முன்னாவல்கோட்டை
முன்னாவல்கோட்டை (Munnavalkottai) என்னும் கிராமம், இந்திய நாட்டின், தமிழ்நாடு மாநிலத்தின், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ளது.
முன்னாவல்கோட்டை | |
---|---|
அடைபெயர்(கள்): முன்னை | |
ஆள்கூறுகள்: 10°45′25″N 79°22′14″E / 10.756866°N 79.370650°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவாரூர் |
வட்டம் (தாலுகா) | நீடாமங்கலம் |
ஏற்றம் | 28 m (92 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 947 |
மொழிகள் | |
• அதிகாரபூர்வ மொழிகள் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 614403 |
தொலைபேசி குறியீடு | 04367 |
வாகனப் பதிவு | டி.என்-50 |
புவியியல் அமைப்பு
தொகுமுன்னாவல் கோட்டையின் முகப்பின் அளவு 28 மீட்டர் ஆகும். மேற்கில் 7 கிலோமீட்டர் தொலைவில் நீடாமங்கலமும், வடக்கில் 19 கிலோமீட்டர் தொலைவில் மன்னார்குடியும், தெற்கில் 31 கிலோமீட்டர் தொலைவில் கும்பகோணமும், கிழக்கில் தஞ்சாவூரும், மேற்கில் 36 கிலோமீட்டர் தொலைவில் திருவாரூரும் எல்லைகளாக உள்ளன.
[[திருவாரூர்], தஞ்சாவூர் மாவட்டங்களின் எல்லையில் இவ்வூர் அமைந்துள்ளது. மேலும், இங்குக் கிளை அஞ்சலகம் ஒன்று காணப்படுகிறது. [1][2] இவ்வூர் கோவில்வெண்ணி துணை அஞ்சலகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. முன்னாவல்கோட்டையைச் சுற்றி கிழக்கில் கொரடாச்சேரி, மேற்கில் அம்மாப்பேட்டை, வடக்கில் குடவாசல், தெற்கில் மன்னார்குடி ஆகிய வட்டங்கள் அமையப்பெற்றுள்ளன.
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, முன்னாவல்கோட்டை கிராமத்தின் மொத்த மக்கள்தொகையின் எண்ணிக்கை 947 ஆகும். இதில் ஆண்கள் 48 விழுக்காட்டினர் ஆவர். பெண்கள் 52 விழுக்காட்டினர் ஆவர். இக்கிராமத்தின் எழுத்தறிவு சராசரி அளவு 72% ஆகும். ஆண்கள் எழுத்தறிவு விகிதம் 79% ஆகவும் பெண்கள் எழுத்தறிவு விகிதம் 65% ஆகவும் உள்ளது. அதுபோல், 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்தொகையில் ஆறு வயதிற்கு கீழுள்ளோர் பத்து விழுக்காட்டினராகக் காணப்படுகின்றனர்.[3]
பள்ளிகள்
தொகு- அரசு மேனிலைப் பள்ளி, முன்னாவல்கோட்டை.[4]
- ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி
கோவில்கள்
தொகுஅரசியல்
தொகுதஞ்சாவூர் மக்களவைத் தொகுதியின் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில்[4] முன்னாவல்கோட்டை உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Indian Post Office: Munnavalkottai".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Post Office Details: Munnavalkottai". Archived from the original on 2016-11-06. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
- ↑ 4.0 4.1 "Elections Booth: Govt High School: Munnavalkottai" (PDF).[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Dinamalar Temples list in Thanjavur Dt".