விக்கிப்பீடியா:உதகமண்டலம் எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் தமிழ்க்கணினி, விக்கிப்பீடியா பயிலரங்கம்

நோக்கம் தொகு

உதகமண்டலம் பகுதியைச்சார்ந்த பொது மக்களுக்கும், பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்தவும் தமிழ் விக்கிப்பீடியாவின் திட்டங்களில் அனைவரும் பங்கேற்கும் வகையில் எளிய செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும் என்பதையும் நோக்கங்களாகக் கொண்டு எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி தமிழகம் வலைதளத்துடன் இணைந்து தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கத்தினை நிகழ்த்த உள்ளது.

நிகழிடம் தொகு

எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரிக் கலையரங்கம்.

நாள், நேரம் தொகு

28.12.2013 அன்று 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை.

நிகழ்ச்சி நிரல் தொகு

வரவேற்புரை: இணைப் பேராசிரியர். பிரசில்லா, தமிழ்த்துறை. எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி.
பயிலரங்கத்தை தொடங்கி வைத்து வாழ்த்துரை: முதல்வர் முனைவர். செல்வநாயகி, முதல்வர், எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி.
சிறப்புரை: பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி, இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம், தமிழ்நாடு.
நிறைவுரையும் நன்றியுரை: திருமதி சுபத்திரா, தலைமை நிருவாக அலுவலர், எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி.

பயிலரங்கப்பொருண்மைகள் தொகு

இந்நிகழ்வில், தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் , தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் குறித்த நேரிடை செயல்முறைப்பயிற்சியை பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி அளிக்க உள்ளார்.

இந்நிகழ்வில் பங்கேற்க தொகு

இப்பயிலரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களின் பெயரை tparithi@gmail.com, precillamunnar@gmail.com என்னும் மின்னஞ்சல் அல்லது +91-9750933101, +91-9655502241 ஆகிய இரு தொடர்பு எண்களில் பதிவு செய்து, பயிலரங்கில் பங்கேற்கலாம். இப்பயிலரங்கு மகளிருக்கு பயிற்சி அளிப்பதை முதன்மை நோக்காகக் கொண்டிருப்பதால், பெயர்ப்பதிவு செய்பவர்களில் மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்பெறும்.