வங்காள ஜமீந்தார்கள்
வங்காள ஜமீந்தார்கள் (Zamindars of Bengal) இந்தியத் துணைக்கண்டத்தின் வங்காள மாகாணத்தில் (இப்போது வங்காளதேசத்திற்கும் இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்திற்கும் இடையில் பிரிக்கப்பட்டுள்ளது) ஜமீந்தார்களாக இருந்தனர். அவர்கள் ஒரு பண்டைய நில உரிமை முறையில் அப்பகுதியில் ஆட்சி செய்தனர்.
வங்காள மாகாணத்தில் இவர்கள் தோட்டங்களை நிர்வகித்து வந்தனர். பருத்தி, சணல், கருநீலம், நெல், கோதுமை, தேயிலை, மசாலாப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களை உற்பத்தி செய்தனர். பிரிட்டிஷ் நிலப்பிரபுக்களைப் போலவே, இவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன- இவர்களின் தோட்டப் பொருளாதாரம் பல அறிஞர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை தென் அமெரிக்காவிலுள்ள வரலாற்று தோட்ட வளாகங்களுடன் ஒப்பிடலாம். ஜமீந்தார்களின் நிலங்களை குத்தகைக்கு எடுத்தவர்களால் இந்த நிலம் பயிரிடப்பட்டது. வாடகையின் பெரும்பகுதி ஏகாதிபத்திய அரசாங்கத்திற்கு வரிகளாக செலுத்தப்பட்டது. முகலாய மற்றும் பிரித்தானிய ஆட்சியின் கீழ் ஏகாதிபத்திய நிர்வாகத்திற்கு ஜமீந்தார்கள் முக்கிய வருவாய் வசூலிப்பவர்களாக இருந்தனர். ஜமீந்தாரி முறை 1951இல் ஒழிக்கப்பட்டது. வங்காளத்தின் ஜமீந்தார்கள் பொதுவாக குறைவான சக்திவாய்ந்தவர்களாக இருந்தனர். மேலும் மற்றும் பீகாரின் ஜமீந்தார்களை விட குறைவான சுயாட்சியையேக் கொண்டிருந்தனர். ஆனாலும் இவர்கள் தங்கள் சொந்த நிலையான படைகளை பராமரிக்க முடிந்தது.[1]
நிரந்தரத் தீர்வு மூலம் பிரித்தானிய காலனித்துவத்திற்கு முந்தைய ஜமீந்தாரி முறையை நிலைநிறுத்தினர். குத்தகைதாரர்களிடமிருந்து வாடகை வசூலிப்பதன் மூலம் வங்காளத்தின் பெரும்பாலான கிராமங்களில் ஜமீந்தார்கள் ஆதிக்கம் செலுத்தினர்.[2] ஜமீந்தாரி அமைப்பு ஐரோப்பிய அடிமை முறைமையைப் பிரதிபலித்தது.[3] வங்காள ஜமீந்தார்கள் பெரும்பாலும் ‘மகாராஜா’, ‘நவாப்’ மற்றும் கான் பகதூர் போன்ற பட்டங்களுடன் அங்கீகரிக்கப்பட்டனர். ஆனால் இவர்கள் ஒருபோதும் சமஸ்தானங்களை ஆட்சி செய்யவில்லை. பிரித்தானிய இந்தியாவில் வங்காளமே அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்க மாகாணமாக இருந்ததால், பிரித்தானிய இந்தியாவின் அரசியல் ரீதியாக மிகவும் செல்வாக்கு மிக்க நிலப்பிரபுக்களாக வங்காள ஜமீந்தார்கள் இருந்தனர்.
வரலாறு.
தொகு14 நூற்றாண்டில் வங்காளத்தை ஆண்ட இந்து ராஜா கணேசன் இலியாசு சாகி வம்சத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி வங்காளத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றி தனது மகனை அரியணையில் அமர்த்தியிருந்தார். அமெரிக்க வரலாற்றாசிரியர் இரிச்சர்ட் ஈடன் தான் எழுதிய தி ரைஸ் ஆஃப் இஸ்லாம் அண்ட் தி பெங்கால் ஃபிரான்டியர் என்ற நூலில், கான் சகான் அலி பேகார்காட்டின் ஆரம்பகால ஜமீந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். 1870 ஆரம்பத்தில் கான் சகான் அலி இப்பகுதியில் குடியேறினார், "அந்த நேரத்தில் கழிவுகளாகவும் , காடுகளாகவும் இருந்த சுந்தரவனக்காடுகளில் உள்ள நிலங்களை மீட்டெடுத்தார். அவர் கௌர் மன்னரிடமிருந்து இந்த நிலங்களின் சாகிர் அதிகாரத்தைப் பெற்றிருக்கலாம்..[4]
16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடையில், கிழக்கு வங்காளத்தின் பதி பிராந்தியத்தில் பன்னிரண்டு ஜமீந்தார் குடும்பங்களின் கூட்டமைப்பு இருந்தது. அவர்களில் பன்னிரண்டு முஸ்லிம் மற்றும் இந்து ஜமீந்தார் குடும்பங்களும் அடங்குவர். இவர்கள் பரோ-புயான் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரும், சோனார்கானின் ஜமீந்தாருமான[5][6] ஈசா கானின் தலைமையில் இருந்தனர். முகலாய படையெடுப்புகளால் சுல்தானகம் சிதைந்தபோது, இந்த பன்னிரண்டு குடும்பங்கள் கிழக்கு வங்காளத்தின் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டன. இவர்கள் 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை முகலாய விரிவாக்கத்தை எதிர்த்தனர்.
1582 ஆம் ஆண்டின் பேரரசர் அக்பர் தனது நில ஒழுங்குமுறை முறையை வங்காளத்தில் செயல்படுத்த முடியவில்லை.[7][8] மாறாக, முகலாயர்கள் விவசாய நிலங்கள், மதம் மற்றும் நிர்வாகத்தை விரிவுபடுத்த ஜமீந்தார்களை நம்பியிருந்தனர். வரி வசூலிக்கும் பொறுப்பு ஜமீந்தார்களுக்கு இருந்தது. ஜமீந்தார்கள் காவல், நீதித்துறை மற்றும் நிர்வாக செயல்பாடுகளையும் கொண்டிருந்தனர். வங்காளத்தில் முகலாய அரசாங்கத்துடன் ஜமீந்தார்கள் ஒருங்கிணைந்து பணியாற்றினர். இவர்கள் சாகிர்தார்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இந்தியாவில் கம்பெனி ஆட்சியின் கீழ், 1793-இல் வங்காள ஆளுநர் காரன்வாலிஸ் தயாரித்த சட்டத்தொகுப்பின்படி நிரந்தரத் தீர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. காலனித்துவ அரசாங்கத்தின் சார்பாக வரி வசூலிக்கும் பொறுப்பு ஜமீந்தார்களுக்கு வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஜமீந்தாரி அமைப்பு மேலும் வலுவடைந்தது. 1950 ஆம் ஆண்டில், கிழக்கு வங்காள சட்டமன்றம் 1950 ஆம் ஆண்டின் கிழக்கு வங்காள மாநில கையகப்படுத்தல் மற்றும் குத்தகைதாரர் சட்டத்தை இயற்றியது. இது நில சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக ஜமீந்தாரி முறையை ரத்து செய்தது. இறுதியாக மேற்கு வங்காளத்தில், 1951 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் இயற்றப்பட்ட கூட்டாட்சி சட்டங்களின் கீழ் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது.
அரசியல்
தொகுவங்காள ஜமீந்தார்கள் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் அகில இந்திய முசுலிம் லீக் ஆகிய இரண்டின் உருவாக்கம் மற்றும் அதன் தலைமைத்துவத்தில் ஈடுபட்டிருந்தனர். பல ஜமீந்தார் குடும்பங்கள் முன்னணி அரசியல்வாதிகளையும் வங்காள சட்டமன்ற உறுப்பினர்களையும் உருவாக்கின. வங்காள மாகாண முஸ்லிம் லீக் மற்றும் அனைத்து வங்காள குத்தகைதாரர்கள் சங்கத்தின் எழுச்சிக்கு வங்காள இந்து ஜமீந்தார்கள் மீதான எதிர்ப்பு ஒரு முக்கிய காரணியாக இருந்தது.[9] குத்தகைதாரர்களுக்கான கடன் நிவாரணம் பிரதமர் ஏ. கே. பசுலுல் ஹக் அரசாங்கத்தால் பின்பற்றப்பட்டது. 1937 ஆம் ஆண்டில் ஹக்கின் முதல் அமைச்சரவையில் சிறிசு சந்திர நந்தி, சர் கவாஜா நசிமுத்தீன், நவாப் கவாஜா அபீபுல்லா மற்றும் நவாப் முஷாரஃப் உசேன் உள்ளிட்ட பல வங்காள ஜமீந்தார்கள் இருந்தனர்.[10]
வங்காளத்தின் ஜமீந்தார்கள் கலைகளின் சிறந்த புரவலர்களாக இருந்தனர். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பல நூலகங்கள் ஜமீந்தார்களால் நிறுவப்பட்டன. வங்காள நூலகச் சங்கம் 1925 இல் உருவாக்கப்பட்டது.[11] ஜமீந்தார்கள் வரேந்திரா ஆராய்ச்சி அருங்காட்சியகம் மற்றும் டாக்கா அருங்காட்சியகங்கள் போன்ற அருங்காட்சியகங்களை நிறுவினர் (இது பின்னர் வங்காளதேச தேசிய அருங்காட்சியகமாக மாறியது). இவர்கள் அகன்சுல்லா பொறியியல் பள்ளி போன்ற பல கல்வி நிறுவனங்களையும் நிறுவினர். தாகூர் குடும்பம் இந்து மக்களிடையே வங்காள மறுமலர்ச்சியின் முன்னோடிகளாக மாறியது. மீர் மொசாரப் உசைன், பேகம் ரோக்கியா மற்றும் மைக்கேல் மதுசூதன் தத் போன்ற எழுத்தாளர்கள் ஜமீந்தார் தோட்டங்களில் பிறந்து வளர்ந்தவர்கள். ஜமீந்தார்கள் இந்தோ சரசனிக் பாணியில் தங்கள் மாளிகைகளைக் கட்டிக் கொண்டனர்.
செல்வம்
தொகுஆங்கிலேயர்களின் கீழ், ஜமீந்தார்கள் மிகவும் செல்வந்தர்களாக இருந்தனர்.[12] நதியா இராச்சியத்தின் பிராமணக் குடும்பம் போன்ற சில குடும்பங்கள் வங்காளத்தின் மிகவும் செல்வாக்குமிக்க ஜமீந்தார்களில் ஒருவராக இருந்தனர். இராஜ்சாகி தோட்டத்தின் இந்து பிராமண ஜமீந்தார்கள் 13,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய பிரதேசங்களை தங்களின் கீழ் வைத்திருந்தனர். வர்தமான் இராச்சியக் குடும்பம் 13,000 சதுர கிமீ பரப்பளவு நிலங்களைக் கொண்டிருந்தது. பாவல் இராச்சிய தோட்டத்தின் பிராமண ஜமீந்தார்கள் 1500 சதுர கிலோமீட்டர் நிலங்களைக் கொண்டிருந்தனர். முஸ்லிம் சௌத்ரி மொய்சுதீன் பிஷ்வாஷ் குடும்பத் தின் தோட்டம் கிட்டத்தட்ட 4000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருந்தது .1934 ஆம் ஆண்டில், முஸ்ஸ்லீம் டாக்கா நவாப் குடும்பம் வங்காளம் மற்றும் அசாமின் பல்வேறு மாவட்டங்களிலும், கல்கத்தா மற்றும் ஷில்லாங் நகரங்களிலும் கிட்டத்தட்ட 12 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு தோட்டத்தை கொண்டிருந்தது. அவர்கள் ஆண்டுதோறும் 120,000 பவுண்டுகள் வாடகை சம்பாதித்தனர். அதன் செல்வம், சமூக அந்தஸ்து மற்றும் பிரிட்டிஷ் அரசுடனான நெருங்கிய உறவு ஆகியவற்றால், டாக்கா நவாப்பின் குடும்பம் வங்காளத்தில் மிகவும் சக்திவாய்ந்த முஸ்லிம் குடும்பமாக இருந்தது.[13] டாக்கா நவாப் குடும்பமும் ஒரு பெரிய வைரத்தை வைத்திருந்தது. அது இப்போது சோனாலி வங்கியின் பெட்டகத்தில் பாதுகாக்கப்படுகிறது.[14]
மேலும் காண்க
தொகுநூலியல்
தொகு- Chowdhury, S. R. Kumar; P. K., Singh; Ismail, M. Ali (2012). Blood Dynasties: Zemindaris of Bengal - A Chronicle of Bengal's Ruling families (Paperback). Dictus: Politics and Democracy series. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783847385080. பார்க்கப்பட்ட நாள் 20 March 2014.
மேற்கோள்கள்
தொகு- ↑ Kumkum Chatterjee (1996). Merchants, Politics, and Society in Early Modern India: Bihar, 1733-1820. BRILL. pp. 31–32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-10303-1.
- ↑ Markovits, Claude, ed. (2002). A History of Modern India, 1480–1950. London: Anthem Press. p. 301. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84331-004-4.
- ↑ U. A. B. Razia Akter Banu (1992). Islam in Bangladesh. BRILL. pp. 21–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-09497-0.
- ↑ Eaton, Richard Maxwell (1993). The Rise of Islam and the Bengal Frontier, 1204-1760. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-20507-9.
- ↑ Akbarnama, Volume III, Page 647
- ↑ Chowdhury, Kamal (2005). Banglar Baro Bhuiyan and Maharaj Pratapaditya. p. 163.
- ↑ "Zamindar". Banglapedia.
- ↑ The extension of the Khalsa, however, was effective in a limited area. Abul Fazl says that the provinces of Bengal, Bihar and Gujarat were from foresight and appreciation, left as they were. Singh, Vijender (March 2016). "Akbar’s Land Revenue System". International Journal of Engineering, Management, Humanities and Social Sciences Paradigm 19 (1). http://www.ijemhs.com/Published%20Paper/Volume%2019/Issue%2001/IJES%2003/IJEMHSMarch2016_8_15_VijenderS.pdf.
- ↑ "Zamindar". Banglapedia."Zamindar". Banglapedia.
- ↑ "Huq, AK Fazlul". Banglapedia.
- ↑ "Library". Banglapedia.
- ↑ "Raj Darbhanga - home of Indias wealthiest Zamindars (Column)". Outlook India. பார்க்கப்பட்ட நாள் 8 October 2021.
- ↑ Chatterji, Joya (2002). Bengal Divided: Hindu Communalism and Partition. Cambridge University Press. p. 80.
- ↑ "Daria-i-Noor". Banglapedia.
மேலும் வாசிக்க
தொகு- The Bengal Zamindars at Indian Economic and Social History Review
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Bengali zamindars தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Wikisource: Text of Allahabad Treaty
- Zamindari in Bengal by Henry Soszynski