வருண் காந்தி

இந்திய அரசியல்வாதி

வருண் பெரோஸ் காந்தி (Varun Feroze Gandhi) அல்லது வருண் காந்தி (பிறப்பு 13 மார்ச் 1980) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் பிலிபித் தொகுதியிலிருந்து மக்களவைக்கு மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கபட்ட உறுப்பினராக உள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரான இவர், 2012 மார்ச்சில் ராஜ்நாத் சிங் அணியில் பொதுச் செயலாளராக சேர்க்கப்பட்டார்.[1] இவர் நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்.

வருண் சஞ்சய் காந்தி
வருண் காந்தி
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019 (2019-05-23)
முன்னையவர்மேனகா காந்தி
தொகுதிபிலிபித்
பதவியில்
16 மே 2014 (2014-05-16) – 23 மே 2019 (2019-05-23)
முன்னையவர்சஞ்சய் சிங்
பின்னவர்மேனகா காந்தி
தொகுதிசுல்தான்பூர்
பதவியில்
2009 (2009)–2014 (2014)
முன்னையவர்மேனகா காந்தி
பின்னவர்மேனகா காந்தி
தொகுதிபிலிபித்
பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு
பதவியில்
19 சூன் 2013 (2013-06-19) – 16 செப்டம்பர் 2014 (2014-09-16)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பெரோஸ் வருண் காந்தி

13 மார்ச்சு 1980 (1980-03-13) (அகவை 44)
புது தில்லி, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிள்ளைகள்அனுசுயா
பெற்றோர்
உறவினர்பார்க்க நேரு-காந்தி குடும்பம்
முன்னாள் கல்லூரிஇலண்டன் பல்கலைக்கழகம்
ஆதாரங்கள் [1]

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்

தொகு

பெரோஸ் வருண் காந்தி [2][3] தில்லியில் 13 மார்ச் 1980 அன்று சஞ்சய் காந்தி மற்றும் மேனகா காந்திக்கு பிறந்தார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேரனும் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் கொள்ளுப் பேரனும் ஆவார். 1980 பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சியைப் பிடித்தவுடன் வருண் பிறந்தார். ஜூன் 1980 இல் வருணுக்கு மூன்று மாத குழந்தையாக இருந்தபோது இவரது தந்தை சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்தார். வருணுக்கு நான்கு வயதாக இருந்தபோது 1984 அக்டோபர் 31 அன்று இந்திரா படுகொலை செய்யப்பட்டார். வருண் இரிஷி வேலி பள்ளியிலும், புது தில்லியில் உள்ள பிரித்தானிய பள்ளியிலும் பயின்றார். அங்கு இவர் மாணவர் அமைப்பில் இருந்தார்.[4] இலண்டன் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டம் பெற்றவர்.

ஆரம்பகால அரசியல் வாழ்க்கை

தொகு

வருண் காந்தியை முதன்முதலில் பிலிபித் தொகுதியில் இவரது தாயார் 1999 தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிமுகப்படுத்தினார்.[5] முன்னதாக மேனகா தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தார். ஆனால் அவரும் வருணும் முறைப்படி [6] 2004 இல் பாஜகவில் இணைந்தனர். வருண் காந்தி 2004 தேர்தலில் 40 தொகுதிகளுக்கு மேல் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்.[7]

 
2004 இல் புது தில்லியில் இந்தியாவின் 10வது பிரதமர் அடல் பிகாரி வாச்பாயுடனான ஒரு சந்த்திப்பில் மேனகா காந்தியும், வருண் காந்தியும்.

மக்களவை உறுப்பினராக

தொகு

2009 பொதுத் தேர்தலில் வருண் காந்தியை இவரது தாயார் மேனகா காந்திக்குப் பதிலாக பிலிபித் தொகுதியில் வேட்பாளராக நிறுத்த பாஜக முடிவு செய்தது.[8] இவர் 419,539 வாக்குகள் பெற்று தொகுதியை வென்றார். மேலும், 281,501 வாக்குகள் வித்தியாசத்தில் தனக்கு எதிராக போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளரான வி. எம். சிங்கை தோற்கடித்தார்.[9][10][11][12][13] வி. எம். சிங் உட்பட போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் வைப்புத்தொகையை இழந்தனர்.[14] பிலிபித்தின் தல்சந்த் மொகல்லா பகுதியில் நடந்த கூட்டத்தில், வருண் காந்தி மீது முஸ்லிம்களைப் பற்றி ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், இந்த வழக்கில் இவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.[15][16] 5 மார்ச் 2013 அன்று, 2009 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது இவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது வெறுப்புப் பேச்சு வழக்கில் இருந்தும் பிலிபித் நீதிமன்றம் விடுவித்தது.[17]

மே 2014 இல், லோக்சபா 2014 தேர்தலில் சுல்தான்பூரில் போட்டியிட்டு அமிதா சிங்கை தோற்கடித்தார்.[18]

இவர் 2019 பொதுத் தேர்தலில் பிலிபித் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 250,000 வாக்குகள் பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக மக்களவை உறுப்பினர் ஆனார்.[19]

ஆகஸ்ட் 2011 இல், வருண் காந்தி ஜன் லோக்பால் மசோதாவை வலுவாக வலியுறுத்தினார். அண்ணா அசாரேவிற்கு அரசு அனுமதி மறுத்ததை அடுத்து, உண்ணாவிரதத்தை நடத்துவதற்காக, அவருக்கு வருண் காந்தி தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை வழங்கினார்.[20] அசாரே சிறையில் அடைக்கப்பட்டபோது, ஜன்லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முன்வந்தார்.[21] ஆகஸ்ட் 24 அன்று, அன்னா அசாரேவுக்கு ஆதரவளிக்க புதுதில்லி, ராம்லீலா மைதானத்திற்குச் சென்றார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வெளிப்படையாக ஆதரித்த முதல் அரசியல்வாதி ஆனார்.[22]

கட்டுரையாளர்

தொகு

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், தி எகனாமிக் டைம்ஸ் எகனாமிக் டைம்ஸ், இந்தியன் எக்சுபிரசு, தி ஏசியன் ஏஜ், தி இந்து, அவுட்லுக் போன்ற இந்தியாவில் உள்ள பல தேசிய நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு வருண் காந்தி கட்டுரைகள் மற்றும் கொள்கை ஆவணங்களை எழுதுகிறார்.

எழுத்துகள்

தொகு

வருண் தனது முதல் கவிதைத் தொகுதியான தி அதர்னஸ் ஆஃப் செல்ஃப் என்ற தலைப்பில் 20 வயதில், 2000 இல் எழுதினார். இவரது இரண்டாவது கவிதைத் தொகுதி, ஸ்டில்னஸ் என்ற தலைப்பில் ஏப்ரல் 2015 இல் ஹார்பர்காலின்ஸ் என்ற பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. புத்தகம் வெளியான முதல் இரண்டு நாட்களில் 10,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி, அதிகம் விற்பனையாகும் புனைகதை அல்லாத புத்தகமாக மாறியது.[23]

2018 ஆம் ஆண்டில், இவர் இந்திய கிராமப்புற பொருளாதாரம் குறித்த தனது புத்தகத்தை தி ரூரல் மேனிஃபெஸ்டோ: ரிலீசிங் இன்டியாஸ் பியூட்டர் த்ரோ ஹெர் வில்லேஜ் என்ற தலைப்பில் வெளியிட்டார். புத்தகம் வெளியான பத்து நாட்களில் 30,000 பிரதிகளுக்கு மேல் விற்றது.[24]

இவரது நான்காவது புத்தகமான, தி இந்தியன் மெட்ரோபோலிஸ்: டிகன்ஸ்ட்ரக்டிங் இந்தியாஸ் அர்பன் ஸ்பேசஸ் என்பது பிப்ரவரி 2023 இல் வெளியிடப்பட்டது.

இதனையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  • Profile at Lok Sabha, Parliament of India
  1. "Modi Enters Parliamentary Board, Chauhan Ignored". 31 March 2013. பார்க்கப்பட்ட நாள் 31 March 2013.
  2. "Feroze Varun Gandhi". National Portal of India. பார்க்கப்பட்ட நாள் 21 April 2019.
  3. "Archived copy" (PDF). பார்க்கப்பட்ட நாள் 22 May 2019.
  4. "Strange Gandhi". Hindustan Times. http://www.hindustantimes.com/india/strange-gandhi/story-s5VHT0PRpehtMbuUWxkQVJ.html. 
  5. "Quote of the week". India Today. 1999-09-13. http://indiatoday.intoday.in/story/i-have-come-to-you-to-seek-justice-atal-bihari-vajpayee-at-an-election-rally/1/255449.html. 
  6. "Maneka, Varun Gandhi join BJP". 2004-02-16. http://www.rediff.com/news/2004/feb/16gandhi.htm. 
  7. "The charm troopers". India Today. 2004-05-03. http://indiatoday.intoday.in/story/rahul-priyanka-varun-campaign-during-elections-2004/1/196148.html. 
  8. Bharatiya Janata Party – The Party with a Difference பரணிடப்பட்டது 13 சூன் 2011 at the வந்தவழி இயந்திரம். BJP. Retrieved on 9 August 2011.
  9. "Varun Gandhi wins from Pilibhit". The Indian Express.
  10. "Varun Gandhi received large chank of votes in 2009 election". தைனிக் ஜாக்ரண்.
  11. "Varun Gandhi defeated his opponents in 2009 election". தைனிக் ஜாக்ரண்.
  12. "ECI declares Varun Gandhi as Winner from Pilibhit" (PDF). Election Commission of India.
  13. "Pilibhit Message of 2009". Khaleej Times.
  14. "1,368 candidates lost security deposits in UP". 24 May 2009. http://articles.timesofindia.indiatimes.com/2009-05-24/india/28182006_1_security-deposits-bsp-nominee-congress-leader. 
  15. "Varun Gandhi's hate-Muslim speech makes his BJP squirm". Indian Express. 17 March 2009.
  16. "Court acquits Varun Gandhi in 2009 hate speech case". 2013-02-27. http://in.news.yahoo.com/court-acquits-varun-gandhi-in-one-hate-speech-case-114032656.html. 
  17. "Varun Gandhi Acquitted in Second Hate Speech Case". 2013-03-05.
  18. "Election Results 2014: BJP Leader Varun Gandhi Wins From Sultanpur".
  19. "Pilibhit Lok Sabha results 2019: BJP's Varun Gandhi wins by margin of over 2.5 lakh votes". https://www.indiatoday.in/elections/lok-sabha-2019/story/pilibhit-lok-sabha-results-2019-bjp-varun-gandhi-wins-with-over-7-lakh-votes-1533168-2019-05-23. 
  20. "Varun offers house to Anna for protests". 7 August 2011.
  21. "Varun jumps in, plans to table Anna's bill". 17 August 2011.
  22. "Varun Gandhi visits Ramlila Ground to support Anna Hazare". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2011-08-24. http://articles.timesofindia.indiatimes.com/2011-08-24/india/29921998_1_varun-gandhi-anna-hazare-ramlila-ground. 
  23. "Dairy, Mighty Pen".
  24. "Swamy declares Varun the 'Pandit'". Gossip Guru. பார்க்கப்பட்ட நாள் 20 December 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வருண்_காந்தி&oldid=4088323" இலிருந்து மீள்விக்கப்பட்டது