விக்கிப்பீடியா பேச்சு:சர்ச்சைக்குரிய துறைகள்

சர்ச்சைக்குரிய துறைகளில் இயன்ற அளவு முழுமையான, நடுநிலையான கட்டுரைகளை விரைந்தும் பயனர் பிணக்குகள் இன்றியும் உருவாக்குவதற்காக பின்வரும் அணுகுமுறை முன்வைக்கப்படுகிறது. சில பரிந்துரைகள் வழமையான விக்கிப்பீடியா உரிமைகளில் இருந்து சற்று கடுமையானது என்றாலும் குறைவான வளங்கள் உள்ள தமிழ் விக்கிப்பீடியாவின் நிலையைக் கருத்திற் கொண்டு செயற்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு வார உரையாடல் / வாக்கெடுப்புக் காலத்துக்குப் பின் இந்நடைமுறை பயனர்களின் ஏற்பு பெறும் நிலையில், இது முறையான தமிழ் விக்கிப்பீடியா கொள்கையாகவும் வழிகாட்டலாகவும் அறிவிக்கப்படும்:

  1. சர்ச்சைக்குரிய துறைகளில் முதலில் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளில் இருந்து ஏற்பாளர், மறுப்பாளர் ஆகிய இரு பக்கத்தாருக்கும் ஏற்புடைய பகுதிகள், ஆதாரங்களை முன்வைத்து எழுத வேண்டும். எ.கா: http://en.wikipedia.org/wiki/Muhammad , http://en.wikipedia.org/wiki/Criticism_of_Christianity
  2. ஒரு துறை / பொருள் தொடர்பான விமர்சனம் குறித்த முதன்மைக் கட்டுரைகளைத் தொடங்கலாம். அவற்றின் சுருக்கத்தை அத்துறை சார்ந்த முதன்மைக் கட்டுரையில் தரலாம்.
  3. ஏற்புடைய பகுதிகள் குறித்த உடன்பாட்டைப் பெற அந்தந்த கட்டுரைகளின் உரையாடல் பக்கங்களில் விக்கிப்பீடியா நற்பழக்கவழக்கங்களுக்கு உட்பட்டு உரையாட வேண்டும். குறித்த கட்டுரையின் உள்ளடக்கத்தை விட்டு விலகி பொத்தாம் பொதுவாகவோ தனிப்பட்ட பயனர் பக்கங்களிலோ விக்கிப்பீடியா பெயர்வெளிகளிலோ உரையாடலை வளர்த்துச் செல்வது கூடாது. உரையாடல் நற்பண்புகளில் இருந்து வழுவுவோர் மூன்று எச்சரிக்கைகளுக்குப் பிறகு ஆறு மாதங்களுக்குத் தற்காலிகத் தடை பெறுவர்.
  4. ஒரே பயனர் பல்வேறு IP முகவரிகளில் இருந்து மாறி மாறிக் கருத்திட்டுக் குழப்பம் ஏற்படுத்தும் நிலையைத் தவிர்க்க, பயனர் கணக்கைத் தொடங்கிய பிறகே கட்டுரைத் தொகுப்புகள் / உரையாடல்களில் ஈடுபட வேண்டும்.
  5. தொகுப்புப் போர்களில் ஈடுபடும் நிலையில் மூன்று எச்சரிக்கைகளுக்குப் பிறகு ஆறு மாதங்களுக்குத் தற்காலிகமாகத் தடுக்கப்படுவர்.
  6. உலகளவில் ஆய்வுச் சிறப்பு மிக்கதாக ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய தகுந்த மூல ஆதாரங்களை முன்வைத்து உரையாட வேண்டும். தமிழ் மொழி வழி ஆதாரங்களுக்கும் இது பொருந்தும்.
  7. ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளில் இருந்து ஏற்புடைய பகுதிகளைத் தமிழாக்கிய பிறகே, தமிழ் நோக்கு / உள்ளூர் நோக்கு / கூடுதல் தகவல் சேர்க்க முனைய வேண்டும். இதனைச் சேர்க்கும் முறையும் மேற்கண்ட உரையாடல் பாங்கு, தகுந்த ஆதாரங்களின் தன்மைக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  8. இத்துறைகளில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ள கட்டுரைகளில் தேவைப்படும் மாற்றங்களையும் மேற்கண்ட முறையிலேயே அணுக வேண்டும். முற்றிலும் புதிதாகத் தொடங்கி எழுதுவதே சிறப்பானது என்று கருதக்கூடிய கட்டுரைகளை நீக்கல் வாக்கெடுப்புக்கு உட்படுத்த வேண்டும்
  9. தற்போது சமயம் சார் கட்டுரைகள் சர்ச்சைக்குரிய தலைப்புகளில் ஒன்றாக இனங்காணப்பட்டுள்ளது. கூடுதல் துறைகளை சர்ச்சைக்குரியதாக அறிவிக்க இக்கொள்கைப் பக்கத்தில் முன்மொழிந்து உரையாடிச் சேர்க்க வேண்டும்--இரவி (பேச்சு) 06:59, 25 செப்டெம்பர் 2012 (UTC)

ஆதரவு தொகு

  1. Sivane (பேச்சு)
  2. Anton (பேச்சு)
  3. தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு)
  4. இரவி (பேச்சு)
  5. பார்வதிஸ்ரீ (பேச்சு)
  6. தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக
  7. ஜவஹர் அலி (பேச்சு)
  8. சிவம்
  9. தமிழ்க்குரிசில் (பேச்சு)

நடுநிலை தொகு

எதிர்ப்பு தொகு

கருத்து தொகு

கருத்து 1 தொகு

சமயம் சார் கட்டுரைகளை கண்காணிக்க சமயப்பற்று இல்லாதவர்களை முன்நிறுத்த வேண்டுகிறேன். x என்ற மத நூல் புனிதன்மையுடையது என்றும், x என்ற மதமே மக்களுக்கு வழிகாட்ட கூடியது என்றும், x என்ற மததலைவர் பொய்யே பேசாதவர் என்றும் வலிந்து கூறப்படுவைகளை விக்கிப்பீடியா தவிர்க்க வேண்டும். x என்ற விசயத்தினை x சமய மக்கள் நம்புகிறார்கள் என்பதைப் போன்றே தற்போதைய சமய சார் கட்டுரைகளை எழுத வேண்டும்.

ஒரு சமயத்தினை நம்புகின்ற விக்கிப் பயனர் எழுதினாலும் இவ்வாறே எழுத வேண்டும் என்றும் கட்டளையிட வேண்டுகிறேன்., விக்கிப்பீடியாவினை வெறும் சமய பரப்புரை நோக்கோடு எழுதப்படும் கட்டுரைகளை நடுநி்லையாக்க தனி குழு ஒன்றினையும் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். மேலும் ஒரு சமயத்தினை பின்பற்றுபவர் மட்டுமே அந்த சமயம் குறி்த்தான கட்டுரை எழுத வேண்டும் என சில பயனர்கள் கூறுகிறார்கள். அவ்வாறு செய்தால் அந்த கட்டுரையை ஒரு சமயத்தினர் மட்டுமே படிக்க நேரிடும் தளத்தில் அல்லவா பதிய வேண்டும் என்று அவர்களுக்கு எடுத்துரையுங்கள்.

x என்ற சமயம் சார்ந்த கட்டுரையினை ஒரு நபர் படிக்கும் போது தகவல்களுடன், எதிர்வினைகளையும் அவருக்கு தெரியவேண்டும். சமயங்கள் அனைத்தும் புனிதம் எனும் பரப்பரை விக்கியில் அதிகம் ஒலிக்கிறது. இங்கு இறை மறுப்பாளர்ளை பன்றியை மூதாதயர் என்று நம்புகின்ற கூட்டம் என்று விவரிக்கும் பயனர்களுக்கு பக்க பலமாக மற்ற பயனர்களும் இருக்கிறார்கள். ஆனால் இறையைப் பற்றி இறைமறுப்பாளர்கள் பேசினால் மனம் புன்படும் என்று காரணம் காட்டுகின்றார்கள். அந்த நடுநிலை குறித்து எனக்கு கவலையில்லை. உலகம் முழுவதும் இறைமறுப்பாளர்கள் ஒடுக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது அறிந்ததே.

நடுநிலை நோக்கோடு எழுப்பட வேண்டியதில் சமயக் கட்டுரை மிக முக்கியமானது என்று இந்த முயற்சியை தொடங்கிய இரவி அவர்களுக்கு நன்றி. - Sivane (பேச்சு)

இந்த கொள்கை உரையாடலைப் பொதுப்பட சர்ச்சைக்குரிய துறைகள் என்ற அடிப்படையிலேயே அணுக வேண்டுகிறேன். தனிப்பட்டு சமயம் சார்ந்து உரையாடுகையில் உரையாடல் திசை மாறும் வாய்ப்பு உண்டு.
//சமயம் சார் கட்டுரைகளை கண்காணிக்க சமயப்பற்று இல்லாதவர்களை முன்நிறுத்த வேண்டுகிறேன்.// இது நடைமுறைக்கு ஒவ்வாதது. விக்கி வழக்கங்களுக்குப் புறம்பானது.
//விக்கிப்பீடியாவினை வெறும் சமய பரப்புரை நோக்கோடு எழுதப்படும் கட்டுரைகளை நடுநி்லையாக்க தனி குழு ஒன்றினையும் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.// இத்துறையில் ஆர்வமுடைய பயனர்கள் தாமாகவே இது குறித்து முயலலாம். திட்டப்பணியை உருவாக்கலாம்.
//மேலும் ஒரு சமயத்தினை பின்பற்றுபவர் மட்டுமே அந்த சமயம் குறி்த்தான கட்டுரை எழுத வேண்டும் என சில பயனர்கள் கூறுகிறார்கள்.// இப்படிக் கூறுவதற்கு இடம் இல்லை.
//ஒரு சமயத்தினை நம்புகின்ற விக்கிப் பயனர் எழுதினாலும் இவ்வாறே எழுத வேண்டும் என்றும் கட்டளையிட வேண்டுகிறேன்// ஒருவரின் பங்களிப்பு விக்கி நடைமுறைகளுக்குப் புறம்பாக இருந்தால் மற்றவர்கள் திருத்தலாம், நீக்கலாம். தொடர்ந்து ஒருவர் விக்கி நடைமுறைகளை மீறுகிறார் என்றால், அதன் தீவிரத்தன்மையைப் பொறுத்து, மூன்று எச்சரிக்கைகளுக்குப் பிறகு பயனர் கணக்கைத் தடுக்கலாம். இங்கு கட்டளை இட முடியாது.
//நடுநிலை நோக்கோடு எழுப்பட வேண்டியதில் சமயக் கட்டுரை மிக முக்கியமானது// அனைத்துக் கட்டுரைகளுமே நடுநிலையோடு எழுதப்பட வேண்டியவை தாம். இதில் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று ஏதும் இல்லை. இத்துறை சர்ச்சைக்குரியதாகவும் தொடர்புடைய உரையாடல்கள் உணர்வு அடிப்படையில் அமைந்திருப்பதாலும் சிறப்பான அணுகுமுறை பரிந்துரைத்துள்ளேன். நன்றி--இரவி (பேச்சு) 13:49, 25 செப்டெம்பர் 2012 (UTC)

கருத்து 2 தொகு

ஆங்கில விக்கியில் இருந்து என்று மட்டும் குறிப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டும். பிற பல வளர்ந்த விக்கிப்பீடியாக்களும் உண்டு. எ.கா யேர்மன் மொழி, பிரெஞ்சு மொழி, உருசிய மொழி விக்கிப்பீடியாக்கள். எனவே ஆங்கில விக்கியில் இருந்து மட்டுமே இங்கு மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுவது ஏன் என்று தெரியவில்லை. பிற விக்கிப்பீடியாக்களில் இருந்து எனலாம்.
ஆங்கில விக்கியில்/பிற விக்கிகளில் ஏற்பு இருந்தாலும் தமிழ் விக்கியில் ஏற்பு இருக்கும் என்று ஊகிக்க முடியாது. பல தலைப்புக்களை அப்படிச் சுட்ட முடியும். எனவே தேர்தெடுத்தல் முறை பற்றி மேலும் தகவல்கள் வேண்டும். குறிப்பாக ஆங்கில விக்கியில் அமெரிக்க/ஐரோப்பிய பார்வை, காலனித்துவ பார்வை, பெரும்பான்மையினர் பார்வைகள் உண்டு. அவற்றை இங்கே ஒட்டுமொத்தமாக படியெடுப்பதில் சிக்கல்கள் உள்ளன.
தொகுப்புப் போர் ஈடுபட்டால் 6 மாதம் என்று சொல்வது முன்னரே முடிவு செய்வது கடினம். அதுவும் case by case ஆக முடிவு செய்யப்பட வேண்டும்.
முடிந்தால், தகுந்த தமிழ் மேற்கோள்களும் சேர்க்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கலாம். ஒரு பொருள் பற்றி அதன் வலைத்தளங்கள், மூலங்களில் இருந்து மட்டும் மேற்கோள்கள் காட்டுவது போதாது.
புறவயமாக, தகவல்களை முதன்மைப்படுத்தி என்பதை சிறப்பாகச் சுட்டலாம். விமர்சனங்களும் தகுந்த முறையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டலாம். --Natkeeran (பேச்சு) 15:59, 25 செப்டெம்பர் 2012 (UTC)
நற்கீரன், பெரும்பான்மை தமிழ் விக்கிப்பீடியர்கள் ஆங்கில மொழி அறிமுகம் உள்ளவர்கள் என்பதும் ஆங்கில விக்கிப்பீடியாவை முன்மொழிய ஒரு காரணம். பிற வளர்ந்த (முதல் 10 விக்கிப்பீடியாக்கள் எனலாமா?) விக்கிப்பீடியாக்களில் உள்ள ஆங்கில வழி ஆதாரங்களையும் உசாத்துணையாகக் கொள்ளலாம். ஆங்கில விக்கிப்பீடியாவை அப்படியே படி எடுக்கப் போவதில்லை. ஒவ்வொரு கட்டுரையிலும் உள்ள ஏற்புடைய பகுதிகள் குறித்து உரையாடித் தான் தமிழாக்கப் போகிறோம். இதன்மூலம் ஆங்கில விக்கிப்பீடியா சாய்வுகளைத் தவிர்க்கலாம். பயனர் தடை குறித்த முடிவுகள் ஒவ்வொன்றும் case by case ஆகவே இருக்கும். --இரவி (பேச்சு) 10:08, 26 செப்டெம்பர் 2012 (UTC)

கருத்து 3 தொகு

  • 25 செப்டெம்பர் 2012 க்குப் பின்பு உருவாக்கிய பயனர் மற்றும் IP முகவரிகளில் இருந்து வாக்களிக்க முடியாதென்ற கருத்து இருப்பது அவசியம்.
  • மூன்று எச்சரிக்கைகளை யார் யாரெல்லாம் செய்யலாம் என்ற விதி இருக்கலாமா?
  • தகுந்த உடையாடல், அல்லது சுட்டிக் காட்டுதல் மேற்கொண்ட பின்பும் தொகுப்புப் போர்களை வலிந்து மேற்கொள்ளும், விதண்டா விதமாக மேற்கொள்ளும் பயனர் பற்றி முறையிட ஒரு பொறிமுறை இருப்பது அவசியமா?

--Anton (பேச்சு) 16:07, 26 செப்டெம்பர் 2012 (UTC)

அன்டன்,

  • விக்கிப்பீடியா வாக்கெடுப்புகளில் என்றுமே வெறும் வாக்கு எண்ணிக்கை மட்டுமே கருத்தில் கொள்ளப்படுவதில்லை. ஏன் குறிப்பிட்ட வாக்கு என்பதற்கான கருத்தும் முக்கியம். அதே போல் வாக்களிப்பவர் ஓரளவாவது தொடர் பங்களிப்பாளராக உள்ளாரா என்றும் பார்க்கப்படும். எனவே, இந்த வாக்கெடுப்பு தொடங்கிய பிறகு உருவாகும் பயனர் கணக்குகள் இடும் வாக்குகள் செல்லா என்பது தானாக புரிந்துகொள்ளப்படக்கூடியது. அதே வேளை அவர்கள் இடக்கூடிய கருத்தில் நியாயம் இருந்தால் அதனைக் கணக்கில் கொண்டு கொள்கையில் தகுந்த மாற்றத்தைக் கொண்டு வரலாம்.
  • பயனர் கணக்குகளைத் தடுக்கும் அணுக்கம் நிருவாகப் பயனர்களுக்கே உண்டு என்பதால் அவர்களே எச்சரிக்கைகளையும் அளிப்பது பொருத்தமாக இருக்கும்.
  • விக்கிப்பீடியா:பயனர் தடை வாக்கெடுப்புகள் பக்கத்தில் முறையிடலாம். தடுக்க வேண்டிய பயனர் பெயர் / ஐ. பி. முகவரி, காரணம், அதற்கான எடுத்துக்காட்டுகளைத் தரலாம்.--இரவி (பேச்சு) 17:20, 26 செப்டெம்பர் 2012 (UTC)

கருத்து 4 தொகு

சர்ச்சைக்குரிய துறைகளுக்கு வலைப்பதிவை மேற்கோள் காட்ட வேண்டாம், IP முகவரிகளில் இருந்து பங்களிப்பதையோ, உரையாடுவதையோ தடுக்கலாம் (சர்ச்சைக்குரிய துறைகளுக்கு மட்டும்)--குறும்பன் (பேச்சு) 16:24, 26 செப்டெம்பர் 2012 (UTC)

குறும்பன்,

  • சமயவியல் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட ஒரு துறை என்பதால் வலைப்பதிவு எடுத்துக்காட்டுகள் தேவைப்படாமல் இருக்கலாம். எனினும், பிற்காலத்தில் சமயம் அல்லாத பிற சர்ச்சைக்குரிய துறைகளில் (குறிப்பாக தற்காலத் தமிழர் சார் துறைகள்) போதுமான ஆதாரங்கள் இருக்குமா என்று சொல்ல இயலாது. எனவே, இதனை ஒவ்வொரு துறையாகவே முடிவெடுக்க வேண்டி வரும். ஆங்கில விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குக் கூடுதலான தகவல்களை வலைப்பதிவுகளை முன்வைத்துச் சேர்க்க முனைந்தால் இத்துறைக்கு அவை ஏற்கக்கூடிய ஆதாரமா என்பதை முடிவு செய்வோம்.
  • அடையாளம் காட்டாத தொகுப்புகள் சர்ச்சைக்குள்ளாகாத சிறிய வளர்முகத் தொகுப்புகளாக இருக்கும் நிலையில் ஏற்கலாம். கருத்துகளை இடவும் கருத்துகளை இடும் பயனரே மாற்றங்களைச் செய்யவும் பயனர் கணக்கைத் தொடங்கச் சொல்லி வலியுறுத்தலாம். சூடான கட்டுரைகள் / உரையாடல்களில் "புதிய, பதிவு செய்யாத பயனர்களைத் தடை செய்யும்" பக்கக் காப்பைப்பயன்படுத்தலாம். ஆனால், இவ்வாறான நடவடிக்கைகளை முன்கூட்டியே எண்ணற்ற கட்டுரைகளில் செய்வதைத் தவிர்க்க வேண்டும். சிக்கல் எழும்போதே இந்த நடைமுறையைச் செயற்படுத்த வேண்டும்.--இரவி (பேச்சு) 17:20, 26 செப்டெம்பர் 2012 (UTC)

கருத்து 5 தொகு

  • //ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளில் இருந்து ஏற்புடைய பகுதிகளைத் தமிழாக்கிய பிறகே, தமிழ் நோக்கு / உள்ளூர் நோக்கு / கூடுதல் தகவல் சேர்க்க முனைய வேண்டும். இதனைச் சேர்க்கும் முறையும் மேற்கண்ட உரையாடல் பாங்கு, தகுந்த ஆதாரங்களின் தன்மைக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.// நற்கீரன் சொன்னது போல ஆங்கில விக்கி என்பது ஏற்றுக்கொள்ள உடன்பாடில்லை. முதல் 10 பத்து என்று விக்கிப்பீடியாவின் கருத்துகளை குறிப்பதிலும் உடன்பாடில்லை.
  • //ஒரே பயனர் பல்வேறு IP முகவரிகளில் இருந்து மாறி மாறிக் கருத்திட்டுக் குழப்பம் ஏற்படுத்தும் நிலையைத் தவிர்க்க, பயனர் கணக்கைத் தொடங்கிய பிறகே கட்டுரைத் தொகுப்புகள் / உரையாடல்களில் ஈடுபட வேண்டும்.// இது சரிவருமா என்று தெரியவில்லை. ஒரே ஐபி முகவரியில் இருந்து பல கணக்குகளைத் தொடங்க வாய்ப்பு உண்டு.

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:36, 26 செப்டெம்பர் 2012 (UTC)

தினேசு,

  • ஆங்கில விக்கி / முதல் பத்து விக்கிகளை முன்வைத்துச் செயற்படுவது ஏற்புடையது இல்லை எனில், மாற்று வழியாக நீங்கள் பரிந்துரைப்பது என்ன? அதன் மூலம் நடுநிலையான கட்டுரைகளை விரைந்தும் பயனர் பிணக்குகள் இன்றியும் பெற முடியுமா?
  • ஒரே ஆள் பல்வேறு கணக்குகளை இயக்குவதை எதிர்கொள்வது குறித்து http://en.wikipedia.org/wiki/Wikipedia:Sock_puppetry விளக்குகிறது. எத்தருக்கு எத்தர் உலகில் உண்டு :) எனவே, நாம் மேற்கொள்வன குறைந்தபட்ச காப்பு நடவடிக்கைகளே என்னும் தெளிவு தேவை. சிக்கல் கூடினால், அதற்கு ஏற்ப என்ன செய்வது என்று சிந்திக்கலாம்--இரவி (பேச்சு) 17:20, 26 செப்டெம்பர் 2012 (UTC)
//மாற்று வழியாக நீங்கள் பரிந்துரைப்பது என்ன? // மாற்று வழியாக ஆங்கிலம் மட்டுமின்றி எந்தவொரு விக்கியையாவது(இந்திய மொழிகள் அனைத்தும், ஆங்கிலம், பிரெஞ்சு, இடாய்ச்சு) என ஏதேனும் ஒன்றை, தகுந்த ஆதாரமாக கருதலாம். http://en.wikipedia.org/wiki/Wikipedia:Sock_puppetry தற்போது பார்த்தேன், பிணக்குகள் கூடும் தருணத்தில் விக்கியின் காப்பு நடவடிக்கைகள பயன்படுத்தலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:21, 27 செப்டெம்பர் 2012 (UTC)
//ஆங்கிலம் மட்டுமின்றி எந்தவொரு விக்கியையாவது(இந்திய மொழிகள் அனைத்தும், ஆங்கிலம், பிரெஞ்சு, இடாய்ச்சு) என ஏதேனும் ஒன்றை, தகுந்த ஆதாரமாக கருதலாம்// இதை ஏற்க இயலாது, தினேசு. முதல் பத்து விக்கிகள் ஓரளவு வளர்ந்தவை, பெருமளவு பங்களிப்புகளைப் பெறுவன என்பதால் பல துறை கட்டுரைகளைக் கொண்டிருக்கும் என்றும் அவை நடுநிலையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். குறிப்பாக, தரமான ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. எல்லா விக்கிகளிலும் இந்த நிலை இருக்காது. --இரவி (பேச்சு) 15:08, 28 செப்டெம்பர் 2012 (UTC)
//எல்லா விக்கிகளிலும் இந்த நிலை இருக்காது// இதை நிச்சயமாக ஏற்க இயலாது. ஏனெனில் முதல் பத்து விக்கிகளில் மட்டுமே (அதாவது அதிக கட்டுரைகளை கொண்ட விக்கி மட்டுமே) நடுநிலையான கருத்து இருக்கும் என்பது ஏற்புடையதில்லை. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:51, 28 செப்டெம்பர் 2012 (UTC)
நடுநிலை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்று தான் கூறியுள்ளேன். இருக்கும் என்று உறுதியாகச் சொல்லவில்லை. அதனால் தான், இந்த விக்கிகளில் இருந்து ஏற்புடைய பகுதிகள் எவை என உரையாடித் தமிழாக்கலாம் என்று கூறுகிறேன். இதன் மூலம் நடுநிலையற்ற பகுதிகளைத் தவிர்க்க முடியும். ஏற்கனவே பலதரப்பட்ட ஆதாரங்களின் மெய்த்தன்மையை நிறுவுவதிலேயே நேரம் கழிவதால் தான், குறிப்பிட்ட சில முக்கிய விக்கிகளை மட்டும் அடிப்படைத் தரவாகக் கொண்டு செயற்படுவோமே என்று பரிந்துரைத்துள்ளேன். ஆங்கில விக்கி மட்டும் போதாது, பெரு விக்கிகளையும் சேர்க்கலாம் என்ற நற்கீரனின் கருத்து ஏற்புடையது. ஆனால், அனைத்து விக்கிகளையும் ஏற்கலாம் என்பது நடைமுறைச் சிக்கல் உள்ளது. பல விக்கிகள் தமிழ் விக்கியைக் காட்டிலும் தரத்தில் குறைந்தவை. 250+ விக்கிகளையும் அலசி ஆராய முடியாது.--இரவி (பேச்சு) 05:26, 29 செப்டெம்பர் 2012 (UTC)

கருத்து 6 தொகு

//x என்ற விசயத்தினை x சமய மக்கள் நம்புகிறார்கள்//
நான் ஆரம்பத்தில் விக்கியில் நுழைந்த போது எழுதிய/மேம்படுத்திய கட்டுரைகளே குமரிக்கண்டம், போதி தருமன் போன்ற சர்ச்சைக்கூறிய தலைப்புகள் தான். சோடாப்பாட்டில் தான் சிவனே கூறியது போலவே எழுதச்சொன்னார். //x என்ற விசயத்தினை x சமய மக்கள் நம்புகிறார்கள்// அதிலிருந்து நான் எந்தவொரு சர்ச்சைக்கூறிய கட்டுரையை புதிதாக எழுதினாலும் எவரும் வந்து ஆதாரம் தேவை என்று இடுவதில்லை. இட்டாலும் சிவனே கூறியது போல் வாக்கியத்தை நடுநிலையாக மாற்றி அவ்வார்ப்புருவை எடுத்த பின் எதிர்ப்பு இருக்காது. அதே சமயம் நம்பிக்கையை பொய் என்று கூறாமல் நம்பிக்கை என்றே கூற வேண்டும்.
ஒருவர் தன் நம்பிக்கைகளை பற்றி படிக்கும் போது அது நம்பிக்கை என்று கட்டுரையிலிருந்தால் அவர் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டாரே! பின் ஏன் இவ்வளவு பெரிய உரையாடல்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:27, 26 செப்டெம்பர் 2012 (UTC)
இந்த அணுகுமுறை நம்பிக்கைகளை நடுநிலையாக முன்வைப்பதற்கு உதவும். ஆனால், நம்பிக்கைகள் குறித்த குறிப்புகள் மட்டுமின்றி, இத்துறையில் சர்ச்சைக்குரியவையாக ஏராளமான விசயங்கள் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு, வரலாற்றுக் குறிப்புகளில் எது உண்மை / நம்பிக்கை, அதற்கான ஆதாரம் என்ன, ஆதாரத்தின் தரம் என்ன, உள்ளூர் நிகழ்வுகளை வைத்து உலகளாவிய விமரிசனங்களை வைப்பது... என்று பட்டியல் நீளும். ஒவ்வொரு சிக்கல் குறித்தும் தெளிவான வரையறைகள், வழிகாட்டல்கள் வகுக்கும் அளவுக்கு நாம் இன்னும் வளரவில்லை. எனவே தான், இந்தக் கொள்கை வழிகாட்டல் தேவைப்படுகிறது--இரவி (பேச்சு) 18:13, 26 செப்டெம்பர் 2012 (UTC)

கருத்து 7 தொகு

முதல் பத்து நல்ல விக்கிகளில் இருந்து கட்டுரைகளை முன்மொழிவது எனக்கு இணக்குடையது. ஆனால் ஆங்கில விக்கியில் இருந்து மட்டுமே மேற்கோள்கள் தரப்பட வேண்டும் என்பது எனக்கு ஏற்றுக் கொள்ளத் தக்கது இல்லை. தமிழகத் தமிழர்களை மட்டுமே கருத்தில் வைத்து இப்படி முன்மொழிவது போன்று தெரிகிறது. யேர்மனி, நோர்வே, பிரான்சு, இலங்கை, அரபு நாடுகள் போன்ற நாடுகளில் பிற மொழிகளில் பரிச்சியமான தமிழர்கள் உள்ளனர். அதையும் கருத்தில் கொள்ள வேண்டும். நடைமுறையில் பெரும்பாலான கட்டுரைகள் ஆங்கில விக்கியில் இருந்தே வரும் என்பது வேற விடயம். ஆனால் ஒரு பொதுக் கொள்கையை முன்வைக்கும் போது அவ்வாறு முன்வைக்க முடியாது. அடுத்தது தினேசு கூறியபடி கணக்குப் பதியாமல் கருத்துக் கூறுபவர்களின் கருத்துக்களை மட்டுமே வைத்தே முடிவெடுக்க வேண்டும். சில நாடுகளில் பெயர் கொண்டு பங்களிப்பது பயனர்களுக்கு ஆபத்தைக் கொண்டு வரலாம் என்பதை இங்கு கவனிக்க வேண்டும். அதோடு அது விக்கியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது. --Natkeeran (பேச்சு) 17:41, 26 செப்டெம்பர் 2012 (UTC)

நற்கீரன்,
ஆங்கில விக்கி ஆதாரங்கள் மட்டுமே ஏற்க வேண்டும் என்று சொல்லவில்லை. முதல் 10 விக்கிகளில் இருந்தும் தகுந்த ஆதாரங்களை எடுத்தாளலாம். அந்த ஆதாரங்கள் ஆங்கிலத்தில் இருந்தால் ஒப்பு நோக்க உதவும் என்பது நடைமுறைக் காரணம். பிற மொழி ஆதாரங்களை முதலில் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தாலே அதனைப் புரிந்து கொண்டு கருத்திட முடியும். அதுவும் அந்த ஆதாரம் இணையத்தில் இருந்தாலே இது கொஞ்சமாவது சாத்தியப்படும். பிற மொழி ஆதாரங்களைச் சேர்க்கவே வேண்டாம் என்று கூறவில்லை. முதலில் ஆங்கில வழி ஆதாரங்களை முன்வைத்து ஒரு குறைந்தபட்ச பணியை முடித்து விட்டு அடுத்த கட்டமாக பிற ஆதாரங்கள், கூடுதல் தகவலைச் சேர்க்க முனையலாம் என்றே கொள்கை முன்மொழிகிறது.
பயனர் பெயர் என்பது புனைப்பெயராகவும் இருக்கலாமே? உண்மைப் பெயரே ஆபத்து விளைவிக்கக்கூடியது. அதை விட உண்மையான ஐ. பி. முகவரியில் இருந்து பங்களிப்பது இன்னும் கூடுதல் ஆபத்தைத் தரக்கூடியது அல்லவா? பக்கங்களின் காப்பு நிலையிலேயே புதிய, பெயர் பதிவு செய்யாத பயனர்களைத் தடுக்கும் வசதி உள்ளது. ஆங்கில விக்கிப்பீடியாவின் பல பக்கங்களில் இது செயற்பாட்டில் உள்ளது. எனவே, இது விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கொள்கைகளுக்குப் புறம்பானது இல்லை.--இரவி (பேச்சு) 18:16, 26 செப்டெம்பர் 2012 (UTC)
தமிழில் ஆதாரங்கள் தரலாம். பிற மொழிகளில் தரலாம். பிற மொழிக் கட்டுரைகளையும் முதன்மையாகக் கொள்லாம். case by case போன்ற கருத்துக்களை உள்வாங்கி கொள்கை முன்மொழிவை மாற்றிலால் நன்று. --Natkeeran (பேச்சு) 18:38, 26 செப்டெம்பர் 2012 (UTC)
நற்கீரன், கண்டிப்பாக அனைவரின் கருத்துகளையும் உள்வாங்கி தேவையான மாற்றங்களைச் செய்து வாக்கெடுப்புக்கான காலத்தை நீட்டிக்கலாம். அவசரம் இல்லை. தமிழ் மொழி ஆதாரங்கள், case by case (இதனைத் தமிழில் எப்படிச் சொல்வது?) போன்றவை ஏற்கனவே உள்ளன. இன்னும் தெளிவாக முன்மொழிந்திருக்க வேண்டும். --இரவி (பேச்சு) 18:44, 26 செப்டெம்பர் 2012 (UTC)
இரவி, case by case என்பதினை சூழலுக்கு ஏற்றவாறு, அல்லது நிகழ்வுக்கு ஏற்றவாறு என்று சொல்லலாம் என எண்ணுகிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:28, 27 செப்டெம்பர் 2012 (UTC)

கருத்து 8 தொகு

சர்ச்சைக்குரிய கட்டுரைகள் எவை ? அவற்றை உள்ளடக்கி எதேனும் பகுப்புக்கள் இருக்கிறதா ? அவற்றை கண்டறியும் வழிமுறை என்ன ? ஏனென்றால் எக்கட்டுரையிலும் சர்ச்சைக்குரிய விடயங்களை சேர்க்கும் போது அது சர்சைக்குரிய கட்டுரையாக மாறலாம்--சங்கீர்த்தன் (பேச்சு) 17:56, 26 செப்டெம்பர் 2012 (UTC)

அறிவியில் சார் கட்டுரைகளில் கூட சர்ச்சைகள் எழலாம். எனினும், சமயம் சார் கட்டுரைகள் பெருமளவு நம்பிக்கை சார்ந்து இருப்பதாலும் உரையாடல்கள் உணர்வு நிறைந்தவையாக இருப்பதாலும் பிணக்குகளைத் தவிர்க்கும் பொருட்டு இக்கொள்கை முன்வைக்கப்படுகிறது. இக்கொள்கைப் பரிந்துரை சமயம் சார் கட்டுரைகளை மட்டுமே சர்ச்சைக்குரியனவாக தற்போது இனங்கண்டுள்ளது. இதற்கென தனிப்பகுப்பு ஏதும் அடையாளப்படுத்தப்படவில்லை. தேவையெனில், சிறப்பாக ஒரு வார்ப்புரு உருவாக்கி, இக்கொள்கைக்கு உட்படும் கட்டுரைகளில் இடலாம்.--இரவி (பேச்சு) 18:21, 26 செப்டெம்பர் 2012 (UTC)
பெரும்பான்மையாக சமயம், அரசியல் சார் கட்டுரைகளே சர்ச்சைக்குரியவையாக உள்ளன. சில பண்பாடு, வரலாறு, சமூகம் சார்ந்த கட்டுரைகளும் இவ்வாறு உள்ளன. --Natkeeran (பேச்சு) 18:35, 26 செப்டெம்பர் 2012 (UTC)
//பெரும்பான்மையாக சமயம், அரசியல் சார் கட்டுரைகளே சர்ச்சைக்குரியவையாக உள்ளன. சில பண்பாடு, வரலாறு, சமூகம் சார்ந்த கட்டுரைகளும் இவ்வாறு உள்ளன.// ஆம்! குறிப்பாக தமிழர் அரசியல், தமிழ் மொழி சொற்கள், தமிழ் வரலாறு போன்றவற்றின் போது இங்கே ஒருவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேச்சுப் பக்கங்களில் கேள்விக்குற்படுத்துவதை காணமுடிகிறது. குறிப்பிட்ட நபருக்கு (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) மதம் உணர்வு சார்ந்த விடயமெனில், எமக்கு எம் தமிழ் உணர்வு சார்ந்த விடயமாகும். --ஜவஹர் அலி (பேச்சு) 20:23, 26 செப்டெம்பர் 2012 (UTC)

இந்த உரையாடலை நீடிக்க வேண்டாம் என்பது எனது கருத்து தொகு

விக்கி கட்டுரைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து இவ்வளவு விரிவாக உரையாட வேண்டியதில்லை என்று நான் கருதுகிறேன். புதிதாக நுழைந்த பயனர் யாராவது விக்கிக்குப் பங்களிக்க விரும்பி, எந்தெந்த வழிமுறைகளைப் பின்பற்றுவது என்று கேட்டால் நான் அவர்களுக்கு இந்த இணைப்பைத் தான் பரிந்துரைப்பேன்: தமிழ் விக்கிப்பீடியா - கொள்கைகளும் வழிகாட்டல்களும்.

(ஆங்கில விக்கியில் இப்பொருள் குறித்த இணைப்பு இதோ: ஆங்கில விக்கி - கட்டுரை தொகுத்தல் பற்றிய வழிகாட்டல்கள்)

தமிழ் விக்கியின் வழிகாட்டல் பக்கத்துக்குச் சென்றால், கொள்கைகள் என்னும் தலைப்பின் கீழ்:

  • ஐந்து தூண்கள்
  • தமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல
  • விதிகளை மீறு என்பதன் பொருள்
  • கொள்கைகளும் வழிகாட்டல்களும்

ஆகிய கிளைத் தலைப்புகள் இணைப்புகளாகத் தரப்பட்டுள்ளதைக் காணலாம். ஒவ்வொரு இணைப்பையும் சொடுக்கினால் அங்கே மிகத் தெளிவான வழிகாட்டலை அறிந்துகொள்ளலாம்.

தொடர்ந்து, உள்ளடக்கம் பற்றிய வழிமுறைகள் என்னும் தலைப்பின் கீழ்:

  • நடுநிலை நோக்கு
  • மெய்யறிதன்மை
  • மேற்கோள் சுட்டுதல்
  • கிரந்த எழுத்துப் பயன்பாடு
  • கேள்விக்குட்படுத்தல்

போன்ற பல கிளைத் தலைப்புகள் இணைப்புகளாகத் தரப்பட்டுள்ளதைக் காணலாம். ஒவ்வொரு இணைப்பையும் சொடுக்கினால் அங்கேயும் மிகத் தெளிவான வழிகாட்டலை அறிந்துகொள்ளலாம்.

அதன்பிறகு, பங்கேற்புச் சூழல் என்னும் தலைப்பின் கீழ்:

  • கண்ணியம்
  • இணக்க முடிவு
  • பாதுகாப்புக் கொள்கை
  • ஒழுங்குப் பிறழ்வுகள்
  • விக்கி நற்பழக்கவழக்கங்கள்
  • தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
  • விசமிகளை எதிர்கொள்வது எப்படி?

போன்ற பல கிளைத் தலைப்புகள் இணைப்புகளாகத் தரப்பட்டுள்ளதைக் காணலாம். ஒவ்வொரு இணைப்பையும் சொடுக்கினால் அங்கேயும் மிகத் தெளிவான வழிகாட்டலை அறிந்துகொள்ளலாம்.

இவ்வளவு விரிவான வழிகாட்டல் முறை தமிழ் விக்கியில் இருந்த போதும் சர்ச்சைக்குரியது, சர்ச்சைக்கு அப்பாற்பட்டது என்று சில பொருள்களை அடையாளம் காட்டுவது இயலுமா என்பதே கேள்விக்குறி. எந்த ஒரு பொருளையும் சர்ச்சைக்கு உரியதாக நாம் பார்க்க முடியும். ஆனால், எந்த ஒரு பொருள் குறித்தும் நடுநிலை நின்று எழுதவும் முடியும். விக்கியின் விரிவான வழிமுறைகள் இதற்கு மிகவும் உதவுகின்றன.

எனவே, புதிய ஒழுங்குகளை உருவாக்க வேண்டாம், ஏற்கெனவே மிகப் பெரும் முயற்சி எடுத்து, நன்முறையில் வகுக்கப்பட்டுள்ள ஒழுங்குகளை ஒவ்வொரு பயனரும் கடைப்பிடித்தாலே தமிழ் விக்கி தழைத்து வளரும்.

ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், யாராவது ஒரு பயனர் தமிழ் விக்கியின் ஒழுங்குகளை அப்பட்டமாக மீறிச் செயல்பட்டால் என்ன செய்வது என்பதே. அதற்கும் விக்கியில் வழிமுறைகள் உள்ளன. அவற்றைச் செயல்படுத்தினாலே போதும். நிலைமை சரியாகிவிடும். குறிப்பாக, சம்பந்தப்பட்ட கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் குறிப்பை விட்டுச் சென்று, கட்டுரையைச் சீர்படுத்த வேண்டுகோள் விடுக்கலாம். விசமத்தனம் பற்றி தெளிவான ஒழுங்குகள் உள்ளதால் அது பற்றிக் கவலை இல்லை.

எனவே, எனது பரிந்துரை இது: இந்த உரையாடலை இனியும் நீட்ட வேண்டாம். ஏற்கெனவே கைவசம் உள்ள விக்கி ஒழுங்குமுறைகளை மீண்டும் ஒருமுறை வாசித்துப் புரிந்துகொண்டு அவற்றைச் செயலாக்குவோம். நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 18:16, 26 செப்டெம்பர் 2012 (UTC)

பவுலின் கருத்தை நான் ஆதரிக்கிறேன். தற்போது மிகச் சில சமயம் சார்ந்த கட்டுரைகள் தவிர, சர்ச்சைக்கு உரிய கட்டுரைகள் என்று தமிழ் விக்கியில் அதிகம் கிடையாது. அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதனால் அதுவே சர்ச்சயை உருவாக்கும் ஒன்றாக மாறிவிடவும் கூடும். விக்கிப்பீடியாவில் தற்போது இருக்கும் வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி நிலைமையைச் சீர்செய்ய முடியும் என்றே நானும் கருதுகிறேன். --- மயூரநாதன் (பேச்சு) 19:03, 26 செப்டெம்பர் 2012 (UTC)
பவுல், மயூரநாதன் உங்கள் பெருநோக்கை ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளவை அனைத்துமே அகவயமானவை. அந்நிலையை அடைவதற்கான புறவயமான வழிமுறை ஒன்றை அடையும் முயற்சியே இது. தொகுப்புப் போர்களில் இருந்து கட்டுரைகளைக் காத்தல், புதிய / அடையாளம் காட்டாத பயனர்களிடம் இருந்து கட்டுரையைப் பூட்டுதல், ஒழுங்குப் பிறழ்வுகளில் ஈடுபடுவோரை தடை செய்தல் ஆகியவை அனைத்துமே ஏற்கனவே உள்ளவே. இங்கு, அவற்றை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தி தெளிவான கெடுகளைத் தருகிறோம். சிறப்பான ஆதாரங்களை முன்வைத்து எழுத வேண்டும் என்பதும் ஏற்கனவே உள்ளது. இதனை உறுதி செய்ய முதல் பத்து விக்கிகளில் இருந்து தகுந்த ஆதாரங்களை எடுத்து எழுதி விட்டுப் பிறகு புதிய ஆதாரங்களுக்குப் புகலாமே என்ற பரிந்துரை முன்வைக்கப்படுகிறது. இது ஒரு முறையான கொள்கையாக இல்லாமல் நடைமுறைப்படுத்த இயலாது. நிருவாகிகள், பிற பயனர் தலையீடின்றி குறிப்பிட்ட துறை குறித்த ஆர்வமுள்ளோர் மட்டும் ஒன்று கூடி உரையாடி இசுலாம் குறித்த விமர்சனங்கள் போன்ற ஒரு கட்டுரையை http://en.wikipedia.org/wiki/Criticism_of_Islam கட்டுரையின் தரத்துக்கு நகர்த்துவதற்கு ஒரு மாற்று வழிமுறையைப் பரிந்துரைக்க இயலுமா? விக்கி நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்று கட்டுரையை நீக்குவதோ பூட்டுவதோ பயனர்களைத் தடுப்பதோ இலகு. ஆனால், அத்தகைய கட்டுரைகளிலும் கூட குறிப்பிட்ட பயனர்களே மேம்பட்ட பங்களிப்புகளை வழங்குவதற்கான தெளிவான புறவயமான வழிமுறை என்ன?--இரவி (பேச்சு) 03:45, 27 செப்டெம்பர் 2012 (UTC)
ரவி, நீங்கள் குறிப்பிடுகின்ற புறவயமான வழிமுறை எவ்வாறு அமையலாம் என்று ஓரளவு விளக்குவீர்களா? சில வழிமுறைகள் தந்தால் அவற்றை ஒன்றோடொன்று ஒப்பிட்டு, எவ்வழிமுறை மிகப் பொருத்தமாகலாம் என்பது குறித்து கருத்துத் தெரிவிப்பது எளிதாகும். நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 20:26, 28 செப்டெம்பர் 2012 (UTC)
எது ஏற்புடைய ஆதாரம் என்று முழுமையாக வரையறுப்பது அகவயமானது. ஒரே தன்மையுடைய ஆதாரங்களைத் தனித்தனியே அணுகியே முடிவு செய்ய வேண்டும் என்பதால் பெரும் பணியும் கூட. இந்நிலையில் உலகளவில் முதல் பத்து நிலைகளில் உள்ள விக்கிப்பீடியாக்களில் குறிப்பிட்டுள்ள ஆதாரங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அவற்றின் ஏற்புடைமையை உரையாடி முடிவு செய்யலாம் என்பது இந்தப் பெரும்பணியின் சுமையைக் குறைப்பதற்கான ஒரு புறவயமான பரிந்துரையாகக் கருதுகிறேன். முதல் பத்து மட்டுமே என்பது அகவயம். அதனை ஏற்றுக் கடைப்பிடிப்பது புறவயமான செயல்முறை :) பயனர் நெறி, தடை குறித்த கொள்கைகள் ஏற்கனவே உள்ளன. இந்தத் துறையில் இந்தப் பிறழ்வுக்கு இத்தனைக் காலம் தடை என்று முன்கூட்டியே அறிவித்து விடுவதையும் புறவயமான அணுகுமுறையாகக் கருதுகிறேன். அருள்கூர்ந்து இலகுவாக நடைமுறைப்படுத்தக்கூடிய வேறு பரிந்துரைகள் இருந்தால் தெரிவியுங்கள். நன்றி--இரவி (பேச்சு) 13:01, 6 அக்டோபர் 2012 (UTC)Reply
  • இரவி, ஏற்புடைய/நம்பகமான ஆதாரம் (reliable source/evidence/authority) காட்டவேண்டும் என்று பயனர்களிடம் கோருவது முறையே. எனினும் இன்னின்ன மொழி விக்கியைப் பின்பற்றி ஆதாரங்களைக் காட்டுங்கள் என்று கூறுவது பொதுவாக நல்லதல்ல. ஆயினும், தமிழ் விக்கியர்கள் பெரும்பாலும் ஆங்கில விக்கியை மூலமாகக் கொண்டு கட்டுரையாக்கம் செய்வதாகத் தெரிகிறது. தமிழ்ப் பயனர்கள் பெரும்பாலானோர் ஆங்கில அறிவுடையோர் என்பதாலும், வேறு மொழியறிவும் பலருக்கு உண்டு என்பதாலும் (குறிப்பாக, பிரஞ்சு, செருமானியம்...), கீழ்வருமாறு வழிமுறை நல்கலாம் என்று நினைக்கிறேன்: கட்டுரைகளில் தருகின்ற கருத்துகளுக்கும் எதிர்-கருத்துகளுக்கும் ஏற்புடைய/நம்பகமான ஆதாரங்கள் காட்டுவது முறை. இந்த ஆதாரங்கள் ஆங்கில விக்கியிலிருந்தோ பிற மொழி விக்கிகளிலிருந்தோ எடுக்கப்படலாம்.

இதை ஒரு சிறப்பு வழிமுறையாகக் கொள்ளலாம். நீங்கள் கூறுவதுபோல, வழக்கமான விக்கி நெறிகளைக் கட்டாயம் வலியுறுத்த வேண்டும்.

உலகளவில் முதல் பத்து நிலைகளில் உள்ள விக்கிகள் யாவை என்று பார்த்தேன். ஆங்கிலம், செருமானியம், பிரஞ்சு, போலந்து மொழி, சப்பானியம், ஒல்லாந்தியம், இத்தாலியம், போர்த்துகீசியம், எசுப்பானியம், உருசியம் ஆகியவை உள்ளன. இவற்றையெல்லாம் பெயர்சொல்லிக் காட்டவேண்டிய தேவை இல்லை. பத்து என்று வரையறை செய்யவும் வேண்டாம் என்று கருதுகிறேன். --பவுல்-Paul (பேச்சு) 05:05, 7 அக்டோபர் 2012 (UTC)Reply

கருத்து 10 தொகு

வணக்கம். பயனர் மயூரநாதன் கருத்துக்கு நான் உடன்படுகிறேன், சர்ச்சைக்கு உள்ளான ஒரு சமய சார் கட்டுரையினால்தான் தமிழ் விக்கியில் இவளவு குழப்பமும் வந்தது என்று நான் கருதுகிறேன், அதே வேளை தமிழில் எழுதும் பொழுதோ அல்லது வேறு மொழியில் எழுதும் பொது சிலவேளைகளில் எழுத்துப்பிழை வரத்தான் செய்யும் அதற்காக அந்த பயனரை தமிழே தெரியாதவர், இலக்கணம் தெரியாதவர், பொய்யர் என்று ஒரு விக்கி பயனரே அதிகம் குழப்பத்தை விளைவிக்கிறார். இந்த சர்ச்சையே அவராலே வந்தது என்பது எனது கருத்து. அந்த ஒரு பயனரின் விருபத்துக்கு ஏற்ப மற்ற பயனர்களால் செயல் பட முடியாது. எனது கட்டுரைகளிலையே அந்த பயனர் தேவை அற்ற ஆதாரம் அற்ற விமர்சனத்தையும், இழிவான வார்த்தைகளையும் பாவித்தார் அப்போதும் நான் அமைதியாக இருந்தேன். ஆனால் அந்த பயனரின் சமைய சார் கட்டுரைக்கு விமர்சனம் வரும் பொது வானத்துக்கும் பூமிக்கும் துள்ளுகிறார். இது எந்தவகையில் நடுநிலை?? நாம் ஆக்கம் உள்ளவர்களாக இருப்போம். அளிப்பவர்களாக இருக்க வேண்டாம் என்பது எனது கருத்து.--சிவம் 03:38, 27 செப்டெம்பர் 2012 (UTC)

சிவம், இப்பக்கத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அணுகுமுறை பற்றிய கருத்துகளை மட்டும் தெரிவிக்கவும். பயனர்களைப் பற்றிய முறையீடுக்கு விக்கிப்பீடியா:பயனர் தடை வாக்கெடுப்புகள் பக்கத்தைப் பயன்படுத்தலாம். தடுக்க வேண்டிய பயனர் பெயர் / ஐ. பி. முகவரி, காரணம், அதற்கான எடுத்துக்காட்டுகளைத் தரலாம்.

நன்றி.--சிவம் 03:53, 27 செப்டெம்பர் 2012 (UTC)

கருத்து 11 தொகு

மேலேயுள்ள பரிந்துரைகளில் 1, 7 எண்ணிட்ட பரிந்துரைகளைத் தவிர மற்றவற்றை ஏற்கிறேன். ஆங்கில விக்கிப்பீடியா என்றில்லாமல் பிரித்தானிக்கா போன்ற கிளைநிலை அறிவகங்களையும் (tertiary and summary articles) கருத்தில் கொள்ளலாம். இவ்வாறான கட்டுரைகளில் ஒரு கருத்தை முன்வைப்பதற்கு நல்ல எடுத்துக்காட்டுக்களைத் தந்து இதை வழிகாட்டலாக்கலாம். ஆங்கில விக்கியில் ஒரு பயனர் தீவிர நிலைப்பாட்டை உடையவர். இருந்தாலும் அவரது முன்மொழியும் முறையில் இருந்து நாம் பலவற்றைக் கற்றுக் கொள்ள முடியும். காண்க: en:User:Fowler&fowler/Kingdom of Mysore FAR, en:User:Fowler&fowler/Classical languages of India. ஆங்கில விக்கியில் சில குறிப்பிட்ட கட்டுரைகளைத் தவிர மற்றவை இந்த அளவுக்கு ஆய்வுக்குள்ளாகியிருக்குமா தெரியவில்லை. பெரும்பாலும் முக்கிய கட்டுரைகளுள் சிக்கலான கட்டுரைகள் அவ்வாறு மதிப்பிடப் பட்டிருக்கலாம். -- சுந்தர் \பேச்சு 14:03, 6 அக்டோபர் 2012 (UTC)Reply

இவ்வாறான கட்டுரைகளில் en:WP:PRIMARY கொள்கையை விக்கிப்பீடியா:நடுநிலைமைக் கொள்கை, விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை ஆகியவற்றுடன் செயல்படுத்தினாலேயேகூட பெருமளவு சிக்கலைத் தவிர்க்கலாம். முதலாவது கொள்கையை எப்படி நடைமுறையில் பின்பற்றலாம் என்பதற்கு பின்வரும் புனைவுச் சூழல்களைக் காட்டாகக் கொள்ளலாம்.
  • திருமணமான ஒரு அரசியல் தலைவருக்கும் வேறு நபருக்கும் உறவு இருப்பதாகப் பல இடங்களில் குறிப்பு தென்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அத்தகவலை இணைக்க வேண்டுமெனில் பின்வரும் சான்றுகளை ஆய்ந்து கிளைநிலைச் சான்றின் அடிப்படையிலேயே சேர்க்க முடியும். முதல்நிலைச் சான்று: இருவரும் அடிக்கடி சேர்ந்து கூட்டங்களில் கலந்து கொள்ளும், அத்தோடு பூங்காக்களில் சந்திக்கும் காட்சிகளின் நிழற்படங்கள். இவற்றை இதுபோன்ற கட்டுரைகளில் சான்றாகப் பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும். (குரான் என்ன சொல்கிறது, பைபிள் என்ன சொல்கிறது, கீதை என்ன சொல்கிறது, முதல்நிலைத்தகவல் அடிப்படையில் இந்தியாவின் மக்கள்தொகைக்கும் வளர்ச்சிக்கும் தொடர்பு காட்டும் பயனர் வரைபடம் போன்றவையும் இத்தகையவைதான்.) அவற்றைப் பயன்படுத்தும்போது சான்றைக் கொண்டு சில முடிவுகளுக்கு வருவது பயனரின் கருத்தால் வருவது. அது இத்தகைய கட்டுரைகளில் கூடாது.
  • இரண்டாம் நிலைச் சான்றுகள்: அடுத்து நாளிதழ்களில், இருவரைப் பற்றியும் இலைமறை காயாகக் கிண்டலடித்து செய்திகள் வருவது. இவை முதல்நிலைச் சான்றுகளின் அடிப்படையில் செய்தி எழுதுபவர்களால் ஊகித்து எழுதியவை. இவற்றையும் சின்னச் சின்ன விசயங்களைத் தவிர்த்து சர்ச்சைக்குறிய விசந்த்தில் சான்றாகக் கொள்ள முடியாது.
  • அதுவே, அந்த நபரைப் பற்றிய பிரித்தானிக்கா கட்டுரையோ, வேறு முக்கிய தரவுகளில் பரவலாக உண்மை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டதாக எழுதிய வாழ்க்கைக் குறிப்போ இருந்தால் அதை மூன்றாம் நிலைச் சான்றாகக் கொண்டு பயன்படுத்தலாம். இதில் கூடுதலாகக் கவனிக்க வேண்டியது, தமிழ் விக்கிக் கட்டுரையில் நாம் சேர்க்கும் ஒரு விசயம் இத்தகைய தரவுகளில் அப்படியே தரப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் அங்கும் பயனரின் ஊகம், சொந்த ஆய்வு, சோடிப்பு போன்றவையாகி விட வாய்ப்புண்டு. இங்கே பிரித்தானிக்கா போன்றவை நம்பத்தகுந்தவை என்பது வேறு செய்தி, மாறாக அவை கிளைநிலைச் சான்று என்பதே முகனை.
  • அடுத்து விசயத்துக்கேற்றாற்போல சான்றுகளின் நம்பகத்தன்மையும் கூடுதலாக இருக்க வேண்டும். இங்கே பிரித்தானிக்கா, பி.பி.சி. போன்றவற்றின் நம்பகத்தன்மை முக்கியமாகிறது.
இது போன்று ஏற்கனவே உள்ள கொள்கைகளை வலுப்படுத்திச் செயல்படுத்தினால் போதுமானது. (இப்போதைக்கு வேண்டுமானால் மேலே பரிந்துரைத்துள்ள சிறப்பு ஏற்பாட்டை வைத்துக் கொள்ளலாம்.) -- சுந்தர் \பேச்சு 17:39, 6 அக்டோபர் 2012 (UTC)Reply
சுந்தர், தகுந்த வழிகாட்டல் பக்கங்களுக்கான இணைப்புகள், எடுத்துக்காட்டுகளைத் தந்தமைக்கு நன்றி. நீங்கள் மறுப்பு தெரிவித்துள்ள 1, 7 ஆகியவை தாம் முக்கியப் பரிந்துரைகளே :) அவை செயற்படுத்தப்பட்டாலே மற்ற நடவடிக்கைகளுக்குத் தேவை இருக்காது. ஆங்கில விக்கிப்பீடியா மட்டுமின்றி முதல் பத்து விக்கிகளையும் கணக்கில் கொள்ளலாம் என்று புரிந்துணர்வு உள்ளது. பிரித்தானிக்கா போன்றவற்றில் சுட்டப்பட்டுள்ள ஆதாரங்கள் அடிப்படையில் எழுதுவதும் ஏற்புடையதே. பிரித்தானிக்கா போன்று இன்னும் சில உயர் தரப் பரிந்துரைகளைத் தர இயலுமா? தெளிவாக வரையறுத்த ஒரு சில மூலங்களில் இருந்து தொடங்கி அதன் பிறகு பிற ஆதாரங்களுக்கு நகர்வது தமிழ் விக்கிச் சூழலுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். இந்த வரையறை இல்லா நிலையில் சர்ச்சைக்குரிய கட்டுரைகளின் தரம் படு மோசமாக இருப்பதாகவே உணர்கிறேன்.--இரவி (பேச்சு) 20:24, 8 அக்டோபர் 2012 (UTC)Reply
எனது முந்தைய கருத்தைச் சற்று திருத்தியுள்ளேன். 1, 7 ஆகியவற்றில் பின்வரும் மாற்றங்கள் இருந்தால் நல்லது என நினைக்கிறேன். பலரும் சொன்னதுபோல முதல் பத்து விக்கிப்பீடியாக்களைக் கணக்கில் கொள்ளலாம். சில விதிவிலக்குகளும் தேவை. காட்டாக, ஒரு விசயம் உள்ளூர் விசயமாக இருப்பின் மற்ற விக்கிக்களும் அந்த அளவுக்கு கவனம் இருந்திருக்காது. பெரிய விக்கிக்களில் ஒரு செய்தியைப் பற்றிய கட்டுரை இல்லாமலோ, குறுங்கட்டுரையாகவோ இருந்தால் நான் மேலே குறிப்பிட்ட மற்ற சான்றுகளின் அடிப்படையில் செல்லலாம். தமிழ்ச் சான்றுகளில் நம்பத்தகுந்த கிளைநிலைச் சான்றுகளையும் கண்டறிய வேண்டும். குறைந்தது பலரும் மேற்கோள் காட்டும் உரைநூலாக இருக்க வேண்டும் எனக் கொள்ளலாம். மற்றபடி மேலே சொன்னதுபோல வழக்கமான கொள்கைகளை இத்தகைய தலைப்புகளில் சற்று கூடுதல் உறுதியுடன் பின்பற்ற வேண்டும். முன்வரைவு ஏற்கப்பட்டபின் சிறந்த எடுத்துக்காட்டுக்களுடன் வழிகாட்டல் ஒன்றை எழுதுவோம். அப்போதுதான் பின்பற்றுவதற்கு எளிதாக இருக்கும். -- சுந்தர் \பேச்சு 10:51, 10 அக்டோபர் 2012 (UTC)Reply

புதுப் பயனர் சேவை அவசியம்!! தொகு

வணக்கம். பல புதுப்பயனர்கள் இங்கு அதிகமான கட்டுரைகளை வரைவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால் விக்கி நடைமுறைக்கு ஏற்ப அளவில் இல்லை என்பது உண்மை!! அது ஒன்றும் பிரச்சனை இல்லையே!! ஒரு புதுப் பயனரின் கட்டுரையை திருத்துவதன் மூலம் அந்த பயனர் ஆர்வம் மேன்படுகிறது!! பயனரும் கற்றுக் கொள்வர், அதே வேளை மற்ற பயனர்களும் ஊக்கம் கொள்வார்கள். ஆனால் அவர்கள் எழுதும் கட்டுரைகளுக்கான முயச்சியை நாம் நீக்கும் பொது அவர்களின் ஆர்வம் அற்றுப்போகிறது!!! புதுப் பயனர்களின் கட்டுரைகளை உடனடியாக நீக்குவது மிகப் பெரும் தவறு!! அவர்களின் கட்டுரைகளை உடனடியாக நிக்குவது நன்று அன்று.! நீக்குவதற்கான நேரம் அல்லது அதற்கான கால அவகாசத்தை தாராளமாக குடுக்கலாமே. இப்படிச் செயல்ப் பட்டால் எமது முயச்சி வீணாகிவிடும்! அதனால் புதுப் பயனர் விக்கிபீடியாவில் அனுபவம் குறைந்தவராக இருக்கலாம். ஆனால் அனுபவக்களை நாம்தான் அவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். அதை விடுத்து!! ஒரு புது பயனரின் முயட்ச்சியை நாம் ஒரு போதும் கெடுக்க கூடாது!! இது பிழையாக தெரிகிறதே!! விக்கி என்பது ஒரு பரிச்சைக் களம் என்பது உண்மை. அதற்காக புது பயனர்களின் திறமையை கொஞ்சம் விட்டு பிடிக்கலாமே!!! அப்போதுதான் திறமை வெளிப்படும்!!! வளரும் பயிரை ஆரம்பத்தில் கிள்ளி விட்டால் யாருக்கு அதன் உண்மைத் தன்மை புரியும்??? x க்கு தெரியுமா? yக்கு தெரியுமா? zக்கு தெரியுமா? தமிழ் விக்கியின் தலைமை யார்?? இப்போது நான் சொன்ன வார்த்தைகளுக்கு மாற்று கருத்து ஏதும் இல்லை என்பது எனக்கு தெரியும்!! ஆனால் அதிகாரம் பலர் கையில் இருப்பதனால் நீதி எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை!!!--சிவம் 22:52, 8 அக்டோபர் 2012 (UTC)

சிவம் இதற்கும் இந்தப் பக்கத்திற்கும் தொடர்பில்லை, வேறு ஏதாவது பக்கத்தில்(ஆலமரத்தடி)இந்த உரையாடலை ஆரம்பித்திருக்கலாம். ஏற்கனவே இது பற்றி உரையாடல் இங்கு நடந்துள்ளது. பெரும்பாலும் மேம்படுத்த இயலாத கட்டுரைகளை மட்டுமே நீக்குகிறோம் (ஆங்கிலத் தலைப்பு, உள்ளடக்கம், பயனர் தகவல்கள், பதிப்புரிமை மீறல், கலைக்களஞ்சிய கட்டுரை அற்றவை...), உங்களுக்கு ஏதாவது கட்டுரை மேம்படுத்த கூடியது ஆனால் நீக்கப்பட்டு விட்டது எனத் தோன்றினால் யாரவது ஒரு நிர்வாக அணுக்கம் கொண்ட பயனரிடம் கேளுங்கள், அவர்கள் கண்டிப்பாக மீட்டமைத்துக் கொடுப்பார்கள். மேலும் நீங்கள் நிர்வாகி, அதிகாரி போன்றவற்றை பற்றி தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என நினைக்கிறேன், இங்கு யாரிடமும் எந்த அதிகாரமும் கிடையாது, அனைவரும் சாதாரண பயனர்களே, மேற்கூறிய பயனர் குழுவில் உள்ள பயனர்களுக்கு சில மேலதிக (நீக்கல், தடுத்தல்) தெரிவுகள் (options) உள்ளன அவ்வளவுதான். ஒரு பயனர் தவறாக இயங்குவதாக நீங்கள் கருதினால் தயங்காமல் சுட்டிக் காட்டுங்கள், கண்டிப்பாக திருத்திக் கொள்/வோம்/வார்கள், கண்டிப்பாக இங்கு யாரும் தன்னிச்சையாக அதிகாரத்துடன் இயங்க இயலாது...--சண்முகம்ப7 (பேச்சு) 01:54, 9 அக்டோபர் 2012 (UTC)Reply

சரி சரி நன்றி சண்முகம். இப்போ அழகாக புரிந்துள்ளது. நான் எதற்கு கேட்டேன் என்றால், ஒரு சில புதுப் பயனர்கள் புது கட்டுரை ஆரம்பிப்பார்கள் அதை நான் வாசிக்கும் பொது எழும் சந்தேகத்தை தீர்ப்பதற்கு வேறு பக்கத்துக்கு போட்டு மீண்டும் வரும் பொது நீக்கி உள்ளது என்று இருக்கும் அதனால் கொஞ்சம் சிரமப்பட்டேன். அதனால்த்தான் எனக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்தது. நீக்கு போது புதுப் பயனர்கள் ஒரு பொருத்தமற்ற கட்டுரையை இடும் போது நீக்குவதற்கான வார்ப்புருவையும் காரணத்தையும் இட்டு சில காலம் விடுவது நன்று. உடனடியாக நீக்குவதால் சில புதுப் பயனர்கள் குழம்பி விட வாய்ப்பு உள்ளது. வார்ப்புரு இடுவதன் மூலம் அவரை உரையாடலுக்கு அழைக்க தூண்டுவதாகவும் அமைந்துவிடும். இப்படி இருக்கிறது நீங்கள் குடுத்த பக்கத்தில். நன்றி--சிவம் 08:49, 9 அக்டோபர் 2012 (UTC)

முடிவு தொகு

Return to the project page "சர்ச்சைக்குரிய துறைகள்".