மாலுடாம்

சரவாக் மாநிலத்தில் துணை மாவட்டம்

மாலுடாம் (மலாய் மொழி: Maludam; ஆங்கிலம்: Maludam, Saribas) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் பெத்தோங் பிரிவில் உள்ள ஒரு துணை மாவட்டம்; மற்றும் ஒரு நகரமாகும்.

மாலுடாம்
Maludam, Saribas
Maludam
மாலுடாம் தேசியப் பூங்கா (2022)
மாலுடாம் தேசியப் பூங்கா (2022)
மாலுடாம் is located in மலேசியா
மாலுடாம்
      இகான்       மலேசியா
ஆள்கூறுகள்: 1°39′00″N 111°02′00″E / 1.65°N 111.03333°E / 1.65; 111.03333
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுபெத்தோங் பிரிவு
மாவட்டம்மலுடாம் துணை மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்478 km2 (185 sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
94950[1]
இணையதளம்Matu & Daro District Council

இந்த நகரம், தென் சீனக் கடற்கரையை எதிர்நோக்கியவாறு; லுபார் ஆற்றுக்கும் சரிபாஸ் ஆற்றுக்கும் இடையே அமைந்துள்ளது.

மாலுடாம் நகரம், சரவாக் மாநிலத்தின் தலைநகரமான கூச்சிங் நகரத்திற்கு கிழக்கே ஏறக்குறைய 78.2 கிலோமீட்டர்கள் (49 மைல்கள்) தொலைவில் உள்ளது.

பொது

தொகு

1911 தொடங்கி 1985 வரை இந்த மாவட்டம், கம்போங் மாலுடாம் அல்லது மாலுடாம் கிராமம் (Kampung Maludam) என்று அழைக்கப்பட்டது. 2000-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாலுடாமின் மொத்த மக்கள் தொகை 5,230; மக்கள் தொகையில் 80% மலாய் மக்கள், 15% இபான் மக்கள் மற்றும் 5% சீனர்கள்.

ஒரு காலக் கட்டத்தில் இந்தத் துணை மாவட்டம், செரி அமான் பிரிவின் கீழ் இருந்தது. தற்போது பெத்தோங் பிரிவின் நிர்வாகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.

1985-ஆம் ஆண்டு மாலுடாம் கிராமம் எனப்படும் சிறிய கிராமத்தை, ஒரு துணை மாவட்டமாக அங்கீகரிக்க சரவாக் அரசாங்கம் முயற்சி எடுத்தது.

மாலுடாம் தேசியப் பூங்கா

தொகு
 
சரவாக் சுரிலி குரங்குகள்
 
தும்பிக்கை குரங்கு

மாலுடாம் துணை மாவட்டத்தில் 43,147 எக்டர் பரப்பளவைக் கொண்ட மாலுடாம் தேசியப் பூங்கா (Maludam National Park) என்ற தேசியப் பூங்காவும் உள்ளது. இந்தப் பூங்கா முற்றிலும் தாழ்வான, தட்டையான சதுப்பு நிலக் காடுகளைக் கொண்டுள்ளது. மாலுடாம் தேசிய பூங்காவில் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன.[2]

2000-இல் நிறுவப்பட்ட இந்தப் பூங்கா 432 சதுர கி.மீ. (167 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இது சரவாக்கில் இரண்டாவது பெரிய பூங்காவாகும். மாலுடாம் தேசிய பூங்காவிற்கு வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் மக்களும் வருகை தருகின்றனர். மாலுடாம் தேசிய பூங்காவிற்குச் செல்ல, துரித படகைப் பயன்படுத்தும் ஆற்றுப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம்.

சரவாக் சுரிலி

தொகு

மாலுடாம் தேசியப் பூங்காவில், இன்று உலகில் எஞ்சியிருக்கும் சிவப்பு பட்டை கொண்ட சரவாக் சுரிலி (Sarawak Surili) குரங்குகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உள்ளன. இந்த இனம் உலகின் மிக அழகான குரங்குகளில் ஒன்றாகும். மேலும் இந்தக் குரங்குகள் போர்னியோவிற்கு மட்டுமே சொந்தமான குரங்கினமாகும்.

சரவாக் மாநிலத்தில் தும்பிக்கை குரங்குகளின் ஐந்து வாழ்விடங்களில் மாலுடாம் தேசியப் பூங்காவும் ஒன்றாகும். குறிப்பிடத்தக்க அளவில் வெள்ளி நிற லுத்தோங் குரங்குகளும் (Silvery Lutung) உள்ளன. மற்ற பாலூட்டிகளின் பன்முகத்தன்மை இங்கு குறைவாகவே உள்ளது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Postcode, Malaysia. "Postcode 94950, Maludam, Sarawak, Malaysia". malaysiapostcode.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 October 2024.
  2. "main functions are to manage Totally Protected Areas (TPAs) and to conserve Biodiversity of Sarawak.k Forestry Corporation". sarawakforestry.com. பார்க்கப்பட்ட நாள் 6 October 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலுடாம்&oldid=4106715" இலிருந்து மீள்விக்கப்பட்டது