தொன்மவியல் நூல்கள்
|
ஆகமங்கள் என்பது இந்து சமயத்தின் முப்பெரும் பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம் ஆகிய சமயங்களின் மதக்கோட்பாடு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் ஆகியவை அடங்கிய நூல் வகை ஆகும். இவை பொதுவாகத் தென்னிந்தியாவிலேயே புழக்கத்தில் உள்ளன. எனினும் இவை சமசுக்கிருதத்திலேயே எழுதப்பட்டு உள்ளன. இவை வேதங்களை அடிப்படையாகக் கொள்ளாதவை. எனினும் இவை வேதங்களுக்கு மாறானவையும் அல்ல. ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்குவகையான வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறுகின்றன.
|
|
|
தொன்வியல் நூலாசிரியர்கள்
|
அதர்வண மகரிஷி வேத கால மகாரிஷிகளுள் ஒருவர். இவர் அங்கரிச மகரிஷியுடன் இணைந்து அதர்வண வேதத்தை உருவாகியதாக கூறப்படுகிறது. யாகம் வளர்க்கும் முறையை இவரே உருவாகியதாக புராணங்கள் கூறுகின்றன. இவரது மனைவியின் பெயர் சிட்டி. மகரிஷி தாதிசி இவர்களின் புதல்வரே. பிரம்மா தேவரின் மானசீகப் புத்திரறேன்றும் இவரே முதல் புதல்வர் என்றும் கூறப்படுகிறது.
|
|
அரக்கர்கள்
|
குரு சுக்கிராச்சாரியார் தேவர்களின் ராஜகுரு ஆவார்.
|
|
|
தேவர்கள்
|
குரு பிரகஸ்பதி என்பவர் தேவர்களின் குருவும், நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். இவர் சப்தரிசிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் மகனாவார். இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு. இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்களையும் செய்து தேவர்களின் குருவாக மாறினார். அத்துடன் திட்டையில் கோயில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரைக் வணங்கி நவகிரகங்களில் வியாழனாக அந்தஸ்தினைப் பெற்றார். அதனால் வியாழன் கிரகம் ராஜகிரகம் என்று அழைக்கப்படுகிறது.
இவர் இடம் பெயர்வதே குரு பெயர்ச்சி என்று வழங்கப்படுகிறது. இவருக்கு அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், குரு, சிகிண்டிசன், சீவன், சுரகுரு, தாராபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிரகஸ்பதி, பீதகன், பொன்னன், மறையோன்,,வேதன், வேந்தன் என பதினெட்டு பெயர்கள் உள்ளன. இவரின் சொந்த வீடுகள் தனுசு மற்றும் மீனம்.ஒளி படைத்த ஞானிககளையும், மேதைகளையும் உருவாக்குபவர் இவர்.
|
|
சிறப்புப் படம்
|
|
சிவபெருமானை பிரிந்த ஆதிசக்தி தாட்சாயிணியாக பிறந்து சிவபெருமானை மணம் முடித்தார். ஆனால் தட்சனின் யாகத்தில் சிவபெருமானை அவமானம் செய்தமையால் யாகத்தில் விழுந்து உயிர் நீத்தார். அதன் பிறகு பர்வராஜன் குமாரி பார்வதி தேவியாக பிறந்து சிவபெருமானை மணமுடிக்க எண்ணினார். ஆனால் தாட்சாயிணியை பிரிந்த சோகத்தில் சிவபெருமான் யோகத்தில் ஆழ்ந்திருந்தார். எனவே அவரின் யோகத்தினை கலைக்கும் பொருட்டு மன்மதன் தன்னுடைய மலரம்பினை எய்யும் காட்சி இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.
படம்:Redtigerxyz
தொகுப்பு
|
|
|
|
|
உங்களுக்குத் தெரியுமா?
|
- சிவபெருமான் சதாசிவரூபத்தில் சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் ஆகிய ஐந்து முகங்களைக் கொண்டு படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து தொழில்களை செய்கிறார்.
- ஆதிசக்தியின் அவதாரமான தாட்சாயிணி தேவியில் உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் சக்தி பீடங்கள் என்று வழங்கப்படுகின்றன.
- சதுர் யுகங்களில் இறுதியான கலியுகம் முடிவில் திருமால் தசாவதாரங்களில் இறுதியான கல்கி அவதாரம் எடுக்கிறார்.
- பிரம்மதேவர் தனது படைப்பு தொழிலை செய்ய உருவாக்கிய குமாரர்கள் பிரஜாபதிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.
|
|
தொடர்பானவை
|
இந்து தொன்மவியல்
திரட்டு அண்டவியல் • பிரிவுகள் • வரலாறு • தொன்மவியல்
தத்துவம்: அத்வைதம் • ஆயுர்வேதம் • பக்தி • தர்மம் • விதி • மாயை • மீமாம்சை • வீடுபேறு • நியாயம் • பூசை • மறுபிறப்பு • சாங்க்யம் • பிறவிச்சுழற்சி • சைவம் •சாக்தம் • தந்திரம் • வைஷேசிகம் • வைணவம் • வேதாந்தம் • தாவர உணவு முறை • யோகா • யுகம்
இந்து நூல்கள்: வேதம் (ரிக், யசுர், சாம, அதர்வண) • உபநிடதம் • புராணம் (மகா புராணங்கள், உப புராணங்கள்) • ஆகமம் (சைவ ஆகமங்கள்) • இதிகாசம் (இராமாயணம், மகாபாரதம்) •
மகாபுராணங்கள் - பிரம்ம புராணம், பத்ம புராணம், விட்ணு புராணம் சிவ புராணம் (அ) வாயு புராணம், லிங்க புராணம், கருட புராணம், நாரத புராணம், பாகவத புராணம், அக்னி புராணம், கந்த புராணம், பவிசிய புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், மார்க்கண்டேய புராணம், வாமன புராணம், வராக புராணம், மச்ச புராணம், கூர்ம புராணம், பிரம்மாண்ட புராணம்
உப புராணங்கள் - சூரிய புராணம், கணேச புராணம், காளிகா புராணம், கல்கி புராணம், சனத்குமார புராணம், நரசிங்க புராணம், துர்வாச புராணம், வசிட்ட புராணம், பார்க்கவ புராணம், கபில புராணம், பராசர புராணம், சாம்ப புராணம், நந்தி புராணம், பிருகத்தர்ம புராணம், பரான புராணம், பசுபதி புராணம், மானவ புராணம், முத்கலா புராணம்
பட்டியல்:
ரிக் வேதம் •
யசூர் வேதம் •
சாம வேதம் •
அதர்வண வேதம் •
தேவர்கள் •
அசுரர்கள் •
முனிவர்கள் •
புராண உயிரிணங்கள் •
நபர்கள் •
இடங்கள் •
ஆயுதங்கள் •
தொலைக்காட்சி தொடர் •
திரைப்படங்கள் •
மேடை நாடகங்கள் •
தொடர்புடையவை: ஜோதிடம் • இந்து நாட்காட்டி • வர்ணம் (இந்து மதம்) • நாடுவாரியாக • திருவிழாக்கள் • அருஞ்சொற்பொருள் பட்டியல் • சட்டம் • சாதுக்கள் மற்றும் குருக்கள் • மந்திரம் • மூர்த்தி • இசை • கோயில்கள் • ஞானம்
|
|
|