யுனைடெட் 1878 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் நியூட்டன் ஹீத் கால்பந்துக் கழகமாக லேன்காசயர் மற்றும் யார்க்சயர் தொடருந்து துறையால் உருவாக்கப்பட்டது.[6] இந்த அணி ஆரம்பத்தில் மற்ற துறைகள் மற்றும் தொடருந்து நிறுவனங்களுக்கு எதிராக விளையாடியது. 1880 ஆம் ஆண்டில் நவம்பர் 20 அன்று, இந்த அணி தொடருந்து நிறுவனத்தின் பச்சை மற்றும் தங்க நிற ஆடைகளை அணிந்து முதல் பதிவு செய்யப்பட்ட போட்டியில் போட்டியிட்டனர்.[7] 1888 ஆம் ஆண்டில் பிராந்திய கால்பந்து கூட்டிணைப்பின் ஒரு உறுப்பினராக மாறியது. ஒரே ஒரு பருவத்திற்குப் பிறகு இந்தக் கூட்டிணைப்பு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிதாக உருவாக்கப்பட்ட 'கால்பந்துக் கூட்டணியில்' சேர்ந்தது. இது கால்பந்துக் கூட்டிணைவில் இணைக்கப்படுவதற்கு முன்பு மூன்று ஆண்டுகளுக்கு நடைபெற்றது. இதன் விளைவாக 1892-93 ஆம் ஆண்டு முதல், இந்தக் கழகம் கால்பந்துக் கூட்டிணைப்பின் முதல் தர பிரிவின் போட்டிகளில் விளையாட தொடங்கியது, இரண்டு பருவங்களுக்குப் பிறகு, கழகம் இரண்டாவது பிரிவுக்கு தரமிறக்கப்பட்டது.[6]

 
1905-06 பருவத்தின் தொடக்கத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி

சனவரி 1902 இல் கடன் சுமை காரணமாக இந்தக் கழகம் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அப்போதைய அணித்தலைவர் ஹாரி ஸ்டாபோர்ட்டு, ஜான் ஹென்றி டேவிஸ் தலைமையில் நான்கு உள்ளூர் வணிகர்களை கழகத்தில் முதலீடு செய்ய வைத்தார். இதன் விளைவாக 24 ஏப்ரல் 1902 அன்று மான்செஸ்டர் யுனைடெட் அதிகாரப்பூர்வமாக உதித்தது.[8][9] 1903 ஆம் ஆண்டில் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்ற எர்னஸ்ட் மாங்னாலின் கீழ், அணி 1906 இல் இரண்டாம் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து முதல் பிரிவுக்கு உயர்வு பெற்றது. 1908 ஆம் ஆண்டில் இந்த அணி தனது முதல் பட்டத்தை வென்றது.[10] மான்செஸ்டர் யுனைடெட் 1911 இல் இரண்டாவது முறையாக முதல் பிரிவு பட்டத்தை வென்றது.[11]

1922 ஆம் ஆண்டில், முதலாம் உலகப் போரைத் தொடர்ந்து கால்பந்து மீண்டும் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, யுனைடெட் அணி மீண்டும் இரண்டாம் பிரிவுக்கு தரமிறக்கப்பட்டது. 1925 ஆம் ஆண்டு மீண்டும் முதல் பிரிவுக்கு உயர்வு பெற்ற போதிலும் அக்டோபர் 1927 இல் ஜான் ஹென்றி டேவிஸ் இறந்ததைத் தொடர்ந்து, கழகத்தின் நிதி நிலைமை மோசமடைந்தது. திசம்பர் 1931 இல் ஜேம்ஸ் கிப்சன் £2,000 முதலீடு செய்து கழகத்தின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டார்.[12] இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய கால்பந்தின் கடைசி ஆண்டான 1938-39 பருவத்தில், யுனைடெட் முதல் பிரிவில் 14 வது இடத்தைப் பிடித்தது.[12]

புஸ்பி ஆண்டுகள் (1945-69)

தொகு
 
1955 இல் தி புஸ்பி பேப்ஸ். மேலாளர் மாட் புஸ்பி முன்புறம் வலதுபுறத்தில் படம்பிடிக்கப்பட்டுள்ளார்.

அக்டோபர் 1945 இல், போருக்குப் பிறகு கால்பந்து மீண்டும் தொடங்கப்பட்ட போது மாட் புஸ்பி அணியின் மேலாளராக நியமனம் செய்யப்பட்டார்.[13] 1947, 1948 மற்றும் 1949 ஆம் ஆண்டுகளில் யுனைடெட் அணி தொடர்ந்து இரண்டாவது இடத்தை பிடித்தது. 1948 ஆம் ஆண்டில் எஃப் ஏ கோப்பையை வென்ற இந்த அணி, 1952 ஆம் ஆண்டில், 41 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதல் பிரிவு பட்டத்தை வென்றது.[14] பின்னர் 1956 மற்றும் 1957 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக முதல் பிரிவு பட்டங்களை வென்ற இளம் அணிக்கு, ஊடகங்களால் "தி புஸ்பி பேப்ஸ்" என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டது.[15] 1957 ஆம் ஆண்டில், மான்செஸ்டர் யுனைடெட் ஐரோப்பிய கோப்பையில் பங்கேற்ற முதல் ஆங்கில அணியாக மாறியது.[16] ரியல் மாட்ரிட் அணியிடம் அரையிறுதியில் தோல்வியடைந்த போதிலும், ஆண்டெர்லெக்ட் அணியை பத்து கோல்கள் வித்தியாசத்தில் வென்றது இன்று வரை அணியின் மிகப் பெரிய வெற்றியாக உள்ளது.[17]

 
மியூனிக் விமானப் பேரழிவில் இறந்தவர்களின் நினைவாக ஓல்ட் டிராஃபோர்டில் உள்ள ஒரு கல்வெட்டு

அடுத்த ஆண்டில், ரெட் ஸ்டார் பெல்கிரேடுக்கு எதிரான ஐரோப்பிய கோப்பை காலிறுதி வெற்றிக்கு பிறகு இங்கிலாந்து செல்லும் வழியில், மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள், அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களை ஏற்றிச் சென்ற விமானம் ஜெர்மனியின் மியூனிக் நகரில் எரிபொருள் நிரப்பிய பின்னர் புறப்பட முயன்றபோது விபத்துக்குள்ளானது. 1958 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி முனிச் விமானப் பேரழிவு எட்டு வீரர்கள் உட்பட 23 உயிர்களைக் கொன்றது.[18][19]

 
ஓல்ட் டிராஃபோர்டுக்கு வெளியே உள்ள ஜார்ஜ் பெஸ்ட் (இடது), டெனிஸ் லா (நடுவில்) மற்றும் பாபி சார்ல்டன் (வலது) சிலைகள்

புஸ்பி உடல் நலம் தேறிவரும் போது உதவி மேலாளர் ஜிம்மி மர்பி அணியின் தற்காலிக மேலாளராக பொறுப்பேற்றார். மேலும் கழகத்தின் தற்காலிக அணி எஃப்ஏ கோப்பை இறுதிப் போட்டியை எட்டியது. அணியின் இழப்பை ஈடுகட்ட யூஈஎஃப்ஏ 1958-59 ஆம் ஆண்டில் ஐரோப்பிய கோப்பை போட்டிகளில் போட்டியிட யுனைடெட் அணிக்கு சிறப்பு அழைப்பு விடுத்தது. எனினும் இங்கிலாந்து கால்பந்து சங்கத்தின் ஒப்புதல் இல்லாததால் யுனைடெட் அணியால் இதில் பங்குபெற இயலவில்லை.[20][21] டெனிஸ் லா மற்றும் பாட் கிரெராண்ட் போன்ற வீரர்களுடன் 1960 களில் புஸ்பி மீண்டும் ஒரு புதிய அணியை உருவாக்கினார். ஜார்ஜ் பெஸ்ட் போன்ற அடுத்த தலைமுறை இளைஞர் வீரர்களுடன் இணைந்து இவர்கள் அணியை 1963 ஆம் ஆண்டு எஃப்ஏ கோப்பை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அடுத்த பருவத்தில், இந்த அணியானாது முதல் பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. பின்னர் 1965 மற்றும் 1967 ஆம் ஆண்டுகளில் மீண்டும் பட்டத்தை வென்றது. 1968 ஆம் ஆண்டில், மான்செஸ்டர் யுனைடெட் ஐரோப்பிய கோப்பையை வென்ற முதல் ஆங்கில காற்பந்து கழகமாக மாறியது.[22][23] 1969 ஆம் ஆண்டில் புஸ்பி மேலாளர் பதவியில் இருந்து விலகிய பிறகு, அவர்க்கு பதிலாக அணி பயிற்சியாளராக இருந்த முன்னாள் வீரர் வில்ஃப் மெக்கின்னஸ் புதிய மேலாளராக நியமிக்கப்பட்டார்.[24]

இடைப்பட்ட காலம் (1969–86)

தொகு
 
பிரையன் ராப்சன் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைவராக 12 ஆண்டுகள் இருந்தார்.[25]

1969-70 ஆம் ஆண்டில் எட்டாவது இடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, 1970-71 ஆம் ஆண்டு பருவத்தின் மோசமான தொடக்கத்தைத் தொடர்ந்து, புஸ்பி தற்காலிகமாக நிர்வாக கடமைகளை ஏற்கும்படி வற்புறுத்தப்பட்டார். பிறகு சூன் 1971 இல், பிராங்க் ஓ பரெல் புதிய மேலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் 18 மாதங்களுக்குள் திசம்பர் 1972 இல் டாமி டோச்செர்டி புதிய மேலாளராக நியமிக்கப்பட்டார்.[26] டோச்செர்டி யுனைடெட்டை அந்த ஆண்டில் முதல் பிரிவிலிருந்து வெளியேற்றப்படுவதிலிருந்து காப்பாற்றிய போதிலும், 1974 ஆம் ஆண்டு அணி இரண்டாம் பிரிவுக்கு தள்ளப்பட்ட பிறகு முன்னணி வீரர்களான பெஸ்ட், லா மற்றும் சார்ல்டன் ஆகிய மூவரும் அணியை விட்டு வெளியேறினர்.[22] முதல் முயற்சியில் யுனைடெட் அணி மீண்டும் முதல் பிரிவுக்கு உயர்வு பெற்று 1976 ஆம் ஆண்டில் எஃப்ஏ கோப்பை இறுதிப் போட்டியை எட்டியது. 1977 ஆம் ஆண்டில் லிவர்பூலை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து மீண்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போதிலும், டோச்செர்டி விரைவில் பணிநீக்கம் செய்யப்பட்டார்.[24]

1977 ஆம் ஆண்டு கோடையில் டோச்செர்டிக்கு பதிலாக டேவ் செக்ஸ்டன் மேலாளராக நியமிக்கப்பட்டார். ஜோ ஜோர்டான், கார்டன் மெக்குயின், கேரி பெய்லி மற்றும் ரே வில்கின்ஸ் உள்ளிட்ட வீரர்களை ஒப்பந்தம் செய்தபோதிலும், யுனைடெட் அணி எந்த கோப்பைகளையும் வெல்லத் தவறியது. இதனால் செக்ஸ்டன் 1981 இல் பதவி நீக்கம் செய்யப்பட்டார், இருப்பினும் அவரது வழிகாட்டுதலின் கீழ் கடைசி ஏழு ஆட்டங்களில் அணி தொடர் வெற்றி பெற்றது.[27] அவருக்கு பதிலாக ரான் அட்கின்சன் நியமிக்கப்பட்டார். அட்கின்சன் உடனடியாக பிரையன் ராப்சனை தனது முன்னாள் கிளப்பான வெஸ்ட் ப்ரோம்விச் ஆல்பியனில் இருந்து ஒப்பந்தம் செய்தார். அட்கின்சனின் கீழ், மான்செஸ்டர் யுனைடெட் 1983 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் எஃப்ஏ கோப்பையை வென்றது. 1985-86 இல், முதல் 15 போட்டிகளில் 13 வெற்றிகள் பெற்று முதல் இடத்தில் இருந்த போதிலும், தொடரின் முடிவில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது. அடுத்த பருவத்தில், நவம்பர் மாதத்தில், அட்கின்சன் பணிநீக்கம் செய்யப்பட்டார்.[28]

பெர்குசன் ஆண்டுகள் (1986-2013)

தொகு
 
அலெக்ஸ் பெர்குசன் 1986 முதல் 2013 வரை அணியை நிர்வகித்தார்.

அட்கின்சன் நீக்கப்பட்ட பிறகு அலெக்ஸ் ஃபெர்குஸன் புதிய மேலாளராக நியமிக்கப்பட்டார்.[29][30] 1987-88 இல் இரண்டாவது இடத்தைப் பிடித்த போதிலும், அடுத்த ஆண்டு மீண்டும் 11வது இடத்திற்கு தள்ளப்பட்டது.[31] 1990 ஆம் ஆண்டு எஃப்ஏ கோப்பை வென்றதன் மூலம் பெர்குசன் தலைமையில் அணி முதலாவது கோப்பையை கைப்பற்றியது.[32][33] அடுத்த ஆண்டு, மான்செஸ்டர் யுனைடெட் முதல் யுஇஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை பட்டத்தை வென்றது. அந்த வெற்றி முதல் முறையாக ஐரோப்பிய உன்னதக் கோப்பையில் போட்டியிட அனுமதித்தது, அதில் யுனைடெட் ரெட் ஸ்டார் பெல்கிரேடை 1-0 என்ற கோல் கணக்கில் ஓல்ட் டிராஃபோர்டில் தோற்கடித்தது. 1991 மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு கால்பந்து கூட்டிணைவுக் கோப்பை இறுதிப் போட்டிகளில் யுனைடெட் தோன்றியது, இரண்டாவது போட்டியில் நாட்டிங்கம் பாரஸ்ட்டை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக அந்த கோப்பையை வென்றது.[28] 1993 ஆம் ஆண்டில், புதிதாக நிறுவப்பட்ட பிரீமியர் லீக் தொடரின் முதல் ஆண்டில் இந்த அணி 1967 க்குப் பிறகு முதல் பட்டத்தை வென்றது. ஒரு வருடம் கழித்து, 1957 க்குப் பிறகு முதன்முறையாக, இரண்டாவது தொடர்ச்சியான பட்டத்தை வென்றனர். மேலும் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் எஃப்ஏ கோப்பையை வென்றதன் மூலம், இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக இரண்டு பட்டங்களை வென்ற முதல் அணியாக மாறியது.[34] 1998-99 ஆம் ஆண்டில், மான்செஸ்டர் யுனைடெட் பிரீமியர் லீக், எஃப்ஏ கோப்பை மற்றும் யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு ஆகியவற்றை வென்றதன் மூலம் இங்கிலாந்தில் ஒரே ஆண்டில் மூன்று பட்டங்களை வென்ற முதல் அணியாக மாறியது.[35]

மான்செஸ்டர் யுனைடெட் 1999-2000 மற்றும் 2000-01 பருவங்களில் மீண்டும் பிரீமியர் லீக் பட்டத்தை வென்றது, தொடர்ச்சியாக மூன்று முறை பட்டத்தை வென்ற நான்காவது ஆங்கில அணியானது. 2002-03 இல் பட்டத்தை மீண்டும் பெறுவதற்கு முன்பு, 2001-02 இல் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது.[36] 2004 ஆம் ஆண்டில் கார்டிஃபில் உள்ள மில்லினியம் அரங்கத்தில் நடந்த இறுதி போட்டியில் மில்வாலை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி 11வது முறையாக எஃப் ஏ கோப்பையை வென்றது.[37] 2006-07 ஆம் ஆண்டு பருவத்தில் யுனைடெட் மீண்டும் பிரீமியர் லீக் பட்டத்தை பெற்றது.[38] 2008 ஆம் ஆண்டின் யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு இறுதிப் போட்டியில் செல்சீயாவை வீழ்த்தி பட்டம் வென்றது.[39] 2008 இல் பிபா கழக உலகக் கோப்பையை வென்ற முதல் ஆங்கில அணியாக ஆனது. இதைத் தொடர்ந்து மான்செஸ்டர் யுனைடெட் 2008-09 கால்பந்து கூட்டிணைவுக் கோப்பை மற்றும் அதன் மூன்றாவது தொடர்ச்சியான பிரீமியர் லீக் பட்டத்தையும் பெற்றது.[40][41] 2010 ஆம் ஆண்டில், மான்செஸ்டர் யுனைடெட் வெம்பிளியில் ஆஸ்டன் வில்லாவை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து கூட்டிணைவுக் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது.[42] 2010-11 பருவத்தில் யுனைடெட் தனது 19 வது முதல் பிரிவு பட்டத்தை வென்று சாதனை படைத்தது.[43] 2012-13 ஆம் ஆண்டு பட்டம் வென்றதன் மூலம் 20 முதற்பிரிவு பட்டங்கள் வென்ற முதல் அணியானது.[44]

பிற்காலம் (2013-தற்போது)

தொகு

8 மே 2013 அன்று, ஃபெர்குசன் மேலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[45][46] கால்பந்து வரலாற்றில் மிகவும் அதிக பட்டங்கள் பெற்ற மேலாளராக பெர்குசன் ஓய்வு பெற்றார்.[47][48] ஆறு ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டேவிட் மோயஸ் சூலை 1 அன்று புதிய மேலாளராக அறிமுகப்படுத்தப்பட்டார்.[49][50] 10 மாதங்களுக்குப் பிறகு, 22 ஏப்ரல் 2014 அன்று, ஒரு மோசமான பருவத்திற்குப் பிறகு மோயஸ் நீக்கப்பட்டபோது ரியன் கிக்ஸ் தற்காலிக பொறுப்பேற்றுக்கொண்டார்.[51] 1990 ஆம் ஆண்டிலிருந்து மான்செஸ்டர் யுனைடெட் ஐரோப்பிய போட்டிக்கு தகுதி பெறாதது இதுவே முதல் முறையாகும்.[52] 19 மே 2014 அன்று, லூயிஸ் வான் கால் மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் மான்செஸ்டர் யுனைடெட் மேலாளராக மோய்ஸுக்குப் பதிலாக வருவார் என்பது உறுதி செய்யப்பட்டது, கிக்ஸ் அவரது உதவியாளராக இருந்தார்.[53]

வான் காலின் கீழ், யுனைடெட் 12வது எஃப் ஏ கோப்பையை வென்றது, ஆனால் இவரது இரண்டாவது ஆண்டில் ஏமாற்றமளிக்கும் போட்டி முடிவுகளால் வான் கால் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஜோசே மொரின்ஹோ 27 மே 2016 அன்று புதிய மேலாளராக நியமிக்கப்பட்டார். மொரின்ஹோ தனது முதல் ஆண்டில் எஃப் ஏ சமூக கவச கோப்பை, கால்பந்து கூட்டிணைவுக் கோப்பை மற்றும் யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு ஆகியவற்றை வென்றார். அடுத்த ஆண்டு, யுனைடெட் லீக்கில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. திசம்பர் 2018 இல், பிரீமியர் லீக் அட்டவணையில் யுனைடெட் ஆறாவது இடத்தில் இருந்த காரணத்தினால் மொரின்ஹோ நீக்கப்பட்டார். அடுத்த நாள், முன்னாள் யுனைடெட் வீரர் ஓலே கன்னர் சோல்ஸ்க்ஜெர் ஆண்டின் இறுதி வரை இடைக்கால மேலாளராக நியமிக்கப்பட்டார். 28 மார்ச் 2019 அன்று, தனது முதல் 19 போட்டிகளில் 14 போட்டிகளில் வென்ற பிறகு, சோல்ஸ்க்ஜெர் மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் நிரந்தர மேலாளராக நியமிக்கப்பட்டார்.

வில்லாரியலுக்கு எதிரான யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தந்தைத் தொடர்ந்து, நான்கு ஆண்டாளாக எந்த கோப்பையும் யுனைடெட் அணி வெற்றிபெறவில்லை.[54] நவம்பர் 2021 இல் சோல்ஸ்க்ஜெர் வெளியேறியதைத் தொடர்ந்து முன்னாள் வீரர் மைக்கேல் கேரிக் அடுத்த மூன்று ஆட்டங்களுக்கு பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் ரால்ஃப் ரங்னிக் ஆண்டின் இறுதி வரை இடைக்கால மேலாளராக நியமிக்கப்பட்டார். 21 ஏப்ரல் 2022 அன்று, எரிக் டென் ஹாக் 2021-22 பருவத்தின் முடிவில் இருந்து மேலாளராக நியமிக்கப்பட்டார்.[55] டென் ஹாக் தலைமையில் மான்செஸ்டர் யுனைடெட் 2022-23 கூட்டிணைவுக் கோப்பையை வென்றது.

சின்னமும் வண்ணங்களும்

தொகு

மான்செஸ்டர் யுனைடெட் கழகத்தின் முகடு மான்செஸ்டர் நகர கழகத்தின் சின்னத்திலிருந்து பெறப்பட்டது. இருபின்னும் தற்போதைய முகட்டில் அதில் கப்பல் சின்னம் மட்டுமே எஞ்சியிருக்கிறது.[56] ''தி ரெட் டெவில்ஸ்'' (சிகப்பு பிசாசுகள்) என்ற புனைப்பெயரில் இருந்து சின்னத்தில் இருக்கும் பிசாசு உருவம் எடுக்கப்பட்டது.[57][58][56] தற்போதைய சின்னத்தில், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் காணப்படுகின்றன. இதில் ஒரு கப்பல் மற்றும் ஒரு திரிசூலம் போன்ற ஆயுதம் ஏந்திய பிசாசு உருவான காணப்படுகின்றது.[59]

1892 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட நியூட்டன் ஹீத் அணியின் புகைப்படம், வீரர்கள் சிவப்பு மற்றும் வெள்ளை மேற்கை சட்டைகள் மற்றும் கடற்படை நீல காலுறைகள் அணிந்திருப்பதைக் காட்டுகிறது.[60] 1894 மற்றும் 1896 க்கு இடையில், வீரர்கள் பச்சை மற்றும் தங்க நிற சட்டைகளை அணிந்தனர், அவை 1896 இல் வெள்ளை சட்டைகளால் மாற்றப்பட்டன.[60] 1902 ஆம் ஆண்டில் பெயர் மாற்றத்திற்குப் பிறகு, சிவப்பு சட்டைகள், வெள்ளை கால் சட்டைகள் மற்றும் கருப்பு நிற காலுறைகள் என மாற்றப்பட்டன.[60] தற்போதைய முதன்மையான சீருடைகளில் சிவப்பு நிற சட்டை, வெள்ளை நிற கால் சட்டை மற்றும் கருப்பு நிற காலுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.[61]

விளையாட்டரங்கம்

தொகு
ஓல்ட் டிராஃபோர்ட்
தியேட்டர் ஆப் ட்ரீம்ஸ்
 
இடம் ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர், இங்கிலாந்து
எழும்பச்செயல் ஆரம்பம் 1909
திறவு 19 பிப்ரவரி 1910
உரிமையாளர் மான்செஸ்டர் யுனைடெட்
ஆளுனர் மான்செஸ்டர் யுனைடெட்
கட்டிட விலை £90,000 (1909)
கட்டிடக்கலைஞர் ஆர்க்கிபால்ட் லீட் (1909)
குத்தகை அணி(கள்) மான்செஸ்டர் யுனைடெட் (1910–தற்போது)
அமரக்கூடிய பேர் 74,310

நியூட்டன் ஹீத் ஆரம்பத்தில் தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வடக்கு சாலையில் ஒரு மைதானத்தில் விளையாடினார். ஆனால் அந்த மைதானத்தின் கொள்ளளவு மற்றும் வசதிகள் போதுமானதாக இல்லை என்று கருதப்பட்டது.[62][63][64]

சூன் 1893 இல், அந்த மைதானத்தின் உரிமையாளர்களான மான்செஸ்டர் டீன்ஸ் மற்றும் கேனனன்களால் வடக்கு சாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், கழக செயலாளர் ஆல்பட், கிளேட்டனில் உள்ள வங்கி சாலையில் ஒரு மைதானத்தை வாங்கினார்.[65]

1908 ஆம் ஆண்டில் மான்செஸ்டர் யுனைடெட் முதல் பட்டத்தை வென்றதை தொடர்ந்து, பிப்ரவரி 1909 இல் இந்த அரங்கம் போதுமானதாக இல்லை என முடிவு செய்யப்பட்டது.[66] பிப்ரவரி 1909 இல் கட்டிடக் கலைஞர் ஆர்க்கிபால்ட் லீட்சால் 77,000 இருக்கைகள் கொண்ட ஓல்ட் டிராஃபோர்ட் அரங்கம் வடிவமைக்கப்பட்டது.[67][68] மான்செஸ்டரைச் சேர்ந்த பிரமேல்ட் மற்றும் ஸ்மித் ஆகியோரால் இந்தக் அரங்கம் கட்டப்பட்டது.[69]

இரண்டாம் உலகப் போரில் குண்டுவீச்சு அரங்கத்தின் பெரும்பகுதியை அழித்தது. போருக்குப் பிறகு, போர் சேத ஆணையத்திடமிருந்து 22,278 பவுண்டுகள் இழப்பீடு பெற்றது. மறுசீரமைப்பு நடந்தபோது, அணி மான்செஸ்டர் சிட்டியின் மைனே சாலை மைதானத்தில் விளையாடியது.[70] பின்னர் செய்யப்பட்ட மேம்பாடுகளில், முதலில் ஸ்ட்ரெட்ஃபோர்ட் முனையிலும் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு நிலைகளிலும் கூரைகள் சேர்க்கப்பட்டன.[71]

1993 ஆம் ஆண்டில் அனைத்து இருக்கைகள் கொண்ட விளையாட்டரங்கத்திற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டதினால் அரங்கத்தின் கொள்ளளவு 44,000 ஆக குறைக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டில் 55,000 ஆகவும், 1998-99 பருவத்தின் முடிவில் 67,000 ஆகவும் இது உயர்த்தப்பட்டது. 2005 மற்றும் 2006 க்கு இடையில், வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இரண்டாவது அடுக்குகள் வழியாக மேலும் 8,000 இடங்கள் சேர்க்கப்பட்டன. 2009 ஆம் ஆண்டில், இருக்கைகளை மறுசீரமைப்பதன் விளைவாக திறன் 75,957 ஆக குறைக்கப்பட்டது.[72]

அணி உறுப்பினர்கள்

தொகு

வீரர்கள்

தொகு
11 சனவரி 2024. அன்று இருந்த தகவல்களின் படி[73][74]
மான்செஸ்டர் யுனைடெட் அணி
எண் நிலை நாடு பெயர்
1 கோ.கா.   துருக்கி அல்டய் பயந்திர்
2 தடு   சுவீடன் விக்டர் லிண்டலாப்
4 நடு்   மொரோக்கோ சோபியன் அம்ராபாத்
5 தடு   இங்கிலாந்து ஹாரி மாகுவேர்
6 தடு   அர்கெந்தீனா லிசாண்ட்ரோ மார்டினெசு
7 நடு்   இங்கிலாந்து மேசன் மவுண்ட்
8 நடு்   போர்த்துகல் புருனோ பெர்னாண்டசு (கேப்டன்)
9 முன்   பிரான்சு ஆண்டனி மார்சியல்
10 முன்   இங்கிலாந்து மார்கஸ் ராசுபோர்ட்டு
11 முன்   டென்மார்க் ராசுமஸ் ஹாலேண்ட்
12 தடு   நெதர்லாந்து டைரல் மலேசியா
14 நடு்   டென்மார்க் கிறிசுடியன் எரிக்சன்
16 நடு்   ஐவரி கோஸ்ட் அமாத் தியல்லோ
17 முன்   அர்கெந்தீனா அலெசான்ட்ரோ கர்னாச்சோ
18 நடு்   பிரேசில் கேசிமிரோ
19 தடு   பிரான்சு ரபேல் வரான்
20 தடு   போர்த்துகல் தியாகோ டேலோ
21 முன்   பிரேசில் ஆண்டனி
22 கோ.கா.   இங்கிலாந்து டாம் ஹீடன்
23 தடு   இங்கிலாந்து லூக் சா
24 கோ.கா.   கமரூன் ஆண்ட்ரே ஓனானா
29 தடு   இங்கிலாந்து ஆரோன் வான்-பிசாகா
35 தடு   வட அயர்லாந்து சானி எவன்சு
37 நடு்   இங்கிலாந்து கோபி மைனூ
39 நடு்   இசுக்காட்லாந்து சுகாட் மெக்டோமினே
47 முன்   இங்கிலாந்து சோலா சோர்டயர்
53 தடு   பிரான்சு வில்லி கம்பவாலா
62 நடு்   இங்கிலாந்து ஓமரி போர்சன்

பயிற்சியாளர்கள்

தொகு
நிலை பெயர்
மேலாளர்   எரிக் டென் ஹாக்
உதவி பயிற்சியாளர்கள்   மிட்செல் வான் டெர் காக்[75]
  ஸ்டீவ் மெக்லாரன்[75]
முதல் அணி பயிற்சியாளர்கள்   டேரன் பிளெட்சர்[76]
  பென்னி மெக்கார்த்தி[76]
கோல் காப்பாள பயிற்சியாளர்   ரிச்சர்ட் ஹார்டிஸ்[77]
மருத்துவர்   கேரி ஓ'டிரிஸ்கால்[78]
உடலியக்க மருத்துவர்   ராபின் சாட்லர்[79]

கோப்பைகள்

தொகு
 
மான்செஸ்டர் யுனைடெட் வென்ற கோப்பைகள் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன

மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி பெற்ற கோப்பைகளின் அடிபடையில் ஐரோப்பாவின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகும்.[80] இந்த அணி தனது முதல் கோப்பையை 1886 இல் வென்றது.[81] 1908 இல், யுனைடெட் முதல் லீக் பட்டத்தை வென்றது, அதை தொடர்ந்து அடுத்த ஆண்டு முதல் முறையாக எஃப் ஏ கோப்பையை வென்றது. அப்போதிருந்து 13 பிரீமியர் லீக் பட்டங்கள் உட்பட 20 உயர்மட்டப் பட்டங்களை வென்றுள்ளது. மேலும் 12 எஃப் ஏ கோப்பைகள், 6 கால்பந்து கூட்டிணைவுக் கோப்பைகள் மற்றும் 21 எஃப் ஏ சமூக கவச கோப்பைகளை வென்றுள்ளது.[82]

சர்வதேச கால்பந்தில், இந்த அணி மூன்று ஐரோப்பிய கோப்பை/யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு பட்டங்கள் மற்றும் யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு, யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை, யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை, கண்டங்களுக்கிடையேயான கோப்பை, பிபா கழக உலகக் கோப்பை ஆகியவற்றை தலா ஒரு முறையும் வென்றுள்ளது.[35][83][84]

மான்செஸ்டர் யுனைடெட் வெற்றிகள்
வகை போட்டி பட்டங்கள் பருவங்கள்
உள்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு முதல் பிரிவு/பிரீமியர் லீக் 20 1907–08, 1910–11, 1951–52, 1955–56, 1956–57, 1964–65, 1966–67, 1992–93, 1993–94, 1995–96, 1996–97, 1998–99, 1999–2000, 2000–01, 2002–03, 2006–07, 2007–08, 2008–09, 2010–11, 2012–13
கால்பந்து கூட்டமைப்பு இரண்டாம் நிலை 2 1935–36, 1974–75
எஃப் ஏ கோப்பை 12 1908–09, 1947–48, 1962–63, 1976–77, 1982–83, 1984–85, 1989–90, 1993–94, 1995–96, 1998–99, 2003–04, 2015–16
கால்பந்து கூட்டிணைவுக் கோப்பை 6 1991–92, 2005–06, 2008–09, 2009–10, 2016–17, 2022–23
எஃப் ஏ சமூக கவச கோப்பை 21 1908, 1911, 1952, 1956, 1957, 1965*, 1967*, 1977*, 1983, 1990*, 1993, 1994, 1996, 1997, 2003, 2007, 2008, 2010, 2011, 2013, 2016
ஐரோப்பிய யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு 3 1967–68, 1998–99, 2007–08
யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை 1 1990–91
யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு 1 2016-17
யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை 1 1991
உலகளாவிய பிபா கழக உலகக் கோப்பை 1 2008
கண்டங்களுக்கிடையேயான கோப்பை 1 1999
  •   சாதனை

மேற்கோள்கள்

தொகு
  1. "Manchester United Football Club". Premier League. Archived from the original on 6 June 2011. பார்க்கப்பட்ட நாள் 2 March 2008.
  2. "Old Trafford". premierleague.com. Premier League. Archived from the original on 5 August 2019. பார்க்கப்பட்ட நாள் 25 August 2022.
  3. Smith, Adam (30 November 2016). "Leeds United England's 12th biggest club, according to Sky Sports study". Sky Sports. Archived from the original on 28 February 2018. பார்க்கப்பட்ட நாள் 21 May 2018.
  4. Hamil (2008), p. 126.
  5. "Barça, the most loved club in the world" பரணிடப்பட்டது 14 நவம்பர் 2014 at the வந்தவழி இயந்திரம். Marca. Retrieved 15 December 2014
  6. 6.0 6.1 Barnes et al. (2001), p. 8.
  7. James (2008), p. 66.
  8. Barnes et al. (2001), p. 9.
  9. James (2008), p. 92.
  10. Barnes et al. (2001), p. 118.
  11. Barnes et al. (2001), p. 11.
  12. 12.0 12.1 Barnes et al. (2001), p. 12.
  13. Barnes et al. (2001), p. 13.
  14. Barnes et al. (2001), p. 10.
  15. Murphy (2006), p. 71.
  16. Glanville, Brian (27 April 2005). "The great Chelsea surrender". The Times (London) இம் மூலத்தில் இருந்து 29 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110629133659/http://www.timesonline.co.uk/article/0,,762-1586242,00.html. 
  17. Barnes et al. (2001), pp. 14–15.
  18. "1958: United players killed in air disaster". BBC News. 6 February 1958 இம் மூலத்தில் இருந்து 17 September 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100917140201/http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/february/6/newsid_2535000/2535961.stm. 
  19. Barnes et al. (2001), pp. 16–17.
  20. White, Jim (2008), p. 136.
  21. Barnes et al. (2001), p. 17.
  22. 22.0 22.1 Barnes et al. (2001), pp. 18–19.
  23. Moore, Rob; Stokkermans, Karel (11 December 2009). "European Footballer of the Year ("Ballon d'Or")". RSSSF. Archived from the original on 17 December 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2010.
  24. 24.0 24.1 Barnes et al. (2001), p. 19.
  25. Barnes et al. (2001), p. 110.
  26. Murphy (2006), p. 134.
  27. Barnes et al. (2001), p. 20.
  28. 28.0 28.1 Barnes et al. (2001), pp. 20–1.
  29. Barnes et al. (2001), p. 21.
  30. Barnes et al. (2001), p. 148.
  31. Barnes et al. (2001), pp. 148–149.
  32. "Arise Sir Alex?". BBC News. 27 May 1999 இம் மூலத்தில் இருந்து 26 March 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120326203559/http://news.bbc.co.uk/2/hi/special_report/1999/05/99/uniteds_treble_triumph/354282.stm. 
  33. "How Robins saved Ferguson's job". BBC Sport. 4 November 2006 இம் மூலத்தில் இருந்து 11 November 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111111174629/http://news.bbc.co.uk/sport2/hi/football/teams/m/man_utd/6096520.stm. 
  34. Bloomfield, Craig (4 May 2017). "Clubs ranked by the number of times they have claimed trophy doubles". Archived from the original on 23 February 2019. பார்க்கப்பட்ட நாள் 23 February 2019.
  35. 35.0 35.1 "United crowned kings of Europe". BBC Sport. 26 May 1999 இம் மூலத்தில் இருந்து 1 September 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110901045431/http://news.bbc.co.uk/2/hi/sport/football/353842.stm. 
  36. "Viduka hands title to Man Utd". BBC Sport. 4 May 2003 இம் மூலத்தில் இருந்து 16 May 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060516114120/http://news.bbc.co.uk/sport1/hi/football/eng_prem/2968015.stm. 
  37. "Man Utd win FA Cup". BBC Sport. 22 May 2004 இம் மூலத்தில் இருந்து 25 February 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090225084836/http://news.bbc.co.uk/sport1/hi/football/fa_cup/3725063.stm. 
  38. "Manchester United's Champions League exits, 1993–2011". The Guardian. 8 December 2011 இம் மூலத்தில் இருந்து 14 August 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140814193541/http://www.theguardian.com/football/2011/dec/08/manchester-united-champions-league-exit. 
  39. "Spot-on Giggs overtakes Charlton". BBC Sport. 21 May 2008 இம் மூலத்தில் இருந்து 21 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131021030602/http://news.bbc.co.uk/sport2/hi/football/teams/m/man_utd/7411587.stm. 
  40. "Man Utd 0–0 Tottenham (aet)". BBC Sport. 1 March 2009 இம் மூலத்தில் இருந்து 2 March 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090302073046/http://news.bbc.co.uk/sport1/hi/football/league_cup/7905889.stm. 
  41. "Man Utd 0–0 Arsenal". BBC Sport. 16 May 2009 இம் மூலத்தில் இருந்து 19 May 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090519202948/http://news.bbc.co.uk/sport1/hi/football/eng_prem/8038259.stm. 
  42. "Rooney the hero as United overcome Villa". ESPNsoccernet. 28 February 2010 இம் மூலத்தில் இருந்து 3 March 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100303090528/http://soccernet.espn.go.com/report?id=287675&cc=5739. 
  43. "Manchester United clinch record 19th English title". The Independent. 14 May 2011 இம் மூலத்தில் இருந்து 11 December 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121211082229/http://www.independent.co.uk/sport/football/premier-league/manchester-united-clinch-record-19th-english-title-2284086.html. 
  44. "How Manchester United won the 2012–13 Barclays Premier League". Premier League. 22 April 2013 இம் மூலத்தில் இருந்து 25 April 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130425075443/http://www.premierleague.com/en-gb/news/features/man-united-2012-13-season-at-a-glance.html. 
  45. "Sir Alex Ferguson to retire as Manchester United manager". BBC Sport. 8 May 2013 இம் மூலத்தில் இருந்து 1 January 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160101074719/http://www.bbc.co.uk/sport/0/football/22447018. 
  46. "Sir Alex Ferguson to retire this summer, Manchester United confirm". Sky Sports. 8 May 2013 இம் மூலத்தில் இருந்து 29 June 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130629084315/http://www1.skysports.com/football/news/11667/8698530/Sir-Alex-Ferguson-to-retire-this-summer-Manchester-United-confirm. 
  47. "Sir Alex Ferguson is the greatest manager ever – and only Mourinho can catch him". Goal.com. Archived from the original on 29 November 2021. பார்க்கப்பட்ட நாள் 3 March 2021.
  48. Rubio, Alberto; Clancy, Conor (23 May 2019). "Guardiola on his way to becoming the most successful coach of all time". Marca. Archived from the original on 24 June 2019. பார்க்கப்பட்ட நாள் 3 March 2021.
  49. "David Moyes: Manchester United appoint Everton boss". BBC Sport. 9 May 2013 இம் மூலத்தில் இருந்து 10 May 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130510022217/http://www.bbc.co.uk/sport/0/football/22453802. 
  50. "Manchester United confirm appointment of David Moyes on a six-year contract". Sky Sports. 9 May 2013 இம் மூலத்தில் இருந்து 7 June 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130607062956/http://www1.skysports.com/football/news/11671/8701469/Manchester-United-confirm-appointment-of-David-Moyes-on-a-six-year-contract. 
  51. "David Moyes sacked by Manchester United after just 10 months in charge". The Guardian. 22 April 2014 இம் மூலத்தில் இருந்து 20 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181220020053/https://www.theguardian.com/football/2014/apr/22/david-moyes-sacked-manchester-united. 
  52. "Southampton 1–1 Man Utd". 11 May 2014 இம் மூலத்தில் இருந்து 19 May 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140519083217/http://www.bbc.co.uk/sport/0/football/27273510. 
  53. "Manchester United: Louis van Gaal confirmed as new manager". 19 May 2014 இம் மூலத்தில் இருந்து 20 May 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140520005510/http://www.bbc.co.uk/sport/0/football/27243233. 
  54. "Man Utd beat nine-man Southampton 9-0". BBC Sport. 2 February 2021. Archived from the original on 15 August 2021. பார்க்கப்பட்ட நாள் 19 January 2022.
  55. "Manchester United appoints Erik Ten Hag as Manager". manutd.com. 21 April 2022. Archived from the original on 31 May 2022. பார்க்கப்பட்ட நாள் 21 April 2022.
  56. 56.0 56.1 Barnes et al. (2001), p. 49.
  57. Peate, Stephen. "The rise of the Red Devils: A look at the Manchester United logo history". Fabrik Brands. Archived from the original on 12 May 2023. பார்க்கப்பட்ட நாள் 9 March 2023.
  58. Bonn, Kyle (30 Dec 2021). "Why is Manchester United called the "Red Devils"? Explaining the famous nickname". The Sporting News. Archived from the original on 12 May 2023.
  59. Phillips, David Llewelyn (Spring 2015). "Badges and 'Crests': The Twentieth-Century Relationship Between Football and Heraldry". The Coat of Arms XI Part I (229): 40–43. https://www.theheraldrysociety.com/wp-content/uploads/2019/10/CoA-229-Phillips-paper.pdf. பார்த்த நாள்: 31 January 2022. 
  60. 60.0 60.1 60.2 Barnes et al. (2001), p. 48.
  61. "Revealed: New Man Utd home kit for 2019/20". Manchester United. 16 May 2019 இம் மூலத்தில் இருந்து 16 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190516213459/https://www.manutd.com/en/news/detail/adidas-and-man-utd-launch-new-home-kit-for-2019-20-season. 
  62. White, Jim (2008) p. 21.
  63. James (2008), p. 392.
  64. Shury & Landamore (2005), p. 54.
  65. Shury & Landamore (2005), p. 24.
  66. Inglis (1996), p. 234.
  67. Inglis, pp. 234–235
  68. White (2007), p. 50
  69. Rollin and Rollin, pp. 254–255.
  70. White, John (2007), p. 11.
  71. White, John (2007), p. 11.
  72. "Man Utd 3–0 Birmingham". BBC Sport. 26 March 2006 இம் மூலத்தில் இருந்து 25 July 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130725212757/http://news.bbc.co.uk/sport2/hi/football/eng_prem/4820120.stm. 
  73. "Man Utd First Team Squad & Player Profiles". ManUtd.com. Manchester United. Archived from the original on 11 September 2019. பார்க்கப்பட்ட நாள் 5 July 2023.
  74. Nelson, Joe (3 September 2023). "Five new United squad numbers confirmed". Manchester United இம் மூலத்தில் இருந்து 3 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230903091520/https://www.manutd.com/en/news/detail/man-utd-announce-new-squad-numbers-for-2023-24. 
  75. 75.0 75.1 "Mitchell van der Gaag and Steve McClaren appointments confirmed". Manchester United. 23 May 2022 இம் மூலத்தில் இருந்து 23 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220523080231/https://www.manutd.com/en/news/detail/mitchell-van-der-gaag-and-steve-mcclaren-appointments-confirmed. 
  76. 76.0 76.1 Marshall, Adam (30 July 2022). "Benni McCarthy appointed as first-team coach". Manchester United இம் மூலத்தில் இருந்து 30 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220730201206/https://www.manutd.com/en/news/detail/benni-mccarthy-joins-manchester-united-as-coach. 
  77. "Richard Hartis appointed senior goalkeeping coach". Manchester United. 22 June 2019 இம் மூலத்தில் இருந்து 11 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201011081448/https://www.manutd.com/en/news/detail/manchester-united-confirms-appointment-of-senior-goalkeeping-coach. 
  78. "Gary O'Driscoll starts as head of sports medicine at Man Utd". Manchester United. 22 September 2023 இம் மூலத்தில் இருந்து 27 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230927130748/https://www.manutd.com/en/news/detail/gary-odriscoll-starts-as-head-of-sports-medicine-at-man-utd. 
  79. "Robin Sadler joins Manchester United". Manchester United. 4 January 2021 இம் மூலத்தில் இருந்து 29 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20211129221714/https://www.manutd.com/en/news/detail/robin-sadler-joins-man-utd-as-head-of-rehabilitation-and-physiotherapy. 
  80. Bloomfield, Craig (13 August 2015). "Which club has won the most trophies in Europe? The most successful clubs from the best leagues revealed". talkSPORT இம் மூலத்தில் இருந்து 16 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151016051615/http://talksport.com/football/which-club-has-won-most-trophies-europe-most-successful-clubs-best-leagues-revealed. 
  81. Shury & Landamore (2005), p. 8.
  82. "On This Day: United's Historic 'Double Double'". Manchester United. 11 May 2020 இம் மூலத்தில் இருந்து 17 May 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200517101142/https://www.manutd.com/en/news/detail/glory-days-story-of-the-1996-fa-cup-win-for-man-utd. 
  83. "Manchester United win the UEFA Europa League". Manchester United. 24 May 2017 இம் மூலத்தில் இருந்து 1 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180601015225/http://www.manutd.com/en/News-And-Features/Football-News/2017/May/Manchester-United-win-the-Europa-League-after-beating-Ajax-in-the-final-in-Stockholm-24-May-2017.aspx. 
  84. "Europa League final: Manchester United on the brink of unique achievement no other English club could ever match". talkSPORT. 23 May 2017. Archived from the original on 27 May 2017. பார்க்கப்பட்ட நாள் 28 May 2017.

நூற் குறிப்புகள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு