விக்கிப்பீடியா பேச்சு:குறுந்தட்டு திட்டம்/முதற்பக்கக் குறுந்தட்டு/கட்டுரைகள்
இந்திய தேசிய வரைபடம்
தொகு- இந்திய தேசிய வரைபடம் சர்ச்சைக்குள் செல்லாமல் இருக்க, பதிக்கவிருக்கும் தொகுப்பில் அப்படங்கள் இல்லாமல் செய்யலாமா? வேறு எதேனும் உத்தி பயன்படுத்த வேண்டுமா? ஸ்ரீகாந்த் 19:40, 31 திசம்பர் 2011 (UTC)
- இந்திய அரசு வெளியீட்டு வரைபடங்களை பயன்படுத்த இயலுமானால் அதுவே சிறந்தது. நடுநிலை பேண சில பகுதிகள் சர்ச்சைக்கு உட்பட்டன என்ற அடிக்குறிப்பை சிறு எழுத்துருவில் இடலாம். வரைபடத்தை மாற்ற இயலாது எனில் தவிர்ப்பதே நல்லது. அல்லது சர்ச்சைக்குட்படாத மாநிலப் படங்களை இணைக்கலாம்.--மணியன் 05:06, 1 சனவரி 2012 (UTC)
- தேர்வு செய்யப்பட்ட பதிப்பில் மட்டும் “officially approved" படமாக மாற்றலாம் / அல்லது படத்தை எடுத்து விடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 05:54, 1 சனவரி 2012 (UTC)
உரைதிருத்தப் பணிக்கான நெறிமுறைகள்
தொகுதிட்டப்பக்கத்தின் தொடக்கத்தில் உள்ள நெறிமுறைகளை இப்போதுதான் படித்தேன். இதற்கு முன்னர் நான் செய்த திருத்தங்களில் ஏதும் சிறிது 'பிறழ்வு' இருந்திருக்கக் கூடும். ஆனால், மொத்தத்தில் மாற்றங்கள் வளர்நோக்கிலேயே இருந்துள்ளன எனத் தெரிவித்துக் கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 17:43, 21 சனவரி 2012 (UTC)
- இதையே நானும் வழிமொழிகிறேன். உ.தி1 ஐ முதலில் முடிப்பது பிறகு அடுத்தவற்றைச் செய்வது என்று இருந்தேன். பிறகே நெறிமுறைகள் கண்டு தெளிந்தேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 18:48, 21 சனவரி 2012 (UTC)
இக் கட்டுரைகள் மீண்டும் திறக்கப்படுமா?
தொகுகட்டுரைகளைப் பூட்டுவது கடசிக் கட்டமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடு ஆகும். தேர்வு செய்யப்பட்ட பின்னர் இக் கட்டுரைகள் மீண்டும் திறக்கப்படுமா? ஆங்கில விக்கியில் இச் செயற்பாடு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது? --Natkeeran 17:13, 22 சனவரி 2012 (UTC)
- நாம் தான் பதிப்பெண்ணைக் குறித்தாயிற்றே! இனி பூட்டுவது அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 17:16, 22 சனவரி 2012 (UTC)
- நற்கீரன், திட்டக் கட்டுரைகளைப் பூட்டுவதில்லை. எப்போதும் அனைவரும் தொகுக்கும் நிலையிலேயே உள்ளன. குறுந்தட்டுக்குத் தேவையான பதிப்பின் எண் மட்டும் குறித்து வைத்துக் கொள்கிறோம். அந்தப் பதிப்பு குறுந்தட்டில் வெளியாகும். மற்றபடி கட்டுரைகளின் காப்பு நிலையில் எந்த மாற்றமும் இல்லை. முதல் வேலையில் இருந்து பதிப்பெண் பதிவாகும் இறுதிக் கட்டம் வரை பெரியளவு மாற்றம் செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் மட்டும் வைத்துள்ளேன். பெரிய அளவு விரிவாக்கம் நடந்தாலும் பரவாயில்லை, ஆனால் செய்பவரே விரிவாக்கத்துக்கான உரை திருத்ததை மேற்கொள்ள வேண்டும் இல்லையெனில் பதிப்பு தெரிவாகும் வரை பொறுத்திருந்து பின் விரிவாக்கலாம். ஆங்கில விக்கியில் v1.0 தேர்வு பொதுவாக நெடுநாட்கள் மாறாதிருக்கும் stable version தேர்ந்தெடுக்கிறார்கள். அங்கும் பூட்டுவதில்லை.
--சோடாபாட்டில்உரையாடுக 18:03, 22 சனவரி 2012 (UTC)
- விளக்கத்துக்கு நன்றி. --Natkeeran 22:03, 22 சனவரி 2012 (UTC)
கருத்துகளைச் சரிபார்த்தல்
தொகு"குறிப்புகள்" என்று திட்டப் பக்கத்தில் குறித்துள்ளவற்றுள், உரையைச் சரிபார்க்கும் அதே வேளை, அங்குள்ள கருத்துகள் சரியானவையா என்றும் சரிபார்ப்பது தேவை. எடுத்துக்காட்டாக, கப்ரேக்கர் கட்டுரையில் ஒரு சமன்பாடு தவறாக இருந்தது (சிறு பிழை எனினும் சமன்பாட்டில் பெரும் விளைவு இருக்கும்). கருத்துகளை மிக விரிவாகச் சரிபார்க்க நேரம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் கருத்துப்பிழைகள் இல்லாமல் இருப்பது முகனை (முக்கியம்) அல்லவா? சரியான சான்றுகோள்கள் உள்ளனவா (பெரும்பாலானவற்றுக்காவது) என்றும் சரிபார்க்க வேண்டும். படங்களுக்கு உரிமம் சரிபார்ப்பது போலவே இதுவும். எவ்வளவு செய்ய இயலுமோ தெரியாது, ஆனால் இந்தக் கண்ணோட்டமும் இருப்பது நல்லது என்று தோன்றுகின்றது. --செல்வா 18:49, 22 சனவரி 2012 (UTC)
கருத்துகளைச் சரிபார்த்தல் என்பதையும் ஒரு கூறாகக் "குறிப்புகளில்" வைத்து இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். மேலே உள்ள கருத்தை மீண்டும் வலியுறுத்துகின்றேன். பேச்சு:தத்தராய ராமச்சந்திர கப்ரேக்கர் என்னும் பக்கத்தில் முக்கியமான கருத்துப்பிழைகள் இருப்பதைச் சுட்டியிருக்கின்றேன் (அது பல காரணங்களால் நடந்திருக்கக்கூடும் (துணை செய்த நூல்களிலேயே கூட இருக்கலாம்). அருள்கூர்ந்து நான் கட்டுரை எழுதியவரைக் குறைகூறுவதாக நினைக்காதீர்கள். அக்கட்டுரையை எழுதியவருக்கு (பயனர் பார்வதி என்று நினைக்கின்றேன்) நாம் எல்லோரும் பெருநன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம். நான் என் தனிப்பட்ட நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நட்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன் (பயனர் பார்வதிக்கு)). நாம் மாணவர்களுக்கோ, பொதுமக்களுக்கோ கட்டுரைகளை வழங்கும்பொழுது, கூடியமட்டிலும் அதில் கருத்துப்பிழைகள் இல்லாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்வது நம் பொறுப்புகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என் விழைவு. இதனை நாம் கூட்டாகவே செய்யவும் இயலும். --செல்வா 12:27, 25 சனவரி 2012 (UTC)
- //கருத்துகளைச் சரிபார்த்தல் என்பதையும் ஒரு கூறாகக் "குறிப்புகளில்" வைத்து இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்// வழிமொழிகிறேன்.--இரவி 12:59, 25 சனவரி 2012 (UTC)
- நன்றி இரவி. இன்னும் சிலரும் கருத்துரைத்தால் மாற்றிவிடலாம் --செல்வா 14:45, 25 சனவரி 2012 (UTC)
- குறிப்புகளில் சேர்த்திருக்கிறேன். நிறைய வேலை தேவைப்படின் அக்கட்டுரைகளை பட்டியலில் இருந்து அடித்து விடலாம். தற்போது கப்ரேக்கர் கட்டுரையை அடித்து வைத்திருக்கிறேன். 200 கட்டுரைகளே நமது இலக்கு. இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டவை தவிர மேலும் 200 முதற்பக்க கட்டுரைகள் உள்ளன. எனவே இவற்றில் ஏதேனும் பிழை மலிந்திருந்தாலோ, குறுந்தட்டில் வெளியிடும் அளவுக்குத் தரமாக இல்லை என்று கருதினாலோ நீக்கிவிடலாம். அதற்கு பதில் வேறொன்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 15:07, 25 சனவரி 2012 (UTC)
- சோடாபாட்டில், கப்ரேக்கர் கட்டுரை நல்ல கட்டுரை, நீக்கிவிடாதீர்கள். அந்தச் சிறிய பத்தி ஒன்றில் இருந்த பிழைகளை நீக்கிவிட்டேன். ஒரே ஒரு வரிக்கான விளக்கம் மட்டுமே தரப்பட வேண்டும். அதனை நான் தர இயலும், ஆனால் அது கப்ரேக்கர் சொன்னவையா (அவர் கருத்தின் அடிப்படையா என அறியேன்). இக் கட்டுரையை விட்டுவிடாதீர்கள். நல்ல கட்டுரை; மாணவர்களுக்கு ஊக்கம் தரக்கூடிய கட்டுரை. அவர்கள் எளிதில் செய்து விளையாடவும் பயன்படும் கட்டுரை. உரை திருத்தம் கூட முடிந்துவிட்டது. எனவே விட வேண்டாம்.--செல்வா 20:02, 25 சனவரி 2012 (UTC)
- குறிப்புகளில் சேர்த்திருக்கிறேன். நிறைய வேலை தேவைப்படின் அக்கட்டுரைகளை பட்டியலில் இருந்து அடித்து விடலாம். தற்போது கப்ரேக்கர் கட்டுரையை அடித்து வைத்திருக்கிறேன். 200 கட்டுரைகளே நமது இலக்கு. இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டவை தவிர மேலும் 200 முதற்பக்க கட்டுரைகள் உள்ளன. எனவே இவற்றில் ஏதேனும் பிழை மலிந்திருந்தாலோ, குறுந்தட்டில் வெளியிடும் அளவுக்குத் தரமாக இல்லை என்று கருதினாலோ நீக்கிவிடலாம். அதற்கு பதில் வேறொன்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 15:07, 25 சனவரி 2012 (UTC)
- 1) அவ்வரிக்கான விளக்கத்தை சேர்த்து விடுங்கள் அல்லது 2)அவ்வரியை நீக்கி விடுங்கள். இரண்டில் ஏதேனும் ஒரு வழியைப் பின்பற்றி விட்டு அடித்ததை நீக்கி விடுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 20:17, 25 சனவரி 2012 (UTC)
- கப்ரேக்கர் கட்டுரையில் பிழை என்று சுட்டியதைச் ( கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில்) சரி செய்துள்ளேன். ஒரு முறை சரி பார்க்கவும்.--Parvathisri 09:34, 26 சனவரி 2012 (UTC)
குறிப்புகள் பற்றிய ஒரு கருத்து. மாற்றம் வேண்டல்
தொகுஇப்பொழுது ஆறாவது குறிப்பாக உள்ள கருத்து கீழ்க்காணுமாறு உள்ளது:
- கிரந்தமகற்றல்/கிரந்தம்சேர்த்தல் போன்ற சர்ச்சைக்குரிய இணக்க முடிவில்லாத வேலைகள் செய்ய வேண்டாம். குறுந்தட்டுத் திட்டத்தின் நோக்கம் வெற்றிகரமாக குறுந்தட்டை வெளியிடுவதே! கிரந்தம், எது தமிழ் எது தமிழன்று என்பது பற்றிய உரையாடல்களையும் சச்சரவுகளையும் இன்னொரு சுற்று நிகழ்த்துவதன்று. அதற்கான நேரமும் உழைப்பும் நம்மிடம் கிடையாது. நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை இங்கு புகுத்தாமல் இருக்க வேண்டும்.
இதே கருத்தைச் சற்று மாற்றி எழுதினால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன். என் கூற்று மேலே சொல்லியுள்ள கருத்தைப் பற்றியது அன்று (அது வேறு செய்தி), கூறும் பாங்கு சற்று வேறாக இருந்தால் நல்லதாக இருக்கும் என்று கருதுகின்றேன்.
- குறுந்தட்டு வெளியிடும் வரை, அதற்காகத் தேர்ந்தெடுத்தக் கட்டுரைகளில், கிரந்தம் சேர்த்தல்/கிரந்தமகற்றல், வட்டார மொழி வழக்கு வேறுபாடுகள் (எ.கா இலங்கை-தமிழ்நாடு) போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்னிறுத்தி உரையாடுவதைக் கூடியமட்டிலும் தவிர்க்கவேண்டும். அக்கருத்துரையாடலை நிகழ்த்தத் தேவைப்படும் நேரமும் உழைப்பும் இத்திட்டத்தை வெற்றியுடன் நிறைவேற்றும் பணியில் இருந்து நம்மை திசைதிருப்ப நேரிடலாம்.
--செல்வா 15:01, 23 சனவரி 2012 (UTC)
- மேலே பரிந்துரைத்துள்ள உரை நன்றாக உள்ளது. வழிமொழிகிறேன். -- சுந்தர் \பேச்சு 16:44, 23 சனவரி 2012 (UTC)
- விருப்பம் --Parvathisri 16:57, 23 சனவரி 2012 (UTC)
ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 17:00, 23 சனவரி 2012 (UTC)
- மிக்க நன்றி சோடாபாட்டில். வழிமொழிந்த சுந்தர், பார்வதி அவர்களுக்கும் மிக்க நன்றி. --செல்வா 17:06, 23 சனவரி 2012 (UTC)
இவற்றையும் பார்க்கவும் பகுதி
தொகுகுறுவட்டில் இவற்றையும் பார்க்கவும் பகுதி எவ்வாறு அமையும்? குறுவட்டில் இல்லாத கட்டுரைகளுக்கும் வெளி இணைப்புகள் இருக்குமா? -- சுந்தர் \பேச்சு 18:59, 25 சனவரி 2012 (UTC)
- இவற்றையும் பார்க்க உட்பட நீல இணைப்புகள் அனைத்தும் html இணைப்புகளாக இருக்கும். (பார்க்கும் கணினியில் இணைய இணைப்பு இருந்தால் பார்த்துக் கொள்ள வசதியாக)--சோடாபாட்டில்உரையாடுக 19:02, 25 சனவரி 2012 (UTC)
- நன்றி, சோடாபாட்டில். -- சுந்தர் \பேச்சு 19:06, 25 சனவரி 2012 (UTC)
- அப்படியெனில் குறுவட்டுக் கட்டுரைகளில் இருந்து விக்கிக்கு வருபவர்களை அடையாளங்காணும் வகையில் ஒரு tracking parameter-ஐ இணைக்க முடியுமா? கடிது என்றால் வேண்டாம். தற்செயலாகத் தோன்றியது. -- சுந்தர் \பேச்சு 19:12, 25 சனவரி 2012 (UTC)
- அவ்வாறு இனங்காணுவது, breach of privacy ஆகாதா?. incoming links எதையும் ஆராய்வது போல புள்ளிவிவரங்களை நான் இதுவரை விக்கித்திட்டங்களில் கண்டதில்லை. ஸ்ரீகாந்திடம் கேட்டுப் பார்க்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 19:15, 25 சனவரி 2012 (UTC)
- எனக்கும் அந்தத் தயக்கம் இருந்தது, சோடாபாட்டில். ஆனால், குறிப்பிட்ட நபரின் வருகையைக் கணக்கெடுக்க வேண்டியதில்லை. மொத்தமாக குறுவட்டுக் கட்டுரைகளின் வழியாக எத்தனை பேர் விக்கிக்கு வந்துள்ளனர் எனப் பார்த்தால் போதுமானது. அதிலும் privacy பற்றிய அச்சம் இருக்குமானால் விட்டுவிடலாம். -- சுந்தர் \பேச்சு 19:30, 25 சனவரி 2012 (UTC)
நல்ல பரிந்துரை, சுந்தர். தனிப்பட்ட தகவலைச் சேகரிக்காமல் குறுந்தட்டில் இருந்து வருபவர்கள் எத்தனை பேர் என இலகுவாக கணிக்க முடிந்தால் நன்று--இரவி 19:51, 25 சனவரி 2012 (UTC)
- சுந்தர், செய்யலாம், ஆனா அதுக்கு செய்யரதுக்குள்ள நம்ம 100 குறுந்தட்டு(இரண்டையும் நோட் பண்ணுங்க :D) வெளியிட்டுவிட முடியும். காரணம், அதுக்கு WMF உடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும். குறுந்தொடுப்பின் நீட்சி 8 மாதங்களாக வந்துகிட்டே இருக்கு, இன்னும் நமக்கு தேவையான பல நுட்பங்களுக்கான வழுக்கள் கிடப்பில் உள்ளன. ஆகையால் அது நடக்கும் னு எனக்கு ரொம்ப நம்பிக்கை இல்ல. நம்ம விக்கிப்பீடியா:தள அறிவிப்பு திட்டத்திற்கு கூட click tracking வேண்டும்னு மும்பையில் கேட்டேன், அதுக்கே உன்னும் பதில் இல்ல. click tracking ரொம்ப அவசியம்னா,குறுந்தட்டில் அனைத்து தொடுப்புகளையும் tawp.in(உதா) கு மாற்றி விட்டு, அங்கு வழிமாற்றுதல் செய்யலாம். ஆனால் ta.wikipedia.org என்னும் முகவரியை இதன் மூலம் பரப்ப முடியாது. இதற்கு பதிலா எவ்வளவு பேர் இணைய இணைப்புடன் பார்க்கிறார்கள் என கவனிக்க, குறுந்தட்டின் முதல் பக்கத்தில் மறைவாக ஓர் யாவாஸ்கிரிப்ட்டை அழைக்கலாம்.(நம்ம அதன் புள்ளிவிவரங்களை அறியாலாம்) இதனை "nice to have" பட்டியலில் சேர்த்துக்கொள்கிறேன். இதனை சுட்டியமைக்கு நன்றி ஸ்ரீகாந்த் 10:56, 26 சனவரி 2012 (UTC)
கேள்விகள்
தொகு1) கப்ரேக்கர் கட்டுரை நிறைவு பெற்று 2 நாள்களாக இருக்கின்றது. பதிவெண் தர வேண்டி எங்கும் எழுத வேண்டுமா? சோடாபாட்டிலுக்கோ வேறு யாருக்கேனுமோ தனியாக விண்ணப்பம் இட வேண்டுமா?
- யாரையும் கேட்க வேண்டியதில்லை. இறுதி வடிவம் கிட்டி விட்டது என்று உங்களுக்குத் தோன்றி, படிம உரிமைச் சரிபார்ப்பு முடிந்து விட்டால், நீங்களே பதிப்பைக் குறித்து, இணைப்புத் தந்து விடலாம். குறிப்புகளில் இது குறித்து தரப்பட்டுள்ளது. --சோடாபாட்டில்உரையாடுக 12:53, 28 சனவரி 2012 (UTC)
2) குங்குமப்பூ கட்டுரையில் (இன்னும் அது போல சில கட்டுரைகளில்) ஒருபாதியோ, பல பகுதிகளோ, கிரந்தம் இல்லாமல் எழுதிய சொற்களோடும், வேறு பகுதிகளில் அதே சொற்கள் கிரந்தத்தோடும் உள்ளனவே, இவற்றை சீர் செய்தல் வேண்டும் அல்லவா? இப்படி ஒரே கட்டுரையில் மாறி மாறி எழுதியிருப்பது கூடாது என்று நினைக்கின்றேன். அதுவும் மாணவர்களுக்கு என்று சொல்லும்பொழுது உரை திருத்தம் எல்லாம் செய்தது என்று சொல்லும்பொழுது, இப்படியான பிழைகள் இருக்கக் கூடாது. ஒரு சொல் ஒரு கட்டுரையில் வந்தால் அச்சொல், குறைந்தது அக்கட்டுரை முழுவதும், ஒரே வடிவில் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக குங்குமப்பூ கட்டுரையில் குரோக்கசு என்னும் சொல் பெரும்பகுதியில் வருகின்றது, ஆனால் பின்னே குரோக்கஸ் என்று எழுதப்பட்டுள்ளது. இதனை எப்படி அணுக வேண்டும். நான் குரோக்கசு என்று பின் வரும் பகுதிகளைத் திருத்தினால் கிரந்தமகற்றல் ஆகும், குரோக்கஸ் என்று மாற்றினால் கிரந்தமேற்றல் ஆகும். இதனை எப்படி அணுகுவது? --செல்வா 12:41, 28 சனவரி 2012 (UTC)
- அப்படியே விட்டு விடலாம். இக்குறுந்தட்டு மாணவர்களுக்காகக் பாடநூல்/கல்வி நோக்கில் தரப்படுவது அல்ல. அத்திட்டம் வேறு. இது முதற்பக்க உள்ளடக்கத்தை குறுந்தட்டாக வெளியிடும் திட்டம் மட்டுமே. உள்ளதை சற்று மேம்படுத்தி இணைய இணைப்பு இல்லாத இடங்களில் கணினியில் போட்டுப் பார்த்துக் கொள்ள வசதியான ஒரு offline பதிப்பு மட்டுமே. மாணவர்களுக்கென தனிப்பயன் குறுந்தட்டு வரும் போது, இன்னும் எளிமையாக, பரந்த உள்ளடக்கங்களுடன், ஒரே சீராக கிரந்தம், பெயரிடும் முறை, உள்ளடக்கப் பன்முகத்தன்மை ஆகியவற்றை முடிவு செய்து இட்டுக் கொள்ளலாம். (முந்தைய திட்டத்தில் செய்ய முனைந்தது போல). இப்போதைக்கு செய்யத் தேவையில்லை. விளக்க வேண்டுமெனில் கட்டுரையில் ஒரு சொல் வரும் முதலிடத்தில் மட்டும் கிரந்தம்/கிரந்தமற்ற வடிவங்களை அடைப்புகளைப் பயன்படுத்தி இட்டு சுட்டி விடலாம். (இப்போது இரு விதமாகவும் உள்ள சொற்களுக்கு மட்டும்).--சோடாபாட்டில்உரையாடுக 12:53, 28 சனவரி 2012 (UTC)
- (after an edit conflict)
- பதிவெண் தர எங்கும் எழுதத் தேவையில்லை. நீங்களே உரிய பதிப்பு எண்ணைப் பார்த்து அதற்கு வெளியிணைப்பு கொடுத்துவிடலாம். (பிற 9 கட்டுரைகளைப் பார்க்கவும்)
- இதனைச் செய்துவிட்டேன்.
- அதில் இன்னும் இரண்டாம் உரைத்திருத்தம் தொடங்கப்படவில்லை. சோடாபாட்டில், பூர்டலிப், செல்வா மூவரும் இணைந்து ஓர் உரைத்திருத்தத்தை முடித்துள்ளனர். இரண்டாம் உரைத்திருத்தத்தை நான் தொடங்குகிறேன். இரண்டாம் உரைத்திருத்தலில் குறிப்பிட்ட தகவல் முறையாக அணுகப்படும். :) -- சூர்யபிரகாஷ் உரையாடுக 12:58, 28 சனவரி 2012 (UTC)
- சோடாபாட்டில், சூர்யா இங்கே வேறுபாட்டைப் பார்க்கவும். இந்த அருமையான கட்டுரையை எழுதியவர் Shanthalan என்னும் பயனர்பெயர் கொண்ட சாந்த குமார், சோடாபாட்டில் குரோக்கஸ் என்பது போன்று செய்த திருத்தத்தை மாற்றி குரோக்கசு என்று எழுதியுள்ளார். கட்டுரை முழுக்க வரும் சொற்கள் ஒரே மாதிரியாக இருத்தல் வேண்டும். உங்கள் முடிவு எனக்கு உடன்பாடு அன்று. முறையும் அல்ல. வேறு ஒரு கட்டுரையில் இப்படி இரண்டும் கலந்து இருந்தால், கட்டுரையை எழுதியவர் அல்லது பெரும் பங்களித்தவர் விரும்பினால் கட்டுரை முழுக்க சீராக கிரந்தம் சேர்த்து எழுதுங்கள், நானும் கிரந்தம் சேர்த்துத் திருத்தித்தருகின்றேன் (இத்திட்டத்துக்காக குறிப்பில் மொழிந்தபடி). ஆனால் ஒரே கட்டுரையில் ஒரு சொல் ஆளப்பட்டால் அது அக்கட்டுரை முழுக்கச் சீராக வருதல் (கிரந்தம் சேர்த்தியோ, தமிழ் முறைப்படி கிரந்தம் இல்லாமலோ) வேண்டும். குங்குமப்பூ கட்டுரையிலும் பிறகட்டுரைகளிலும், இப்படி ஏதோ ஒரு சீராக வருதல் தேவை, அறிவுடைமை. --செல்வா 13:51, 29 சனவரி 2012 (UTC)
- உங்கள் கூற்றில் உள்ள பல தகவல் பிழைகள் - இதில் நான் வலிந்து கிரந்தம் சேர்த்து அதை சாந்தகுமார் மாற்றவில்லை. கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரை. எழுதியவர் rexani எனும் மொழிபெயர்ப்பாளார், சாந்தகுமாரல்ல. அவரது முதற்பதிப்பில் முழுக்க கிரந்தமிருந்தது. நாம் அப்போது கூகுளுடன் ஒப்புக்கொண்ட படி இது அவரது பயனர்வெளிக்கு நகர்த்தப்பட்டது. திருத்தங்களை நாம் பேச்சுப்பக்கத்தில் சொல்லுவோம், அவர்கள் செய்வார்கள் என்ற உடன்பாடு இருந்தது - விக்கியாக்கத்தை அவர்களே செய்து விக்கி முறைகளைக் கற்க வேண்டும் என்பதற்காக. இதனால் இது rexani யின் பயனர் வெளியில் இருந்த போது நமது பயனர்கள் செய்த மாற்றங்கள் அனைத்தையும் நான் மீளமைத்து வந்தேன். (பேச்சுப் பக்கத்தில் சொல்லுங்கள், அவர்கள் மாற்றட்டும் என்ற குறிப்புடன்). இப்படி நான் மீளமைத்தவற்றுள் - [1], நீங்கள் செய்திருந்த கிரந்தமகற்றல் மாற்றங்களும் அடக்கம். இதை நான் கிரந்தத்தை மீண்டும் சேர்க்க வேண்டுமென்று செய்யவில்லை - அனைத்து மாற்றங்களையும் மீளமைத்து முதல் பதிப்புக்கே மாற்றி வந்தேன். பின் அனைவரும் நமது கருத்துகளை பேச்சுப் பக்கத்தில் இட்டோம். (பேச்சு:குங்குமப்பூ). அவற்றில் நீங்கள் கிரந்தமின்றி எழுதப் பரிந்துரைத்திருந்தீர்கள். நமது பரிந்துரைகள் பலவற்றை ஏற்று சாந்தகுமார் (rexani இடம் பெற்றிருந்த அணியின் தலைவர்) மாற்றங்களைச் செய்தார். இதில் நானும் கலையும் சுட்டியிருந்த மொழிபெயர்ப்புப் பிழைகளுடன் நீங்கள் சுட்டியிருந்த கிரந்தம் தவிர்த்தலும் செய்திருந்தார். ஆனால் உருவாக்கிய rexani செய்ய வில்லை (அவர் அதற்குப்பின் கட்டுரையைத் தொகுக்கவில்லை). சாந்தகுமார் சுட்டிய மாற்றங்களையும் முழுமையாகச் செய்யவில்லை. பாதி கிரந்தமும், பாதி கிரந்தமற்றும் செய்து விட்டுப் போனார் (தகவல்/மொழிபெயர்ப்புப் பிழைகளையும் முழுமையாகத் திருத்தவில்லை). நீங்கள் மேலே சுட்டியுள்ள சாந்தகுமார் வேறுபாட்டிலெயே அவர் பாதிப்பாதியாக செய்திருப்பது தெரியும். கூகுள் திட்டத்தைக் கைவிட்ட பின்னால் இக்கட்டுரையை நான் என் தனிப்பட்ட முறையில் எடுத்துத் திருத்தி பின் பொதுவெளிக்கு நகர்த்தினேன். அதன் பின்னர் இதில் booradleyp உரை திருத்தம் செய்துள்ளார்.
- சுருக்கமாக:
- கட்டுரை ஆக்கியவர் சாந்தகுமாரல்ல rexani. அவரது முதற்பதிப்பில் முழுக்க கிரந்தம் இருந்தது.
- நான் கிரந்தம் சேர்த்து கட்டுரையாளர் அதை அகற்றினார் என்று நீங்கள் சொல்வது தவறு. கட்டுரையின் முதல் பதிப்பில் கிரந்தம் இருந்தது.
- நீங்கள் நீக்கிய கிரந்தத்தை நான் மீண்டும் சேர்க்கவில்லை. (அது என் நோக்கமும் அல்ல) அனைவரது மாற்றங்களையும் முதல் பதிப்புக்கு மீளமைத்துவந்தேன் (திட்டத்தின் விதிகளை நடைமுறைப்படுத்த). அவற்றில் கனக்ஸ், சூர்யா, உங்கள் மாற்றங்கள் அனைத்தும் அடக்கம்.
- இதில் பெரும் பங்காளிப்பாளர்கள் எழுதிய rexani, பெரும்பாலான தகவல் பிழைகளைச் சுட்டித் திருத்திய நான், கலை, உரை திருத்திய booradleyp
- சுருக்கமாக:
- எனவே அருள் கூர்ந்து நான் கிரந்தம் சேர்த்தது போலவும், கட்டுரையாளரும் பெரும் பங்களிப்பாளருமான சாந்தகுமார் அதனை நீக்கியது போன்றதும் போன்ற பிம்பம் தருவதைத் தவிருங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 14:27, 29 சனவரி 2012 (UTC)
கொஞ்சம் பொறுமையாக மீண்டும் நான் சொன்ன கருத்தைப் படித்துப் பாருங்கள். "நான் வலிந்து கிரந்தம் சேர்த்து அதை சாந்தகுமார் மாற்றவில்லை" என்பதல்ல நான் சொல்ல வந்தது. நீங்கள் கூறுவது போல் "நமது பரிந்துரைகள் பலவற்றை ஏற்று சாந்தகுமார் (rexani இடம் பெற்றிருந்த அணியின் தலைவர்) மாற்றங்களைச் செய்தார்." என்றால் அப்படியே இருக்கட்டும். என் கருத்தின் நோக்கம் அக்கட்டுரையில் முதல் பெரும்பாதியில் இருப்பது போல் ஒரே சீராக குரோக்கசு என்று இருப்பது போல் அக்கட்டுரையில் இருக்கட்டும் என்பதே (உங்கள் நேரம் வீணாக வேண்டாம், பிறர் யாருடைய நேரமும் வீணாக வேண்டாம், நானே செய்து தருகின்றேன்). பிறிதொரு கட்டுரையில் சீராக நானே கிரந்தம் ஏற்றியும் தருகின்றேன் (இத்திட்டத்திற்காக). ஆனால் கட்டுரை முழுக்க வரும் சொற்கள் ஒரே மாதிரியாக இருத்தல் வேண்டும். என்பதே என் கருத்து. ஒன்றைச் செய்தால் ஏன் நன்றாகச் சீராகச் செய்யகூடாது? மீண்டும் சொல்கின்றேன், என் குறிக்கோள் சிறப்பாக நடத்திச் செல்லும் உங்களைக் குற்றம் சாட்டுவதே அல்ல. --செல்வா 14:51, 29 சனவரி 2012 (UTC)
- சரி அப்படியெனில் கட்டுரையின் முதல் பதிப்பில் இருந்தது போலவே “குரோக்கசு” என்று முழுமையாக மாற்றி விடலாம். அதுவே கட்டுரை உருவாக்குனர் அணி ஏற்றுக்கொண்ட முறை. (கட்டுரையைப் பெருமளவு திருத்திய எனக்கும் எதிர்ப்பு கிடையாது) “குரோக்கசு” என்று மாற்றி விடுகிறேன். இதுபோல சட்டைவஸ், ஸ்பெயன், பிரான்ஸ் போன்று பல இடங்களில் தோன்றும் சில சொற்களில் மட்டும் சீர்மைக்காக மாற்றுகிறேன். பிற கிரந்தம் அப்படியே இருக்கட்டும் --சோடாபாட்டில்உரையாடுக 15:48, 29 சனவரி 2012 (UTC)
- நன்றி சோடாபாட்டில்.--செல்வா 17:06, 30 சனவரி 2012 (UTC)
இது மாணவர்களுக்கான குறுந்தட்டு இல்லை என்றாலும், மாணவர்கள் உட்பட பலரும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டு. இந்தக் குறுந்தட்டு இணையத்துக்கு வெளியே நாம் உள்ளடக்கத்தைத் தர முனையும் முதல் முயற்சி. எல்லா வகையிலும் இம்முயற்சியின் தரம் எடை போடப்படும். தமிழ் விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம். எனவே, ஒவ்வொரு கட்டுரைக்கு உள்ளாவது நாம் சீர்மை பேணுவது முக்கியம். இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை ஒரு சொல் கிரந்தத்தோடு வருகிறதா இல்லையா என்பது எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால், கட்டுரை முழுக்க ஒரே மாதிரி வர வேண்டும். லோட்டசு கட்டுரை முழுக்க லோட்டசு தான். லோட்டஸ் ஆகாது. குரோக்கஸ் கட்டுரை முழுக்க குரோக்கஸ் தான். குரோக்கசு ஆகாது. அதாவது இங்கு கிரந்தமா இல்லையா என்பது ஒவ்வொரு சொல்லுக்கும் தனித்தனியாக முடிவு எடுக்க வேண்டும். கட்டுரை முழுக்க எல்லா சொற்களையும் கிரந்தம் சேர்த்தோ நீக்கியோ எழுதும் நடைக்குப் பொருந்தாது. குரோக்கசின், குரோக்கசால் போன்ற பயன்பாடுகளை ஏற்கலாமா இல்லை அவற்றையும் குரோக்கஸின், குரோக்கஸால் என்று மாற்றுவது வலிந்து கிரந்தம் திணிப்பதா தெரியவில்லை. குறைந்தபட்சம் ஒரு பெயர் தனியாக வரும் போது கட்டுரை முழுக்க ஒரே மாதிரி வர வேண்டும். கட்டுரை தொடக்கத்தில் கிரந்தம், கிரந்தமற்ற இரண்டு வடிவங்களையும் அடைப்புக் குறி உதவி கொண்டு குறிக்கலாம்.
கட்டுரையைத் தொடங்கிய முதல் பயனர் ஒரு வரி மட்டும் எழுதிவிட்டு மற்ற பயனர்கள் 99% எழுதி இருந்தால் முதற்பயனரின் எழுத்துக் கூட்டலை மதிப்போம் என்ற வாதம் ஏற்புடையதாக இல்லை. இதைக் கொஞ்சம் புறவயமாகவும் திறமிக்க செயல்பாடு என்ன என்பதின் அடிப்படையிலும் அணுகலாம். ஒரு கட்டுரையில் ஒரு சொல் 75% கிரந்தம் இல்லாமலும் 25% மட்டுமே கிரந்தம் சேர்ந்தும் இருந்தால், 25% இடங்களில் மட்டும் மாற்றுவது இலகு. ஆகவே, எந்தத் திருத்தம் குறைந்த வேலை தருமோ அதனைச் செய்து கட்டுரை முழுக்க சீரான பயன்பாடு கொண்டு வர முனையலாம். Find and replace செய்தால் எது எத்தனை % என்பது பொருட்டு இல்லை. ஆனால், இது ஒரு புறவயமான தீர்வாக இருக்கும்.--இரவி 16:28, 29 சனவரி 2012 (UTC)
- உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்கிறேன். ஒரு கட்டுரைக்குள் ஒரு சொல் ஒரே போல் வருமாறு மாற்றலாம். அது குறைந்த அளவு வேலை தேவைப்படும் வடிவத்துக்கு மாற்ற வேண்டும். --சோடாபாட்டில்உரையாடுக 16:37, 29 சனவரி 2012 (UTC)
தமிழ், தமிழர் ஆகிய இரண்டு கட்டுரைகளைச் சேர்க்க விண்ணப்பம்
தொகுகட்டுரை தெரிவு முடிந்து மற்ற பணிகளைச் செய்து கொண்டிருக்கும் நேரம். இருந்தாலும், மிகத் தாமதமாகத் தான் தமிழ், தமிழர் ஆகிய இரு கட்டுரைகள் இத்தொகுப்பில் இல்லை என்பதைக் கவனிக்க முடிந்தது. இரண்டுமே முதற்பக்கக் கட்டுரைகள். தமிழ் விக்கிப்பீடியாவில் மிகுதியான பக்கப்பார்வைகளைப் பெறும் கட்டுரைளில் தமிழ் கட்டுரையும் ஒன்று. எனவே, நமது இலக்கு வாசகர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கக்கூடிய இந்த இரு கட்டுரைகளை மட்டும் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளலாமா? நன்றி--இரவி 08:10, 30 சனவரி 2012 (UTC)
- சேருங்கள் ரவி. 400 இல் காலவரிசைப்படி பின்னிருந்து முன்னாகச் சென்று 200 ஐத் தேர்ந்தெடுத்தேன். இவை விட்டுப்போயிருக்கலாம். எண்ணிக்கை 200 ஐ விட ஐந்தாறு அதிகமானால் சிக்கல் இல்லை (ஒரு விதத்தில் நல்லது, 200 இல் ஏதேனும் ஒன்றில் பெரும் சிக்கல் இருந்து நீக்க வேண்டி இருந்தால், எண்ணிக்கை 200க்கு கீழ் போகாமல் இருக்கும்). --சோடாபாட்டில்உரையாடுக 08:23, 30 சனவரி 2012 (UTC)
சேர்த்துவிட்டேன். நன்றி--இரவி 08:32, 30 சனவரி 2012 (UTC)
உரை திருத்துவோர் கவனத்துக்கு
தொகுமேற்கண்ட பக்கங்களில் உள்ள வழிகாட்டல்களைக் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். நன்றி --இரவி 08:11, 30 சனவரி 2012 (UTC)
இரு இடங்களில் ஒரே தலைப்பு
தொகுஇரவி, தமிழ் விவிலியம் என்னும் கட்டுரைத் தலைப்பு இரு இடங்களில் உள்ளது (எண்கள் 42, 161). --பவுல்-Paul 17:36, 30 சனவரி 2012 (UTC)
- நன்றி பவுல். 161 எண் கொண்டதை நீக்கியிருக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 17:55, 30 சனவரி 2012 (UTC)
டாஸ்மாக் கட்டுரை நீக்க கோரிக்கை
தொகுமாணவர்களுக்கான கலைக்களஞ்சியத்தில் டாஸ்மாக் கட்டுரை வேண்டாமே. மற்ற பங்களிப்பாளர்களின் கருத்தறிந்து நீக்க வேண்டுகிறேன். நன்றி. -- மாகிர் 10:51, 9 பெப்ரவரி 2012 (UTC)
- மாகிர், இதை மாணவர்களுக்கான குறுந்தட்டாக இல்லாமல் பொதுவான ஒன்றாகவே உருவாக்கி வருகிறோம். இக்கட்டுரை டாசுமாக் என்னும் நிறுவனத்தின் செயல்பாடுகள், தாக்கம் பற்றியே பேசுகிறது. குடிப்பழக்கத்தை ஊக்குவிப்பதாகவோ மாணவர்கள் அறியக்கூடாத ஒன்றாகவோ இல்லை. தவிர, தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதாரச் சூழலில் இந்நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, இக்கட்டுரையைச் சேர்ப்பது பொருத்தமான ஒன்றே--இரவி 11:00, 9 பெப்ரவரி 2012 (UTC)
- சரி இரவி, கட்டுரையை படிக்காமல் பட்டியலை மட்டும் பார்த்துவிட்டேன். -- மாகிர் 11:03, 9 பெப்ரவரி 2012 (UTC)
தலைப்பு
தொகு195. நடுத்தர போர் வானூர்தி என்ற கட்டுரையின் தலைப்பு தற்போதைய அதன் பெயரான மேம்பட்ட நடுத்தர போர் வானூர்தி என்று மாற்றப்பட்டுள்ளது, எனவே இங்கும் மாற்றம் செய்கிறேன். --குறும்பன் 23:02, 10 பெப்ரவரி 2012 (UTC)
- நன்றி குறும்பன.--சோடாபாட்டில்உரையாடுக 03:50, 11 பெப்ரவரி 2012 (UTC)
வெளி இணைப்புகள், நூற் குறிப்புகள்
தொகுகிரிகோர் மெண்டல் கட்டுரையில் இருந்த பழைய நூலாதாரங்களை எடுத்து விட்டு ஆங்கில விக்கியில் இருந்து இற்றைப்படுத்தியுள்ளேன். நூலாதாரங்கள் உள்ள மற்ற கட்டுரைகளிலும் இதைப் போலச் செய்யலாம். ம. ப. பெரியசாமித்தூரன் கட்டுரையில் சில வெளி இணைப்புகள் முறிந்து இருந்திருந்ததால் அவற்றை நீக்கினேன். மற்ற கட்டுரைகளிலும் இணைப்புகள் வேலை செய்கின்றனவா என கவனிக்க வேண்டும்.--இரவி 19:59, 16 பெப்ரவரி 2012 (UTC)
படிம உரிமை சரிபார்ப்பு
தொகுகாமன்சில் இருக்கும் படிமங்களின் உரிமங்களை துருவிப் பார்க்க வேண்டுமா? காமன்சில் ஏற்கனவே கடுமையான விதிகள் இருப்பதால் படிமம் அங்கிருந்தாலே போதும் என்று ஏற்றுக் கொள்ளலாமா? தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள படிமங்களுக்கு மட்டும் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும் என்று நினைக்கிறேன்--இரவி 18:28, 19 பெப்ரவரி 2012 (UTC)
44. கான்கார்ட்
தொகு44. கான்கார்ட் என்பது கான்கோர்டு என்று மாற்றியுள்ளேன் அதனால் எனவே இங்கும் மாற்றம் செய்கிறேன்--குறும்பன் 18:19, 25 பெப்ரவரி 2012 (UTC)
ஈழை நோய்
தொகுஈழை நோய் என்ற இந்தக் கட்டுரையை உரைதிருத்தம் செய்ய முயன்றேன். ஆனால் பல இடங்களில் உள்ள தகவல்கள் என் சிற்றறிவுக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றது. பல இடங்களில் மேற்கோளும் இல்லை. அவற்றையெல்லாம் சரிபார்க்க முடியாமல் இருக்கும் நிலையில், நீக்கவும் முடியாது. யாராவது முழுமையாக விடயம் அறிந்தவர்கள் உரைதிருத்தம் செய்தாலன்றி, இந்தக் கட்டுரை குறுந்தகட்டுத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட முடியாதென நினைக்கின்றேன்.
(நான் உரை திருத்தம் செய்த ஏனைய கட்டுரைகளில், பிடரிக்கோடன், பேர்கன், சுடோக்கு ஆகியன 2ஆம் உரைதிருத்தம் செய்யப்பட்டு நிறைவு செய்யப்படக் காத்திருக்கின்றன. முடிந்தவர்கள் அதை நிறைவு செய்து விடுங்கள். நன்றி). --கலை (பேச்சு) 10:30, 7 சூன் 2012 (UTC)