விண்டோசு எக்சு. பி.

மிகப்பிரபலமாக இருந்த ஒரு கணினி இயக்கு தளம்
(வின்டோஸ் XP இலிருந்து வழிமாற்றப்பட்டது)


விண்டோஸ் எக்ஸ்பி (Windows XP), என்பது வீடு மற்றும் அலுவலகங்களில் உள்ள கணினிகளை இயக்கும் இன்றியமையாத இயக்கு தளங்களில் ஒன்று. இதன் பெயரின் பின்னே ஒட்டியுள்ள XP எனும் ஆங்கில எழுத்துக்களானது துய்ப்பறிவு அல்லது பட்டறிவு என்னும் பொருள்படும் EXperience என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும்.[1] விண்டோஸ் எக்ஸ்பியானது விண்டோஸ் 2000 உடன் விண்டோஸ் மில்லேனியம் பதிப்பின் வசதிகளும் ஒருங்கிணைத்து முதன் முதலாக வீட்டுப் பயன்பாடுக்கு என விண்டோஸ் எண்டி கருனியிலிருந்து (கேர்ணலில், kernal) உருவாக்கப்பட்ட இயக்குதளமாக இது உள்ளது. இப்பதிப்பானது அக்டோபர் 25, 2001 வெளிவிடப்பட்டது. சனவரி 2006 IDC சேவையின் படி 400 மில்லியன் விண்டோஸ் XP இயக்குதளப் படிகள் கணினிகளை இயக்குகின்றன.[2] விண்டோஸ் எக்ஸ்பியைப் பின்பற்றியே விண்டோஸ் விஸ்டா இயங்குதளம் உருவாக்கப்பட்டது. விஸ்டா பெருந்தொகையாகக் பயன்படுத்தும் வாடிக்கையாளருக்காக 8 நவம்பர்2006 இலும் உலகளாவிய பொது வாடிக்கையாளர்களுக்காக 30 ஜனவரி2007 முதல் பதிவிறக்கக் கிடைக்கப் பெற்றன. 30 ஜூன் 2008 முதல் விண்டோஸ் எக்ஸ்பியை நேரடியாகப் பெற்றுக் கொள்ள இயலாது என்றாலும் கணினியை உருவாக்குபவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.[3] 31 ஜூலை2009 வரை விண்டோஸ் விஸ்டா அல்ட்டிமேட் மற்றும் வணிக பதிப்புக்களை பதவியிறக்கம் (Downgrade) செய்வதன் மூலமும் விண்டோஸ் எக்ஸ்பியைப் பெற்றுக் கொள்ளலாம்.[4][5]

விண்டோஸ் எக்ஸ்பி

மேசைக் கணினியில் விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 3

நிறுவனம்/
ஆக்குநர்:
மைக்ரோசோஃப்ட்
செயற்படுமுறைமை குடும்பம்: விண்டோஸ் என்டி
ஆதாரமூல மாதிரியம்: மூடிய ஆதாரமூலம்
மிகப்பிந்திய நிலையான வெளியீடு: சேவை பொதி 3 / 21 ஏப்ரல் 2008
உருமைய வகை: கலப்பு உருமையம்
கொடாநிலை பயனர் இடைமுகம்: வரைவியல் பயனர் இடைமுகம்
உரிமம்: மைக்ரோசோஃப்ட் உரிமம்
பணிநிலை: கைவிடப்பட்டது
இணையதளம்: விண்டோஸ் எக்ஸ்பி

இதன் முக்கியமான பதிப்புக்களாவன வீட்டுப் பாவனைக்கு என உருவாக்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி ஹோம் எடிசன் (இது வீட்டுக் கணினிகளுக்கானது. இதில் கணினியை மைக்ரோசாப்ட் விண்டோஸ் டொமைன்களில் இணைக்கும் வசதிகிடையாதெனினும் நாவல் (Novell) நெட்வேர் மூலம் இணைந்துகொள்ளலாம்). மற்றையது அலுவலகங்களை இலக்கு வைத்து உருவாக்கப்பட்ட தொழில்வல்லுநர் பதிப்பு (புரொபெஷனல் எடிசன்). இது வீட்டுப் பதிப்பின் வசதிகளுக்கு மேலதிகமா டொமைன்களில் இணைதல், இரு பணிக்கருக்கள் (Dual புரோசசர்களையும்) கொண்ட கணினிகளையும் இயக்கவல்லமை போன்ற திறங்கள் கொண்டது. இப்பதிப்பானது விண்டோஸ் பயனர்களுக்கும் தொழில், வணிகப் பயனர்களுக்கென உருவானதாகும். விண்டொஸ் எக்ஸ்பி பல்லூடகப் பதிப்பு (மீடியா செண்டர் எடிசன்) என்பது பல்லூடக வசதிகள் நிரம்பியதாகும் இதில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் வசதியும் உண்டு. இத்துடன் 64 பிட்டு புரோசசர்களுக்கென்றே (ஏஎம்டி அத்லோன்™ 64 FX, ஏஎம்டி செம்ப்ரோன்™, ஏஎம்டி ஒப்ரோன்™ மற்றும் இண்டெலினால் உருவாக்கபட்ட 64 பிட்டு புரோசசர்கள்) உருவாக்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி புரொபஷனல் x64 பிட் பதிப்புக்களும் அடங்கும்.

விண்டோஸ் எக்ஸ்பி இதன் முன்னர் வெளிவந்த விண்டோஸ் 9x இயக்குதளங்களை விட உறுதியாகவும் வினைத்திறனுடனும் இயங்கும்.[6][7] இது வாடிக்கையாளர்களை இலகுவாகப் பணிபுரியவைக்கும் வண்ணம் பெரிதும் மாற்றியமைக்கப்பட்ட, வரைமுக பணிச்சூழலைக் (graphical environment) கொண்டுள்ளது. விண்டோஸ் 9x இயங்குதளங்களில் காணப்பட்ட dll சிக்கல்கள் ஏற்படாவண்னம் இங்கே சிறந்த முறையில் நிர்வாகிக்கப்படுகின்றது.[8][9]. இந்த இயங்குதளத்திலேயே மைக்ரோசாப்ட் முதன் முதலாக மென்பொருள் கள்ளக் கடத்தல்களை கட்டுப்படுத்தும் விதமாக விண்டோஸ் உயிர்ப்பித்தல் (ஆக்டிவேசன் Activation) வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டது. பாதுகாப்புக் குறைபாடுகள் சில கண்டறியப்பட்டு சேவைப் பொதி 2 இல் சரிசெய்யப்பட்டது. இண்டர்நெட் எக்ஸ்புளோளர் 7 உம் வேறு சில குறைகளைச் சரிசெய்தது. விண்டோஸ் மீடியாப் பிளேயர் (ஊடக இயக்கி) மற்றும் விண்டோஸ் இண்டர்நெட் எக்ஸ்புளோளர் உடனான நெருங்கிய கூட்டு பல விமர்சனங்களைச் சந்தித்தது.

இது வளர்நிலையில் இருவாகிக்கொண்டிருந்த நாட்களில் விசிலர் என்றழைக்கப்படது.[10]

நவம்பர் 2008 இறுதியில் 66.31% வீதத்துடன் உலகின் மிகப்பெருமளவில் பயன்படுத்தப்பட்டுவரும் இயக்குதளமாக விண்டோஸ் எக்ஸ்பி விளங்கிவருகின்றது. திசம்பர் 2006-ல் இந்த இயக்குதளமானது உலகில் பயன்படுத்தப்பட்டுவந்த இயங்குதளங்களில் 85% வீதமானதாக விளங்கியது.[11]

பதிப்புக்கள்

தொகு

விண்டோஸ் எக்ஸ்பி இரண்டு முக்கியமான பதிப்புகளாக வெளிவந்தது. விண்டோஸ் எக்ஸ்பி ஹோம் எடிசன் வீட்டுப் பாவனைக்காக உருவாக்கப் பட்டதாகும். விண்டோஸ் எக்ஸ்பி புரொபெஷனல் வணிக மற்றும் மிகுதியாகக் கணினியைப் பயன்படுத்தும் வீட்டுப் பாவனையாளர்களுக்கும் என்று உருவாக்கப் பட்டதாகும். இதன் ஏனைய பதிப்புக்கள் சிறப்பு வன்பொருட்களுக்கென்று ஐரோப்பாவிற்கு என்றும் மற்றும் விலைமலிவாக்கப்பட்ட விண்டோஸ் பதிப்புக்களும் அடங்கும்.

விண்டோஸ் எக்ஸ்பி புரொபஷனல் விண்டோஸ் எக்ஸ்பி ஹோம் எடிசனில் இல்லாத சில வசதிகளைக் கொண்டுள்ளது.

  • விண்டோஸ் சேவர் டொமைனில் இணைதல் - கணினிகளைக் குழுக்களாக ஓர் டொமைனூடாகச் சேர்த்து சேவர் கணினியூடாக இயக்குதல் (பல வர்தக நிறுவனங்கள் விண்டோஸ் சேவர் மற்றும் டொமைன்களைக் கொண்டுள்ளது)
  • வினைத்திறனாகக் கோப்புகளைக் கையாளும் வசதி. எனினும் பயனர்கள் பாதுகாப்பான பணிச்சூழலில் (safemode) இல் கணினியை ஆரம்பித்து கோப்புக்களின் யார் யார் அணுகலாம் என்பதை மாற்றியமைக்கலாம்.
  • ரிமோட் டெஸ்க்ஸ்டாப் - அலுவலக வலையமைப்பூடாக பிறிதோர் கணினியைக் கையாளும் வசதி.
  • தொடர்பற்ற நிலையிலுள்ள கோப்புக்களும் (offline files) கோப்புறைகளும் (folders).
  • விண்டோஸ் எக்ஸ்பி ஹோம் மற்றும் புரொபெஷனல் ஆகிய இரண்டு பதிப்புக்களுமே விண்டோஸ் எண்டி கோப்புமுறையை ஆதரிக்கும் எனினும் இரகசியமான (Encrypted) கோப்பு முறையை விண்டோஸ் புரொபெஷனல் பதிப்பு மாத்திரமே அதரிக்கும். இதில் கணினியில் சேமிக்கப்பட்ட கோப்புக்களை உரித்துடைய ஒருவரோ அல்லது உரிமை வழங்கப்பட்ட ஒருவருக்கே அணுக்கம் வழங்கும் வசதிகள் உள்ளன.
  • தானாகவே கணினியில் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவுதல், அலைந்து திரியும் பயனர்கள் (Roming Users), தானகவே மென்பொருட்களை நிறுவுதலும் மற்றும் பராமரித்தல்கள் போன்றவற்றை குழுக் கொள்கைகளூடாகச் (Group Policy) செய்தல்.
  • இரண்டு புரோசர்களைக் கையாளும் வசதி. இப்பொதுள்ள புரோசசர்களில் உள்ள கைபதிரடிங்க் (Hyper threading) போன்றவற்றினூடாக ஒன்றிற்கு மேற்பட்ட புரோசர்களாகக் கருதப்பட்டாலும் விண்டோஸ் எக்ஸ்பி இன் பயனர் அனுமத்திக்கு (EULA - End User License Agreement) இவற்றை ஒரு புரோசராகவே கணிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கபட்ட நாடுகளுக்கான பதிப்புக்கள்

தொகு

விண்டோஸ் எக்ஸ்பியின் மலிப்புப் பதிப்பான ஆரம்பப்பதிப்பு எனப்பொருள்படும் விண்டோஸ் எக்ஸ்பி ஸ்டாட்டர் பதிப்பானது தாய்லாந்து, துருக்கி, மலேசியா, இந்தோனேசியா, ரஷ்யா, இந்தியா, கொலம்பியா, பிரேசில், ஆஜண்டீனா, பேரு, போல்வியா, சிலி, மெக்சிக்கோ, எக்குவடோர், உருகுவே, வெனிசுலா ஆகிய நாடுகளில் கிடைக்கின்றது. இது விண்டோஸ் எக்ஸ்பி ஹோம் பதிப்பினை ஒத்து இருந்தாலும் வசதி குறைந்த வன்பொருட்களில் இயங்குவதோடு ஒரே சமயத்தில் ஆகக்கூடுதலாக 3 மென்பொருட்களை மாத்திரமே பாவிக்க இயலும் அத்துடன் வேறு சில வசதிகள் குறைக்கப்பட்டோ அல்லது நீக்கப்பட்டோ இருக்கும். ஒவ்வொரு நாட்டுக்கான பதிப்பும் அதன் பின்னணித்திரைப்படம் பிரபலமான இடங்கள் போன்றவை மாற்றப்பட்டு இருக்கும். விண்டோஸ் எக்ஸ்பி ஆனது உள்ளூர் மொழிகளில் கிடைக்கும் வண்னமும் செய்யப்பட்டுள்ளது.

வன்பொருட் தேவைகள்

தொகு
 
விண்டோஸ் எக்ஸ்பிக்கென உருவாக்கப்பட்டுள்ள இலச்சினை

விண்டோஸ் எக்ஸ்பி ஹோம் மற்றும் புரொபெஷனல் பதிப்புக்களில் ஆகக்குறைந்த வன்பொருட் தேவைகளாவன:[12]

ஆகக்குறைந்தது பரிந்துரைக்கப்படுவது
செயலி (Processor) 233 மெகா ஹெர்ட்ஸ்1 300 மெகாஹெர்ட்சும் அதற்கு மேலும்
நினைவகம் (Memory) 64 மெகாபைட் ராம்2 128 மெகாபைட் ராமும் அதற்கு மேலும்
Video adapter மற்றும் மானிட்டர் சூப்பர் வீஜிஏ (Super VGA) 800 x 600 பிக்சல் அல்லது அதற்கு மேல்
வன்வட்டில் ஆகக்குறைந்த இடவசதி 1.5 ஜிகாபைட் அல்லது அதற்கு மேல் (மேலதிகமாக 1.8 ஜிகாபைட் இடவசதி சேவைப் பொதி 2 இல் இருந்து)[13] and additional 900 MB in SP3)
இயக்கிகள் (Drives) இறுவட்டுஇயக்கி (CD-ROM drive or டீவிடி இயக்கி
உள்ளிடு கருவிகள் விசைப்பலகை. மைக்ரோசாப்ட் மவுஸ் அல்லது அதற்கு ஒத்திசைவான் ஓர் சுட்டும் கருவி.
ஒலி ஒலி அட்டை. ஒலிப்பி or செவி ஒலிப்பி(ஹொட்போன்)

சேவைப் பொதி

தொகு

இயங்குதளத்தில் புதிய வசதிகளை அறிமுகம் செய்யவும் மற்றும் இயங்குதளத்தில் பிழைகளைச் சீர்செய்யவும் மேம்படுத்தல்களைச் செய்யவும் சேவைப் பொதிகளை மைக்ரோசாப்ட் காலத்திற்குக் காலம் வெளிவிடுகின்றது. ஒவ்வொரு சேவைப் பொதியில் அதற்கு முன்வந்த சேவைப் பொதியினை உள்ளடக்கியுள்ளது. கீழ்வரும் சேவைப் பொதிகள் விண்டோஸ் எக்ஸ்பியின் 32பிட் பதிப்பிற்கானது 64 பிட் பதிப்புக்கள் விண்டோஸ் சேர்வர் 2003 சேவைப் பொதி ஒன்றைப் பின்பற்றியது. எனவே விண்டோஸ் எக்ஸ்பி 64பிட் முதலாவது பதிப்புக்கூட சேவைப் பொதி 1 என்றே தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும். 64பிட் பதிப்பானது விண்டோஸ் சேர்வர் 2003 இன் சேவைப் பொதியுடன் சேர்த்தே வெளிவிடப்படுகின்றது.

சேவைப் பொதி 1

தொகு
 
விருப்படியான நிரல்களைத் தேர்ந்தெடுக்கும் வசதியானது சேவைப் பொதி 1 இல் அறிமுகம் செய்யப்பட்டது.

இசேவைப் பொதியானது செப்டெம்பர் 9, 2002 வெளியிடப் பட்டது. இதில் USB 2.0 இயங்குதளதினூடான நேரடி ஆதரவு (விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதியில்லாமலேயே USB 2.0 ஐ ஆதரிக்கும் எனினும் இதற்கென விசேடமாகாத் தாயாரிக்கபட்ட டிவைஸ் டிரைவர்கள் அவசியம் ஆகும்). இதற்கான ஆதரவு அக்டோபர் 10, 2006 உடன் விலக்கப்பட்டுள்ளது. இதில் இயங்குதளத்தில் பாதுகாப்பு மேம்படுத்தல்கள், ஒத்திசைவு மேம்படுத்தல்களுடன் மைக்ரோசாப்ட் .நெட் இற்கான ஆதரவினையும் வழங்கியது. அத்துடன் விண்டோஸ் மெசன்ஜர் இன் 4.7 ஆவது பதிப்பும் உள்ளிணைக்கப்பட்டது. தேவையான நிரல்களைத் தேர்தெடுக்க விண்டோஸ் சேவைப் பொதி 3 ஐப் போன்ற ஓர் யுட்டிலிட்டியும் இங்கும் அறிமுகம் ஆனது. இதனுடன் ஜாவா மெய்நிகர் எந்திரம் (ஜாவா வர்ச்சுவல் மெசின்]] உள்ளிணைக்கப்பட்டிருந்தது எனினும் பின்னர் சண் மைக்ரோ சிஸ்டத்துடனானசட்டப்பிரச்சினைகள் காரணாமாக 3 பெப்ரவரி2003 இல் வெளிவிடப்பட்ட சேவைப் பொதி 1a இல் ஜாவா மெய்நிகர் எந்திரம் உள்ளடக்கப்படவில்லை.

சேவைப் பொதி 2

தொகு
 
சேவைப் பொதி 2 இல் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் பாதுகாப்பு நிலையம்.

சேவைப் பொதி 2 மைக்ரோசாப்ட்டினால் ஆகஸ்ட் 6, 2004 இல் வெளியிடப்பட்டது. இது பெரும்பாலும் கணினிப்பாதுகாப்பு மேம்படுத்தல்களைக் கொண்டிருந்தது. இதில் விண்டோஸ் தீச்சுவர் (விண்டோஸ் பயர்வால்) வசதிகள் ஏற்படுத்தப்பட்டது இது ஏற்கனவே இருந்து இணைய இணைப்புத் தீச்சுவர் (இண்டநெட் கெனக்‌ஷன் பயர்வால்) ஐ மாற்றீடு செய்தது. இதில் கம்பியற்ற இணைப்பை ஏற்படுத்தல் மற்றும் Bluetooth ஆதரவு போன்றவற்றை உள்ளடக்கியிருந்தது. இச்சேவைப் பொதியுடன் மலையாளம், வங்காளி ஆகிய மொழிகளுக்கான ஒருங்குறியூடான இயங்குதள ஆதரவு அறிமுகம் ஆனது. அத்துடன் இண்டநெட் எக்ஸ்புளோளரின் பொபப் (Popup)ஐத் தடைசெய்யும் வசதியையும் இண்டநெட் எக்ஸ்புளோளருடன் அறிமுகம் செய்தது. சேவைப் பொதி 2 இல் அறிமுகப்படுத்தபப்ட்ட விண்டோஸ் பாதுகாப்பு நிலையம் கணினியின் பாதுகாப்பை கண்காணிப்பதற்கு உதவியது இதன் மூலம் 3ஆம் தரப்பு நச்சுநிரல் விருத்தியாளர்களும் இதனூடாகத் தொடர்பை ஏற்படுதக்கூடியதாக இருந்தது. 10 ஆகஸ்ட் 2007 ஓர் சிறுமேம்படுத்தலாக சேவைப் பொதி 2c என அறிமுகப்படுத்தப்பட்ட சேவைப் பொதியினை வெளிவிட்டது. இதில் விண்டோஸ் எக்ஸ்பியில் நிறுவலில் தேவைப்படும் போதாமல் இருந்ததன் காரணாகவே இது வெளியிடப்பட்டது. இது பொதுவில் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

சேவைப் பொதி் 3

தொகு

மைக்ரோசாப்ட் சேவைப் பொதி 3 இன் சோதனைப்பதிப்பு டிசம்பர் 18 2007 முதல் பொதுவில் பதிவிறக்கக் கிடைக்கின்றது. இது தொடர்பான பிரச்சினைகள் நன்கு அலசி ஆராயப்பட்டபின்னர் விண்டோஸ் சேவைப் பொதி 3 இன் முழுப்பதிப்பானது ஆனது 21 ஏப்ரல் 2008 உற்பத்திக்கென வெளியிடப்பட்டதுடன் 6 மே2008 முதல் பொதுவில் பதிவிறக்கக்கூடியதாகக் கிடைக்கின்றது.[14] 10 ஜூலை2008 முதல் விண்டோஸ் மேம்படுத்தல்கள் ஊடாகவும் நிறுவிக் கொள்ளலாம். இதில் 1, 174 பிரச்சினைகளுத் தீர்வை இந்த சேவைப் பொதி வழங்கியது. சேவைப் பொதி 3 ஆனது விண்டோஸ் இண்டநெட் எக்ஸ்புளோளர் 6 அல்லது 7 உடனும் விண்டோஸ் மீடியாப் பிளேயர் 9 அல்லது அதற்கு மேம்பட்ட பதிப்புடனும் நிறுவிக் கொள்ளலாம் எனினும் இண்டநெட் எக்ஸ்புளோளர் 7 உள்ளிணைக்கப்படவில்லை.

மாற்றங்கள்

தொகு
  1. சட்டரீதியான காரணங்களைச் சாட்டாக வைத்து Task bar இல் இருக்கும் Address Bar நீக்கப்பட்டுள்ளது. எனினும் இது பொதுவானா நிறுவல்களில் சாதாரணமாகத் தோற்றமளிக்காது பயனர்கள் விரும்பினால் மட்டுமே தேர்ந்தெடுக்கலாம்.[15]
  2. கணினி வலையமைப்பில் ஒரு கணினியில் இருந்து இன்னொரு கணினி இயங்குகின்றதா அல்லது இணைப்பு இருக்கின்றதா எனச் சோதிக்கும் PING கட்டளை இல்லதொழிக்கப்பட்டுள்ளது எனினும் arp -a கட்டளை மூலம் வலையமைப்பில் உள்ள கணினிகளின் IP முகவரிகளைப் பெற்றுக்கொள்ளவியலும்.
  3. விண்டோஸ் விஸ்டாவுடன் அறிமுகமான ஹய் டெவினிஷன் ஆடியோ (High Definition Audio) இற்கான நேரடி ஆதரவு ஆரம்பத்தில் சோதனை நிலையில் வழங்கப்படாவிட்டாலும் பல எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதால் பின்னர் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
  4. விண்டோஸ் சேவைப் பொதி 2 போல் அல்லாமால் விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 3 டியூவல் கோர் போன்ற பல கோர்களை உடைய புரோசர்களில் ஒரு புரோசசர் இருப்பதாகவே காட்டும்.[16]

மாற்றங்கள் செய்யப்படாதவை

தொகு
  1. புதிய மொழிகளுக்கான ஆதரவு எதுவும் இந்த சேவைப் பொதியில் கிடையாது.[17]
  2. விண்டோஸ் காலண்டரில் உள்ள தமிழ் உட்பட ஏனைய மொழிகளுக்கான தேதி இன்னமும் மாற்றப்படாமலே உள்ளது.[18]
  3. இன்டநெட் எக்ஸ்புளோளர் மற்றும் விண்டோஸ் மீடியாப் பிளேயர் இன்னமும் பழைய பதிப்பிலேயே உள்ளது.
  4. சேவைப் பொதி 3 ஆனது புதிய கணினிகளுகான சாட்ட வன்வட்டுக்கான (நெகிழ்வட்டு இல்லாமல்) நிறுவக்கூடியதாக செலுத்தி மென்பொருட்கள் (டிவைஸ் டிரைவர்கள்) புதிதாக அறிமுகம் செய்யப்படவில்லை.

ஏனைய மேம்படுத்தல் முறைகள்

தொகு

புதிதாகக் கணினிகளில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளங்களை நிறுவும் போது ஹாட்பிஸ் (Hotfix) என்கின்ற இயங்குதளச் சீர்திருத்தங்களை இயங்குதளத்துடன் ஒன்றிணைத்தால் இயங்குதளம் கூடுதல் பாதுகாப்புடன் இயங்கும். இதற்கு அதிகாரப் பூர்வமாக முறைகளை விட பிறிதோர் முறையே பெரிதும் கையாளப் படுகின்றது. இதற்கு http://www.ryanvm.net/msfn/ தளத்தினூடாக இயங்குதள மேமப்டுத்தல்கள் கிடைகின்றன. இதை http://www.ryanvm.net/msfn/updatepack.html ஊடகவோ அல்லது பிட்ரொரெண்ட் முறையில் http://tracker.ryanvm.net/ பரணிடப்பட்டது 2007-02-24 at the வந்தவழி இயந்திரம் ஊடாகவோ பதிவிறக்கம் செய்து விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதியுள்ள கணினிகளில் Hot fixes ஐச் சேர்த்துக் கொள்ளலாம்.

மேம்படுத்தல்கள்

தொகு

விண்டோஸ் 98 விண்டோஸ் மில்லேனியம் பதிப்புக்கள் விண்டோஸ் எக்ஸ்பி பதிப்புகளாக மேம்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு மேம்படுத்தினால் விண்டோஸ் எக்ஸ்பியில் விண்டோஸ் குழுக் கட்டுப்பாட்டகத்தில் உள்ள மென்பொருட்களைச் சேர்க்கவோ நீக்கவோ உதவும் Add or Remove Programs ஊடாகத் தேவையென்றால் நீக்கினால் முதலிருந்த இயங்குதளத்திற்கு மீள்வித்துக் கொள்ளலாம். இச்செயற்பாட்டைச் செய்யமுன்னர் கோப்புமுறையை விண்டோஸ் எண்டி கோபுமுறையாக மாற்றியமைத்தால் இதைச் செய்யவியலாது. விண்டோஸ் 98 இயங்குதளத்துடன் வரும் DoubleSpace, DriveSpace உடன் மற்றைய கோப்புக்களைச் சுருக்கிக் குறைந்த இடவசதியுடன் சேமிக்க உதவும் மென்பொருட்கள் விண்டோஸ் எக்ஸ்பியுடன் ஒத்திசைவானது அல்லது. இவ்வாறான கோப்புமுறைகளைப் பாவித்து இருந்தால் மீளவும் பழைய நிலைக்குக் கொண்டுவரவேண்டும். விண்டோஸ் எண்டி 4 கிளையண்ட் சேவைப் பொதி 6 மற்றும் விண்டோஸ் 2000 புரொபெஷனல் பதிப்புக்களுடன் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளங்களாக மேமபடுத்தக் கூடியவையே எனினும் இங்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் முதலிருந்த இயங்குதளத்திற்கு மீளத் திரும்வியலாது. விண்டோஸ் எக்ஸ்பி ஹோம் பதிப்பை விண்டோஸ் எக்ஸ்பி புரொபெஷனல் பதிப்பாக மாற்றியமைத்துக் கொள்ளலாம். ஓர் இயங்குதளத்தில் இருந்து முதலில் விண்டோஸ் எக்ஸ்பிக்கு மேம்படுத்தலாமா என்பதை அறிய முதலில் மேம்படுத்தும் ஆலோசகரைப் (Upgrade Advisor) பயன்படுத்தவேண்டும் இற்கு முன்னர் மைக்ரோசாப்டின் தளத்தில் கிடைத்த விண்டோஸ் எக்ஸ்பி அப்கிரேட் அட்வைசரையோ அல்லது விண்டோஸ் எக்ஸ்பி இறுவட்டுடன் வரும் i386 கோப்புறையில் உள்ள winnt32 /checkupgradeonly என்ற சுவிச்சினை இயக்குவதன் மூலமோ அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: விண்டோஸ் எண்டி 3.51 பதிப்பினையோ அல்லது விண்டோஸ் 95 பதிப்பினையோ விண்டோஸ் எக்ஸ்பியாக நேரடியாக மேம்படுத்த இயலாது. விண்டோஸ் எண்டி 4.0 பதிப்பில் ஸ்பான் டிஸ்க்ஸ்ரைப் டிஸ்க் போன்றவற்றைப் பாவித்து இருந்தால் முதலில் ஆவணப்படுத்திவிட்டு (Backup) அவற்றை அழித்துவிடவேண்டும் ஏனென்றால் விண்டோஸ் எக்ஸ்பியில் உள்ள நிகழ்நிலை வட்டுக்கள் எனப்பொருள் டைனமிக் டிஸ்க் விண்டோஸ் எண்டியுடன் ஒத்திசைவானது அல்ல.

இவற்றையும் பார்க்க

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு

உசாத்துணைகள்

தொகு
  1. "Microsoft Announces Windows XP and Office XP". Microsoft PressPass. Microsoft. 5 February 2001. பார்க்கப்பட்ட நாள் 2006-05-13.
  2. Jeremy Kirk (18 January 2006). "Analyst: No effect from tardy XP service pack". ITworld.com.
  3. "System Builders Can Buy Windows XP Until January '09". Archived from the original on 2009-01-02. பார்க்கப்பட்ட நாள் 2008-12-21.
  4. Mary Jo Foley (2008-10-03). "Microsoft extends XP downgrade rights date by six months". ZDnet. Archived from the original on 2008-10-24. பார்க்கப்பட்ட நாள் 2008-10-28.
  5. Gavin Clarke (2008-10-03). "Microsoft gives users six months longer to flee from Vista". The Register. பார்க்கப்பட்ட நாள் 2008-10-28.
  6. David Coursey (2001-10-25). "The 10 top things you MUST know about Win XP". CNet.com. Archived from the original on 2009-07-10. பார்க்கப்பட்ட நாள் 2008-07-22.
  7. "A Brief History and Introduction to Windows". Princeton University. 2004-07-22. பார்க்கப்பட்ட நாள் 2008-07-22.
  8. "Simplifying Deployment and Solving DLL Hell with the .NET Framework". Microsoft Developer Network. Microsoft. 2001. பார்க்கப்பட்ட நாள் 2008-07-21. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  9. "How To Build and Service Isolated Applications and Side-by-Side Assemblies for Windows XP". Microsoft Developer Network. Microsoft. 2001-08-24. பார்க்கப்பட்ட நாள் 2008-07-21.
  10. "Windows "Longhorn" FAQ". Paul Thurrott's SuperSite for Windows. 2005-06-22. பார்க்கப்பட்ட நாள் 2008-04-04. (see Q: What's up with the name Longhorn?)
  11. "Windows XP market share". Net Applications. 2008-09-30. பார்க்கப்பட்ட நாள் 2008-12-03.
  12. "System requirements for Windows XP operating systems". 28 April 2005. பார்க்கப்பட்ட நாள் 2007-03-12.
  13. "System Requirements for Windows XP Service Pack 2". Microsoft. 20 August 2004. பார்க்கப்பட்ட நாள் 2007-08-19.
  14. விண்டோஸ் எக்ஸ்பி சேவைப்பொதி 3 ஏப்ரல் 29 வெளியிடப்படும் பரணிடப்பட்டது 2008-12-01 at the வந்தவழி இயந்திரம் அணுகப்பட்டது 25 ஏப்ரல் 2008
  15. டாஸ்க் பாரில் மறைந்து போன அட்ரஸ் பார் பரணிடப்பட்டது 2008-01-02 at the வந்தவழி இயந்திரம் அணுகப்பட்டது 1 ஜனவரி 2008]
  16. ஒரு புரோசரில் எத்தனை கோர் இருந்தாலும் ஒரு புரோசசராகவே காட்டும்[தொடர்பிழந்த இணைப்பு] அணுகப்பட்டது ஏப்ரல் 25 2008
  17. வின்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 3 இல் மேலதிக மொழிகளுக்கான ஆதரவு கிடையாது பரணிடப்பட்டது 2008-01-01 at the வந்தவழி இயந்திரம் மைக்ரோசாப்ட்டின் டெக்நெட் தளம். அணுகப்பட்டது 1 ஜனவரி 2008
  18. ஒழுங்காகத் தோற்றமளிக்காமல் இருக்கும் இந்திய மொழிகளுக்கான தேதி மற்றும் நேரம் பரணிடப்பட்டது 2008-01-02 at the வந்தவழி இயந்திரம் அணுகப்பட்டது 1 ஜனவரி 2008
மைக்ரோசோஃப்ட் விண்டோஸின் வரலாறு
எம்எஸ்-டொஸ்–சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ
என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்
சிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0
வரவிருப்பவை: 2008 மற்றும் 7
வெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ
"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்டோசு_எக்சு._பி.&oldid=4060583" இலிருந்து மீள்விக்கப்பட்டது