மான்டி பனேசார்

மான்டி பனேசார் (Monty Panesar, பிறப்பு: ஏப்ரல் 25 1982), இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான பனேசர் 50 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 220 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் அதிகபடசமாக 26 ஓட்டங்களை எடுத்துள்ள இவர் பந்துவீச்சில் 167 இழப்புகளைக் கைப்பற்ற்றியுள்ளார். அதில் ஐந்து இழப்புகளை 12 முறை கைப்பற்றியுள்ளார். 37 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இழப்புகளை எடுத்ததே இவரின் சிறந்த பந்துவீச்சு ஆகும்.26 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 26 ஓட்டங்களை எடுத்துள்ள இவரின் அதிகபட்ச ஓட்டம் 13 ஆகும். மேலும் பந்துவீச்சில் 24 இழப்புகளை மட்டுமே எடுத்துள்ளார். 219 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 1,536 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 46* ஓட்டங்கள் எடுத்ததே இவரின் அதிகப்டச ஓட்டம் ஆகும். இதில் சிறப்பாக பந்து வீசிய இவர் 709 இழப்புகளைக் கைப்பற்றியுள்ளார். 5 இழப்புகளை 39 முறையும் 10 இழப்புகளை 6 முறையும் கைப்பற்றியுள்ளார். 2006 ஆம் ஆண்டில் நாக்பூரில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார் மற்றும் அதே தொடரில் இங்கிலாந்துக்காக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். ஆங்கில கவுண்டி கிரிக்கெட்டில், இவர் கடைசியாக 2016 இல் நார்தாம்ப்டன்ஷையருக்காக விளையாடினார், இதற்கு முன்பு 2009 வரை நார்தாம்ப்டன்ஷையருக்காகவும், 2010–2013 முதல் சசெக்ஸ் மற்றும் 2013-2015 முதல் எசெக்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார், தென்னாப்பிரிக்காவில் லயன்ஸ் அணிக்காகவும் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 85 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 141 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 17* ஓட்டங்களை எடுத்ததே இவரின் அதிகபட்ச ஓட்டம் ஆகும். மேலும் பந்துவீச்சில் 83 இழப்புகளைக் கைப்பற்றினார்.

மான்டி பனேசார்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மான்டி பனேசார்
உயரம்6 அடி 1 அங் (1.85 m)
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை சுழல் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 631)மார்ச்சு 1 2006 எ. இந்தியா
கடைசித் தேர்வுசூலை 8 2009 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 200)சனவரி 12 2007 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாபஅக்டோபர் 13 2007 எ. இலங்கை
ஒநாப சட்டை எண்77
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 39 26 133 66
ஓட்டங்கள் 187 26 1,034 135
மட்டையாட்ட சராசரி 5.50 5.20 8.91 10.38
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 26 13 46* 17*
வீசிய பந்துகள் 9,042 1,308 29,271 2,951
வீழ்த்தல்கள் 126 24 425 65
பந்துவீச்சு சராசரி 34.37 40.83 32.49 34.24
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
8 0 21 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 n/a 3 n/a
சிறந்த பந்துவீச்சு 6/37 3/25 7/181 5/20
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/– 3/– 30/– 10/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், திசம்பர் 28 2010

தேர்வுத் துடுப்பாட்டம்

தொகு

2005 ஆம் ஆண்டில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவர் இடம் பெற வேண்டும் என தேர்வாளர்கள் கருதினர். [1] [2] [3] தற்போதைய ஆஷ்லே கைல்ஸுக்கு துணை சுழற் பந்துவீச்சாளராக இவர் தேர்வானார். மேலும் அந்த சமயத்தில் இடது-இடது-கை வழமைச் சுழல் பந்துவீச்சாளரான இயன் பிளாக்வெல் மற்றும் எதிர் சுழல் பந்துவீச்சாளரான சான் உடால் மற்றும் அலெக்ஸ் லூடன் ஆகியோரும் தேர்வில் இருந்தனர். மோசமான மட்டையாட்டம் மற்றும் களத்தடுப்பட்டம் குறித்த இவரது திறன் இவர் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளுக்கு இடையூறாக இருக்கலாம் என்று கூறப்பட்டது, ஆனால் 2005 ஆம் ஆண்டில் முன்னதாக இவர் அடிலெய்டில் உள்ள டேரன் லெஹ்மன் அகாதமியில் கலந்து கொண்டார். இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்திற்காக ஜனவரி 2006 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் நாக்பூரில் இந்தியாவுக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் சர்வதேச அளவில் இவர் அறிமுகமானார். இந்தியாவின் இரண்டு சிறந்த மட்டையாளர்களான சச்சின் டெண்டுல்கர், தலைவர் ராகுல் திராவிட் உட்பட மூன்று இழக்குகளை வீழ்த்தினார்.

பனேசர், இரண்டாவது மற்றும் மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாட மொஹாலி மற்றும் மும்பை சென்றார் . அங்கு இவரது முப்பத்தி ஐந்து குடும்ப உறுப்பினர்கள் அந்தப் போட்டியினைக் காண வந்திருந்தனர். [4]

சான்றுகள்

தொகு
  1. "Coach backs Panesar England claim". BBC. 9 January 2006. http://news.bbc.co.uk/sport2/hi/cricket/england/4594806.stm. 
  2. "Emburey wants specialists picked". BBC. 26 January 2006. http://news.bbc.co.uk/sport2/hi/cricket/england/4650106.stm. 
  3. "Jonathan Agnew column". BBC. 28 February 2006. http://news.bbc.co.uk/sport2/hi/cricket/england/4758274.stm. 
  4. "The Tribune, Chandigarh, India – Chandigarh Stories". Tribuneindia.com. 3 December 2005. பார்க்கப்பட்ட நாள் 18 March 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மான்டி_பனேசார்&oldid=3007108" இலிருந்து மீள்விக்கப்பட்டது