மொன்செராட்

(மொண்சுராட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மொன்செராட் (Montserrat) கரிபிய கடலில் அமைந்துள்ள சிறிய அண்டிலிசு தீவுச் சங்கிலியின் ஒரு பாகமான காற்றெதிர் தீவுகளில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த மண்டலமாகும். இத்தீவு 11 கிமீ (7 மைல்) அகலத்தையும் 16 கிமீ (10 மைல்) நீளத்தையும் கொண்டுள்ளதோடு இங்கு 40 கிலோமீட்டர்கள் (25 mi) நீளமான கடற்கரையும் காணப்படுகிறது.[1] 1493 ஆம் ஆண்டு புது உலகு நோக்கிய தனது இரண்டாம் பயணத்தின் போது கிரிஸ்டோபர் கொலம்பஸ் இத்தீவுகளுக்கு சுபெயினிலுள்ள மொன்செராட் மலையின் பெயரை இத்தீவுக்கு இட்டார். அயர்லாந்துக் கடற்கரைப்பகுதிகளை ஒத்திருப்பதாலும், ஐரியர்கள் இங்கே வந்து குடியேரியமையாலும் மொன்செராட் பரவலாக கரிபியத்தின் பைம்மணி என அழைக்கப்படுவதுண்டு.

மொன்செராட்
Montserrat
கொடி of மொன்செராட்டின்
கொடி
சின்னம் of மொன்செராட்டின்
சின்னம்
நாட்டுப்பண்: "இராணியைக் கடவுள் காக்க"
மொன்செராட்டின்அமைவிடம்
தலைநகரம்பிளைமவுத் 1
பிராதெ (நடைமுறையில்)
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
மக்கள்மொன்செராட்டியர்
அரசாங்கம்பிரித்தானிய கடல்கடந்த மண்டலம்
இரண்டாம் எலிசபெத்
• ஆளுநர்
பீட்ட்டர் வாட்டர்வேர்த்
• தலைமை அமைச்சர்
லொவெல் லூயிஸ்
பிரித்தானிய கடல்கடந்த மண்டலம்
• பிரித்தானிய ஆட்சி நிறுவல்
1632
பரப்பு
• மொத்தம்
102 km2 (39 sq mi) (21வது)
• நீர் (%)
புறக்கணிக்கத்தக்கது
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
4,488 2 (216வது)
• அடர்த்தி
44/km2 (114.0/sq mi) (153வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2002 மதிப்பீடு
• மொத்தம்
$29 மில்லியன் (தரப்படுத்தப்படவில்லை)
• தலைவிகிதம்
$3,400 (தரப்படுத்தப்படவில்லை)
மமேசுn/a
Error: Invalid HDI value · n/a
நாணயம்கிழக்கு கரிபியன் டாலர் (XCD)
நேர வலயம்ஒ.அ.நே-4
அழைப்புக்குறி1 664
இணையக் குறி.ms
  1. 1997 இல் எரிமலைக் குமுறலைத் தொடர்ந்து அகற்றப்பாட்டது. அரசு கட்டிடங்கள் தற்போது பிராடெஸ் நகரில் அமைந்துள்ளன.
  2. ஜூலை 1995 இல் இடம்பெற்ற எரிமலைக் குமுறலைத் தொடர்ந்து 8,000 பேர் இத்தீவை விட்டு வெளியேறினர். சிலர் மீளக் குடியேறினர்.

ஜூலை 18, 1995 இல் முன்னதாக உறங்கு எரிமலையான சௌபியரே எரிமலை வெடித்துச் சிதறியதன் காரணமாக ‎மொன்செராட்டின் தலைநகரம் பிளை மௌத் அழிக்கப்பட்ட்துடன் மண்டலத்தின் மக்கற்தொகையின் மூன்றில் இரண்டுப்பகுதியினர் தீவை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது.[2] ஒப்பளவில் குறைந்த அளவுள்ள வெடிப்புகள் இன்னமும் தொடர்ந்த வண்ணமுள்ளன. சேதங்கள் பிளைமௌத்த்துக்க் அண்மிய பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. எரிமலையின் குவிமாடத்தின் அளவி பெரிதாகி உள்ளபடியால் விலக்கப்பட்ட வட்டாரமொன்று தீவின் தென்பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு புதிய விமான நிலையமொன்று தீவின் வட பகுதியில் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது.

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொன்செராட்&oldid=3351548" இலிருந்து மீள்விக்கப்பட்டது