வலைவாசல்:இந்து தொன்மவியல்/நூல்கள்

இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் இந்து தொன்மவியல் வலைவாசலின் ஒரு பிரிவான தொன்மவியல் நூல்கள் என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.

தாங்களும் இந்து தொன்மவியல் வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான நூல்கள் குறித்து பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)

காப்பகம்

தொகு

வலைவாசல்:இந்து தொன்மவியல்/நூல்கள்/1

வேதங்கள் என்பவை பொதுவாக இன்று இந்து சமயம் என்று அறியப்படும் சமயத்திலுள்ள அடிப்படையான நூல்களில் சிலவாகும். காலத்தால் முற்பட்டதும் ஆகும். வேதம் என்னும் சொல் பிற மதத்தாரும் தங்கள் சமயத்தின் முதன்மையான நூல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். இந்து மதத்தில், வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். இவை தமிழில் நான்மறை என்றும் கூறப்படும். என்றாலும் தமிழில் நான்மறை என்பன வேறானவை என்போரும் உள்ளனர் (இவை அறம், பொருள், இன்பம், வீடு என்பர்). சமசுக்கிருத வேதங்கள்: 1) ரிக் வேதம் 2) யசுர் வேதம் 3) சாம வேதம் 4) அதர்வண வேதம் என்பனவாகும்.

வலைவாசல்:இந்து தொன்மவியல்/நூல்கள்/2

உபநிடதங்கள்அல்லது உபநிஷத்துக்கள் (Upanaishads) பண்டைய இந்திய தத்துவ இலக்கியமாகும். இந்து சமயத்தினரின் ஆதார நூல்களின் கீழ் இது வகைப்படுத்தப்படுகிறது. வேதங்களில் இவை இறுதியாக வந்தவையாகும் எனவே இவை வேதாந்தம் எனவும் கூறப்படுகின்றன.

சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இவ்விலக்கியத்தில் பெரும்பாலும் யோகம், தத்துவம் போன்றவற்றைப் பற்றியே விவாதிக்கப் படுகிறது. பெரும்பாலும் குரு - சீடன் இடையே நடைபெறும் உரையாடலாக இவை அமைந்துள்ளன. இந்து சமய நூல்களில் இவை மிக உன்னதமான மதிப்பு பெற்றவை.

வலைவாசல்:இந்து தொன்மவியல்/நூல்கள்/3

ஆகமங்கள் என்பது இந்து சமயத்தின் முப்பெரும் பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம் ஆகிய சமயங்களின் மதக்கோட்பாடு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் ஆகியவை அடங்கிய நூல் வகை ஆகும். இவை பொதுவாகத் தென்னிந்தியாவிலேயே புழக்கத்தில் உள்ளன. எனினும் இவை சமசுக்கிருதத்திலேயே எழுதப்பட்டு உள்ளன. இவை வேதங்களை அடிப்படையாகக் கொள்ளாதவை. எனினும் இவை வேதங்களுக்கு மாறானவையும் அல்ல. ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்குவகையான வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறுகின்றன.

வலைவாசல்:இந்து தொன்மவியல்/நூல்கள்/4

இதிகாசம் எனப்படுவது கடவுள், கடவுள் அவதாரம் அல்லது பெரும் வீரர்கள் நிகழ்த்திய அரும்பெரும் வீரச் செயல்களையும், நீதிநெறிகளையும் விவரிக்கும் புராண வரலாறாகும். இதி-ஹ-ஆஸ என்பதற்கு இப்படி உண்மையில் இருந்தது என்று அர்த்தமாகும். இந்தியாவைப் பொறுத்தளவில் இராமாயணமும், மகாபாரதமும் இதிகாசங்கள் என்றழைக்கப்படுகின்றன.

நில உடமைச் சமுதாயம் ஒரு காலகட்டம் வரை இருந்து அடுத்த கட்டத்திற்கு மாறி செல்லும்போது அதன் பரிணாமங்கள், நிகழ்வுகள், மாறுதல்கள்,அனைத்தும் வாய்மொழியாக ஒருகாலகட்டம் வரையிலும் குருவின் மூலமாக சீடர்களுக்கு சொல்லி வைக்கப்பட்டு, செவி வழிச் செய்தியாக சில காலம் வரையிலும் இருந்து சமுதாய பரிணாம வளர்ச்சியை தனதாக்கிக்கொண்டு பல ஆயிரம் ஆண்டுகள் கால ஓட்டத்தையும், அதன் சமூக நியதிகளை இதிலிருந்து எடுத்து மேற்கோள்கள் காட்டிடவும், நீதி சொல்லவும், சமுதாய சட்டங்களாகவும் காலத்தை கடந்தும், தெளிவாகவும், எளிமையாகவும், சிக்கலான, நெருடலான, மனிதகுலச் சிந்தனைகளை உள்வாங்கி, உயர்ந்து நிற்கிற வரலாற்றுப் பெட்டகமே இதிகாசமாகும்.

வலைவாசல்:இந்து தொன்மவியல்/நூல்கள்/5 வலைவாசல்:இந்து தொன்மவியல்/நூல்கள்/5 வலைவாசல்:இந்து தொன்மவியல்/நூல்கள்/6 வலைவாசல்:இந்து தொன்மவியல்/நூல்கள்/6 வலைவாசல்:இந்து தொன்மவியல்/நூல்கள்/7 வலைவாசல்:இந்து தொன்மவியல்/நூல்கள்/7 வலைவாசல்:இந்து தொன்மவியல்/நூல்கள்/8 வலைவாசல்:இந்து தொன்மவியல்/நூல்கள்/8 வலைவாசல்:இந்து தொன்மவியல்/நூல்கள்/9 வலைவாசல்:இந்து தொன்மவியல்/நூல்கள்/9 வலைவாசல்:இந்து தொன்மவியல்/நூல்கள்/10 வலைவாசல்:இந்து தொன்மவியல்/நூல்கள்/10

பரிந்துரைகள்

தொகு

சில மேம்பாடுகளைச் செய்தால் கீழ்வரும் கட்டுரைகளை வலைவாசலில் இடம் பெறச் செய்யலாம்.

மகாபுராணங்கள் -

உப புராணங்கள் -

உபநிடதம்
[[Image:{{{image}}}|100px|{{{caption}}}]]

{{{text}}}

[[{{{link}}}|மேலும்...]]