மோகித் சர்மா

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

மோஹித் மஹிபல் சர்மா (பிறந்த நாள் 18 செப்டம்பர், 1988) ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு இந்திய கிரிக்கெட் வீரர். அவர் ஒரு வலது-கை நடுத்தர வேக பந்து வீச்சாளர்.

மோகித் ஷர்மா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மோகித் மணிபால் ஷர்மா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை மித விரைவு வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2011–தற்போது வரைஅரியானா மாநிலத் துடுப்பாட்ட அம்ம்னி
2013–2015சென்னை சூப்பர் கிங்ஸ் (squad no. 18)
2016-presentகிங்சு இலெவன் பஞ்சாபு (squad no. 18)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ. டி. ஐ. 20I முதல் தர ப. அ.
ஆட்டங்கள் 21 4 24 40
ஓட்டங்கள் 31 0 354 128
மட்டையாட்ட சராசரி 7.75 0 12.64 12.80
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 11 0 49 24
வீசிய பந்துகள் 893 66 4,135 1823
வீழ்த்தல்கள் 24 3 85 44
பந்துவீச்சு சராசரி 32.16 34 22.82 33.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 4 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 4/22 1/11 5/45 4/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 3/– 4/– 12/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, 21 சூன் 2015

2012-2013 ரஞ்சி கோப்பை போட்டியின் போது 7 ஆட்டங்களில் 37 விக்கட்டுக்களை சாய்த்தார். அந்த போட்டித் தொடரில் அவரது சராசரி 23. 2013 ஆம் ஆண்டு முதல் ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். 2013 சீசனில் 15 ஆட்டங்களில் 23 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார். 

சர்வதேச போட்டிகள்

தொகு

2013 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இதில் ஆகஸ்டு 1 இல் , புலவாயோவில் நடைபெற்ற சிம்பாப்வேத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 3 ஓவர்களை மெய்டனாக வீசினார். இதில் 26 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இந்திய அணி 9 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[1] 2015 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இதில் அக்டோபர் 1 இல் , மும்பையில் நடைபெற்ற தென்னப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். இந்தப் போட்டியில் 7 ஓவர்கள் வீசி இதில் 84 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 1 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 234 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[2]

பன்னாட்டு இருபது20

தொகு

2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற 2014 ஐசிசி உலக இருபது20 தொடரில் விளையாடும் வாய்ப்பினை இவர் பெற்றார். மார்ச் 30 , தாக்கவில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்டா ணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 2 ஓவர்கள் வீசி இதில் 11 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 1 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இந்துய அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[3]

2015 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இதில் அக்டோபர் 5 இல் , கட்டாக்கில் நடைபெற்ற தென்னப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது பன்னட்டு இருபது 20 துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். இந்தப் போட்டியில் 1 ஓவர்கள் வீசி இதில் 7 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார் . ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 6 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[2]

இந்தியன் பிரீமியர் லீக்

தொகு

2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவர் கிங்சு இலெவன் பஞ்சாபு அணி சார்பாக விளையாடினார். இந்த அணியின் தலைவராக இந்தியத் துடுப்பாட்ட அணியின் வலதுகை புறத்திருப்ப பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அசுவின் நியமிக்கப்பட்டார்.

2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் ஏப்ரல் 8 இல் மொகாலியில் நடைபெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசி 33 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.[4]

ஏப்ரல் 13 இல் பெங்களூருவில் நடைபெற்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசி 45 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.[4] ஏப்ரல் 15 இல் மொகாலியில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசி 47 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். 1 இலக்கினைக் கைப்பற்றினார்.[4]

ஏப்ரல் 19 இல் மொகாலியில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசி 51 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.[4] மே 8 இல் ஜெய்பூரில் நடைபெற்றராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசி 29 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார் . ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.[4]

விருதுகள்

தொகு

ஒருநாள் போட்டி

தொகு

ஆட்டநாயகன் விருது

தொகு
S இல்லை எதிர்ப்பாளர் இடம் தேதி போட்டியில் செயல்திறன் விளைவாக
1 ஜிம்பாப்வே குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், Bulawayo 1 ஆகஸ்ட் 2013 10-3-26-2 ; DNB     இந்தியா வித்தியாசத்தில் வெற்றி 9 விக்கெட்டுகள்.[5]

குறிப்புகள்

தொகு
  1. "4th ODI, India tour of Zimbabwe at Bulawayo, Aug 1 2013 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-31
  2. 2.0 2.1 "5th ODI (D/N), South Africa tour of India at Mumbai, Oct 25 2015 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-31
  3. "28th Match, Group 2 (N), World T20 at Dhaka, Mar 30 2014 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-31
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 "Mohit Sharma", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-31
  5. "India in Zimbabwe ODI Series, 2013 - 4th ODI".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகித்_சர்மா&oldid=3699588" இலிருந்து மீள்விக்கப்பட்டது