விஜயமங்கலம்

இது தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் வருவாய் நகரம் ஆகும்.
(விஜயபுரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விஜயமங்கலம் (ஆங்கிலம்:Vijayamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.

விஜயமங்கலம்
விஜயமங்கலம்
அமைவிடம்: விஜயமங்கலம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°14′N 77°30′E / 11.23°N 77.5°E / 11.23; 77.5
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 6,455 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


303 மீட்டர்கள் (994 அடி)

வரலாறு

தொகு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலம் உள்ளது. பல ஆயிரம் வருடப் பழமையான இந்தத் திருத்தலம் மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் மூலம் எழுப்பப்பட்டு, அவருக்குப் பிறகு பல மன்னர்களால் பாரம்பரியம் குறையாமல் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. பாண்டவர்களின் வனவாசத்தில் கடைசி பதிமூன்றாம் வருடத்தில் அன்யாத வாசத்தின் பொழுது அனைவரும் மறைந்து இருந்து வாழ வேண்டும் என்ற நிபந்தனையின் காரணமாகத் தற்பொழுது தாராபுரம் என்று அழைக்கப்படும் விராடபுரத்திற்கு வந்தனர். பஞ்சபாண்டவர்களில் ஒருவரான விஜயன் இந்த திருத்தலத்தின் அருகில் உள்ள விஜயபுரி அம்மன் என்று தற்பொழுது அழைக்கப்படும் அம்மனின் ஆலயத்தின் வன்னி மரத்தில் தான் தனது காண்டீபம் மற்றும் பல ஆயுதங்களையும் மறைத்து வைத்து, கோயிலில் திருநங்கையாக மாறி தாராபுரம் என்று அழைக்கப்படும் விராட தேசத்தில் மறைந்து இருந்தார். அன்யாத வாசத்தின் கடைசியில் துரியோதனன் உடன் நடந்த போரில் (விஜயன்) வெற்றி பெற்றான்.தான் பெற்ற வெற்றிக்காக அந்த தலத்தில் எழுந்தருளி இருந்த நாகேஸ்வரருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் மக்களுக்குப் பயன் தரும் வகையிலும் இந்த நாகேஸ்வரர் திருக்கோயிலுக்குத் திருப்பணி செய்து விஜயபுரி என்று அழைக்கப்படும் விஜயமங்கலம் என்ற ஊரையும் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நிர்மாணித்தான். விஜயன் நிர்மாணித்ததன் காரணமாக இந்த இடம் விஜயபுரி என்றும் விஜயமங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது.

கொங்கு நாடு பழங்காலத்தில் வட, தென், மேல், கீழ் கொங்கு என நான்காக வகுக்கப்பட்டது. அதில் விஜயமங்கலம், வட கொங்கு பகுதியை சார்ந்தது. பழங்காலத்தில் கொங்கு நாட்டை, 24 கோட்டங்களாக பிரித்தனர். அதில் ஒரு கோட்டமாக விளங்குவது குறுப்பு நாடு என்பதாகும். 24 கோட்டங்களில் சிறந்த கோட்டமாக விளங்கியது, இக்குறுப்பு நாட்டு கோட்டம். இதன் தலைநகராக விளங்கியது விஜயமங்கலமாகும். பெருங்கதை காப்பிய ஆசிரியர் கொங்கு வேளிர், சிலப்பதிகார பெருங்காப்பியத்தின் உரை ஆசிரியர் அடியார்க்கு நல்லார், கொங்கு மண்டல சதகம் எனும் பிரபந்த ஆசிரியர் கார்மேகப்புலவரும் விஜயமங்கலத்தில் பிறந்தவர்கள். நன்னூல் எனும் செந்தமிழ் இலக்கண நூல் தந்த, பவணந்தி முனிவரும், விஜயமங்கலம் அருகே உள்ள சீனாபுரத்தில் பிறந்தவரே. "ஓங்கு தமிழ்சேர் விஜயமங்கை' என்ற அடைமொழிக்கு ஏற்ப, இவ்விஜயமங்கத்தின் வடபாலும், தென்பாலும், இரண்டு புலவர் பாளையங்கள், தமிழ் கூறும் நல்லுகத்தின் நான்காவது தமிழ் சங்கம் அமையப்பெற்று, தமிழ் மொழி வளர்க்கப்பட்டுள்ளது.

விஜயநகரப் பேரரசு ஆட்சிக்காலத்தில் விஜயமங்கலம் தலைநகராகவும் இருந்து வந்துள்ளது

சமண தீர்த்தங்கரர் கோயில்

தொகு

விஜயமங்கலத்தில் எட்டாவது சமண தீர்த்தங்கரர் சந்திரபிரபா கோயில் உள்ளது.[3]

புவியியல்

தொகு

இவ்வூரின் அமைவிடம் 11°14′N 77°30′E / 11.23°N 77.5°E / 11.23; 77.5 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 303 மீட்டர் (994 அடி) உயரத்தில் இருக்கின்றது.

வெளி இணைப்புகள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. மூலவரின்றி தீர்த்தங்கரர் கோவிலில் வழிபாடு : தீபத்தை மட்டுமே வணங்கும் பக்தர்கள்
  4. "Vijayapuri". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயமங்கலம்&oldid=3772265" இலிருந்து மீள்விக்கப்பட்டது